வெள்ளெருக்கு விநாயகர் சிலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெள்ளெருக்கு வேரைப் பயன்படுத்தி வடிக்கப்படும் விநாயகர் சிலைகள் வெள்ளெருக்கு விநாயகர் சிலைகள் (பிள்ளையார்) என்றழைக்கப்படுகின்றன.

நம்பிக்கைகள்[தொகு]

வெள்ளெருக்கு வேருக்கு தெய்வீக சக்தியுள்ளது. எனவே இந்த வேரைப் பயன்படுத்தி வடிக்கப்படும் சிலையும் மிகுந்த சக்தி வாய்ந்ததாகும். வெள்ளெருக்கு விநாயகர் வழிபாடு மிகவும் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. வீட்டிலோ அல்லது பொது இடங்களிலோ ஒரு சுத்தமான இடத்தில் வெள்ளெருக்கு விநாயகரை வைத்து வழிபடலாம். விநாயகருக்கு நீரில் அபிஷேகம் செய்தல் கூடாது. அடிக்கடி கைகளால் தீண்டி வழிபடுவதைத் தவிர்க்க வேண்டும். அத்தர், புனுகு, சவ்வாது முதலிய நறுமணப் பொருட்களைச் அணிவிக்கலாம். உலர்ந்த பூக்களைச் சூட்டலாம். இவ்வாறு வழிபாடு செய்பவருக்கு அனைத்து நலன்களும் கைகூடும். செல்வம், செல்வாக்கு, பெருமை கூடும். பீடைகள் ஒழியும். பனிரெண்டு ஆண்டுகட்கு மேல் வளர்ந்த வெள்ளெருக்கு வேரில் விநாயகரது வடிவம் சுயம்புவாகத் தோன்றும் என்கிறார்கள். இது போன்ற சுயம்பு விநாயகர்கள் தோன்றியதாக பத்திரிகை வாயிலாக அறிய முடிகிறது. இது போன்ற சுயம்பு விநாயகர்கள் அற்புத சக்தி வாய்ந்தவர்கள்.

சிலை வடிப்பு[தொகு]

வெள்ளெருக்கு விநாயகர் சிலை வடிக்கும் கைவினைக் கலைஞர்களை பல கோவில்களின் எதிரே காணலாம். சென்னைக்கு அருகில் ஒரகடத்தில் வெள்ளெருக்கு விநாயகர் கோவில் உள்ளது. இங்கே முறைப்படி வெள்ளெருக்கு விநாயகரை தயாரித்து விற்பனையும் செய்கிறார்கள். வெள்ளெருக்கு செடிக்கு உயிர்ப்பு சக்தி உள்ளதால், அதனைப் பார்த்தவுடன் வெட்டிவிடாமல் சில பரிகார முறைகளை கடைப்பிடிக்கச் சொல்கிறார்கள். சிலை வடிக்க தேர்வு செய்யும் வெள்ளெருக்கு வேர் நன்கு முற்றி பக்குவப்பட்டிருக்க வேண்டும். வடக்கு நோக்கிச் செல்லும் வேரைத் தேர்ந்தெடுத்து அதில் விநாயகர் உருவம் செதுக்கி வழிபடுதல் சிறப்பு என கருதப்படுகிறது.

வெள்ளெருக்கு தலமரம்[தொகு]

திருஎருக்கத்தம்புலியூர், திருக்கானாட்டுமுள்ளூர் ஆகிய சிவன் கோவில்களில் தலமரம் வெள்ளெருக்கு ஆகும். எருக்கத்தம்புலியூரில் விழாக் காலங்களில் வெள்ளெருக்கம் பூவால் பூசிக்கப்படுகிறது. திருக்கானாட்டுமுள்ளூரில் வெள்ளெருக்குடன் அத்தியும் தலமரமாக உள்ளது. வட திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் கோவிலில் சுவாமி சன்னதியில் மிகப் பெரிய இரண்டு வெள்ளெருக்குத் தூண்கள் உள்ளன.

மருத்துவ குணம்[தொகு]

புதர்செடி வகையைச் சேர்ந்த வெள்ளெருக்கு அல்லது வெள்ளை எரு‌க்கு (Calotropis procera, dogbane family, Apocynaceae) ஒரு மருத்துவ குணம் வாய்ந்த தெய்வீக மூலிகையாகும். அரிதான பொருள் (புதையல், ரத்தினங்கள், சிலைகள் பதுக்கி வைத்திருக்கும் இடங்களில்) இருக்கும் இடத்தில்தான் வெள்ளெருக்கு செடி முளைக்கும் என சங்க கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளெருக்கு வேர் பாம்புக்கு ஆகாது என்று சொல்லி யிருக்கிறார்கள். சக்தி வாய்ந்த வெள்ளெருக்குச் செடியின் இலை, பூ, பால், பட்டை, வேர் முதலியன மருத்துவப் பயனுடையது. வெள்ளெருக்கிலிருந்து மருத்துவ குணங்களின் அடிப்படையாக உள்ள சைகுளோ சேடால், புரோசெஸ்டிரால், கலோடிரோஃபின், கைகேன்சியோல் சைரியோ ஜெனின் போன்ற பல வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.

உள்ளிணைப்பு[தொகு]

  1. Calotropis procera
  2. விநாயகர்

வெளி இணைப்பு[தொகு]

  1. வெள்ளெருக்கு விநாயகர்!
  2. வெள்ளெருக்கு விநாயகரை உருவாக்குவது எப்படி?