ராய் கில்னர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராய் கில்னர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ராய் கில்னர்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 214)சூன் 14 1924 எ. தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வுசூலை 27 1926 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 9 416
ஓட்டங்கள் 233 14,707
மட்டையாட்ட சராசரி 33.28 30.01
100கள்/50கள் 0/2 18/82
அதியுயர் ஓட்டம் 74 206 not out
வீசிய பந்துகள் 2,368 58,678
வீழ்த்தல்கள் 24 1003
பந்துவீச்சு சராசரி 30.58 18.45
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 48
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 10
சிறந்த பந்துவீச்சு 4/58 8/26
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
6/0 266/0

ராய் கில்னர் (Roy Kilner, பிறப்பு: மே 9 1907, இறப்பு: மே 18 1953) இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 92 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1929 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். செத் கில்னர் மற்றும் அலைஸ் வாசிங்டன் தம்பதியருக்கு பதினோராவது மகனாகப் பிறந்தார்.[1]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

கில்னர் 1890 அக்டோபர் 17 அன்று இங்கிலாந்தின் யார்க்ஷயரில் உள்ள வார்ம்ப்வெல், பார்ன்ஸ்லி என்ற இடத்தில் பிறந்தார். சேத் கில்னர் மற்றும் மேரி ஆலிஸ் வாஷிங்டன் தம்பதியினரின் பதினொரு குழந்தைகளில் இரண்டாவது மகன் ஆவார். [2] இவரது சகோதரர் நார்மனும் துடுப்பாட்டம் விளையாடினார். அவர் யார்க்ஷயர் மற்றும் வார்விக்சயர் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். [3] கில்னர், வொம்ப்வெல் பாரிஷ் தேவாலயத்திலும் சிறுவர்கள் சர்ச் லாட்ஸ் படையணியின் உறுப்பினராக இருந்தனர். [3] இவரது தந்தையும் இவரது மாமாவும், முன்னாள் யார்க்ஷயர் வீரரான இர்விங் வாஷிங்டன் சிறுவயதிலிருந்தே துடுப்பாட்டம் விளையாட இவரை ஊக்குவித்தார். [3]

1904 இல் தனது 14 ஆம் வயதில், கில்னர் மிட்செல் துடுப்பாட்ட அணியின் முதல் லெவன் அணியில் இருந்தார். [4] 1905 ஆம் ஆண்டு முதல் பெரும்பாலான போட்டிகளில் இவர் தேர்வானார். ஆனால் அதிரடியாக மட்டையாட்டம் செய்ய முயன்றதனால் இவரது இழப்பினை இழந்தார்.சிறப்பாகப் பந்துவீசிய போதும் அதிக வாய்ப்பு இவருக்கு கொடுக்கப்படவில்லை.[5] 1909 ஆம் ஆண்டில் இவரது மட்டையாட்டம் மேம்பட்டது; இவர் அணிக்காக தனது முதல் நூறு ஓட்டங்களை எடுத்தார் மற்றும் தொடர்ந்து சிறப்பாக மட்டையாட்டம் செய்ததால் யார்க்சயர் துடுப்பாட்ட அணியின் தேர்வாளர்களின் கவனத்தினைப் பெற்றார்.[6]

தேர்வுத் துடுப்பாட்டம்[தொகு]

தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தனது முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் மட்டையாட்டத்தில் ஏழாவது வீரராகக் களம் இறங்கி இவர் 59 ஓட்டங்களை எடுத்தார்.இவருக்குப் பந்துவீச வாய்ப்பு கிடைக்கும் முன்னர் தென்னாப்பிரிக்க அணி முதல் ஆட்டப் பகுதியில் 30 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது.[7]

இறப்பு[தொகு]

பாட்டியாலாவின் மகாராஜா 1927–28 ஆம் ஆண்டில், இந்தியாவில் விளையாடவும் இந்தியத் துடுப்பாட்ட அணியின் பயிற்சியாளராகவும் கில்னரை அழைத்தார். [8] கில்னரின் சகோதரி மோலி , அழைப்பை ஏற்க மிகவும் தயங்குவதாகவும் ஏற்றுக்கொள்வதற்கு தயங்குவதாகவும் கூறினார். [9] கில்னரின் மாமா, இர்விங் வாஷிங்டன் இவர் புறப்பட்ட மறுநாளே உடல்நலமின்மையால் இறந்தார். இதனால் இவர் சற்று மனச்சோர்வு அடைந்தார். [9] இருந்தபோதிலும் இவர் சிறப்பாக மட்டையாட்டம் ஆடி அதிக ஓட்டங்களை எடுத்தார்.இதில் ஒரு போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 283 ஓட்டங்களை எடுத்தார். [9] இந்தியச் சுற்றுப் பயணத்தின் முடிவில், இவர் காய்ச்சலால் பாதிக்கப்படத் தொடங்கினார். இவரது யார்க்ஷயர் அணியின் சக விரர்களான ஆர்தர் டால்பின் மற்றும் மாரிஸ் லேலண்ட் ஆகியோரும் சிப்பிகளை சாப்பிட்ட பிறகு உடல்நிலை சரியில்லாமல் போனதாக நம்பினர், ஆனால் கில்னர் எப்படி அல்லது எப்போது நோய்வாய்ப்பட்டார் என்பது உறுதியாகத் தெரியவில்லை. வீட்டிற்கு செல்லும் வழியில் மார்சேயில் இருந்து பயணம் செய்யும் போது நடுக்கம் ஏற்பட்டது.[9] இவர் சவுத்தாம்ப்டனுக்கு வந்தபோது இவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தார். எனவே போட்டிகளை ரத்து செய்து இவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். [10] ஆனால் இவர் சவுத்தாம்ப்டனில் சிகிச்சையை மேற்கொள்ள மறுத்துவிட்டார். தனது வீட்டிற்குத் திரும்ப விரும்பினார். [11] 1928 மார்ச் 27 அன்று வொம்ப்வெல்லுக்கு வந்த இவரை மருத்துவர் பரிசோதித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து, இவரது உடல்நிலை மோசமடைந்து, பார்ன்ஸ்லிக்கு அருகிலுள்ள கேந்திரே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஏப்ரல் 5, 1928 இல், கில்னர் குடற் காய்ச்சலால் இறந்தார். [12] [11]

சான்றுகள்[தொகு]

  1. Pope, p. 2.
  2. Pope, p. 2.
  3. 3.0 3.1 3.2 Pope, p. 4.
  4. Pope, p. 4.
  5. Pope, p. 6.
  6. Pope, pp. 6–7.
  7. "England v South Africa in 1924". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 10 April 2010.
  8. Pope, p. 48.
  9. 9.0 9.1 9.2 9.3 Pope, p. 50.
  10. Pope, pp. 51–52
  11. 11.0 11.1 Pope, p. 52.
  12. "Roy Kilner obituary". Wisden Cricketers' Almanack. London: John Wisden & Co. 1929. பார்க்கப்பட்ட நாள் 21 April 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராய்_கில்னர்&oldid=3007067" இலிருந்து மீள்விக்கப்பட்டது