பேச்சு:அடிமை முறை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரவி.

Trafficking என்பதை இரவி என மொழி பெயர்த்துள்ளென். தமிழகராதியில் இப்படி பொருள்:

இரவி - இரவி (p. 0315) [ iravi¹ ] n iravi . Commerce, traffic in goods; வாணிகத்தொழில். (பிங்.).

Trafficking ஐ வேறு எப்படி மொழி மாற்றலாம்? --விஜயராகவன் 16:50, 30 ஜனவரி 2007 (UTC)

ஆகா, என் பேருக்கு இப்படி ஒரு அர்த்தமா? தற்காலத்தில் கடத்தல் என்பதை traffickingக்கு இணையாக ஊடகங்களில் எழுதுகிறார்கள். எளிமையான சொல்லாகவும் இருக்கிறது.--Ravidreams 10:36, 1 பெப்ரவரி 2007 (UTC)

ரவி, கடத்தல்னா kidnapping ஆகிவிடும். kidnapping என்றால் அ) பலாத்காரம் உள்ளது, ஆ) கடத்தப் பட்டவர் சுவாதீனத்தில்லில்லை. Trafficking என்பது வேறு விஷயம். உதாரணமாக, ஒரு கிராமத்து பெண் நேபாளத்தில் வேலையில்லாமல், வருமையில் இருக்கிராள்; அவளை ஒரு தரகன் , உனக்கு பம்பாயில் பெரிய சினிமா நட்சத்திர உலகமே காத்திருக்கிறது, என்று ஆசை காட்டி, அவளை பம்பாய்க்கு அழைத்து சென்று, அடிமை கதியில் வைத்து, மற்ற தரகர்களுக்கு விற்று, வேசியாக்குகிறான். இதைப்போல் லட்சக்கணக்கான பெண்கள் உள்ளனர். இதுதான் Trafficking. இதில் முதலில் கடத்தல் இல்லை. அதனால்தான் அந்த வார்த்தையை பிரயோகிக்கவில்லை. கடத்தலுக்கு உதாரணம் வீரப்பன் செய்த வேலை. --விஜயராகவன் 10:51, 1 பெப்ரவரி 2007 (UTC).

ரவி, அகராதியை பார்த்தால் 2 சொற்கள் உள்ளன.

கடத்தல் [ kaṭattal ] n kaṭattal . < கட- (Mus.) Defect in singing, flaw of changing from one note to many; ஓரோசையான தன்மை நீங்கிப் பலவோசை யாகவரும் இசைக்குற்றம். (திருவாலவா. 57, 26.)

கடத்துதல் [ kaṭattu¹-tal ] 5 v.tr kaṭattu. Caus. of கட-. [M. kaḍattu.] 1. To cause to go; to drive; செலுத் துதல். 2. To transport, carry across; கடப்பித் தல். அடியார் பவக்கடலைக் கடத்துமணியை (திருப்போ. சந். பிள்ளைத். காப்புப். 6). 3. To pass, as time; காலம் போக்குதல். நாளைக் கடத்திவிட்டான். 4. To do carelessly, as work; to dawdle; கழப்புதல். அவன்வேலையைக் கடத்துகிறான்.

'கடத்தல்' நிச்சயமாக இங்கு பயன்படாத வார்த்தை. 'கடத்துதல்' சரியா இருக்கிறார்போல் தோண்றது.--விஜயராகவன் 11:20, 1 பெப்ரவரி 2007 (UTC)

Vij, நீங்க சொன்ன நேபாள எடுத்துக்காட்டுக்கு கடத்தல் என்ற சொல் முழுமையா பொருந்தாது - ஒப்புக்கொள்கிறேன். இதற்கு சம கால ஊடகங்களில் ஏதேனும் சொல் தென்பட்டால் அறிந்தவர் சொல்லுங்கள். மற்றபடி, தடைசெய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்வதற்கு கடத்தல் பொருந்தும் தான்--Ravidreams 17:28, 2 பெப்ரவரி 2007 (UTC)
கூகிள்ள தேடினால் , 95% உபயொகம் abduct, kidnap என்ற சொல்லில்தான். கடத்தல் என்றால் நேரடி செய்கையாகிரது. பின்னணியில் நின்று செய்வது கடத்துதலாகிறது. அதனால் நீதி, சட்ட முறையில் நோகும் போது கடத்துதலே சரியாக உள்ளது. உதாரணமா அரசாங்கம் ஒரு கள்ள தோணியை கைப்பற்றி, அதிலிருக்கும் சட்டப்புறமபான வந்தேரிகளை கைப்பற்றுகிறது. ஆனால் நீதி மன்றத்தில் கள்ளதோணியின் முதலாளியை 'கடத்தல்' என்று குற்றம் சாற்றினால், அதை நீதிபதி ஏற்க்கமாட்டார். ஏனெனில், சட்டப்புறம்பான வந்தேரிகள் தங்கள் ஆர்வத்திலேயே அந்த தோணியிலேறினர். --விஜயராகவன் 10:53, 5 பெப்ரவரி 2007 (UTC)

எசமானன் - முதலாளி

எசமானன் என்பது 'முதலாளி'யை விட பொருத்தமாகும். சென்னை பல்கலைக்கழக பேரகராதிப் படி

எசமானன் - Lord, master, employer, owner, proprietor, head of a family; தலைவன். Colloq

முதலாளி - 1. Capitalist; மூலதனம் உள்ளவன். (W.) 2. Proprietor; சொந்தக்காரன். Loc. 3. Landlord; நிலமுடைய வன். Loc. 4. Chief; president; responsible person; தலைவன். (W.)

இது இரண்டிலேயும் எசமானனே அடிமை முறையில் மிகப் பொருத்தம்மாக உள்ளது


பலாத்காரம் - வலுக்கட்டாயம்

சென்னை பல்கலைக்கழக பேரகராதிப் படி

வலுக்கட்டாயம் - சங்குப்பிடி (p. 1230) [ cangkuppiṭi ] n caṅku-p-piṭi . < id. +. Ex treme compulsion; வலுக்கட்டாயம் .

பலாத்காரம் (p. 2536) [ palātkāram ] n palātkāram . < balāt-kāra. Force, violence, compulsion; நிர்ப்பந்தம்.

'பலாத்காரத்தில்' மனிதர்மேல் தாக்குதல் வெளிப்படையாகவே உள்ளது; அந்த தாக்குதல் 'வலுக்கட்டாயத்தில்' அவ்வளவாக தெரியவில்லை.

அதனால் அடிமைகளை வழக்கமாக பிடிப்பதில் 'பலாத்காரமே' சாலப் பொருந்தும்

விஜயராகவன். வலுக்கட்டாயம், முதலாளி ஆகிய இரண்டு சொற்களும் மிகவும் பொருந்துவதைப் பாருங்கள். யஜமானன் என்னும் சொல், பொதுவாக வேத யக்ஞங்கள் செய்யும் பொழுது அதனை நடத்தி வைப்பவரைக் குறிக்கும். வேத யக்ஞங்களின் பயன்களையும் பெறுபவர்கள். சென்னைப் ப.க அகராதியைப் பாருங்கள்.

வலுக்கட்டாயம் என்னும் சொல் தெளிவாக என்ன என்று உணர்த்துகிறது. பலம் என்பது வலுதான், பலாத்காரம் என்பது வலுவைப் பயன்படுத்தி பணியச் செய்தல் வழிக்குக் கொண்டுவருதல்- வலுக்கட்டாயம். மேலும் ஆங்கிலத்திலே நீங்கள் குறிப்பதிலேயே extreme compulsion என்று இருப்பதைப் பாருங்கள். மேலும் பலாத்காரம் என்பது கற்பழிப்புக்கும் பயன்படுத்தப்படுகின்றது. இச்சொற்களை எல்லாம் அகராதி பார்த்துத்தான் உணர வேண்டும் என்பதில்லை. இங்கே நல்ல தமிழ்ச் சொற்களைக் கையாளுவது எழுதப்படா கொள்கை போன்றது. முத்லாளி என்பது வெட்ட வெளிச்சம். சொந்தக்காரன், உரிமைக்காரன் என்று பலவாறு விளக்கலாம்.--செல்வா 21:35, 2 பெப்ரவரி 2007 (UTC)

மேலும் ஒன்று. கட என்பதுதான் அடிச்சொல். கட - கடத்தல், கடத்துதல். இரண்டும் சிறு வேறுபாடு கொண்டவை. நட > நடத்தல், நடத்துதல் போன்று. பிறர் துணையால் கடத்தச்செய்வது கடத்துதல். கடத்தல், கடந்து செல்லுதல். சாலையைக் கடத்தல். கள் முதலிவற்றை திருட்டுத்தனமான முறையில் கடத்துதல். --செல்வா 21:42, 2 பெப்ரவரி 2007 (UTC)

செல்வா, இந்தப் பக்கத்தை பாருங்கள் http://www.thinnai.com/?module=displaystory&story_id=60702016&format=html அடிமையின் சொந்தக்காரனுக்கு எஜமான் என்ற சொல்லாட்டம். பல வருடங்களுக்கு முன் எலியட் பீசர் ஸ்டவ்வின் "டாம் மாமாவின் குடில்' என்ற கதையின் தமிழாக்கத்தை படித்திருக்கிறேன்; அதில் எஜமான் என்ற சொல்தான் பயன்பட்டதாக ஞாபகம். தற்கால அரசியல்/சமூக/பொருளாதார துறைகள் 'முதலாளி' என்பதை Capitalist என்ற அர்த்தத்தில் பயன்படுத்துகிறன. அதனால்தான் முதலாளியைத் தவிர்த்தேன்.--விஜயராகவன் 10:23, 6 பெப்ரவரி 2007 (UTC)

அடிமையின் சொந்தக்காரனை ஆண்டான் என்று கூறுவதுண்டு. ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதோ என்ற பாட்டை நாம் எல்லோரும் கேட்டிருக்கிறோம். நந்தனார் சரித்திரம் நாடகத்தில் நந்தன் தன்னை அடிமையாக வைத்திருந்தவனை ஆண்டே என்று அழைப்பதையும் கேள்விப்படிருக்கிறோம் அல்லவா? 17 ஆம், 18ஆம் நூற்றாண்டுகளை அண்டிச் செய்யப்பட்டதாகக் கருதப்படும் ஞானவெட்டியான் நூலிலுள்ள பல பாடல்களிலே இந்த ஆண்டே சொல் வருகிறது. எடுத்துக்காட்டுக்காக ஒன்றைக் கீழே காண்க.


திரைகடந்து திரைக்குமேற் பெரும்பாழ் தாண்டிச்
....... சிறந்தசாகாக் காலும்வேகாத் தலையுந் தாண்டி
மறைபுகுந்து வோதுகின்ற வேதந் தாண்டி
....... மதனகலி யாணதிரு வல்லி மாது
வரையெழுந்த பதினெட்டாங் கோட்டின் மேலு
........ மாதளம்பூ வடிவமனோன் மணியைப் போற்றி
கரை கடந்து பறையனென்று தள்ளி வைத்த
...... கருத்தையினிச் சொல்லுகிறே னாண்டே கேளே.
(சொல்லுகிறே னாண்டே = சொல்லுகிறேன் ஆண்டே)


சென்னைப் பல்கலைக்கழக அகராதியில் எழுத்துவாங்குதல் என்பதற்குக் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பைப் பாருங்கள்:
எழுத்துவாங்கு-தல் (p. 0542) [ eẕuttuvāngku-tal ] v. intr eḻuttu-vāṅku. < id. +. 1. To imprint one's lord's name on one's breast, in token of becoming his slave; அடிமையாதற்கு அறிகுறியாக ஆண்டான் பெயரை மார் பிலே யெழுதிக்கொள்ளுதல். தேவசாதியானது எழுத்து வாங்கும்படியாக வாயிற்று, தோளுந் தோண்மாலையுமாய் . . . கடைந்தபடி (ஈடு, 1, 3, 11). 2. To take one's signature or receipt; கையெழுத்துவாங்குதல்
ஆண்டான் என்பது சரியான சொல்தான். Mayooranathan 15:53, 6 பெப்ரவரி 2007 (UTC)
மயூரநாதன், ஆண்டான் என்பதும் நல்ல சொல்தான். நாம் இங்கே மனிதர்களின் அடிமைகளை பற்றி பேசுகிறோமே தவிர, "கடவுளின் அடிமை"யைப் பற்றி அல்ல. முதலாவது சமூக உறவு; இரண்டாவது மனப்பான்மை.--விஜயராகவன் 17:42, 6 பெப்ரவரி 2007 (UTC)
விஜி, நான் மேலே எழுதியவை எல்லாமே மனிதர்களின் அடிமைகளைப் பற்றியே. கடவுளின் அடிமைகளைப் பற்றியல்ல. இன்னொரு முறை நிதானமாக வாசித்துப் பார்க்கவும். Mayooranathan 17:53, 6 பெப்ரவரி 2007 (UTC)


எஜமான் என்பது திரிந்த தமிழ்ச் சொல்லா வேறு மொழிச் சொல்லா என்று தெரியவில்லை. ஆனால், ஆண்டான் என்பது அருமையான இன்றும் புரிந்துகொள்ளப்படக் கூடிய சொல். ஆண்டான் அடிமை என்று சில ஆண்டுகளுக்கு முன் படமே வந்தது தானே. இன்றும் தமிழகத்தின் சில வட்டாரங்களில் ஆண்டை என்று பண்ணையாரை அழைப்பதுண்டு என்று நினைக்கிறேன். நல்ல சொல்லை நினைவுபடுத்தியதற்கு நன்றி, மயூரனாதன்.--Ravidreams 18:10, 6 பெப்ரவரி 2007 (UTC)

இரவி என்ற சொல் தொடர்பாகவும் எனக்கு ஐயம் உள்ளது. அகராதியில் Traffic in Goods என்றே உள்ளது. Trafficking என்று அல்ல என்பதைக் கவனிக்கவும். Mayooranathan 18:14, 6 பெப்ரவரி 2007 (UTC)
எஜமான் என்பது யஜமான என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து வந்ததாக அகராதி கூறுகிறது. யஜமான என்ற சமஸ்கிருதச் சொல்லின் பொருளைக் கீழே காணவும்.
yajamana (p. 238) [ yága-mâna ] pr. pt. sacrificing; m. institutor of a sacrifice (who pays its expenses); man capable of paying the expenses of a sacri fice, wealthy man: -bhâgá, m. share of the insti tutor of a sacrifice; -loka, m. world of sacrificers.
Mayooranathan 18:25, 6 பெப்ரவரி 2007 (UTC).

மயூரநாதன், ரவி, எஜமானின் துவக்கம் வேதகாரியங்களிலிருந்து வரது. அது கரெக்ட். ஆனால் பல காலமாக பேச்சிலும், எழுத்திலும் Lord, Master என்ற பொருளில் உபயோகமாகிறது.நான் எவ்வளவோ தடவை கேட்டுள்ளேன், படித்திருக்கிரேன்.நாம் மொழி பெயர்ப்பதற்கு சாதாரணமாக பயன் படுத்தும் சொற்களை உபயோகிக்கவேண்டும் (முடிந்தவரை). Trafficking னோட மொழிபெயர்ப்பு கொஞ்சம் tricky தான். ஏனெனில், ஆங்கிலத்திலேயே இது புது சொல். Traffic என்ற மூல சொல்லிலிருந்து, இக்காலத்து குற்றத்திற்கு ஒரு செயர்க்கை வார்த்தையை ஆங்கிலம் பேசுபவர்கள் செய்துள்ளனர்.--87.113.4.183 20:28, 6 பெப்ரவரி 2007 (UTC)

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 00:45, 14 மே 2007 (UTC)[பதிலளி]

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 00:46, 14 மே 2007 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அடிமை_முறை&oldid=140198" இலிருந்து மீள்விக்கப்பட்டது