பேச்சு:பால் (உயிரியல்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பால் (உயிரியல்) என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

spermatozoa, or sperm என்பதை விந்து என்றே சொல்லலாம். விந்தணு என்று சொல்லுதல் வேண்டுமா? அதேபோல ova, or egg cells or oocyte என்பதைக் கருமுட்டை எனலாம் என நினைக்கிறேன். சினைமுட்டை என்பதும் மிகநல்ல சொல்லே (இதுவே இருக்க வேண்டும் எனிலும் எனக்கு மகிழ்ச்சியே). male gametes, female gametes என்பதனை ஆண் கருவிந்து, பெண் கருமுட்டை என்று கரு என்னும் சொல்லைச் சேர்த்துக் கூறலாம் என நினைக்கின்றேன். பொதுவாக gamete என்பதனை பால்கரு (பாற்கரு, அல்லது பாலணு எனலாம். புணரணு, புணர்கரு என்று வேறுபல சொற்களாலும் கூறலாம். மாந்தர் பாலணுவில் 23 நிறப்புரிகள் (குரோமோசோம்கள்) இருக்கும். கருத்துகளைப் பகிர்வதே நோக்கம். எதனையும் எடுத்தாளவேண்டும் என்று வலியுறுத்தவில்லை. --செல்வா 18:15, 12 டிசம்பர் 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பால்_(உயிரியல்)&oldid=2374170" இலிருந்து மீள்விக்கப்பட்டது