உள்ளடக்கத்துக்குச் செல்

ஆழியாறு அணை

ஆள்கூறுகள்: 10°28′59″N 76°58′04″E / 10.48306°N 76.96778°E / 10.48306; 76.96778
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆழியாறு அணை
நீர் பிடிப்பு பகுதி
அதிகாரபூர்வ பெயர்ஆழியாறு அணை
நாடுஇந்தியா
அமைவிடம்ஆழியாறுகோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு
புவியியல் ஆள்கூற்று10°28′59″N 76°58′04″E / 10.48306°N 76.96778°E / 10.48306; 76.96778
நோக்கம்நீர்ப்பாசனம்
நிலைபொது மக்கள் பயன்பாட்டில்
கட்டத் தொடங்கியது1957
திறந்தது1962[1]
வடிவமைப்பாளர்தமிழக அரசு
உரிமையாளர்(கள்)தமிழ்நாடு அரசு
இயக்குனர்(கள்)தமிழ்நாடு பொதுப்பணித் துறை
அணையும் வழிகாலும்
தடுக்கப்படும் ஆறுஆழியாறு
உயரம் (அடித்தளம்)44.19 மீ
நீளம்3200.4 மீ
கொள் அளவு2940 க.மீ3
வழிகால் வகைOgee[1]
வழிகால் அளவு1161 மீ3/நொடி
நீர்த்தேக்கம்
செயலில் உள்ள கொள் அளவு109420 க.மீ3
நீர்ப்பிடிப்பு பகுதி196.83 ச.கிமீ

ஆழியாறு அணை (Aliyar Reservoir) தமிழ்நாடு கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள சிறு நீர்த்தேக்கமாகும். முன்பெல்லாம் ஆண்டு முழுவதும் வற்றாமல் பாயும் ஆழியாறு, கடல்போலக் காட்சியளிக்கும். ஆழி என்பது கடலைக் குறிக்கும். கடல்போன்ற ஆறு என்பதாலேயே இதற்கு ஆழியாறு என்று பெயர். இந்திய தர நிர்ணய அமைவன பட்டியலில் இவ்வணையானது பெரிய அணைகளின் தொகுப்பின் கீழ் உள்ளது.

திறப்பு

[தொகு]

வால்பாறையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த ஆழியாறு அணை கோவையிலிருந்து 65 கி.மீ தொலைவில் உள்ளது பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம்[2] முதலில் கட்டி முடிக்கப்பட்ட அணை. 1962இல் இந்த அணை திறக்கப்பட்டது. இந்த அணை காமராஜரால் கட்டப்பட்டது[3].

நீர்வரத்து

[தொகு]

ஆழியாறு ஆனை மலையில் உற்பத்தியாகின்ற பல ஆறுகளில் ஒன்றாகும். அங்கு உற்பத்தியாகி தமிழ்நாட்டில் வடமேற்கு திசையில் 37 கிமீ பாய்ந்து கேரள மாநிலம் சென்று அங்கு பாரதபுழா ஆற்றில் கலக்கிறது. ஆழியாறு அணைக்கு மேல் ஆழியாறு நீர்த்தேக்கத்திலிருந்து நவமலை மின்நிலையம் வழியேயும் பரம்பிக்குளம் அணையிலிருந்து கால்வாய் மூலமாகவும் நீர்வரத்து உள்ளது. அதிகபட்ச நீர்வரத்து ஆண்டின் சூலை மற்றும் ஆகத்து மாதம் ஆகும்[4]. அம்பரம்காளையம் தர்கா ஆழியாற்றின் கரையில் உள்ளது. மூன்று புறமும் மலைகள் சூழ்ந்துள்ளது.

சிங்காரத்தோப்பு கிராமம்

[தொகு]

ஆழியாறு அணை கட்டியுள்ள பகுதிக்குள் ஓடிய ஆழியாறு ஆற்றின் கிழக்கு கரையில், பல நூறு ஏக்கர் பரப்புக்கு வயல்வெளிகளும், மா, பலா, கொய்யா பயிரிடப்பட்ட தோப்புகளும் சூழ்ந்த சிங்காரத்தோப்பு என்ற சிறிய கிராமம்[5] இருந்தது. தற்போது தண்ணீர் தேங்கி நிற்கும் அணைப் பகுதியில் இருந்த சிங்காரத்தோப்பு கிராமத்தில் வசித்து வந்தவர்கள் இரவாலர்கள். மலைவாழ் மக்களில் ஒரு பிரிவினரான இவர்கள், விவசாயம் மேற்கொண்டு வந்தனர். அந்த கிராமத்தில் ஆயிரம் காணி நெல் வயல்களும் இருந்தன. இவையனைத்தும் ஆழியாறு அணை கட்டப்பட்டபோது, தண்ணீரில் மூழ்கின. அங்கலக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான தோப்பு, இக்கிராமத்தில் இருந்தது. அதில், கொய்யா, மா, பாலா, வாழை விவசாயம் நடைபெற்றது. சுமார் 200 குடிசைகளில் இரவாலர்கள் வாழ்ந்தனர். இந்த ஊருக்கு மேற்கே ஆழியாறு ஆறு சென்றது. ஆழியாறு அணையில் தண்ணீர் குறையும்போது வெளியே தெரியும் கல்பாலமும், கருங்கல் சாலையும் இந்த அணைக்குள் மறைந்த ஒரு கிராமத்தின் வரலாற்று எச்சங்களாக இன்றும் உள்ளன.

சுற்றுலா தளம்

[தொகு]

உல்லாசப் படகுப் பயண வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.[6] இங்கு மனமகிழ்விற்காக பூங்கா, மீன் காட்சியகம், தீம் பார்க் முதலியன தமிழ்நாடு மீன்வளத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகின்றன

இந்த அணையின் அருகில் சற்றே மலையேறினால் குரங்கு அருவி என்றழைக்கப்படும் சிறு அருவி இருக்கிறது. இங்கு எடுக்கப்பட்டுள்ள தமிழ்த் திரைப்படங்கள் இவற்றின் பரவலான தகவல்களை மக்களிடையே கொண்டு சேர்த்துள்ளன.

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஆழியாறு அணை
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. 1.0 1.1 https://tn.data.gov.in/catalogsv2?filters%5Bogpl_module_domain_access%5D=61&filters%5Bfield_source%5D=61&filters%5Bfield_state_department%3Aname%5D=Water+Resources+Department+(PWD)+(Operations+%26+Maintenance)&format=json&offset=0&limit=9&sort%5Bcreated%5D=desc
  2. "பொறியாளர்களின் நம்பிக்கையால் உருவான பிஏபி திட்டம்! - தமிழகம்-கேரளத்தை மனதார பாராட்டிய நேரு". Hindu Tamil Thisai.
  3. "ஆழியாறு அணை இல்லீங்க; அட்சய பாத்திரம்! - மக்கள் நினைவில் வாழும் காமராஜர்". Hindu Tamil Thisai.
  4. https://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/117479/2/chapter%20iii.pdf
  5. "மாநிலங்கள் பிரச்சினையில் மத்திய அரசு? தவிர்க்கப்பட்டது தலையீடு!". Hindu Tamil Thisai.
  6. Limnological studies on parambikulam Aliyar-project-I Aliyar Reservoir (Madras State), India பரணிடப்பட்டது 14 சூலை 2011 at the வந்தவழி இயந்திரம் Journal Aquatic Sciences - Research Across Boundaries, Birkhäuser Basel, ISSN 1015-1621 (Print) 1420-9055 (Online), Volume 32, Number 2 /, September, 1970, DOI 10.1007/BF02502556, pp 405-417, SpringerLink, 11 October 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆழியாறு_அணை&oldid=3760784" இலிருந்து மீள்விக்கப்பட்டது