கோயம்புத்தூர் வானொலி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவில் 'பிரசார் பாரதி கார்பொரேசன்' என்ற நடுவண் அரசிற்கு சொந்தமான ஒலிபரப்புக் கழகம், அகில இந்திய வானொலி என்ற பெயரில் இந்தியா முழுவதும் வானொலிப் பணிகளை வழங்கி வருகிறது. அகில இந்திய வானொலியின் கோயம்புத்தூர் பிரிவு வானொலியே கோயம்புத்தூர் வானொலி நிலையம் ஆகும்.

அமைவிடம்[தொகு]

கோயம்புத்தூர்-திருச்சி சாலையில் இராமநாதபுரத்தில் அமைந்துள்ள, இந்த வானொலி நிலையம் AM, மற்றும் பண்பலை ஒலிபரப்புக்களை வழங்குகிறது. இதன் ஒலிபரப்பு மையம் (Transmission Center) கோவையிலிருந்து போத்தனூர் வழியாகச் செட்டிபாளையம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

நோக்கம்[தொகு]

கோயம்புத்தூர், ஈரோடு, உதகை, சேலம், தருமபுரி, நாமக்கல் ஆகிய பகுதிகளைக் குறியிலக்காகக் கொண்டு தொடக்கத்தில் முழுக்க முழுக்க மக்கள் பணிகளைக் குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டாலும், பின்பு, மைய அரசின் கொள்கை முடிவுகளுக்கு ஏற்ப, இந்திய வானொலிகள் அனைத்தும் செயல்பட்டதைப் போல், சிறிதளவில் வணிக நோக்கிலும் செயல்படத் தொடங்கியது இந்த வானொலி நிலையம்.