சட்ட உரிமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சட்ட உரிமை (legal rights) என்பது, ஒரு குறித்த சமூகத்தினால் வழங்கப்படும் ஒருவகை உரிமை ஆகும். இது அச் சமூகத்தின் சட்டங்கள், வழக்காறுகள், நம்பிக்கைகள் என்பவற்றைக் கருத்தில் எடுத்து ஒரு சட்டவாக்க அமைப்பினால் உருவாக்கப்பட்டு அச் சமூகத்தின் சட்டங்களில் சேர்க்கப்படுகின்றது. சட்ட உரிமை மனிதருடைய சட்டங்களால் திருத்தப்படவோ, இல்லாமல் ஆக்கப்படவோ, அல்லது கட்டுப்படுத்தப்படவோ கூடியது. இது "குடிசார் உரிமை" என்றும் குறிப்பிடப்படுவது உண்டு. இது சமூகத்தின் சட்டங்கள், வழக்காறுகள், நம்பிக்கைகள் என்பவற்றில் தங்கியிராத இயல்பு உரிமை என்பதிலிருந்து மாறுபட்டது. இதனால் இயல்பு உரிமைகளைப்போல் சட்ட உரிமைகள் உலகம் தழுவியவை அல்ல. ஆனால் பண்பாடு, அரசியல் என்பவற்றைச் சார்ந்து இருப்பவை.

மேலோட்டம்[தொகு]

எது இயல்பு உரிமை, எது சட்ட உரிமை? என்ற கேள்வி மெய்யியலிலும், அரசியலிலும் முக்கியமான இடத்தைப் பெறுகின்றது. இயல்பு உரிமைகள் என்னும் கருத்துருவை விமர்சிப்பவர்கள், உலகில் இருக்கக்கூடிய ஒரே உரிமை சட்ட உரிமை மட்டுமே என்று வாதிடுகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சட்ட_உரிமை&oldid=3079958" இலிருந்து மீள்விக்கப்பட்டது