ஸ்விஸ் ரீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Schweizerische Rückversicherungs-Gesellschaft AG
வகைவரையறுக்கப்பட்ட நிறுவனம்
நிறுவுகை19 டிசம்பர், 1863
தலைமையகம்சூரிக், சுவிட்சர்லாந்து
முதன்மை நபர்கள்ஸ்டேஃபான் லிப்பே (மேலாண் இயக்குனர்‍), வால்ட்டர் கீல்ஹோல்ஸ்(தலைவர்)
தொழில்துறைநிதி சேவை
உற்பத்திகள்மறுகாப்பீடு, காப்பீடு, சொத்து நிர்வாகம்
வருமானம்US $28.84 billion (2010)[1]
இலாபம்US $863 million (2010)[1]
மொத்தச் சொத்துகள்US $228.40 billion (end 2010)[1]
மொத்த பங்குத்தொகைUS $26.91 billion (end 2010)[1]
பணியாளர்10,360 (end 2010)[1]
இணையத்தளம்www.swissre.com

ஸ்விஸ் ரீஇன்சுரன்ஸ் கம்பெனி லிமிடெட் (ஆங்கிலம்: Swiss Reinsurance Company Ltd, ஜெர்மன்: Schweizerische Rückversicherungs-Gesellschaft AG) பொதுவாக ஸ்விஸ் ரீ (Swiss Re) என்று அழைக்கபடுகிறது. இது சுவிட்சர்லாந்து நாட்டில் அமைக்கபெற்ற மறுகாப்பீட்டு நிறுவனம். இது உலகின் இரண்டாவது பெரிய மறுகாப்பீட்டு நிறுவனம். இதன் தலைமையகம் சூரிக் நகரத்தில் உள்ளது. 1863ல் ஆரம்பிக்கபட்ட ஸ்விஸ் ரீ தற்பொது இருபதிற்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படுகிறது.

வரலாறு[2][தொகு]

1861ம் ஆண்டு க்லாரஸ் நகரில் எற்பட்ட பெறும் தீ சுவிட்சர்லாந்தில் பேரழிவுகளுக்கான காப்பீடு பற்றாக்குறை இருப்பதை காட்டியது. இதனால் 1863ல் ஹெல்வெஷியா ஜெனரல் இன்சுரன்ஸ் நிறுவனம், கிரெடிட் சுவிஸ் மற்றும் பாஸ்லர் ஹான்டல்ஸ்பெஙக் ஆகிய நிறுவனங்கள் ஸ்விஸ் ரீஇன்சுரன்ஸ் நிறுவனத்தைத் தொடங்கின். அடிப்படை முதல் 6 மில்லியன் சுவிசு பிராங்க் ஆகும்.

1956க்குள் ஸ்விஸ் ரீ அனைத்து கண்டங்களிலும் தனது கிளைகளை தொடங்கியிருந்தது. அதன் 100வது ஆண்டான 1963ல் மொத்தம் 75 நாடுகளில் உள்ள 1000 நிறுவனங்களுடன் மறுகாப்பீடு ஒப்பந்த்ம் செய்துகொண்டிருந்தது.

செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்களின் போது உலக வர்த்தக மையக் கட்டடத்தின் (அதன் ஒப்பந்ததாரர் சில்வர்ஸ்டெயின் பிராபர்டீஸ்) முன்னனி காப்பீடாளராக ஸ்விஸ் ரீ இருந்தது. அத்தாக்குதலுக்கு பின் காப்பீட்டுத்தொகை தொடர்பாக, சில்வர்ஸ்டெயின் பிராபர்டீசுக்கும் மற்ற காப்பீட்டாளர்களுக்கும் உடன்பாடு ஏற்படவில்லை. 2004ல் இவ்வழக்கிற்கு இரு நடுவர் குழுக்கள் சில்வர்ஸ்டெயின் பிராபர்டீசிற்கு US $4.6 பில்லியன் காப்பீட்டுத்தொகையாக வழங்க உத்தரவிட்டனர்.[3].

மேற்குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Financial information". Swiss Re. Archived from the original on 2 ஜூன் 2011. பார்க்கப்பட்ட நாள் 02 June 2011. {{cite web}}: Check date values in: |accessdate= and |archive-date= (help)
  2. "About Swiss Re". Archived from the original on 25 மே 2011. பார்க்கப்பட்ட நாள் 02 June 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2004 Trial". Archived from the original on 2007-09-18. பார்க்கப்பட்ட நாள் 02 June 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்விஸ்_ரீ&oldid=3915087" இலிருந்து மீள்விக்கப்பட்டது