எ. வ. வேலு
எ. வ. வேலு | |
---|---|
பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 7 மே 2021 | |
உணவுத்துறை அமைச்சர் அமைச்சர், தமிழ்நாடு | |
பதவியில் 13 மே 2006 – 15 மே 2011 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மார்ச்சு 15, 1951 சே. கூடலூர், தண்டராம்பட்டு, திருவண்ணாமலை, தமிழ்நாடு |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | திமுக |
துணைவர் | ஜீவா வேலு |
பிள்ளைகள் | எ. வ. வே. கம்பன் எ. வ. வே. குமரன் |
வாழிடம்(s) | ஆழ்வார் பேட்டை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
எத்திராஜுலு வஜ்ஜரவேலு எனப்படும் எ .வ .வேலு (E. V. Velu, பிறப்பு: மார்ச் 15, 1951)[1] ஓர் தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக உணவுத் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்ட இவர், திருவண்ணாமலையில் அருணை மருத்துவக்கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரியை நடத்தி வருகிறார்.
பிறப்பு[தொகு]
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டத்திலுள்ள சே. கூடலூர் கிராமத்தில், 1951-ம் ஆண்டு, மார்ச் 15-ம் தேதி எத்திராஜுலு என்பவருக்கு பிறந்த வஜ்ஜரவேலு [2] எனப்படும் எ.வ.வேலு, வரலாறு பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். [3] [4] [2] இவர் பலிஜா நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்.[5]
ஆரம்ப காலம்[தொகு]
எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக இருந்தவர். முதலில் பம்பு செட் பழுது பார்க்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்த சூழலில் தான் தண்டராம்பட்டு தாலுக்காவில் பிரபலமாக இருந்த தாமோதரன் பேருந்து நிறுவனத்தில் சேர்கிறார். அங்கு அவருக்கு கிடைத்தது நடத்துநர் வேலை. [3] கூத்துக்கலையில் நாட்டமுடைய இவர் அரசியலுடன் திரைப்பட விநியோகத்திலும் ஈடுபட்டு திலகம் போன்ற ஓரிரு படங்களில் நடிக்கவும் செய்தார்.[2]
அரசியல்[தொகு]
அதிமுக தொடக்க காலம் முதல் அந்தக் கட்சியில் இருந்த எ.வ.வேலு, தண்டராம்பட்டு ஒன்றிய துணை அமைப்பாளர் ஆகிறார். 1984-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தண்டராம்பட்டு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம்ஜிஆர் மறைவுக்குப் பின் ஜானகி அணியில் இருந்தவர் பின்பு நடிகர் பாக்யராஜ் எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சி ஆரம்பித்தபோது, அதன் கொள்கைபரப்புச் செயலாளராகப் பதவிவகித்தார். [6] [3] 1995 ஆம் ஆண்டு சமயத்தில் திமுக-வில் இணைந்தார். தண்டராம்பட்டு தொகுதியில் 2001 , 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிட்டு வென்றார். பின்னர் திருவண்ணாமலை தொகுதிக்கு மாறி 2011, 2016, 2021 தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டு வென்றார். [6] கருணாநிதி தலைமையிலான 2006-2011-ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர், 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து 2021 மே 7 அன்று தமிழக பொதுப் பணிகள் (பொதுப்பணிகள் (கட்டடங்கள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள், கரும்புப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு) அமைச்சசராக பதவியேற்றார்.[7]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "எ .வ .வேலு". www.tn.gov.in
- ↑ 2.0 2.1 2.2 (Minister EV Velu | சினிமா ஆசை கண்டக்டர் Jayalalithaa -வை தவிக்க வைத்த கதை! | DMK | Mr Minister)
- ↑ 3.0 3.1 3.2 கண்டக்டர் டூ மினிஸ்டர்... யார் இந்த எ.வ.வேலு? திமுகவின் மாஸ்டர் மைண்ட் தலைவரானது எப்படி?
- ↑ திமுக வேட்பாளர் சுயவிவரம்
- ↑ "களைகட்டும் தேர்தல் பந்தயம்!". தினமலர் நாளிதழ் (மே 01, 2021).
- ↑ 6.0 6.1 பேருந்து நடத்துநர் முதல் பொதுப்பணித்துறை அமைச்சர் வரை..!' - எ.வ.வேலுவின் அரசியல் பயணம்...
- ↑ தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம், பிபிசி 2021 மே 6
வெளி இணைப்புகள்[தொகு]
- Pages using infobox officeholder with unknown parameters
- 1951 பிறப்புகள்
- தமிழ்நாட்டு அமைச்சர்கள்
- வாழும் நபர்கள்
- திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்
- திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர்கள்
- 15 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- 14 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- 13 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- 12 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- திருவண்ணாமலை மாவட்ட நபர்கள்
- தமிழக அரசியல்வாதிகள்
- 16 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்