கிளாடியேட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லிபியா சிலிடென் ஒட்டுச்சித்திரத்தின் பகுதி (கிட்டத்தட்ட கி.பி 2ம் நூற்றாண்டு): பலவகையான கிளாடியேட்டர்களைக் காட்டுகின்றது. அதில் ஒரு கிளாடியேட்டர் மத்தியஸ்தருக்கு தன் தோல்வியை தெரிவிக்கிறார்.

கிளாடியேட்டர் (இலத்தீன்: gladiator, "வாள் வல்லுனர்")[1] என்பது ஓர் ஆயுதம் தரித்த சண்டைக்காரரைக் குறிக்கும். இவர் ஏனைய கிளாடியேட்டர், காட்டு விலங்குகள், குற்றஞ்சாட்டப் பெற்ற குற்றவாளிகளுடன் வன்முறையாக மோதி உரோமைக் குடியரசு மற்றும் உரோமைப் பேரரசு பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்துவார். சில கிளாடியேட்டர்கள் தன்னிச்சையாக அரங்கில் தோற்றுவதன் மூலம் சட்ட, சமூக நிலை சிக்கலுக்குள்ளாவதுடன் அவர்களின் வாழ்வை ஆபத்துக்குள்ளாக்குவதுண்டு. அனேகமானோர் அடிமைகளாக, மோசமான நிலையில் பயிற்றுவிக்கப்பட்டவர்களாக, சமூதாயத்தால் ஒதுக்கப்பட்டவர்களாக, மரணத்திற்குக் கூட ஒதுக்கி வைக்கப்பட்டவர்களாக இருப்பர்.

இதனையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "Gladiators - The Language of the Arena - Archaeology Magazine Archive". பார்க்கப்பட்ட நாள் 31 March 2016.

வெளி இணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Gladiator
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளாடியேட்டர்&oldid=3549870" இலிருந்து மீள்விக்கப்பட்டது