கணவாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கைபர் கணவாய்
கைபர் கணவாய்

கணவாய் (ஒலிப்பு) (Mountain pass) என்பது மலைத்தொடரின் ஊடாகவோ மலை முகடுகளின் மேலாகவோ செல்லும் பாதை ஆகும். உலகின் பெரும்பாலான மலைத்தொடர்கள் போக்குவரத்துக்குப் பெருஞ்சிக்கலாக இருப்பதால், பதியப்பட்ட வரலாற்றுக்கு முன்பிருந்தே கூட வணிகம்போர், இடம்பெயர்வில் கணவாய்களின் பங்கு இன்றியமையாதது ஆகும். உயரம் குறைவான இடங்களில், இவற்றைக் குன்றுக் கணவாய்கள் என்று அழைப்பர். இந்திய, திபெத்து எல்லையில் இமய மலையில் அமைந்துள்ள மணா கணவாய் உலகின் உயரமான கணவாயாகக் கருதப்படுகிறது.

இந்தியாவின் வரலாற்றை மாற்றி அமைத்ததில் ஆப்கானித்தானையும் பாகிஸ்தானையும் இணைக்கும் கைபர் கணவாய் மற்றும் போலான் கணவாய்களுக்கு பெரும் பங்கு உண்டு.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 53°4′52.8″N 4°7′57″W / 53.081333°N 4.13250°W / 53.081333; -4.13250, height contours from SRTM data.
  2. Map showing "saddle" names in Idaho
  3. Nicolson, A. (1945). Modern Gaelic: A Basic Grammar. A. Maclaren. பக். 28. https://books.google.com/books?id=oWViAAAAMAAJ. பார்த்த நாள்: 18 January 2021. "Bealach (mountain-pass)" 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணவாய்&oldid=3889782" இலிருந்து மீள்விக்கப்பட்டது