பயனர் பேச்சு:தொழில்நுட்பம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், தொழில்நுட்பம், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--சிவகுமார் 16:33, 20 ஜூலை 2006 (UTC)

உங்கள் ip முகவரி[தொகு]

உஙகள் ip முகவரி 198.62.10.100 என்றால் தெரியப்படுத்தவும். இந்த முவரியில் இருந்து செய்யப்படும் தொகுப்புகளும் நீங்கள் செய்தது தானா?--ரவி 10:10, 6 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

பயனர்களின் வேண்டுகோளைப் பொருட்படுத்தாமல் உங்கள் மாற்றங்களைச் செய்து கொண்டிருந்ததால் உங்கள் பயனர் கணக்கையும் தொடர்புடைய ஐ.பி. முகவரியையும் ஒரு நாள் பங்களிக்கத் தடை செய்துள்ளேன். இது தவறு என நீங்கள் கருதினால், இங்கே தெரிவியுங்கள் அல்லது எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். -- Sundar \பேச்சு 10:17, 6 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

தடை[தொகு]

எனது IP முவவரி தடை செய்யப்பட்டுள்ளதேன். தமிழக அரசாங்கம் தமிழை வளர்ப்பதில் அக்கரைக்காட்டாத நிலையில் தனியார் முயற்சியில் தான் கலைச்சொற்கள் வளர்ச்சிபெற வேண்டும். இந்த நோக்கத்துடன் தான் தனிமங்கள் பக்கத்தில் தமிழ் பெயர்கள் இடுகையிட்டு வருகிறேன். இதையும் தடுத்து நிறுத்துவது என்றால் Wikipedia விலும் ஏதோ அரசியல் திகழ்கிறது என காட்டுகிறது.

அது வரை தமிழில் தனிமங்களின் பெயர்கள்

http://geocities.com/tamildictionary

http://www.thozhilnutpam.com

http://agaraathi.tripod.com

http://tamilglossary.tripod.com

http://angelfire.com/planet/tamil

ஆகிய இணையதளங்களில் தினந்தோறும் சேர்க்கப்படும். தடையின்றி வளரும் தமிழ். −முன்நிற்கும் கருத்து 198.62.10.100 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

உங்கள் நோக்கத்தை ஒன்றும் நாங்கள் குறை சொல்லவில்லை. அது பாராட்டத்தக்க முயற்சி. எங்களுக்கும் தமிழ் வளர வேண்டும் என்ற நோக்கம் உண்டு. இருப்பினும் பெரிய மாற்றங்களைச் செய்யும் முன் மற்ற பங்களிப்பாளர்களின் கருத்தை அறிய வேண்டும். பல பயனர்கள் பல முறை உங்கள் பேச்சுப் பக்கத்தில் செய்திகள் விடுத்தும் (ta:பயனர் பேச்சு:தொழில்நுட்பம், ta:பயனர் பேச்சு:198.62.10.100) நீங்கள் பதிலேதும் கூறாமல் உங்கள் மாற்றங்களைச் செய்து வந்ததே இந்த இடைக்காலத் தடைக்குக் காரணம். நீங்கள் மற்ற பயனர்களைக் கலந்து இனி பங்களிப்பீர்களென்றால் உடனடியாக உங்கள் தடையை நீக்கிவிடுகிறேன். -- Sundar \talk \contribs 10:52, 6 October 2006 (UTC)

தடை நீக்கம்[தொகு]

பயனர் செய்திகளை கவனிக்காததால் பதிலளிக்கவில்லை என்று தெரிவித்தார். தடை என்பது ஒருவர் செய்த தவறுக்கான தண்டனை அல்ல, அவரால் ஊறு விளையும் என்ற வாய்ப்பை தவிர்க்கவே. (இது விக்கிப்பீடியா கொள்கையாகும்.) அதனால், இந்தப் பயனர் கணக்கின் மீதும் உடனிணைந்த ஐபி முகவரி மீதும் இருந்த தடை நீக்கப்படுகிறது. -- Sundar \பேச்சு 12:00, 6 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

நல்வரவு[தொகு]

தொழில்நுட்பம் நல்வரவு, தொழில்நுட்பம்.காம் நல்ல முன்மாதிரி. பின்வரும் பக்கமும் உங்கள் ஈடுபாட்டுடன் தொடர்பு கொண்டது. Wikipedia:கலைச்சொல் செயல்பாடுகள் ஒருங்கிணைவு

உங்களைப்பற்றிய ஒரு இரு தகவல்களை பயனர் பக்கத்தில் தந்தால் ஒரு ஆரோக்கியமான சூழலை த.வி.க.க பேண பெரிதும் உதவும். நன்றி. --Natkeeran 16:25, 6 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

தடை என்பது ஒருவர் செய்த தவறுக்கான தண்டனை அல்ல, அவரால் ஊறு விளையும் என்ற வாய்ப்பை தவிர்க்கவே. நீங்கள் விக்கிப்பீடியா நடைமுறைகளைப் பின்பற்றிப் பங்களிக்க வாழ்த்துக்கள். புகுபதிகை செய்து பங்களிப்பது மிகவும் வரவேற்கப்படுகிறது. நன்றி. --கோபி 16:31, 6 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

Tamil Language article is to be removed of its FA, even after the extensive review process, please vote against it. Also, improve the article if you can. http://en.wikipedia.org/wiki/Wikipedia:Featured_article_review/Tamil_language

--Natkeeran 19:27, 8 ஏப்ரல் 2007 (UTC)

முறுக்குவிசை[தொகு]

(ராஜ், நீங்கள் என் பேச்சுப்பக்கத்தில் விட்டிருந்த கருத்துக்கு மறுமொழி அங்கு இட்டுள்ளேன். அதன் ஒரு படியை இங்கே கீழே தந்துள்ளேன்.)--செல்வா 14:00, 22 மார்ச் 2008 (UTC)

ராஜ், உங்கள் வருத்தம் புரிகின்றது. எனக்கும் உங்களைப்போல் கவலைகள் உண்டு. கலைச்சொற்கள் பல இடங்களில் இன்னும் போதிய அளவு வளர்ச்சி அடையவில்லை (பொதுவாக மிக நல்ல வளர்ச்சி இருந்த பொழுதிலும்). கலைஞர் அரசு தமிழுக்கு எதிரானது போன்ற கருத்துக்களை இங்கு வைக்காமல் இருப்பது நல்லது என்பது என் தனிக்கருத்து. அமைச்சர் தென்னரசு பல நல்ல ஆக்கங்கள் செய்துள்ளார். கலைஞர் பதவியில் அமர்த்திய பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் பொன்னவைக்கோ தமிழைக் கட்டாயப் பாடமாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு வைத்துள்ளார். தமிழைத் தமிழக அரசானது அவர்களால் இயன்றளவு வளர்த்து வருகிறார்கள். இது பற்றி இங்கு கருத்துரையாட வேண்டாம் என்பது என் வேண்டுகோள். டார்க் (torque), டார்^சன் (torsion) பற்றி நீங்கள் கூறியது சரியே. தமிழ் இணைய பல்கலைகழக அகராதியில் பல சொற்கள் இப்படித் தவறாகவோ அல்லது குழப்பம் தரும் வகையிலோ உள்ளன. ஆனால் கருத்துரையாடி நமக்குச் சரியென்று தோன்றும் சொற்களை கட்டுரைகளில் தக்க இடங்களில் பயன்படுத்திப் பார்க்கலாம். எடுத்துக்காட்டாக வளைவுந்தம் என்னும் கட்டுரையைப் பாருங்கள். அதில் முறுக்குவிசை என்று ஆண்டிருக்கின்றேன். எச்சொல்லும் அதனதன் சூழலில் பயன்படுத்தும் பொழுதுதான் அதன் நிறைகுறைகளும், பொருள் ஏற்கும் திறமும் ஏற்காமையும் விளங்கும். தனிச்சொற்களாக "மொழி பெயர்ப்பதில்" அதிகம் பயனில்லை என்பதும் என் பட்டறிவால், துய்ப்பறிவால் கண்டது. நீங்கல் செய்யும் முரற்சிகளையும், உங்கள் தொடர்ந்த பணிகளையும் நான் மிகவும் பாராட்டுகிறேன். மேலும் வளர்ந்து செழிக்க என் வாழ்த்துக்கள்.--செல்வா 14:00, 22 மார்ச் 2008 (UTC)

கையொப்பம்[தொகு]

ராஜ், முதற்கண் உங்கள் பயனர்பெயர் "தொழில்நுட்பம்" விக்கி மென்பொருளாளரோ என்று சற்றுக் குழப்பம் தருவதாக அமைந்துள்ளது. பொதுவாக இத்தகையப் பெயர்களை தவிர்ப்பது நலம். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தினை தானியங்கியாக இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:

கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்

. உங்கள் பயனர் விருப்பத்தேர்வுகளில் பயனர் பெயரல்லாத வேறு பெயரை இடுமாறு அமைத்துக்கொள்ளலாம். காட்டாக எனது பயனர் பெயர்:Rsmn ஆனால் கையொப்பங்களில் மணியன் என்று பரவலாகப் பயன்படும் பெயரை பாவிக்கிறேன்.

உங்கள் சொல் குறித்த உரையாடல்கள் ஆக்கபூர்வமானவை. இதனால் ஓர் சீர்தரப் படுத்தப்பட்ட கலைச்சொற்கள் உருவாக்கப்படுவதன் தேவை உணரப்படுகிறது. வரவிருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் இதற்கான தீர்வு காணப்பட்டால் ஒருங்குறி எழுத்துரு சீர்தரமாவதுபோல கலைச்சொற்களும் சீர்தரப்படுத்தப்படும்.

இருப்பினும் மாற்றங்கள் மாறாதவை :) எனது பள்ளிப்படிப்பிற்கு முந்தைய ஆண்டுகளில் Compensated Simple Pendulam என்பதற்கு தோஷநிவர்த்தித அவலம்பம் என்று படித்தார்கள்; எனது பாடப்புத்தகத்தில் அது ஈடுசெய்யப்பட்ட தனிஊசல் (1968) என்றிருந்தது. இப்போது என்னவென்று தெரியவில்லை :)

ஐயா கைப்போப்பம் போடுவதை சோதனை செய்கிறேன்...முதன் முறை... --தொழில்நுட்பம் 10:29, 9 ஏப்ரல் 2010 (UTC)

மின்னஞ்சல்[தொகு]

தங்கள் மின்னஞ்சல் முகவரியை எனக்கு தர இயலுமா? --இராஜ்குமார் 11:10, 9 ஏப்ரல் 2010 (UTC)

விக்சனரி பங்களிப்பு[தொகு]

தொழில்நுட்பம்! உங்கள் பங்களிப்பு முறைகளைக் காணும் போது சொல்லாக்கத்தில் உங்களுக்கு ஆர்வம் உள்ளது தெரிகிறது; நீங்கள் தமிழ் விக்சனரி கண்டதுண்டா? [1] பல சொற்களுக்கு நீங்கள் எடுத்தாளும் ஆதார தளங்களுள் தமிழ் விக்சனரியைக் காணவில்லையே? உடன் அத்தளத்தைக் காணவும். அத்தளத்திலுள்ள சொற்பொருள் பலவும் தமிழ் இணையப் பல்கலையின் அகராதியிலிருந்தும் சென்னைப் பல்கலையின் தமிழ்ப் பேரகரமுதலியிலிருந்தும் கிரியாவின் தற்காலத் தமிழகராதியிலிருந்தும் மேற்கோளிட்டு உள்ளிடப்பட்டவை. பல தொழில்நுட்பச் சொற்களுக்கும் பொருள்கள் தமிழ் விக்சனரியில் உள்ளன.

விருப்பம் இருந்தால் தமிழ் விக்சனரியிலும் உங்கள் பங்களிப்புகளை செய்யலாமே? இது என் அன்பான வேண்டுகோள். --பரிதிமதி 03:18, 17 ஏப்ரல் 2010 (UTC)

பரிதிமதி அவர்களே

விக்ஷ்னரியிலும் பல சொற்கள் குறிப்பாக இதுவரை மொழிபெயர்க்கபடாத தொழில்நுட்பச் சொற்களை சேத்துள்ளேன். நான் பல அரகாதிகளை வாங்கி சொற்களை மேற்கோளிடுகிறேன். கிரியா, ஸூராஸ், மெகா, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், லிஃப்கோ, கண்ணன் போன்ற அகராதிகளை , தவிற்று அச்சு நூல்கள் மேற்கோள் செய்கிறேன். விக்கீப்பீடியாவில் கட்டுரைகளை விட சொல் விவாதம் பெரிதாக உள்ளது. விவாதம் கூடாது என கருதவில்லை, ஆனால் அகராதிகளை இணையத்தில் படைக்க முன்வருவோர் மிகவும் குறைவு. இலட்சக் கணக்கானக் கலைச்சொற்கள் ஒவ்வொன்றும் அக்கு வேறு ஆணி வேறாக விவாதித்தால், மந்த நிலையில் தான் இருக்கும். இதன் பொருட்டு தான் முன் வராதத் துறைகள் VLSI, Analog Electronics, Power Electronics, போன்ற வகையறாத் துறைகளில் அகராதிகளைப் படைத்து www.tamildict.tk என்கிற வலைத்தளத்தில் இட்டு வருகிறேன். இதில் பறவைகள், பழங்கள் போன்ற வகைகளிலும் சொற்கள் சேத்துள்ளேன். சீனம் போன்ற மேல் மொழிகள் சொற்கள் செந்தரப்படுத்தப்பள்ளன. இவர்கள் மின்னணுத் தரவுத்தாள்களையும் மொழிபெயர்த்து வருகின்றனர். இதன் பொருட்டு இந்திய மொழியின் முதல் தரவுத்தாள் இணையதளம் www.datasheet.tk படைத்தேன். சொல் செந்தரப்பாடு தமிழில் அமைய வேண்டும் என்பது என் நோக்கம். அப்போது தான் மொழி முன்னோக்கி வளரும்.

--தொழில்நுட்பம் 04:25, 17 ஏப்ரல் 2010 (UTC)

தொழில்நுட்பம்! மன்னிக்கவும். சரியாகப் பார்க்காமல் கூறிவிட்டேன். <www.tamildict.tk> உங்களுடைய முயற்சியா? நன்று. மிகவும் பாராட்டத்தக்க விசயம். நற்கீரன் கீழே கூறியுள்ள உங்கள் தரவுதாள் தளத்தின் முகவரியைக் (URL) கூற முடியுமா?.

<< இலட்சக் கணக்கானக் கலைச்சொற்கள் ஒவ்வொன்றும் அக்கு வேறு ஆணி வேறாக விவாதித்தால், மந்த நிலையில் தான் இருக்கும்.>> உங்கள் கருத்து மிகவும் துல்லியமான சரியான ஒன்று.--பரிதிமதி 06:10, 17 ஏப்ரல் 2010 (UTC)

ஆம் பரிதிமதி அவர்களே, <http://www.datasheet.tk> (http://tharavuthaal.50webs.com) திட்டத்திற்கு மூக்கியமான ஒருங்கிணைச்சுற்றுகளை மொழிபெயர்ப்பதற்கு பல ஆண்டுகள் எடுக்கலாம். ஆர்வம், நேரம் கிடைக்கும் போதெல்லம், செய்து வருகிறேன். தமிழகம், ஏனைய தமிழ்ப் பகுதிகளில் சீனா, தாய்வான் போல் மின்னணுவியல் முனைவு வளருமானால், தரவுத்தாள்கள் பொறியயல் கட்டுரைகள் தமிழாக்கப்பட வேண்டும் என நினைக்கிறேன். --தொழில்நுட்பம் 06:21, 17 ஏப்ரல் 2010 (UTC)

நன்றி! தொழில்நுட்பம்! தரவுத்தாள் தளத்தினைக் காண்கிறேன்.--பரிதிமதி 06:56, 17 ஏப்ரல் 2010 (UTC)
உங்கள் தரவு தாள் தளம் சென்று பார்த்தேன். மலைக்க வைக்கிறது. இப்படி ஒன்றைப் பார்ப்பேன் என்று நினைத்துக் கூட எண்ண வில்லை. உங்கள் www.tamildict.tk தளத்தை நீண்ட நாட்களாகப் பயன்படுத்தி வருகிறேன். இங்கு நான் எழுதும் கட்டுரைகளுக்கும் (இலத்திரனியல்)மிகவும் பயன்படுகிறது. குறிப்பாக உங்கள் கட்டுரைகள். மிக்க நன்றி. வேறு துறைகளில் உங்களைப் போன்றோரின் முயற்சிகளுக்கு இங்கே பார்க்க: http://chotkovai.blogspot.com/. Natkeeran 04:36, 17 ஏப்ரல் 2010 (UTC)

ஐயா...http://chotkovai.blogspot.com இல் பல புதிய சொற்கள் உள்ளன.....மிகவும் மிகவும் அருமை.....

இங்ஙனம். --தொழில்நுட்பம் 04:55, 17 ஏப்ரல் 2010 (UTC)

நானும் படித்து வருகிறேன் . உங்கள் பணி மென்மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள் . நன்றி திரு .இராஜேஷ் . --இராஜ்குமார் 19:16, 17 ஏப்ரல் 2010 (UTC)

பயனர் பெயர்[தொகு]

தங்கள் பயனர் பெயரை தொழில்நுட்பத்தை மாற்றி அமைக்க வேண்டுகோள் . நீங்கள் தானியங்கி என்று நினைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது . -- இராஜ்குமார் 19:19, 17 ஏப்ரல் 2010 (UTC)

இராஜ்குமார் அவர்களே, நான் தொழில்நுட்பம் thozhilnutpam.com இணையதளம் பதிவு செய்து நடத்தி வருவதால் தொழில்நுட்பம் என்றே விக்கிபீடியாவிலும் பதிவு செய்தேன். சிக்கல் ஏற்பட்டால் நான் "ராஜ்" என்றே கையோப்பம் இடுகிறேன்

இங்கனம் ராஜ் 20-4-2010

குளோரோபாரம்[தொகு]

குளோரோபாரம் என்னு கட்டுரையில் நீங்கள் சேர்த்திருந்த முப்பாசிகஒருக்கொள்ளியம் முதலான பெயர்களை நீக்கியுள்ளேன். இவற்றாய்ப் பெரும்பாலானோர் அறியமாட்டார்கள் இதற்கான பொது ஏற்பு ஏதும் இல்லை நீங்கள் விரும்பினால் அடிக்குறிப்பாக இப்பெயர்களை இட்டு, தமிழில் இப்படியும் வழங்குவதுண்டு என்று குறிப்பிடலாம் என்று நினைக்கின்றேன். கட்டுரையில் முக்குளோரோ மீத்தேன் என்பதையே முதன்மைப்படுத்தி எழுதியுள்ளேன். உங்களுக்கு இதனை அறியதர விரும்பினேன்.--செல்வா (பேச்சு) 19:49, 8 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]