இந்தியாவில் உழவர் தற்கொலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியா ஒரு வேளாண்மை நாடு. அறுபது சதவிகித மக்கள் வேளாண்மையுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ சார்ந்து இருக்கிறார்கள். இந்தியாவில் வேளாண்மை பெரும்பாலும் பருவமழைகளையே சார்ந்திருப்பதால், பருவமழை தவறுவது, விளைச்சலுக்கு ஏற்ற விலை இல்லாதது, இடைத்தரகர்களின் சுரண்டல் போன்ற காரணங்களால் உழவர்களின் தற்கொலைகள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன[1]

தற்கொலை வீத அதிகரிப்பு[தொகு]

1995-ல் முதன் முதலாக தேசிய குற்றங்கள் பதிவு அமைப்பு என்பது விவசாய தற்கொலைகளை பட்டியலிட்டது. விவசாய தற்கொலைகள் 90களில் பத்திரிகையாளர் சாய்நாத் என்பவரால் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டது. 90களில் இருந்து இரண்டரை லட்சத்திற்கும் (கால் மில்லியனுக்கும்) அதிகமான உழவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்தியாவில் பதிவாகியுள்ள விவசாய தற்கொலைகளில் பெரும்பாலானவை மகாராட்டிரா, ஆந்திரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மற்றும் சத்தீசுக்கர் மாநிலங்களில் நடைபெற்றுள்ளது. 2010-ம் ஆண்டில் தற்கொலை கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கையை மேற்படி 5 மாநிலங்களில் முந்தைய ஆண்டு விபரங்களோடு ஒப்பிடுகையில் 2009-ல் 62 சதவீதமாக இருந்தது 2010ல் 66.49 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

தேசிய அளவில் உள்ள புள்ளி விபரங்களைப் பார்க்கையில் 2004 ஆம் ஆண்டில் இருந்து உழவர்கள் தற்கொலை என்பது சராசரியாக 30 நிமிடத்திற்கு ஒன்று என்ற விகிதத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

மாநிலவாரி புள்ளி விவரம்[தொகு]

2009-ம் ஆண்டோடு ஒப்பிடும் போது 2010-ல் இந்த பெரிய மாநிலங்களில் உயர்ந்துள்ள தற்கொலை எண்ணிக்கைகள் விபரம்:

  • மகாராஷ்டிரா (+ 269),
  • கர்நாடகா (+303),
  • ஆந்திரப் பிரதேசம் (+111).

2010-ல் கீழ்காணும் மாநிலங்களில் அத்தகைய தற்கொலைகள் பெரும் அளவில் குறைந்துள்ளது.

  • சதீஷ்கர் (-676),
  • தமிழ்நாடு (-519),
  • ராஜஸ்தான் (-461),

மற்றும் குறிப்பிட்ட அளவு குறைந்துள்ள மாநிலங்கள்

  • மத்தியப் பிரதேசம் (-158),
  • புதுச்சேரி (-150),
  • உத்திரப்பிரதேசம் (-108),
  • மேற்கு வங்கம் (-61),
  • குஜராத் (-65).

மேற்சொன்ன 5 பெரிய மாநிலங்கள் இந்த விபரங்களில் 56.04 சதவீதத்தை தன்னகத்தே கொண்டிருந்தன[2] [3].

மகாராட்டிரம்[தொகு]

மகாராட்டிராவில் 1995 முதல் 2002 வரையிலான காலத்தில் 20,066 உழவர்கள் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். அடுத்த 8 ஆண்டுகளில் இதே மாநிலத்தில் இந்த எண்ணிக்கை 30,415 என உயர்ந்துள்ளது. பின்னால் உள்ள காலத்தைப் பார்க்கிற போது வருடத்திற்கு 1155 வீதம் தற்கொலை எண்ணிக்கை உயர்ந்த இந்த 14 ஆண்டுகாலத்தில் தனிநபர் வருவாய் கணக்கீடு முதல் இடத்தை பிடிக்கும் அளவிற்கு ரூ 74,027 ஆக உயர்ந்தது.[4]

கடந்த 14 ஆண்டுகளில் அதிகமாக 2015 ஆம் ஆண்டு மகாராட்டிரத்தில் 3228 உழவர்கள் தற்கொலை செய்துள்ளனர் என மத்திய அரசின் விவசாயத்துறை அமைச்சர் ராதாமோகன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தற்கொலை செய்தவர்களில் அதிகபட்சமாக அவுரங்காபாத்தில் 1,130 பேர், அமராவதியில் 1,179 பேர், நாசிக்கில் 4,590 பேர், நாக்பூரில் 362 பேர், கொங்கனில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 3, 228 வழக்குகளில், 1,841 பேர் கடன் வாங்குவதற்கு தகுதியானவர்கள். 903 பேர் தகுதியற்றவர்கள். 484 பேர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தற்கொலை செய்து கொண்டவர்களில், 1,818 பேரின் வாரிசுகளுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.[5]

வரலாறு[தொகு]

தொண்ணுறுகளில் விவசாயிகளின் தற்கொலைகள் முதன்முதலில் மகாராஷ்டிராவில் வெளிச்சத்திற்கு வந்தது. பின்னர் ஆந்திராவிலும் தற்கொலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.முதலில் விதர்பா என்னும் ஊரில் பருத்தி விவசாயிகளே பாதிக்கப்பட்டதாக செய்திகள் வந்தன.[6] ஆனால் அனைத்து விவசாயிகளும் பாதிக்கப்பட்டது பின்பு தான் தெரிய வந்தது.

காரணங்கள்[தொகு]

மரபணு மாற்ற விதைகள் தற்கொலைகளுக்கு காரணமாக இருக்கின்றது.[7] [8][9]

எதிர் வினைகள்[தொகு]

விதர்பாவில் விவசாயிகள் தற்கொலை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. உலக வர்த்தக நிறுவனத்தின் கொள்கைகளால் விதர்பாவில் பருத்திக்கு சந்தைகள் இல்லை.குழந்தைகளை பள்ளிப்படிப்பில் இருந்து பாதியிலேயே நிறுத்துவது, விதவைகள் அதிகரிப்பது, வட்டிக்காரர்களின் கொடுமை ஆகியவை விதர்பாவில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.[10]

மக்கள் கலையில்[தொகு]

பீப்ளி லைவ் என்ற திரைப்படம் விவசாயி தற்கொலைகளைச் சித்தரிக்கும் திரைப்படம்.[11] மேலும் பல திரைப்படங்களும் ஆவணப் படங்களும் வெளிவந்திருக்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.voltairenet.org/article159305.html
  2. "In 16 years, farm suicides cross a quarter million"
  3. "Farm sucides All India Ttotal (1995-2010)"
  4. "விவசாயிகள் தற்கொலை ".
  5. மகாராஷ்டிராவில் 3,228 விவசாயிகள் தற்கொலை: கடந்த 14 ஆண்டுகளில் அதிகம்
  6. "Report of Fact Finding Team on Vidharbha".
  7. "BT cotton".
  8. "Farmers sucide".
  9. "Indian Farmer's Final Solution".
  10. ""(It is difficult to live without hope…)"" (PDF). Archived from the original (PDF) on 2012-04-26. பார்க்கப்பட்ட நாள் 2012-05-11.
  11. 'Peepli Live' is India's Oscar entry பரணிடப்பட்டது 2010-10-08 at the வந்தவழி இயந்திரம், 25 செப்டம்பர் 2010, Hollywood Reporter