டொம் கொன்சுடன்டீனோ டி பிரகன்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரகன்சா மரபு
நாடுபோர்த்துக்கல் மற்றும் பிரேசில்
தாயில்லம்அவிஸ் இல்லம்
விருதுப்
பெயர்கள்
டியூக், அரசர், பேரரசர்
நிறுவிய
ஆண்டு
1442
நிறுவனர்அல்போன்சீ, பிரகன்சாவின் முதலாம் டியூக்
இறுதி ஆட்சியர்மனுவேல் II (போர்த்துக்கல்)
பெட்ரோ II (பிரேசில்)
தற்போதைய
தலைவர்
துவார்ட்டே பியோ, பிரகன்சாவின் டியூக்
முடிவுற்ற ஆண்டு1853 (போர்த்துக்கல்)
1889 (பிரேசில்)

கொன்சுடன்டீனோ டி பிரகன்சா (1528–1575) பிரகன்சாவின் நான்காவது "டியூக்"கான ஜேம்சின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்த மகன் ஆவார். இவருக்குப் பத்தொன்பது வயதாக இருந்தபோது பிரான்சின் இரண்டாம் என்றி அரசரின் மகனின் ஞானஸ்நான விழாவுக்குப் போர்த்துக்கலின் மூன்றாம் ஜான் அரசரின் சார்பில் கலந்துகொள்ள அனுப்பிவைக்கப்பட்டார்.

1958 ஆம் ஆண்டில், அரசர் மூன்றாம் ஜானின் விதவையும், போர்த்துக்கலின் ஆட்சியதிகாரத்தைக் கவனித்து வந்தவருமான அப்சுபர்க்கின் கத்தரீன் (Catherine of Habsburg) கொன்சுடன்டீனோவை போர்த்துக்கீச இந்தியாவின் ஏழாவது வைசுராய் என்னும் பதவியுடன், அதன் 20 ஆவது ஆளுனராக நியமித்தார். 1558 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி லிஸ்பனில் இருந்து புறப்பட்ட இவர் அந்த ஆண்டு செப்டெம்பர் 3 ஆம் தேதி கோவாவை வந்தடைந்தார். சிறந்த ஒழுங்கமைப்பாளராகக் கருதப்படும் இவர், தமது பதவிக் காலத்தில், தமான், இலங்கையின் கரையோரப் பகுதிகள் என்பவற்றைக் கைப்பற்றினார். 1561 ஆம் ஆண்டில் கொன்சுடன்டீனோ யாழ்ப்பாண அரசு மீது படையெடுத்தார் ஆயினும் அது தோல்வியில் முடிந்தது. எனினும், அந்த அரசின் ஒரு பகுதியான மன்னார்த் தீவை அவர் கைப்பற்றினார்.

மூன்று ஆண்டுகளும் எட்டு நாட்களும் போர்த்துக்கீச இந்தியாவின் ஆளுனராக இருந்த இவர் தனது காலத்தில் இந்தியாவில் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். பின்னர் கேப் வேர்டேயின், சாந்தோ அந்தாவோ தீவிலிருந்த ரிபெய்ரா கிராண்டே என்னுமிடத்தின் ஆளுனரானார்.

அங்கிருந்து போர்த்துக்கல் திரும்பிய அவர், மணம் செய்து கொள்ளாதவராய், வாரிசு இன்றிக் காலமானார்.