அன்டோனிசு சமராசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்டோனிசு சமராசு
Αντώνης Σαμαράς
185வது கிரீசின் பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியில்
20 சூன் 2012
குடியரசுத் தலைவர்கரோலோசு பபோலியசு
முன்னையவர்பனகியோடிசு பிக்ரம்மெனோசு
புதிய சனநாயகம் கட்சித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
30 நவம்பர் 2009
முன்னையவர்கோஸ்டாஸ் கரமான்லிஸ்
எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
30 நவம்பர் 2009 – 19 சூன் 2012
பிரதமர்ஜார்ஜ் பாபன்ட்ரோ
முன்னையவர்ஜார்ஜ் பாபன்ட்ரோ
பின்னவர்அலெக்சிஸ் சிப்ராசு
வெளியுறவுத் துறை அமைச்சர்
பதவியில்
11 ஏப்ரல் 1990 – 13 ஏப்ரல் 1992
பிரதமர்கோன்ஸ்டான்டினோசு மிட்சோடாகிசு
முன்னையவர்ஜார்ஜியோசு பாபோலியசு
பின்னவர்கோன்ஸ்டான்டினோசு மிட்சோடாகிசு
பதவியில்
23 நவம்பர் 1989 – 16 பெப்ரவரி 1990
பிரதமர்செனபோன் சோலோடாசு
முன்னையவர்ஜார்ஜியோசு பாபோலியசு
பின்னவர்ஜார்ஜியோசு பாபோலியசு
நிதி அமைச்சர்
பதவியில்
2 சூலை 1989 – 12 அக்டோபர் 1989
பிரதமர்சான்னிசு சான்னெடாகிசு
முன்னையவர்திமித்ரிசு சோவோலாசு
பின்னவர்ஜியார்ஜியோசு அகபிடோசு
நாடாளுமன்ற உறுப்பினர்
for மெசேனியா
பதவியில் உள்ளார்
பதவியில்
17 மே 2012
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு23 மே 1951 (1951-05-23) (அகவை 72)
ஏதென்ஸ், கிரீசு
அரசியல் கட்சிபுதிய சனநாயகம்
துணைவர்ஜார்ஜியா கிரெடிகோசு
பிள்ளைகள்லெனா
கோசுடாசு
முன்னாள் கல்லூரிஅம்ஹெர்ஸ்ட் கல்லூரி
ஹார்வர்டு பல்கலைக்கழகம்
இணையத்தளம்அலுவல்முறை வலைத்தளம்

அன்டோனிசு சமராசு Antonis Samaras (Antonis Samaras, கிரேக்க மொழி: Αντώνης Σαμαράς, பிறப்பு 23 மே 1951) ஓர் கிரேக்க பொருளியலாளரும் அரசியல்வாதியும் ஆவார். கிரீசின் முக்கிய பழமைவாதக் கட்சியான புதிய சனநாயகக் கட்சியின் தலைவராக 2009ஆம் ஆண்டு முதல் உள்ளார். சூன் 20, 2012 அன்று கிரீசின் 185வது பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.[1] 1989ஆம் ஆண்டில் நிதி அமைச்சராகவும் பின்னர் 1989 முதல் 1990 வரையும் 1990 முதல் 1992 வரையும் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். 2009ஆம் ஆண்டில் பண்பாட்டு அமைச்சராகப் பணியாற்றினார்.

1993ஆம் ஆண்டில் அவர் ஏற்படுத்திய பிரச்சினையால் தாம் அமைச்சராகப் பணியாற்றிய புதிய சனநாயகக் கட்சியின் அரசு கவிழக் காரணமாக இருந்தார். இருப்பினும் 2004ஆம் ஆண்டில் அக்கட்சியில் மீண்டும் இணைந்து 2009ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அக்கட்சியின் உட்கட்சித் தேர்தலில் கடுமையான போட்டிக்கிடையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தலைவராக பொறுப்பேற்றார்.[2] 1974ஆம் ஆண்டில் உருவான இக்கட்சியின் ஏழாவது தலைவராவார்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

ஏதென்சில் பிறந்த சமராசு அங்கு அவரது முப்பாட்டனார் நிறுவிய ஏதென்சு கல்லூரியில் கல்வியைத் துவங்கி 1974இல் அம்ஹெர்ஸ்ட் கல்லூரியில் பொருளியலில் பட்டம் பெற்றார். தொடர்ந்து ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் நிர்வாக மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றார். கிரேக்க நாடாளுமன்றத்தில் மெசேனியா என்றத் தொகுதியின் உறுப்பினராக 1977-1996, 2007 - நடப்பு காலகட்டங்களில் தேர்ந்தெடுகப்பட்டுள்ளார். மேலும் நிதி, வெளியுறவு மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சராக இருந்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Antonis Samaras sworn in as new Greece prime minister". BBC. 20 June 2012. பார்க்கப்பட்ட நாள் 20 June 2012.
  2. "ND heads for tense election showdown". Kathimerini. 30 November 2009. http://www.ekathimerini.com/4dcgi/_w_articles_politics_100006_28/11/2009_112865. பார்த்த நாள்: 30 November 2009. 

வெளி இணைப்புகள்[தொகு]

அரசியல் பதவிகள்
முன்னர்
பனகியாடிசு பிக்ரம்மெனோசு
கிரீசின் பிரதமர்
2012–இன்றளவில்
பதவியில் உள்ளார்
அரசியல் கட்சி பதவிகள்
முன்னர்
கோஸ்டாஸ் கரமானிலிஸ்
புதிய சனநாயகம் கட்சித் தலைவர்
2009–இன்றளவில்
பதவியில் உள்ளார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்டோனிசு_சமராசு&oldid=3231436" இலிருந்து மீள்விக்கப்பட்டது