இன்னிசைச் சிந்தியல் வெண்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இன்னிசைச் சிந்தியல் வெண்பா என்பது வெண்பாவின் பொது இலக்கணத்தோடு மூன்றடிகளைக் கொண்டதாய்த் தனிச்சொல்லின்றி, ஒரு விகற்பத்தாலோ பல விகற்பத்தாலோ அமைந்திருக்கும் வெண்பா வகை ஆகும். [1]

தனிச்சொல் இன்றி ஒரு விகற்பத்தான் வந்த இன்னிசைச் சிந்தியல் வெண்பா

நறுநீல நெய்தலுங் கொட்டியுந் தீண்டிப்

பிறநாட்டுப் பெண்டிர் முடிநாறும் பாரி
அறநாட்டுப் பெண்டி ரடி

மேற்கோள்[தொகு]

  1. அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் - பழைய விருத்தி உரை - வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பு - சென்னை அரசு அச்சகம் - 1960 - பக்கம் 176