விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு38

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் இணைய மாநாட்டில் விக்கிப்பீடியா நிகழ்வுகள்[தொகு]

கட்டுரை வாசிப்பு

தேனி.எம்.சுப்பிரமணி கட்டுரை வாசித்த போது எடுத்த படம்

தமிழ் இணைய மாநாட்டில் 24-06-2010 அன்று உமர்தம்பி அரங்கில் மூன்றாவது அமர்வில் நடைபெற்ற தமிழ் மி்ன்தரவு மற்றும் மின்னகராதிகள் எனும் தலைப்பிலான ஆய்வரங்கில் நான் தமிழ் விக்கிப்பீடியா எனும் தமிழ்க் கலைக்களஞ்சியம் என்கிற தலைப்பில் கட்டுரை வாசித்தேன். முடிவில் தமிழறிஞர்கள், தமிழ்ப் பேராசிரியர்கள் மற்றும் பலரும் தமிழ் விக்கிப்பீடியாவிற்குப் பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். இந்நிகழ்விற்கு தலைமை வகித்த மணி எம். மணிவண்ணனும் இதை ஆமோதித்து தமிழறிஞர்கள் மட்டுமில்லாது தமிழ் தெரிந்த அனைவரும் குறிப்பாக ஆங்கில விக்கிப்பீடியாவில் பங்கேற்கும் பலரும் தமிழ் விக்கிப்பீடியாவிலும் பங்கேற்று தமிழை முன்னிலைப்படுத்த முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.--Theni.M.Subramani 01:14, 28 ஜூன் 2010 (UTC)

ஒளிப்படக் காட்சிகள்

தமிழ் இணைய மாநாட்டில் தமிழ் விக்கிப்பீடியா எனும் தமிழ்க் கலைக்களஞ்சியம் என்கிற தலைப்பில் தேனி.எம்.சுப்பிரமணி கட்டுரை வாசித்த நிகழ்வுகள் ஐந்து பகுதிகளாகக் கீழ்காணும் இணைப்புகளில் ஒளிப்படங்களாக உள்ளன.

பகுதி ஒன்று

பகுதி இரண்டு

பகுதி மூன்று

பகுதி நான்கு

பகுதி ஐந்து

--தேனி.எம்.சுப்பிரமணி. 16:02, 3 ஜூலை 2010 (UTC)

கலந்துரையாடல்

வலைப்பூக்கள், விக்கிப்பீடியா குறித்த கலந்துரையாடலில் முனைவர். மு. இளங்கோவன், பத்ரி சேஷாத்ரி, அ.ரவிசங்கர், தேனி. எம்.சுப்பிரமணி

தமிழ் இணைய மாநாட்டில் 26-06-2010 அன்று யாழன் சண்முகலிங்கம் அரங்கில் "கணினி மொழியியல்" எனும் தலைப்பிலான நான்காவது அமர்வில் சென்னை, கிழக்குப் பதிப்பகம் உரிமையாளர் பத்ரி சேஷாத்ரி முன்னிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர் மு.இளங்கோவன், கோயம்புத்தூரைச் சேர்ந்த அ. ரவிசங்கர் , தேனி.எம்.சுப்பிரமணி , சுந்தர் ஆகியோர் வலைப்பூக்கள் மற்றும் விக்கிப்பீடியா குறித்த கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டோம். --தேனி.எம்.சுப்பிரமணி. 16:53, 2 ஜூலை 2010 (UTC)

மாநாட்டுக் காட்சிகள்

பரிசு வாங்கிய கட்டுரைகள் விக்கியில் எங்கே உள்ளன??--80.192.30.41 17:17, 13 ஜூலை 2010 (UTC)

போட்டிக்கு வந்த கட்டுரைகளைப் பதிவேற்றும் பணி இன்னும் தொடங்கவில்லை. பரிசு வாங்கிய கட்டுரைகளையாவது விரைந்து பதிவேற்ற வேண்டும்--ரவி 19:11, 13 ஜூலை 2010 (UTC)

போட்டிக்கு எவ்வளவு கட்டுரைகள் வந்தன? அதை எல்லாவற்றையும் எப்போது விக்கியில் ஏற்றுமதி செய்யப் போகிறீர்கள்--193.138.107.92 16:51, 28 ஜூலை 2010 (UTC)

போட்டிக்கு 1100+ கட்டுரைகள் வந்தன. அவற்றில் இறுதித் தேர்வுக்கு வந்த 160+ கட்டுரைகளை முதலில் பதிவேற்ற இருக்கிறோம். விவரங்களை வலைவாசல்:கட்டுரைப்போட்டி/கட்டுரைகள் பதிவேற்றும் பணி பக்கத்தில் காணலாம். முதற்கட்டத் தெரிவில் தேர்வான 400+ கட்டுரைகள் விக்கியில் பதிவேற்றக்கூடியவை. ஆனால், அவற்றை ஓரளவு செப்பனிட்ட பிறகே விக்கியில் ஏற்ற முடியும். உங்கள் பங்களிப்பும் வரவேற்கப்படுகிறது. --ரவி 17:48, 28 ஜூலை 2010 (UTC)

மாணவர்களைப் பயன்படுத்தலாம்[தொகு]

அனைவருக்கும் வணக்கம்! அத்துடன், அனைவருகும் உங்களுடைய பங்களிப்பிற்காகப் பலமுறை நன்றி! நமது தமிழ்ச் செம்மொழி முதல் மாநாட்டிற்கும் இணைய மாநாட்டிற்கும் முதல் நாளன்று வர இயலாததால் - இயலாததற்குக் காரணம், 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற எண்ணத்துடன் பலரையும் ஒன்றூ திரட்டி அழைத்து வர வேண்டி இருந்ததுதான்! நான் மட்டும் கலந்து கொண்டால் அவர்களை இதில் அறிமுகப் படுத்த இனி வாய்ப்பே இல்லை என்பதால் மனத்தைத் தேற்றிக் கொண்டேன் - அடுத்த நான்கு நாட்களில் கலந்து கொண்டேன். உடன் வந்தவர்களைக் கட்டி மேய்த்து ஒருவரைக் கூடத் தவற விடாமல் திரும்ப அனுப்பிய பிறகுதான் எனக்கு நேரம் கிடத்தது! கிடைத்த நேரத்தைப் பயன்படுத்தி ஒரு சுற்றுத்தான் வர முடிந்தது. கண்காட்சி அரங்குகளின் உள்ளே நுழைந்தோம்; அப்படியே 'தள்ளி' வெளியே கொண்டு வந்து விட்டார்கள். அவ்வப்போது கிடைத்த இடைவெளியிகளில் சில ஒளிப் படங்களை எடுத்துக் கொண்டு இன்னொரு முறையும் மனத்தைத் தேற்றிக் கொண்டேன். உங்களில் பலரைக் கண்டு மகிழ்சியாக இருந்தது. அரங்குகள் அனைத்தையும் ஆர அமரக் கண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். உங்களுடன் உரையாட ஆசைதான்; ஆனால் தற்போது நான் விக்கியில் அறிமுகச் சுற்றுலா வந்து கொண்டிருக்கிறேன். இன்னும் நிறைய அறிந்து கொள்ள வேண்டும். நிறையச் செய்ய வேண்டும். கூட்டத்தில் இருந்த பள்ளி மாணவியர் மாணவரில் பலருக்கு விக்கிப் பீடியாவைத் தெரியவில்லை. அத்துடன் 'தமிங்கிலீஷ்'ஐப் பயன்படுத்திக் கணினியில் இயங்கலாம் என்பதுவும் தெரியவில்லை. ஆனால் அவர்கள் 'தமிங்க்லீஷ்' இல் தங்களுடைய அலைபேசியில் குறூஞ்செய்திகளை அடுக்கடுக்காக அனுப்புகிறார்கள்! கூகிள், அழகி, எ-கலப்பை முதலிய மொழியாக்கிகளையும் தமிழ்99 கீபோர்டு, ஒருங்குறி (யுனிகோடு) ஆகியவற்றின் பயன்பாடுகளைப் பற்றியும் அவர்கள் அறியாமல் உள்ளனர். இந்த மாணவியர் மாணவர் வட்டாரங்களில் ஏதாவது செய்ய வேண்டும்...மிக்க நன்றி. ம.கி. சந்திர மௌலீஸ்வரன்,03ஜுலை2010-சனிக்கிழமை.

கூகுள் மொழிபெயர்ப்புத் தொடர்பில் பின்னூட்டம்[தொகு]

அண்மையில் சில கூகுள் மொழிபெயர்ப்பாளர்கள் நல்ல திருத்தங்களை மேற்கொள்வதைக் காண முடிகிறது. வழக்கமான பங்களிப்பாளர்களைப் போல அவர்களுக்கான வளர்முக பின்னூட்டங்களை நாம் தந்து ஊக்குவிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்குச் சோர்வு ஏற்படக்கூடும். -- சுந்தர் \பேச்சு 12:11, 1 ஜூலை 2010 (UTC)

Revive Tamil, pleads cultural leader Devan - South Africa[தொகு]

Revive Tamil, pleads cultural leader Devan --Natkeeran 05:34, 3 ஜூலை 2010 (UTC)

எழுத்துப் பிழை[தொகு]

ஒவ்வொரு பக்கத்தின் அடியிலும் வரும் அறிவிப்பில் காணப்படும் எழுத்துப்பிழையைச் சரி செய்ய வேன்டும். எ.கா:

இப்பக்கத்தை கடைசியாக 4 ஜூலை 2010, 02:10 மணிக்குத் திருத்தினோம். −முன்நிற்கும் கருத்து 122.165.65.217 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

Y ஆயிற்று மாற்றத்தைப் பாருங்கள். -- சுந்தர் \பேச்சு 06:36, 4 ஜூலை 2010 (UTC)

தள்ளி நின்றால் போதும் - அ முத்துலிங்கம் கட்டுரை[தொகு]

சிம்மி வேல்சுடனான உரையாடல்[தொகு]

இன்று இசுகைப் மூலம் விக்கிப்பீடியா அமைப்பாளர் சிம்மி வேல்சுடன் நான் உரையாட முடிந்தது. சில விடயங்களை உறுதியாகக் கூறி உள்ளேன்.

  • இந்தியாவில் விக்கி கிளை, அதன் பின்னர் பிரதேச வாரியாக அல்லது மொழி வாரியாக விக்கி கிளை (சுந்தர், ரவி இது நல்லது என்று கூறி இருந்தார்கள்)
  • எமக்கு சிறிய வளம் தந்தால், அதனால் நாம் பெரிய விளைச்சலைப் பெற முடியும் என்பது
  • நாம் பல வழிகளில் Outreach செய்ததைக் கூறினேன்
  • அவர் தன்னால் என்ன செய்ய முடியும் என்று கேட்டார். நான் இரண்டாவது விடயத்தையே கூறினேன். மேலும் மயூரநாதன், ரவி ஆகியோர் விக்கி மேனியா வருவதையும் கூறினேன்.

இங்கு விக்கிமீடியா நிறுவனம் ஒரு seed funding தர முடியுமானால், எம்மாலும் கொஞ்சம் நிதி திரட்ட முடியும் என்றும், தமிழ்நாட்டில் ஒரு நிரந்தர அலுவலகம் ஏற்படுத்தல் நல்லது என்றும் கூறினேன். கோபி, ரவி, செல்வா ஆகியோர் இது பற்றி கூறி உள்ளார்கள். இதைப் பற்றிய ஒரு துல்லிய proposal தயாரித்தால் நல்லது. இதை ரவியும், மயூரநாதனும் விக்கிமேனியாவில் அவரிடம் கையளிக்கலாம் என்று நினைக்கிறேன். அவர் பின்னர் கனடா வருவதாக கூறி உள்ளார். அப்போது கூற முடியும்.

பல்லூடங்களை விக்கி முறையில் உருவாக்க ஒரு தளம் (platform), ஆவணங்களை /நூல்களை சேமிக்க ஒரு தளம் எல்லாம் கூற வேண்டும் என்று இருந்தேன். தவற விட்டு விட்டேன்.

ஒரு தடவை 2009 இல் இலங்கையில் 60 தமிழர்கள் வரைதான் கொல்லப்பட்டார்கள் என்று விக்கிப்பீடியா சொல்கிறது என்பதையும் குறிப்பிட்டேன். --Natkeeran 02:18, 7 ஜூலை 2010 (UTC)

கூகுள் தமிழாக்கம் விக்கிமேனியா பேச்சு, நேரடி ஒளிபரப்பு[தொகு]

கூகுள் தமிழாக்கம் குறித்த விக்கிமேனியா பேச்சு: இன்னும் சற்று நேரத்தில் http://toolserver.org/~reedy/wikimania2010/oakhall.html தளத்தில் நேரடியாகப் பார்க்கலாம்--ரவி 13:04, 10 ஜூலை 2010 (UTC)

நன்றி. நன்றாகப் போகிறது. --Natkeeran 13:15, 10 ஜூலை 2010 (UTC)
கேட்டு (பார்த்துக்) கொண்டிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 13:16, 10 ஜூலை 2010 (UTC)

மகிழ்ச்சி நற்கீரன், சிறீதரன். கூகுள் தமிழாக்கம் குறித்த பேச்சுக்கான ஆவணம்: http://docs.google.com/present/view?id=ddpg3qwc_279ghm7kbhs --ரவி 13:41, 10 ஜூலை 2010 (UTC)

மின்வெட்டு காரணமாக இறுதிப்பகுதியை மட்டுமே கேட்க முடிந்தது. ஆனால், பார்வையாளர் பின்னூட்டம் நன்றாக இருந்ததைக் கவனித்தேன். -- சுந்தர் \பேச்சு 06:00, 12 ஜூலை 2010 (UTC)
இரவியின் விக்கிமேனியா பேச்சு பற்றி நியூயார்க்கு டைம்சில் செய்திக்குறிப்பு வெளியாகியுள்ளது.-- சுந்தர் \பேச்சு 09:22, 12 ஜூலை 2010 (UTC)
வாழ்த்துக்கள் இரவி. உங்கள் அறிக்கையை மயூரநாதன் மிக நன்றாக வாசித்தார். உங்களால் நேரடியாகக் கலந்து கொள்ள முடியாமல் போனது அனைவருக்கும் வருத்தமே. விக்கிமேனியா மாநாடு குறித்து யாராவது செய்திக் கட்டுரை ஒன்றை விக்கிசெய்தியில் தருவீர்களா?--Kanags \உரையாடுக 11:06, 12 ஜூலை 2010 (UTC)

நெஞ்சார்ந்த வாழ்த்துகள் இரவி! (Extracted quote: A report by A. Ravishankar of the Wikipedia in Tamil — one of the underrepresented South Asian languages — noted that in mid-2009, the site’s administrators suddenly noticed articles appearing out of nowhere. Only months later did the Wikipedians learn that they were witnessing the benefits of Google’s project to improve their site and increase the amount of content online in Tamil.

In understated phrasing, Mr. Ravishankar explained what the surge in content was lacking. For example, the entries covered “too many American pop stars and Hindi movies, which Tamils may not need as a priority.” There was sloppiness in language and coding. And the content was mostly not original, having been translated from English Wikipedia entries. )

இரவி இப்படிசொல்லி இருந்தாலும் (அதில் பெருமளவும் உண்மை உள்ளது), கூகுள் கட்டுரைகள் மிக அருமையாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வளமும் சேர்த்துள்ளது, மேலும் சேர்க்கும் வாய்ப்பும் உள்ளது. மற்றவர்கள் அக்கட்டுரைகளைப் பலவாறு பிரித்தும் விரித்தும், செப்பம் சேர்த்தும், கூர்ப்பு ஆக்கியும் ஆக்கம் தரலாம் என்பது என் கருத்து.--செல்வா 13:54, 12 ஜூலை 2010 (UTC)

வாழ்த்துகளுக்கு நன்றி. மயூரநாதன் நல்ல முறையில் உரையை முன்வைத்துத் தேவையான விளக்கங்களை அளித்தார். எனவே, அவருக்குத் தான் முதல் நன்றியைத் தெரிவிக்க வேண்டும். செல்வா, நானாக ஏதும் அந்த இதழாளரிடம் சொல்லவில்லை. நான் முன்வைத்த உரைக்கான தொடுப்பு மேலே உள்ளது. அதனை ஒட்டி அவர் புரிந்து கொண்டதை எழுதி இருக்கிறார். கூகுள் திட்டத்தை நல்ல முறையில் தொடர் முடியும் என்று நம்புகிறேன். போன ஆண்டு சுந்தர் விக்கிமேனியாவுக்குச் சென்றது நல்ல தொடக்கம். இதனைப் பின்பற்றி அடுத்தடுத்த ஆண்டுகளிலும் நம்மில் பலர் வரிசை வைத்துக் கலந்து கொள்ள வேண்டும். இந்த ஆண்டு மட்டும் மலையாள விக்கியில் இருந்து மூவர் கலந்து கொண்டார்கள்--ரவி 15:51, 12 ஜூலை 2010 (UTC)

விக்கிமேனியா மாநாட்டில் பல பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர் அவர்களில் பலர் விக்கிப்பீடியர்களாகவும் இருந்தனர். இவர்களில் ஒருவர் செய்தி கொடுத்திருக்கலாம். குறைந்தது இரண்டு பத்திரிகையாளர்களும் ஒரு வானொலி நிருபரும் குறித்த ரவியின் கட்டுரை தொடர்பாக மண்டபத்துக்கு வெளியே என்னுடன் பேசினர். அவர்கள் பேச்சின்போது மண்டபத்தில் இருந்திருக்கிறார்கள். வங்காள விக்கிப்பீடியர்களைப் போல் நாம் ஏன் கூகிள் திட்டத்தைத் தடை செய்யவில்லை என அவர்களில் ஒருவர் கேட்டார். நான் நமது நிலைப்பாட்டை விளக்கினேன். ரவியும், சுந்தரும் கூகிள் நிறுவனத்தினருடன் தொடர்பில் உள்ளது பற்றியும், ரவி, மொழி பெயர்ப்பாளர்களுக்குப் பயிற்சி ஒழுங்கு செய்தது பற்றியும் குறிப்பிட்டேன். இவற்றால் பயன் விளையும் சாத்தியங்கள் தென்படுவது பற்றியும் எடுத்துக் கூறினேன்.
வேறு ஊடகங்களிலும் இது குறித்த செய்திகள் வந்திருக்கக்கூடும்.
--மயூரநாதன் 07:42, 13 ஜூலை 2010 (UTC)

வாழ்த்துக்கள் இரவி, மயூரனாதன். --கலை 05:48, 16 ஜூலை 2010 (UTC)

நண்பர் கௌத்தம் சா'ன் இந்தியன் எக்சுப்பிரசில் எழுதிய குறிப்பு - http://www.indianexpress.com/news/wikipedia-growing-local/647803/0 - வெளியாகியுள்ளது. என்னையும் உடன் எழுத அழைத்திருந்தார், நேரமின்மையால் இயலவில்லை. தமிழ் விக்கி தொடர்பான விக்கிமேனியா வழங்கல்களைப் பதிந்துள்ளார். -- சுந்தர் \பேச்சு 06:41, 17 ஜூலை 2010 (UTC)

கூகுளுடன் நாளைய சந்திப்பு[தொகு]

விக்கிப்பீடியா_பேச்சு:கூகுள்_கட்டுரை_மொழிபெயர்ப்புத்_திட்ட_ஒருங்கிணைப்பு#கூகுளுடன் நாளைய சந்திப்பு தொடர்பில் அனைவரது உள்ளீட்டையும் வரவேற்கிறேன். -- சுந்தர் \பேச்சு 11:40, 13 ஜூலை 2010 (UTC)

போட்டிக் கட்டுரைகளை ஏற்றல்[தொகு]

இது எவ்வாறு நடைபெறு என்று திட்டம் இட வேண்டும். --Natkeeran 01:19, 14 ஜூலை 2010 (UTC)

இதற்குத் தன்னார்வப் பொறுப்பாளர் ஒருவர் தேவை. சென்ற திட்டங்களில் பங்கேற்க இயலாத பயனர்கள் முன் வந்தால் நன்று. அவர்கள் ஒழுங்கு செய்து தந்தவுடன், தானுலவியைக் கொண்டு தனிக்கணக்கின்வழி பதிவேற்றலாம். -- சுந்தர் \பேச்சு 07:51, 14 ஜூலை 2010 (UTC)

தமிழ் விக்கிக்கு நிதிப் பங்களிப்புகள்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவிற்கு, குறிப்பிட்ட இரு திட்டங்களுக்கு இரு பிரிவினர் நிதி தர முன் வந்துள்ளார்கள்.

  • பன்னாட்டுக் கட்டுரைப் போட்டி - $1000+
  • கட்டுரைகளை இறுவட்டு ஆக்கும் திட்டம் - செலவு

--Natkeeran 01:21, 14 ஜூலை 2010 (UTC)

ஆகத்தில் புதுத் திட்டங்களைச் சேர்க்க வேண்டும். மயூரநாதனின் முன்மொழிவில் நாம் செயல்முறைத் திட்டங்களைச் சேர்க்க வேண்டும். -- சுந்தர் \பேச்சு 06:45, 17 ஜூலை 2010 (UTC)

கூகிள் பங்களிப்பாளர் விக்கியை குப்பையாக்கி வருகிறார்[தொகு]

கூகிள் பங்களிப்பாளர் ஒருவர் விக்கியை தொடர்ந்து குப்பை மேடாக்கி வருகிறார் . ஏற்கெனவே வார்ப்புரு:நாட்டுத் தகவல் அர்ஜென்டினா என்றிருக்கும்போது வார்ப்புரு:நாட்டுத் தகவல் அர்ஜெண்டினா, அதுபோல் உருகுவே இருக்கும் போது, உரோகுவே இப்படி... வார்ப்புரு:Lang-ta உள்ளடக்கம் Tamil_மொழி... இந்த பயனருக்கு ஏற்கெனவே இது தொடர்பாக பலமுறை பேச்சுப்பக்கத்தில் தவற்றை சுட்டிகாட்டியும் திருத்த முற்படவில்லை. நிர்வாகியின் வேலைகளைக் குறைக்க ஒருவார காலத்திற்கு இந்தப் பயனரை தடை செய்யலாமா என்று ஆலோசிக்கவும். -- மாஹிர் 05:07, 14 ஜூலை 2010 (UTC)

  • அண்மைய பக்கங்கள் பக்கத்தை பார்த்து திருத்தங்கள் செய்ய இயலவில்லை.--Hibayathullah 13:21, 14 ஜூலை 2010 (UTC)
மேலும், ஆங்கில விக்கியில் தமிழ் வார்ப்புருக்களுக்கான இன்டர்விக்கி தொடுப்புகள் இல்லை. இவற்றை செய்ய தானியங்கி உதவியை நாடவேண்டும். ஆங்கில விக்கியில் இன்டர்விக்கி தானியங்கி அனுக்கம் உள்ளவர்கள் இங்குள்ள தவி வார்ப்புரு தொடுப்புகளை ஆங்கில விக்கியில் இணைத்தால் இதுபோன்ற நகலை ஓரளவு தடுக்கவும் முடியும். -- மாஹிர் 05:13, 14 ஜூலை 2010 (UTC)

சுந்தரின் இன்றைய சந்திப்பில் இதனைக் கேட்கச் சொல்லலாம். --ரவி 05:44, 14 ஜூலை 2010 (UTC)

புதிய பங்களிப்பாளர் வரும் வழிகள்[தொகு]

கல்லூரி மாணவர்கள் போட்டியை அடுத்து மாணவர்கள் பங்களிப்பாளர்கள் ஆனார்களோ இல்லையோ போட்டிக்கு நடுவராக வந்த பவுல் பங்களிக்கத் தொடங்கி உள்ளார். அது போல் கூகுள் பங்களிப்பாளர் Tamil sarva வும் தனது தனிப்பட்ட ஆர்வத்தில் சில கட்டுரைகளை உருவாக்கத் தொடங்கியுள்ளார். இப்படியும் புதுப் பங்களிப்பாளர்கள் வருவார்கள் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை :) --ரவி 05:43, 14 ஜூலை 2010 (UTC)

இன்னும் மிகப் பலரும் வருவார்கள் (தேர்ந்த எழுத்தாளர்கள், அறிவியல் வரலாறு, மொழியியல் என்று பல துறைகளில் இருந்து) சற்றே பொறுங்கள் :) விக்கியைப் பயன்படுத்தும் பலரும் அதில் எப்படி பங்கு கொள்வது என்பதை அறியாமல் இருக்கின்றார்கள். இன்னும் பரப்புரை செய்ய வேண்டும்!!!--செல்வா 13:54, 14 ஜூலை 2010 (UTC)
    • ரவியும் செல்வாவும் தெரிவித்த கருத்துகள் நன்று. ஆங்கில விக்கியை அறிந்த பல தமிழர்கள் இன்னும் தமிழ் விக்கி, விக்சனரி, விக்கிமூலம் ஆகியவை பற்றி ஒன்றுமே தெரியாமல் உள்ளனர். சிறிது காலத்திற்கு முன் என் நிலையும் அப்படியே. ஆக, பரப்புரை செய்வது பெரும் தேவை என்பேன். தற்போது பயணம் செய்துகொண்டிருப்பதால் பங்களிப்புகள் நல்குவதில் சில இடர்ப்பாடுகள் உள்ளன. விரைவில் என் பங்களிப்பு தொடரும். வாழ்த்துகள்!--பவுல்-Paul 15:18, 14 ஜூலை 2010 (UTC)

பெங்களூர் சந்திப்பு[தொகு]

எதிர்வரும் ஞாயிறன்று பெங்களூரில் நடைபெறவுள்ள விக்கிப்பீடியர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொள்ள வேண்டுகிறேன். தொலைவில் இருந்து கலந்து கொள்ளும் வாய்ப்பும் இருக்கக் கூடும். இந்நிகழ்வின்போது மயூரநாதனும் இரவியும் தத்தம் விக்கிமேனியா கட்டுரைகளைப் பற்றி ஒரு ஐந்து நிமிடங்கள் பேச முடிந்தால் நன்றாக இருக்கும். வாய்ப்பு இருந்தால் கூட்டத்துக்கான பக்கத்தில் ஒரு செய்தி இட்டுவிட்டு தினு செரியனிடமும் தகவல் சொல்லிவிடுங்கள். -- சுந்தர் \பேச்சு 05:34, 16 ஜூலை 2010 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கான திட்டம்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கான திட்டம் ஒன்றுக்கான எனது முன்மொழிவை விக்கிப்பீடியா:வளர்ச்சிக்கான திட்ட முன்மொழிவு என்னும் பக்கத்தில் பயனர்களின் கருத்துக்களுக்காக முன்வைத்துள்ளேன். -- மயூரநாதன் 08:30, 16 ஜூலை 2010 (UTC)

Punjabis Without Punjabi[தொகு]

Punjabis Without Punjabi

கூகுள் திட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை[தொகு]

கூகுள் திட்டத்தில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்--ரவி 15:40, 18 ஜூலை 2010 (UTC)

வரவேற்புக்குப் படம் தேவை[தொகு]

  • தமிழ் விக்கிப்பீடியாவின் புதிய பயனருக்கான வரவேற்புக்கான வார்ப்புருவில் பயனர் பேச்சு:Karthi.dr பக்கத்தில் செல்வா குறிப்பிடுவது போல் தனிமனிதர் படம் சரியாக இருக்காது. மேலும் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் தின்பண்டங்கள் படமும் சரியானதாகத் தோன்றவில்லை. தமிழர் பண்பாட்டை உணர்த்தும் வழியில் வணக்கம் செலுத்தும் தமிழ்ப் பெண்ணின் வரைபடம் பயன்படுத்தலாம். இந்தப் படம் விக்கிப்பீடியாவின் நடைமுறைக்ளுக்கேற்ப உருவாக்கப்பட்டு பதிவேற்றம் செய்தால் பயன்படுத்தலாம். யாராவது வணக்கம் செலுத்தும் தமிழ்ப் பெண்ணின் படத்தை (பின்புறத்தில் விக்கிப்பீடியாவின் இலச்சினை இருப்பது சிறப்பு) உருவாக்கிக் கொடுத்து உதவமுடியுமா?--தேனி.எம்.சுப்பிரமணி. 04:32, 20 ஜூலை 2010 (UTC)
பலூன் படம் ஒன்று உள்ளது அதில் வருக! வருக! என எழுதி அதனைச் சேர்க்கலாம். --செல்வா 17:14, 21 ஜூலை 2010 (UTC) நான் கூறியது இந்தப்படத்தை --செல்வா 17:16, 21 ஜூலை 2010 (UTC)
  • இந்தப்படம் நன்றாக இருந்தாலும் தமிழ்ப் பண்பாட்டிற்கேற்ற வணக்கம் செலுத்தும் பெண் படத்தைக் கொண்டு வர முயற்சிப்போம். --தேனி.எம்.சுப்பிரமணி. 01:36, 22 ஜூலை 2010 (UTC)
  • வணக்கம் செலுத்தும் பெண் படத்தோடு ஆண் படமும் இணைத்தால் விக்கியின் சம உரிமைப் போக்கு நன்கு வெளிப்படும் என்பது என் கருத்து! :)--பவுல்-Paul 04:34, 22 ஜூலை 2010 (UTC)

புதிய கண்டுபிடிப்புக்குத் தமிழ்ப்பெயர்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியர் முனைவர் கார்த்திக் பாலா தான் கண்டுபிடித்த இருகலப்பாசிக்குத் (diatoms) தமிழ்ப்பெயர் சூட்டியுள்ளார். அதன் அறிவியற்பெயர்: tamilensis வாழ்க கார்த்திக்கின் அறிவாக்கம்! --செல்வா 17:14, 21 ஜூலை 2010 (UTC)

ஆகா, அருமை! மிக்க மகிழ்ச்சி! கார்த்திக்கிற்கு வாழ்த்துக்கள். தெரியப்படுத்திய செல்வாவுக்கு நன்றிகள்.--சிவக்குமார் \பேச்சு 17:42, 21 ஜூலை 2010 (UTC)
  • தான் கண்டுபிடித்த இருகலப்பாசிக்கு தமிழ்ப்பெயர் சூட்டிய கார்த்திக் பாலாவிற்கு இனிய வாழ்த்துக்கள்.--தேனி.எம்.சுப்பிரமணி. 16:23, 22 ஜூலை 2010 (UTC)
அவர் இன்னும் 8-10 உயிரினங்களுக்குப் பெயர் வைக்க உள்ளார். மேற்குதொடர்ச்சி மலை சார்ந்ததாக பெயர் இருக்க வேண்டுமாம். கொங்கு, குடநாடு, குடக்கு (குடக்கு என்றால் மேற்கு, குணக்கு என்றால் கிழக்கு) என்பது போன்று தனித்தன்மையான தமிழ்ச்சொற்களைப் பரிந்துரையுங்கள். இப்படி 10 தமிப்பெயர் சூட்டிய தமிழர் யாரும் இருக்க மாட்டார்கள். முனைவர் கார்த்திக் பாலா கண்டு உள்ளத்தில் கொள்க :) --செல்வா 16:36, 22 ஜூலை 2010 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா பற்றிய தாய்வீடு பத்திரிகைக் கட்டுரை[தொகு]

--Natkeeran 13:30, 22 ஜூலை 2010 (UTC)

படித்தேன். மிக அருமையான பதிவு நற்கீரன்!! தெளிவாகவும், மிக நேர்த்தியாகவும், நல்ல நடையில் கருத்துகளை ஆற்றொழுக்கான முறையில் எழுதியுள்ளீர்கள்! பாராட்டுகள்! --செல்வா 15:31, 22 ஜூலை 2010 (UTC)

நன்றி செல்வா. --Natkeeran 23:44, 22 ஜூலை 2010 (UTC)


நல்ல கட்டுரை நக்கீரன். பல முனைகளிலும் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகமாகி வருவது கண்டு மகிழ்ச்சி. இம் முயற்சிகள் பல புதிய பயனர்களையும் பங்களிப்பாளர்களையும் கொண்டு வந்து தவியைச் சிறந்த கலைக்களஞ்சியமாக வளர்க்க உதவவேண்டும் என்பதே எனது பேரவா. நன்றிகள். -- மயூரநாதன் 06:06, 23 ஜூலை 2010 (UTC)


நல்ல கட்டுரை நக்கீரன். முதல் முறையாக உங்கள் (ஓரளவு தெளிவான) படம் பார்வைக்கு கிடைத்ததுள்ளது :)--அராபத்* عرفات 10:25, 23 ஜூலை 2010 (UTC)


நன்றி மயூரநாதன், அரபாத். --Natkeeran 04:21, 24 ஜூலை 2010 (UTC)

சில சொற்கள் குறித்த கருத்து[தொகு]

செல்வா:)குங்குமம் என்பது பரவலாக அறியப்பட்டது. தமிழாகவே ஏற்கப்பட்டது. ஆனால் இதற்கு பிற பெயர்களும் தமிழில் உண்டு (புதிய சொற்கள் அல்ல). செஞ்சாந்து, ஞாழல், நறவம், அரவம், ஆவம் என்பன. ஆனனல் இவையெல்லாம் அதிகம் அறியப்படாத சொற்கள். இவற்றுக்கு வேறு பொருள்களும் உண்டு. அரத்தம் என்றால் சிவப்ப்பு (செங்குருதி) என்பதால் அரவம் என்பதும் செஞ்சாந்து என்பதும் ஓரளவு எளிதாக செல்லும். சொல் இல்லல என்று அல்ல. ஆனால் குங்குமம் என்பதைத் தமிழாகவே ஏற்கும் சொல். ஆப்பிள், ஆரஞ்சு என்பது போல. மேப்பிள் மரம் என்பது போல.

ஈழம் என்ற சொல் சிங்களச் சொல்லா!!!! செல்வா ஐயா உங்கள் கருத்தென்ன?

)சொன்னர் வேறுயாருமில்லை தமிழ்கூறும் நல்லுலகின் பேரறிஞர் சிவத்தம்பியவர்கள்.

செல்வா:)ஈழம் என்பது தமிழ்ச்சொல் (கட்டாயம்). பொன், கள் என்னும் பொருள்கள் அவை வலு மிக்கதை, இழுப்பு, ஈர்ப்பு மிக்கதைக் குறிக்கும். இழு --> ஈழம் என்று ஆகியிருக்கலாம் என்பது நிறுவப்படாத என் கருத்து. பொதுவாக ஈழம் என்றால் பெரியது, வலியது, பெருமை மிக்கது, ஆற்றல் மிக்கது என்றெலாம் பொருள் தரும் என்பது என் கருத்து. ஈழவர் என்னும் குழுவினமும், பெருந்தொகையாக இருந்த்தததக் குறித்து (பெரிய இனம் என்னும் பொருளில்) வழங்கி இருக்கலாம். இது பற்றிய பெரிய உரையாடல்கள் நிகழ்ந்திருக்கும். அவற்ரைத் நடிஉ நிலை நின்று ஓர் இடத்தில் தொகுத்து வைக்கலாம். (அல்ல ஏற்கனவே உள்ளதா என்றும் அறியேன்). n. < Pāli, Sīhala. < Siṃhala என்று Tamil Lexicon (தமிழ் லெக்ஃசிக்கன், தமிழ்ப் பேரகராதி) காட்டுகின்றது. இதுவே பேரா. சிவத்தம்பி அவர்கள் கருத்தின் அடிச்சான்றாக இருக்கலாம் (இச்சசன்றைத் தந்தவர் யார் எனத் தெரியாது). ஆனால் இந்த சொற்பிறப்பு தவறு என்பது என் கருத்து (மேலே உள்ள பொருள்களைப் பாருங்கள்: பொன், கள்). கள்ளிச்சொட்டாட்டம் பால் என்றால் பால் அடர்த்தியாக உள்ளது என்று பொருள். சிமெண்ட்டுக் கலவை போடும்பொழுது, இன்னும் களிப்பக இருக்க வேண்டும் என்றறல், இன்னும் அடர்த்தியாக இருக்க வேண்டும் என்று பொருள். அடர்ந்த இன்பம் களிப்பு. அதாவது கள் என்பதன் பொருள் எப்படி வந்தது என்பதைக் காட்டக் கூறுகின்றேன். பன்மையைக் குறிக்கும் கள் என்பதும் அடர்த்தியை (பன்மை) காட்டவே. எனவே ஈழம் என்பது பொன் போல், கள் போல், அடர்ந்தது, பெருமையானது. வலுவானது. இவற்றை விரித்து எழுதலாம். இங்கு வேண்டாம். −முன்நிற்கும் கருத்து ச.உதயன் (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

இப்பகுதியை வெட்டி கலைச்சொல் பற்றிய இடத்தில் இடலாமா? மேலே உள்ளது இப்பயனருடன் வேறு இடத்தில் (முகநூல் அல்லது வே'சுபுக்)உரையாடியதின் பகுதி.--செல்வா 16:31, 22 ஜூலை 2010 (UTC)
இப்பகுதி ஆலமரத்தடி பக்கத்தின் மேற்பகுதியில் இடம் பெற்றிருந்தது. நான் அதை வெட்டிக் கீழ்பகுதியில் ஒட்டினேன். இதைச் சரியான இடத்திற்குக் கொண்டு செல்லலாம். --தேனி.எம்.சுப்பிரமணி. 16:38, 22 ஜூலை 2010 (UTC)
"ஈழம் என்பது சிங்களச் சொல் என நான் நினைக்கிறேன்" என்றே அந்தப் பெரும் பேராசிரியர் (கா. சிவத்தம்பி) சொன்னார். ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆய்வாளர் இப்படி ஆராய்ந்தறியாமல் "நான் நினைக்கிறேன்" என்று சொல்லலாமா? பேரா. பீட்டர் சாக் எழுதிய ஆய்வுக் கட்டுரையை படியுங்கள்.--Kanags \உரையாடுக 09:12, 23 ஜூலை 2010 (UTC)
ஈழவர் என்ற ஒரு மக்கள் குழு கேரளாவில் உள்ளார்கள். ஆனால் ஈழம் என்பது சிங்களச் சொல் என்பது ஒரு வித சிங்களமயமாக்கம். --Natkeeran 04:21, 24 ஜூலை 2010 (UTC)


இணைப்பில் உள்ள கட்டுரையில் கோடி காட்டப்பட்டிருப்பது போல "ஈழம்" என்ற சொல் அதன் வரலாற்றுக் காலம் முழுவதுமே ஒரே பொருளையே குறிக்கவில்லை. அண்மைக் கால வரலாற்றை நோக்கினால் கூட "ஈழம்" என்ற சொல் முழுத் தீவையுமே குறித்தது என்பதில் ஐயமில்லை. முழு நாட்டிலும் இருந்து வேறுபடுத்தித் தமிழர் பகுதிகளைக் குறிக்கத் "தமிழ் ஈழம்" என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. தமிழ் இயக்கங்களின் பெயர்களின் இருந்தே இதனை அறிந்து கொள்ள முடியும். எண்பதுகளின் தொடக்கத்தில் நாட்டுப் பண்போல் பயன்படுத்தப்பட்ட "வாழ்க ஈழத் தமிழகம்" என்ற பாடலும் இவ்வாறே பொருள் தருவதைக் காணலாம். பின்னர் சுருக்கம் கருதித் தமிழ் ஈழம் என்பதை "ஈழம்" என்று குறிப்பிட்டு வந்ததன் மூலமே "ஈழம்" தமிழ்ப் பகுதிகளை மட்டும் குறிக்கும் பெயர் போல் ஆயிற்று. இலங்கைத் தமிழர் மத்தியில் "ஈழவர்" என்ற சொற் பயன்பாடு இதற்குப் பிற்பட்டதே. இவ்வாறான பொருள் மாற்றம் காரணமாகவே "ஈழம்" என்பது நமக்கு நெருக்கமானதாக உணர்கிறோம். உண்மையில் ஈழத் தமிழர் என்றாலும், இலங்கைத் தமிழர் என்றாலும் அதிக வேறுபாடு இல்லை.

இன்னொரு வகையில் பார்த்தால், "இலங்கை" என்னும் சொல் வடமொழிச் சொல்லில் இருந்து பெறப்பட்டது, எனவே தமிழ்ச் சொல்லென நாம் நம்பும் "ஈழம்" என்னும் சொல்லை நம்மோடு தொடர்புபடுத்திக் கொள்ள நாம் விரும்புவதாகக் கருதினாலும், "ஈழம்" என்னும் சொல்லின் பிறப்பு இன்னும் சர்ச்சைக்கு உரியதாக உள்ளது என்பதே உண்மை. சிங்கள மயமாக்கம், பேரினவாதம் ஆகிய கருத்துக்களுக்கும் அப்பால் பல இந்திய ஆய்வாளர்களே கூட "ஈழம்" தமிழ்ச் சொல் அல்லவென்றே நம்பி வருகிறார்கள். புகழ் பெற்ற தமிழ்நாட்டு வரலாற்று ஆய்வாளர் எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார், செ. இராசநாயகத்தின் "பண்டைய யாழ்ப்பாணம்" (vcient Jaffna) என்னும் நூலுக்கு எழுதிய முகவுரையிலேயே இது குறித்துப் பின்வருமாறு கூறுகின்றார்:

"The attempt of the author to derive the name "ilam" does not appeal to us as quite successful; ilam to us seems to be directly derived from Pali word Sihalam, which in Tamil would be Singalam or even SingaNam, but a strict Tamilising would make it "ilam", ........."

எனவே இப்பிரச்சினையைச் சிங்களமயமாக்கம், பேரினவாதம் என்பவற்றுக்குள் அடக்கி ஒதுக்கிவிட முடியாது. இச்சொல் மட்டுமன்றி "சேரர்" தவிர்ந்த ஏனைய மூவேந்தர் பெயர்களும், "தமிழ்" என்ற சொல்லும் கூட வடமொழிப் பிறப்பு என்ற கருத்தே இன்னும் வலுவாக இருந்து வருகிறது. ஆகவே, "ஈழம்" உட்பட மேற்குறிக்கப்பட்ட ஏனைய சொற்களும் தமிழ் மூலம் கொண்டவை எனச் சர்ச்சைக்கு இடமின்றி நிறுவுவதற்கு நமது வரலாற்றாளர்களும், மொழியியலாளர்களும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். --மயூரநாதன் 07:24, 24 ஜூலை 2010 (UTC)

Welsh language law changes call - fine companies up to $5, 000 if no services in Welsh[தொகு]

The commissioner, which would be chosen by the first minister, would replace the Welsh Language Board and would have power to fine mobile phone, energy and water companies up to £5,000 if they fail to provide new standards of services in Welsh.

Welsh language law changes call

--Natkeeran 17:34, 24 ஜூலை 2010 (UTC)

நன்றி நற்கீரன். 750,000 பேர், அதாவது ஒரு மில்லியனுக்கும் குறைவான மொழி பேசும் மக்கள் தெளிவாக தம் உரிமையைப் போற்றிப் பாதுகாப்பது மகிழ்ச்சி தருவது. ஐயர்லாந்தில் கே'லிக் மொழியாளரும் உரிமைகளை நிலைநாட்டி வருகின்றனர்.--செல்வா 15:20, 25 ஜூலை 2010 (UTC)

தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தரின் மறுமொழி[தொகு]

இதுவொரு மொழிசார்ந்த வரலாற்றுப் பதிவு என்பதால் இடுகிறேன்: http://www.thehindu.com/todays-paper/tp-national/article532448.ece

--செல்வா 15:20, 25 ஜூலை 2010 (UTC)

விக்சனரி வருக[தொகு]

பல முனைப்பான பங்களிப்பாளர்களின் வருகையோடு, தமிழ் விக்சனரி அடுத்த கட்டப் பாய்ச்சலுக்கு அணியமாக உள்ளது. அடுத்த இரு வாரங்களில் தமிழ் விக்சனரியின் வடிவமைப்பு உட்பட பல முக்கிய கொள்கை முடிவுகள் எடுக்க வேண்டி வரும். எனவே, ஆர்வமுள்ள அனைவரும் விக்சனரியிலும் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்--ரவி 14:02, 28 ஜூலை 2010 (UTC)

Move to Limit Cantonese on Chinese TV Is Assailed[தொகு]

Video: Battle to save languages[தொகு]

Video: Battle to save languages

வணக்கம் விக்கிப்பீடியர்களே! நான் தமிழ் விக்கிப்பீடியாவில் எனது முதல் கட்டுரையை எழுதயுள்ளேன். கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் வரவேற்கின்றேன். ராஜ்6644 11:20, 29 ஜூலை 2010 (UTC)

ராஜ், உங்கள் கட்டுரை நன்றாக உள்ளது. தொடருங்கள். இன்னும் பல கட்டுரைகளைத் தாருங்கள். -- மயூரநாதன் 19:15, 29 ஜூலை 2010 (UTC)
நன்றாக எழுதியுள்ளீர்கள், பாராட்டுகள். சில பகுதிகளில் உரை திருத்தம் செய்துள்ளேன். பார்க்கவும். மக்கள்தொகை தெரிந்தால் அதனைச் சேர்க்கலாம். தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன். --செல்வா 19:47, 29 ஜூலை 2010 (UTC)
  • வாழ்த்துக்கள். ராஜ்... பிற தலைப்புகளிலும் தொடரட்டும் தங்கள் பங்களிப்புகள். --தேனி.எம்.சுப்பிரமணி. 01:42, 30 ஜூலை 2010 (UTC)

ஆவணப் படம், ஆவணத் திரைப்படம், ஆவண ஒளிப்படம்[தொகு]

ஆவணப் படம் என்பது Documentary குறிக்க பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக இது Documentary film குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இது Documentary photography யையும் குறிக்கலாம். தமிழில் பொதுவாக ஆவணப் படம் என்ற சொல்லை Documentary film குறிக்கப் பயன்படுத்தலாமா? அது எளிமையாக உள்ளது. --Natkeeran 02:26, 30 ஜூலை 2010 (UTC)

ஆவணப்படம் என்பது ஆவண ஒளிப்படமாகவும் இருக்கலாம் ஆவணத் திரைப்படமாகவும் இருக்கலாம், ஆவண நிகழ்படமாகவும் இருக்கலாம். வேற்றுமை காட்ட வேண்டுமெனில் முன்னொட்டு சேர்த்துக்கொள்ளலாம்.ஆவணப்படம் போதும்.--செல்வா 02:30, 30 ஜூலை 2010 (UTC)
செல்வா, ஆமாம், எனவே எரியும் நினைவுகள், அல்லது சிறப்பு அனுமதி போன்றவற்றை ஆவண நிகழ்படங்கள் என்ற பகுப்புக்குள் சேர்க்கவா? --Natkeeran 02:55, 30 ஜூலை 2010 (UTC)
சேர்க்கலாம் என்றுதான் நினைக்கின்றேன் நற்கீரன்.--செல்வா 03:31, 30 ஜூலை 2010 (UTC)

wikimediafoundation Special:CommunityHiring[தொகு]

wikimediafoundation Special:CommunityHiring

ஏமாற்றம்![தொகு]

நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்! இந்தத் திங்கள் 1ஆம் நாள் விக்கிப்பீடியா: பொதுவான குறைகள் பகுதியில் ஒரு முதன்மையான கருத்தை, யோசனையைத் தெரிவித்து விக்கிப்பீடியர்கள் அனைவரின் பதிலையும் ஆவலோடு எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டிருந்தேன். அத்தோடு இணைய உலகிற்கு நான் வரவேயில்லை; இன்றுதான் வந்தேன். இத்தனை நாள் இடைவெளியில் நீங்களெல்லாம் என்னென்ன கருத்துத் தெரிவித்திருப்பீர்களோ என ஆவலுடன் வந்தால் யாருமே அதற்கு எந்தப் பின்னூட்டமுமே இடாமல் வைத்திருக்கிறீர்களே! நியாயமா நண்பர்களே? ஏமாற்றத்துடன்--இ.பு.ஞானப்பிரகாசன் 09:10, 30 ஜூலை 2010 (UTC)

  • எதையும் எதிர்பாராமால் பங்களிப்பு செய்வதுதான் விக்கிப்பீடியர்கள் என்பதை ஞாபகத்தில் கொள்ளுங்கள். பின்னூட்டம் இருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள்; இல்லையா விட்டுவிடுங்கள். இதில் ஏமாற்றம் எதுவுமில்லை. இதற்காக எவ்வித வருத்தமும் தேவையில்லை. --தேனி.எம்.சுப்பிரமணி. 09:58, 30 ஜூலை 2010 (UTC)
  • ஞானப்பிரகாசன், நீங்கள் குறிப்பிட்ட கருத்து ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பே முடிந்துபோன ஒன்று. அதை ஓரளவு இணக்கமாகவே தீர்த்திருக்கிறோம். எனவே அதை மேலும் கிளற எவரும் விரும்பியிருக்கமாட்டார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். இலங்கைத் தமிழிலோ அல்லது தமிழ்நாட்டுத் தமிழிலோ ஒலிபெயர்க்கும்போது மறு சாராரின் ஒலிபெயர்ப்பையும் குறிப்பிட்டு எழுதுவது என்பதுதான் இணக்கப்பாடு. மறு சாராரின் ஒலிபெயர்ப்புமுறை தெரியாவிட்டால் நீங்கள் குறிப்பிட்டதுபோல் ஆங்கிலத்தை அடைப்புக் குறிக்குள் இட்டால் இன்னொரு பயனர் தகுந்த ஒலிபெயர்ப்பையும் சேர்த்துவிடலாம். இந்த விவாதத்தை மேலும் கிளறுவதில் எந்தப் பயனும் இல்லை என்பதே எனது கருத்து. மயூரநாதன் 10:15, 30 ஜூலை 2010 (UTC)
ஒலிபெயர்ப்பு குறித்து ஓர் ஐயப்பாடு
  • மயூரநாதன், அண்மையில் விக்சனரியில் நிகழ்ந்த ஓர் உரையாடலின் தொடர்ச்சியாக இதை எழுதுகிறேன். ஒலிபெயர்ப்பு முறை பற்றிப் பேசினீர்கள். எந்த ஒலியை எந்த எழுத்தால்/குறியீட்டால் குறிப்பது? இதற்கான தமிழ் விக்கி/விக்சனரி பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளதா? நானும் ஞானப்பிரகாசனைப் போல ஒரு புது பயனர்/பங்களிப்பாளர். எனவே ஒலிபெயர்ப்புப் பற்றிய விக்கியின் முறையோ தரப்படுத்தலோ தெரியவில்லை. பதில் அறிய அவா. நன்றி!--பவுல்-Paul 12:22, 30 ஜூலை 2010 (UTC)

இ.பு.ஞானப்பிரகாசன், நான் சூலை 6, 2010 அன்றுதான் வாட்டர்லூவுக்கு வந்தேன். வந்தபின் பல கோணங்களில் பல இழுப்புகள் இருந்தன. உங்கள் குறிப்பையும் பார்க்கவில்லை. இபொழுதுதான் பார்த்தேன். நீங்கள் ஏமாற்றம் அடைந்தீர்கள் என்று அறிய வருத்தம்தான். ஆனால் பலருடைய பணி இழுப்புகளையும், இங்கு விக்கிப்பீடியா தொடர்பான பிறபல இழுப்புகளையும் கருத்தில் கொள்ள வேண்டுகிறேன். நீங்கள் கூறிய தீர்வு இங்கு ஏற்கனவே நடப்பில் உள்ளதுதானே?! (ஆங்கிலத்தில் அடைப்புக்குறிகளுக்குள் இடுவது). ஆனால் உரோமன் எழுத்துகளில் இட்டாலும் ஒலிப்பு தெளிவாகாது. அனைத்துலக ஒலியெழுத்து முறைப்படி இட்டால் பெருமளவு சரியாக அமையும் (ஆனால் அதுவும் துல்லியமாகாது, நுட்ப வேறுபாடுகள் கணக்கில் அடங்காதன). ஆனால் இம்முறை எளிதானதல்ல. இலங்கைத்தமிழர் தமிழ்நாட்டுத்தமிழர் ஒலிப்பு வேறுபாடுகளும், தமிழ் எழுத்துக்கான ஒலிப்புகளிலும் குறிப்பிடும்படியான வேறுபாடுகளும் உள்ளனதான். இது பற்றி விரிவாக அலசலாம், ஆனால் ஏற்கனவே இவற்றைச் செய்து இணக்க முடிவோடு தொடர்கிறோம். மீண்டும் கிளறுவதால் நற்பயன் இருக்க வாய்ப்புகள் குறைவு. செய்ய வேண்டிய பணிகள் இன்னும் எவ்வளவோ இருக்கும் பொழுது, இதனை இப்பொழுது எடுக்க விருப்பம் இல்லை, தேவையும் இல்லை என்பது என்கருத்து. --செல்வா 15:30, 30 ஜூலை 2010 (UTC)

பவுல், உங்களுக்கு விக்சனரியிலேயே மறுமொழி இட்டிருக்கின்றேன். இது பற்றி தொடக்கநாட்களில் இருந்தே கூறிவருகின்றேன். எளிய தீர்வு உள்ளது. பின்னர் விரிக்கின்றேன்.--செல்வா 15:30, 30 ஜூலை 2010 (UTC)

செல்வா, விக்சனரியில் நீங்கள் இட்ட மறுமொழிக்கான இணைப்பை இங்கே தருகிறீர்களா? தேடினேன் கிடைக்கவில்லை. -- மயூரநாதன் 21:55, 30 ஜூலை 2010 (UTC)
மயூரநாதன், இப்பக்கத்தில்] கொடிகளின் படங்கள் என்னும் தலைப்பில் கடைசியில் உள்ளது (பெரிய செய்தி எதுவும் இல்லை, சிறு குறிப்புதான்).--செல்வா 23:50, 30 ஜூலை 2010 (UTC)
இங்குள்ளதையும் பாருங்கள் இதனையும் மாற்றி அமைக்க வேண்டும்.--செல்வா 23:53, 30 ஜூலை 2010 (UTC)


பவுல், விக்சனரியில் நிலைமை என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், விக்கிப்பீடியாவில் ஒலி பெயர்ப்புக்களை ஒழுங்கு படுத்துவதற்கான பக்கம் ஒன்றை எழுதும் முயற்சி எடுக்கப்பட்டது. விக்கிப்பீடியா:ஒலிபெயர்ப்புக் கையேடு ஐப் பாருங்கள். இப் பக்கம் இன்னும் எழுதப்படவில்லை. இதன் பேச்சுப் பக்கத்தில் சில முன்மொழிவுகளும் அதன்மீது விவாதங்களும் இடம்பெற்றன அவையும் 2008 ஆம் ஆண்டுக்குப் பின் தொடரவில்லை.

ஒலி பெயர்ப்பு விடயத்தில் முக்கியமாக இரண்டு விதமான பிரச்சினைகள் உள்ளன. முதலாவது தமிழில் தனியான எழுத்துக்கள் இல்லாத ஒலிகளை எவ்வாறு ஒலிபெயர்ப்புச் செய்து எழுதுவது என்பது. இரண்டாவது தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் இடையில் காணப்படும் உச்சரிப்பு வேறுபாடுகள் தொடர்பிலான ஒலிபெயர்ப்புப் பிரச்சினைகள். இவற்றுக்குத் தீர்வு காண்பது என்பது மிகவும் சிக்கலான விடயம். இவற்றுக்கான தீர்வை விக்கிப்பீடியாவுக்குள்ளோ அல்லது விக்சனரிக்குள்ளோ கண்டுவிட முடியாது. எனவே தற்போதைய நிலையில் ஒரு புரிந்துணர்வுடன் கூடிய இணக்கப்பாடு மட்டுமே சாத்தியமானது என்பது எனது கருத்து.


முதலாவது பிரச்சினை தமிழ்நாட்டுத் தமிழர், இலங்கைத் தமிழர் அல்லது வேறு நாட்டுத் தமிழர்கள் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் பொதுவானது. இந்த விடயத்தில் பல கட்சிகள் உண்டு. முக்கியமாக:


  • ஒலிபெயர்க்கும்போது தமிழ் மரபை இறுக்கமாகப் பின்பற்றத்தேவை இல்லை என்போர். இவர்கள் தமிழில் தற்போது பயன்பாட்டில் உள்ள கிரந்த எழுத்துக்களைத் தாராளமாகப் பயன்படுத்தலாம் என்னும் கொள்ள்கை உடையவர்களாக இருப்பதுடன், தமிழ் இலக்கண மரபில் முதல் எழுத்தாக வராத டகரம், ரகரம் போன்ற எழுத்துக்களை முதலெழுத்தாகப் பயன்படுத்துவதிலும் தவறில்லை என்கிறார்கள்.
  • ஒலிபெயர்ப்பில் தமிழ் மரபு கட்டாயமாகப் பின்பற்றப்படவேண்டும் என்போர். இவர்கள் கிரந்த எழுத்துக்களின் பயன்பாட்டை எதிர்ப்பவர்கள். தமிழில் முதலாக வராத எழுத்துக்கள் தொடர்பில் தமிழின் மரபுகளைப் பின்பற்றியே ஒலிபெயர்ப்புக்களைச் செய்ய விரும்புகிறார்கள்.
  • இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையை எடுப்பவர்கள். மரபுகளை ஓரளவுக்குப் பின்பற்றினாலும் இறுக்கமாகக் கடைப்பிடிக்காதவர்கள் இவர்கள்.


இரண்டாவது பிரச்சினை முக்கியமாகத் தமிழ்நாட்டுத் தமிழருக்கும், இலங்கைத் தமிழருக்கும் இடையிலானது. இவ்வேறுபாடுகள் பல நூற்றாண்டுகளாக இருந்து வருபவை என்பதுடன், பேச்சு மொழி, எழுத்துமொழி இரண்டிலும் காணப்படுபவை. பொது எழுத்து வழக்கு முதல் கலைச்சொல்லாக்கம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் ஊடுருவியிருப்பவை. இவற்றையும் இரண்டு வகைகளாகப் பார்க்கலாம்:


  • ஆங்கில மொழியை ஊச்சரிப்பதில் உள்ள வேறுபாடு. இது ஒலிபெயர்ப்பிலும் வெளிப்படுகிறது.
  • தமிழ் எழுத்துக்களையே உச்சரிப்பதில் உள்ள ஒலிவேறுபாடுகள். எடுத்துக்காட்டாக "ற்ற" வின் உச்சரிப்பைக் குறிப்பிடலாம். இலங்கைத்தமிழர் இதை "tta" என்பதுபோல் உச்சரிக்க தமிழநாட்டில் இதனை "tRa" என்று உச்சரிக்கிறார்கள் இதனால் "Newton" என்பதை இலங்கையில் நியூற்றன் என எழுதுவார்கள். தமிழ்நாட்டில் நியூட்டன் என எழுதுவார்கள்.


இவற்றை உடனடியாக ஒரே தரக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது சாத்தியம் இல்லை. ஆனால் ஓவ்வொரு பிரிவினரும் தாங்கள் சார்ந்த முறைப்படி பிழையின்றி எழுத வேண்டியது முக்கியம். பொதுவாக நீண்டகாலம் இங்கே பங்களிப்பவர்கள் எல்லாத்தரப்பாருடைய முறைகளையும் அறிந்துள்ளார்கள். இதனால் அடைப்புக் குறிகளுக்குள்ளோ அல்லது வேறு வகையிலோ மாற்றுச் சொற்களையும் எழுதுகிறார்கள். தெரியாதவர்கள் ஆங்கிலச் சொல்லை அடைப்புக் குறிக்குள் எழுதுகிறார்கள்.


தற்போது, மிகவும் தீவிரமான பிரச்சினை தமிழ்நாட்டுத் தமிழர் இலங்கைத் தமிழர் தொடர்பானது அல்ல. தமிழ் மரபு, கிரந்தப் பயன்பாடு என்பவை தொடர்பான பிரச்சினைகளே முக்கியமான பிரச்சினைகளாக உள்ளன. விக்கிப்பீடியா தொடர்பான பெரும்பாலான கருத்து வேறுபாடுகளும், விமர்சனங்களும் இவை தொடர்பானவையே. இப்போதைக்குத் தற்போதைய பொது வழக்கின்படி பிழையின்றித் தமிழை எழுதினால் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதே வேளை, பயனர்கள், தாம் சரியென்று கருதுவதை மற்றவர்களுக்குப் புரியவைக்க முயற்சி செய்வதையும். அது தொடர்பான விவாதங்களில் ஈடுபடுவதையும், தடுக்க முடியாது, ஆனால் இவை ஆக்கமுறையில் அமையவேண்டியது முக்கியமானது.

--மயூரநாதன் 23:38, 30 ஜூலை 2010 (UTC)

மிகச்சரியாகத் தொகுத்து இருக்கின்றீர்கள்!! --செல்வா 23:51, 30 ஜூலை 2010 (UTC)
ஒலிபெயர்ப்பு பற்றிய ஐயப்பாடுகளைத் தெளிவுபடுத்திய மயூரநாதனுக்கும் செல்வாவுக்கும் நன்றி!

உண்மையிலேயே விக்கி/விக்சனரி பற்றி ஆர்வம் கொள்ளத்தொடங்கிய முதல் நாளிலிருந்தே என்னில் எழுந்த சிந்தனை இது: தமிழகத் தமிழும், இலங்கைத் தமிழும், மலேசியா/சிங்கப்பூர் தமிழும் இணக்கத்தோடு செயல்பட இது ஓர் அரிய வாய்ப்பும் சவாலும் அல்லவா? அதற்குப் பொருத்தமான விளக்கம் அளித்த உங்கள் இருவருக்கும் என் நன்றி உரித்தாகுக!

மாணவன் கேட்கும் கேள்விகளுக்குப் பொறுமையோடும் கரிசனையோடும் பதிலளிக்கின்ற ஆசிரியரைப் போல செயல்படுகிறீர்கள். பாராட்டுகிறேன்!

ஒலிப்புக்கும் ஒலிபெயர்ப்புக்கும் வருவோம். தமிழையும் ஆங்கிலத்தையும் ஒலிப்பதிலும், ஒலியெழுத்தாக இடுவதிலும் தமிழர் வேறுபடுகின்றனர் என்னும் உண்மையைச் சுட்டிக்காட்டினீர்கள். ஒத்துக்கொள்கிறேன். இந்த வேறுபாடுகளுக்கு அறுதியான தீர்வுகளை விக்கி/விக்சனரி காணல் இயலாது என்கிறீர்கள். அதையும் ஏற்றுக்கொள்கிறேன்.

தற்போதுதமிழ் மரபு, கிரந்தப் பயன்பாடு என்பவை தொடர்பான பிரச்சினைகளே முக்கியமான பிரச்சினைகளாக உள்ளன என்று மயூரநாதன் கூறுவது ஆழ்ந்து கவனிக்கத்தக்கது. job, joshua, chicago,sit, boston என்னும் சொற்களை முறையே ஜாப்/ஜோப், ஜாஷுவா, ஷிகாகோ, பாஸ்டன் என்று ஒலித்துக் காட்டினால் (எழுத்திலும் ஒலியிலும்) சிலருக்கு/பலருக்கு பிடித்தமாகும்.

அதே நேரத்தில் வேறு சிலர்/பலர் கிரந்த எழுத்துப் பயன்பாட்டை ஏற்கத் தயங்குகின்றன்ர் என்று உணர்கிறேன். இடைப்பட்ட கருத்துடையோரும் உளர்.

செல்வா இப்பக்கத்தில்] என்றும் இங்குள்ளதையும் பாருங்கள் என்றும் இரு இணைப்புகள் கொடுத்திருந்தார். IPA என்னும் பன்னாட்டு ஒலிப்புத் தரம் கையாளுதற்கு ஏற்றது என்றதோடு பட்டியலும் போட்டுள்ளார்.

பட்டியலைப் பார்த்தேன். சாதாரண விக்கியர்/பயனர் இம்முறையைக் கண்டு அச்சம் கொள்ள மாட்டார்களா என்ற எண்ணம்தான் முதலில் என் உள்ளத்தில் எழுந்தது. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்றாற்போல, படிப்படியாகக் கற்றுக் கொள்ள முடியும் என்று என்னையே தேற்றிக்கொண்டேன். பன்னாட்டுத் தரப்படுத்தலுக்கு ஏற்ப, முழுமையான பட்டியல் உருவாக்கி, அதை எல்லா விக்கி/விக்சனரி பயனர்களும் எளிதில் பார்க்கும்/புரியும் விதத்தில் அளிக்க வேண்டும். விக்கி நெறிக்கு ஏற்ப, யார்மீதும் அதைத் திணிப்பது போன்ற தோற்றத்தைக் கொடுத்தலாகாது. பரிந்துரைக்கப்பட்ட முறை என்று வழங்கலாம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே இப்பொருள்கள் பற்றிய உரையாடல் நடந்தது என்றும், ஒருசில இணக்கங்கள் ஏற்பட்டன, ஆனால் ஒலிப்பு பற்றிய பக்கம் தரப்படுத்தி எழுதப்படவில்லை என்றும் நீங்கள் கூறுவது கேட்டு, விக்கியின் வரலாற்றை அறிய வாய்ப்பளித்தீர்கள். நன்றி!

ஒலிப்பு பற்றியும் இணக்கம் ஏற்பட எல்லாரும் சேர்ந்து உழைப்போம். --பவுல்-Paul 04:17, 31 ஜூலை 2010 (UTC)


தமிழக உள்ளாட்சி அமைப்புகள்[தொகு]

எனது பயனர் பேச்சுப் பக்கத்தில் பயனர்:Raj6644 பிளாக் என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையாக ஊராட்சி ஒன்றியம் என்று தமிழாக்கம் செய்து அதற்கான விக்கிப் பக்கம் எழுத உதவி வேண்டியிருந்தார்.ஆனால் தமிழக அரசின் வலைத்தளங்களில், நான் தேடியவரை, பிளாக் என்ற ஆட்சிப்பகுதி பற்றி எதுவும் அறிய முடியவில்லை. உள்ளாட்சிப் பிரிவுகளாக நகராட்சி, நகரப் பஞ்சாயத்து (town panchayats),பஞ்சாயத்து ஒன்றியம்(Panchayat Union)மற்றும் கிராம பஞ்சாயத்து (village Panchayats)என்றவையே உள்ளன. ஆனால் Block Development Officer (BDO) குறிப்பிடப்பட்டுள்ளார். அவருக்கும் பஞ்சாயத்து ராஜ் அமலாக்கத்திற்குப் பிறகு தேர்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவருக்கும் இடையே உள்ள அதிகார பகிர்தலும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசில் பங்கேற்றவர்கள் அல்லது பரிச்சயம் உள்ளவர்கள் இது குறித்து விளக்கமளித்தாலோ விக்கிப்பக்கம் உருவாக்கினாலோ மட்டுமே ஓர் ஆதாரமுள்ள தகவலைப் பெற இயலும். ராஜ் குறிப்பிட்ட ஆங்கில விக்கி இணைப்பிலிருந்து தமிழாக்கம் செய்ய விருப்பமில்லை.--மணியன் 16:07, 30 ஜூலை 2010 (UTC)

ஊராட்சி மன்றத் தலைவர் (Panchayath Chairman), பேரூராட்சி மன்றத் தலைவர், மாநகர மேயர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்றோர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள். Commissioner (இயக்குனர்?), மாவட்ட ஆட்சியர், வட்டாச்சியர் (தாசில்தார்), BDO போன்றோர் அரசு அலுவலர்கள். BDO-வுக்கான தமிழ்ப்பெயரைக் கண்டறிய முற்படுகிறேன். -- சுந்தர் \பேச்சு 16:19, 30 ஜூலை 2010 (UTC)
விக்சனரியில் உள்ளதே! Block Development Office - வட்டார வளர்ச்சி அலுவலகம் [1] ; Block Development Officer - வட்டார வளர்ச்சி அலுவலர் [2]; மேலும் விக்சனரியிலுள்ளவை:
  • town panchayat - பேரூராட்சி; panchayat - ஊராட்சி; municipality - நகராட்சி; --பரிதிமதி 19:35, 30 ஜூலை 2010 (UTC)
  • பஞ்சாயத்து ஒன்றியம்(Panchayat Union) ஊராட்சி ஒன்றியம் இரண்டும் ஒன்றுதான். பஞ்சாயத்து எனக் குறிப்பிடப்படும் ஊராட்சி என்பதும் ஒன்றானதே. ஊராட்சி ஒன்றியங்கள் குறித்த தகவல் என்னால் உள்ளீடு செய்யப்பட்ட தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் எனும் கட்டுரையின் ஒரு பகுதியாக இடம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் ஊராட்சி ஒன்றியங்களில் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருப்பவர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளராகவும் குறிப்பிடப்படுகிறார். இது போல் என்னால் உள்ளீடு செய்யப்பட்ட தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள் கட்டுரையில் ஊராட்சி ஒன்றிய அமைப்பிற்கான தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுபவர்கள் குறித்த தகவலும் இடம் பெற்றுள்ளன. --தேனி.எம்.சுப்பிரமணி. 01:31, 31 ஜூலை 2010 (UTC)
Block பற்றி எனக்கும் ஐயம் இருந்தது. நன்றி. --மாஹிர் 07:50, 1 ஆகஸ்ட் 2010 (UTC)
தெளிவுபடுத்தியமைக்கு நன்றி தேனி சுப்பிரமணி. ஊராட்சி ஒன்றியம் குறித்து தனிப்பக்கம் எழுதிட இயலுமா ?--மணியன் 19:38, 2 ஆகஸ்ட் 2010 (UTC)

தானியங்கியாய் வரும் மாதங்களின் பெயர்கள்[தொகு]

விக்கிப்பீடியாவில் தானியங்கியாய்ப் பதிவாகும் மாதங்களின் பெயர்கள், சனவரி பிப்பரவரி(பெப்பிரவரி), மார்ச் (மார்ச்சு), ஏப்ரல் (ஏப்பிரல்), மே, சூன், சூலை, ஆகத்து, செப்டம்பர், அக்டோபர், நவம்பர், திசம்பர் (டிசம்பர்) என்பது போன்று தமிழ் எழுத்துகளி இருக்குமாறு குறிக்கலாமா? அண்மையில் தமிழிணைய மாநாட்டு வலைப்பக்கத்தில் கூட சூன் என்றுதான் எழுதியிருந்தார்கள். தமிழுக்கு முன்னுரிமை கொடுப்பது மட்டுமல்லாமல், ஒலிப்பதற்கும் எளிதாக உள்ளது. ஆகத்து மாதம் என்று சொல்லிப் பாருங்கள். மார்ச் மாதம் என்று சொல்வீர்களா அல்லது மார்ச்சு மாதம் என்று சொல்வீர்களா என்றும் சொல்லிப் பார்த்துச் சொல்லுங்கள். பேச்சு வழக்கிலும்கூட ஏப்பிரல் மாதம் என்றுதான் பெரும்பாலானவர்கள் சொல்கிறார்கள். ஒவ்வொரு மாதத்தையும் ஒவ்வொரு மொழியாளரும் எப்படித் தங்கள் மொழியில் அழைக்கின்றார்கள் என்று பாருங்கள்=> இடாய்ச்சு மொழியில் யானுஆர் (Januar), பிரான்சிய மொழியில் ழா2ன்வியே (Janvier) என்கிறார்கள் எசுப்பானிய மொழியில் எனெரோ (Enero) இன்னும் பலப்பல வழிகளில் ஒலிக்கின்றார்கள். தமிழில் சனவரி (chanavari) என்றால் தவறேதும் இல்லை என்பது என் கருத்து. மாதங்களின் பெயரை தமிழ் எழுத்துகளில் எழுதலாமே என்னும் என் கருத்தை இடுகின்றேன். --செல்வா 13:47, 31 ஜூலை 2010 (UTC)

இக் கருத்தை ஆமோதிக்கிறேன். ஆனால் முன்னர் சிலர் இப்படடி மாற்றுவதை கடுமையாக எதிர்த்தார்கள். --Natkeeran 16:59, 31 ஜூலை 2010 (UTC)
நன்றி நற்கீரன். மற்ற பயனர்களும் கருத்துத் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.--செல்வா 17:07, 31 ஜூலை 2010 (UTC)
மாற்றலாம் என்பதுதான் என்னுடைய கருத்தும். மயூரநாதன் 18:09, 31 ஜூலை 2010 (UTC)
தமிழ் இலக்கண மரபுப்படி சூன்,சூலை என்று எழுதுவதுதான் சரி.நான் இதனை வரவேற்கின்றேன்.கம்பன் தமிழ் மரபுப்படியே தம் இராமகாதையை இயற்றியுளான். விபீஷ்ணன் என்பதை வீடணன்;ஜானகி என்பதை சானகி என்று ஆண்டுள்ளதை எண்ணிப்பாருங்கள் - மு.இளங்கோவன்
மிக்க நன்றி மயூரநாதன், மு.இளங்கோவன். --செல்வா 22:17, 31 ஜூலை 2010 (UTC)
வணக்கம். மாதங்களின் பெயர்களைத் தமிழ் எழுத்துகளிலேயே குறிக்க வேண்டும். எனினும்,பிப்பிரவரி, மார்ச்சு, ஏப்பிரல் என்ற முறையிலேயே குறிக்க வேண்டுகிறேன். மேலும் கிரந்த எழுத்துகளைப்பயன்படு்த்தாமலேயே தமிழ் எழுத்துகளைக் கொண்டே பெயர்ச் சொல்லாயினும் வேறு அயற் சொல்லாயினும் குறிக்க வேண்டும் என்னும் மரபைப் பின்பற்ற வேண்டுகிறேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
ஜூன், ஜூலை ஆகிய மாதப்பெயர்களை மாற்றுவதில் எனக்கும் உடன்பாடே.--Kanags \உரையாடுக 23:28, 31 ஜூலை 2010 (UTC)
மிக்க நன்றி இலக்குவனார் திருவள்ளுவன், சிறீதரன் கனகு. --செல்வா 01:04, 1 ஆகஸ்ட் 2010 (UTC)
இதில் எனக்கு உடன்பாடு. ஆனால் இதை செயல்படுத்தும் முன் வழிகாட்டல் பக்கத்தில் இதை பற்றி குறிப்பெழுதி பின் செயல்படுத்தினால் நன்று.--குறும்பன் 02:26, 1 ஆகஸ்ட் 2010 (UTC)
மாற்ற வேண்டும்.--மணியன் 19:40, 2 ஆகஸ்ட் 2010 (UTC)


en:Wikipedia:Lists of common misspellings போன்று தமிழில் விக்கிப்பீடியா:எழுத்துப் பிழைகள் கொண்ட வார்த்தைகளின் பட்டியல் தொகுக்க உதவுங்கள். இவ்வாறு தொகுத்தால் தானியங்கி உதவியுடன் விக்கப்பீடியா கட்டுரைகளை திருத்தம் செய்வதற்கான rules ஆவணங்கள் உருவாக்க உதவும். உதா. வடமொழி என்று தலைப்பிட்டு ஹிந்தி - இந்தி என்றோ, மாதங்கள் எனத் தலைப்பிட்டு ஜூலை - சூலை என்றோ தொகுத்து வரலாம்? - மாஹிர் 13:12, 1 ஆகஸ்ட் 2010 (UTC)

மாகிர் .அருமையான சிந்தனை. பலருடன் கலந்து முறைப்படி ஒரு மாதம் இதற்காக உழைக்கலாம். திட்டமிடுங்க. --இராஜ்குமார் 08:22, 2 ஆகஸ்ட் 2010 (UTC)
அருமையானதும் தேவையானதுமான ஓர் பக்கம்.--மணியன் 19:40, 2 ஆகஸ்ட் 2010 (UTC)
மிக்க நன்றி குறும்பன், மணியன், மாகிர், இராச்குமார். மாகிர் கூறிய கருத்து மிகவும் அருமை. அப்படிச் செய்தால் பிழைகளைத் தானியங்கி முறையில் திருத்தலாம். விக்கிப்பீடியா:எழுத்துப் பிழைகள் கொண்ட வார்த்தைகளின் பட்டியல் என்னும் பக்கத்தில் நம் உள்ளீடுக்ளைத் தருவோம். குளப்பம்-->குழப்பம் இப்படியான தவறுகளையும் எளிதாக சீராக செய்யலாம். மாகிருக்கு நன்றி! போதிய ஆதரவு இருக்கின்றது என்றே நினைக்கின்றேன். ஆகவே மாதங்களின் பெயர்களை தமிழ் எழுத்துகளின் எழுதுவோம், அதே நேரத்தில் மாகிர் பரிந்துரைத்த பிழைதிருத்தப் பட்டியலை வளர்த்தெடுக்க உதவுவோம். கருத்தளித்த அனைவருக்கும் மீண்டும் நன்றி.--செல்வா 20:35, 2 ஆகஸ்ட் 2010 (UTC)

தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவு செய்தோர் எண்ணிக்கை 20,022[தொகு]

பதிவு செய்த பயனர் தொகை இருபதாயிரத்தை எட்டியுள்ளது தமிழ் விக்கிப்பீடியாவில்!! தமிழ் இணைய உலகில் இது ஓர் அரியெட்டு நிலை! அதுவும் அறிவுக்களஞ்சியமாக வளர்த்தெடுக்க விரும்பு ஓர் தளத்தில்!! மேன்மேலும் வளர நல்வாழ்த்துகளைப் பதிவுசெய்கிறேன்.--செல்வா 16:25, 31 ஜூலை 2010 (UTC)

  • தமிழ் விக்கிப்பீடியாவில் பயனராகப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 20,022 என்று உயர்ந்துள்ளது என்பது மகிழ்ச்சிதான். ஆனால், இந்த எண்ணிக்கை அதிகம் என்கிற மகிழ்ச்சியில் எந்தப் பயனுமில்லை. இந்தப் பயனர்கள் ஒவ்வொருவரும் தலா இரண்டு கட்டுரைகளைத் தந்திருந்தால் கூட கட்டுரைகளின் எண்ணிக்கை 40 ஆயிரத்தைத் தாண்டியிருக்கும். இந்த 20,022 பயனர்களில் 5 பயனர்கள் மட்டுமே தமிழ் விக்கிப்பீடியாவிற்குத் தொடர்ந்து தங்கள் பங்களிப்பை செய்து வருகின்றனர். இவர்கள் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்கள். இவர்களுக்கு அடுத்து 10 பயனர்கள் அவ்வப்போது அவர்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் தங்கள் பங்களிப்பைச் செய்து வருகிறார்கள். இவர்களையும் பாராட்டலாம். இவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள சுமார் 10 பயனர்கள் எப்போதாவது தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வந்து தங்கள் பங்களிப்பைச் செய்வதுண்டு. இவர்களையும் கூட நாம் பாராட்டலாம். சிலர் தங்களுடைய சொந்தத் தகவல்களைப் பதிவு செய்வதற்காகப் பயனர்களாகப் பதிவு செய்ததும் உண்டு. ஆனால் பல பயனர்கள் தங்களைப் பதிவு செய்து கொண்டதோடு சரி. எந்தவிதமான பங்களிப்புகளையும் செய்வதில்லை. இவர்களில் தமிழ் பற்று கொண்டோரும் (?) சிலர் உண்டு. இவர்கள் சொந்தமாக வலைப்பூவெல்லாம் வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு கணினி அறிவும், தமிழ் தட்டச்சு அறிவும் கூட உண்டு. இருப்பினும் இவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பு செய்யத் தயக்கம் காட்டி வருகின்றனர். தங்கள் வலைப்பூவை முன்னிறுத்த விரும்பும் இவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரை அளிக்க முன்வருவதில்லை. இதற்கான காரணம் அறிந்து அவர்களைத் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பு செய்ய நாம் முயற்சிக்க வேண்டும். பயனர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதில் மகிழ்ச்சியில்லை. பங்களிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பில்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்க முடியும் என்பது என் கருத்து.--தேனி.எம்.சுப்பிரமணி. 01:51, 1 ஆகஸ்ட் 2010 (UTC)
தேனி சுப்பிரமணி, நீங்கள் சொல்வது புரிகிறது. தமிழ் விக்கிப்பீடியா நாளொன்றுக்கு 71,000 முறை பார்க்கப்படுகின்றது, மாதத்துக்கு 2,100,000 முறை (2.1 மில்லியன் முறை) பார்க்கப்படுகின்றது. இதில் பதிவு செய்ய முன்வந்தவர்கள் இருக்கக்கூடும் அல்லவா? நமது விக்கியில் மட்டுமல்ல, ஏறத்தாழ எல்லா விக்கியிலும் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கைக்கும், பங்களிப்பவர்கள் எண்ணிக்கைக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. ஆனால் தொடர்பு உண்டு. பயன்கொள்வோரின் எண்ணிக்கைக்கும் தொடர்பு உண்டு என்று எண்ணுகிறேன். வளர்முக கண்ணோட்டத்துடன் அணுகுவோம். நாம் எல்லோரு விரும்பும் கூடிய பங்களிப்புகள் வரும் :) பொறுமையாக உழைப்போம். பங்களிப்பது என்பது தன்னார்வலராகத்தானே. கட்டாயம் வியப்படையும் அளவுக்கு, போட்டிப்போட்டுக்கொண்டு வருவார்கள். பொறுத்திருப்போம், தொடர்ந்து ஈர்ப்புரை செய்வோம், பரப்புரை செய்வோம் :) நாம் பேசினோமே கோவையில், நினைவிருக்கின்றதா, அவர்கள் எல்லாம் 1000 நெடிய கட்டுரைகள் எழுதியவர்கள், அனைத்தையும் தரும் நல்லுள்ளமும் கொண்டவர்கள். பொறுமையாக பணிசெய்வோம் :) இன்னும் வருவார்கள். விக்சனரிக்கு இப்பொழுது மேலும் 100,000+ சொற்கள் கொண்ட தொகுதிகள் கிடைத்துள்ளதுதானே. அமைதியோடும் மலர்ந்த முகத்தோடும் தொடர்ந்து பணியாற்றுவோம் :) உங்கள் கவலை புரிகின்றது. எத்தனைமுறை தமிழ் விக்கிப்பீடியா பார்க்கப்படுகின்றது என்னும் குறிப்பு இங்கிருந்து பெற்றது.--செல்வா 02:08, 1 ஆகஸ்ட் 2010 (UTC)
புள்ளிவிவரம் பெறப்பட்ட தளத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி செல்வா. ஒரு பக்க / இரு பக்க அளவிலாவது பலதரப்பட்ட தலைப்புகளில் பல்லாயிரம் தகவல் பக்கங்கள் இருந்தால், பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் கூடும்; பார்ப்பவர்கள் பங்களிக்கக் கூடியவர்களாகவும் மாறுவர் என்பது என் கணிப்பு. எனவே, அதைத்தான் நாம் செய்ய எத்தனிக்க வேண்டும். இதைத்தான் மயூரநாதன் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கான திட்ட முன்மொழிவில் கூறியுள்ளார் [[3]]. --பரிதிமதி 02:51, 1 ஆகஸ்ட் 2010 (UTC)
முற்றிலும் உண்மை, பரிதிமதி. அடிப்படை தகவல்களாவது மேலும் பல்லாயிரக்கணக்கான தலைப்புகளில் இருக்க வேண்டும். இக்குறிக்கோளுடன்தான், முதலில் இருந்தே பணியாற்றி வந்திருக்கின்றோம். முன்னர் அரை பக்கம் இருந்தாலும் போதும் (ஒரு பக்கம் எழுதிவிட்டால் பெரிய கட்டுரை!!) என்றிருந்தது. இப்பொழுது 1-2 பக்கக் கட்டுரைகள் நல்ல அளவு. அதாவது 15-30 கிலோ பை'ட் அளவு இருந்தாலே போதும். 100 கிபை இருந்தால் நல்லதுதான் ஆனால் அது தக்க தலைப்புகளில் இருந்தால் பயனுடையதாக இருக்கும். குட்டி நடிகைக்களுக்கெல்லாம் நீண்ட கட்டுரை எழுதி நாம் நேரத்தைச் செலவிடாவிட்டாலும், பிறர் அப்படி எழுதினால் (அதுவும் தரமற்ற, அல்லது தரம் கவலைக்கு இடம் தரும் விதமாக) அதனைத் திருத்தி செப்பம் செய்வது நம் பொறுப்பாகிவிடுகின்றது. இதனால் நேரம் வீணாகின்றது. கட்டுரை எண்ணிக்கையைவிட பயன்படுகின்றனவா என்பதே முக்கியம். மிக நீண்ட கட்டுரைகளை 2-3 ஆக பிரித்தும் எழுதலாம் (எண்ணிக்கைக்காக அல்ல, படிப்பவர்களுக்கு அலுப்புத் தட்டாமலும், படித்து உள்வாங்குவதற்கு ஏற்றதாகவும்மிருக்கும்).--செல்வா 12:58, 1 ஆகஸ்ட் 2010 (UTC)

பதில்கள்![தொகு]

நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்!

முதலில் திங்கள்களின்(மாதங்களின்) பெயர்களைத் தமிழ் ஒலிப்பு முறைக்கேற்றவாறு மாற்றுவதற்கு என் முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலக மொழிகள் அனைத்திலுமே பிற மொழிச் சொல் தன் மொழிக்குள் வரும்பொழுது அதைத் தன் மொழியின் ஒலிப்பு முறைக்கேற்றவாறு மாற்றி ஒலிப்பதுதான் வழக்கமாயிருந்து வருகிறது. ஆனால் தமிழன் மட்டும்தான் உலகின் மற்ற மொழிகளுக்கேற்றவாறெல்லாம் தன் மொழி, அதன் எழுத்துகள், அதன் ஒலிப்பு முறைகள் என எல்லாவற்றையுமே மாற்றிக் கொள்ளுகிறான்! இது ஓர் 'அடிமைச் சிந்தனை' முறை மட்டுமில்லை. உளவியல் ரீதியான ஒரு சிறு சிக்கலும் கூட என்பதைத் தமிழுலகம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அடுத்து, ஏமாற்றம் என்ற தலைப்பிலான என் இடுகைக்குப் பதிலளித்த நண்பர்கள் அனைவருக்கும் அவர்தம் அக்கறைக்கும் நன்றிகள்! விரைவில் அதற்கான என் பதிலைத் தெரிவிக்கிறேன். தாமதத்திற்கு மன்னியுங்கள்!

நட்புடன் உங்கள்--இ.பு.ஞானப்பிரகாசன் 03:56, 1 ஆகஸ்ட் 2010 (UTC)

பதில்! பதில்![தொகு]

அன்பு வணக்கம் நண்பர்களே!

'ஏமாற்றம்' என்ற தலைப்பிலான என் மடலுக்கு நீங்கள் அளித்திருந்த பதில்களைப் படித்தேன். நன்றி!

முதலில் திரு.பால்(Paul) அவர்களே உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் நீங்கள் என் மடலை வழிமொழிந்ததால்தான் ஒலிபெயர்ப்பு பற்றிய திரு.செல்வா அவர்களின் முந்தைய கருத்தாக்கங்களும், திரு.மயூரநாதன் அவர்களின் இத்தகைய அருமையானதொரு விளக்கமும் வெளியாயின.

மயூரநாதன் அவர்களே! உங்கள் விளக்கம் தமிழர் ஒலிப்பு முறையில் இருக்கும் பல சிக்கல்களை அறியச் செய்தது. மேலும் அது தமிழ் ஒலிபெயர்ப்புச் சிக்கல் பற்றிய ஒரு முழுமையான கட்டுரையாக அமைந்திருந்தது. இத்தகைய ஒரு அருமையான கட்டுரையை வழங்கியமைக்கு ஆயிரம் நன்றிகள்!

செல்வா அவர்களே! என் ஏமாற்றம் உங்களுக்கு வருத்தமளிப்பதாகக் கூறியிருந்தீர்கள். அந்தக் கனிவுக்கு நன்றி! நீங்கள் உங்கள் பதிலில் அளித்திருந்த உள்ளிணைப்புகளைச் சொடுக்கி ஒலிபெயர்ப்பு பற்றிய உங்கள் கருத்துகளைப் படித்துப் பார்த்தேன். அவை மிகவும் ஆராய்ச்சிப்பூர்வமாக இருப்பதோடு ஒலிபெயர்ப்புப் பற்றிய என் கொள்கைகளோடு பெரிதும் ஒத்திருக்கின்றன. அதே நேரம் விக்கிப்பீடியா: பொதுவான குறைகள் பகுதியில் நான் எழுதியிருந்த 'அடைப்புக்குறி முறை' ஏற்கனவே விக்கிப்பீடியாவில் கடைப்பிடிக்கப்படுவதுதானே என்று கூறியிருக்கிறீர்கள். உண்மைதான்! ஆனால் எங்கோ ஒரு சில இடங்களில்தான் அவ்வாறு கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் எந்த ஒரு ஒலிபெயர்ப்புச் சொல்லைப் பயன்படுத்துவதாக இருந்தாலும், அஃது ஏற்கனவே விக்கிப்பீடியாவிற்கும் தமிழ் உலகத்திற்கும் பலமுறை அறிமுகமானதாகவே இருந்தாலும் கூட அதன் பக்கத்தில் அடைப்புக் குறிக்குள் அதன் ஆங்கில வடிவம் குறிப்பிடப்பட வேண்டும் என்பதுதான் நான் கூற விழைந்தது.

இதைக் கூட நான் ஏன் கூறினேன் என்றால், ஏற்கனவே நான் அங்கே குறிப்பிட்டிருந்தபடி, பொதுத்தரம் பேணல் பற்றி அவ்வளவு ஆழமாகவும் ஆதாரங்களோடும் அருமையாக விவாதித்திருந்த நீங்கள் அனைவரும் கடைசியில் என்ன முடிவுக்கு வந்தீர்கள் என்பதை அங்கே குறிப்பிடவேயில்லை. ஒருவேளை விவாதம் மிகவும் சூடாகப் போனதால் எந்த முடிவுக்குமே வராமல் அத்துடன் முடித்துக் கொண்டு விட்டீர்களோ என்றெண்ணித்தான் இதற்கு நாமாவது ஒரு பொதுவான தீர்வை முன்வைப்போமே என நினைத்து நான் அதைக் கூறினேன். மற்றபடி வேறொன்றுமில்லை.

மயூரநாதன் அவர்களே! தமிழ் மரபு, கிரந்த எழுத்துப் பயன்பாடு ஆகியவைதான் இன்றைய முதன்மையான சிக்கல்கள் என்று கூறியிருந்தீர்கள். கிரந்த எழுத்துப் பயன்பாடு பற்றிய கருத்து முரண்பாடுகள் முன்பே அனைவரும் அறிந்தவைதாம். ஆனால் அஃதென்ன 'தமிழ் மரபு'ச் சிக்கல்?... சற்று விளக்கமாகக் கூறினீர்களானால் எனக்கு மட்டுமில்லாமல் பலருக்கும் பயன்படும். பணிவன்போடு கேட்கிறேன். கூறுவீர்களா?...

மேலும் கிரந்தப் பயன்பாடு, பிற மொழி ஒலிகளைத் தமிழுக்குக் கொணர்தல் ஆகியவை பற்றி விக்கிப்பீடியா: ஒலிபெயர்ப்புக் கையேடு பக்கத்தின் பேச்சுப் பகுதியில் தொடக்கத்திலேயே அற்புதமாக எழுதியிருக்கிறார் செல்வா. அதற்கு மேல் என்ன எழுதுவது! இருந்தாலும் இவை பற்றியும் தமிழ் ஒலிபெயர்ப்பு முறை பற்றிய எனது வேறு சில கருத்துகளையும் விரைவில் வெளியிட உள்ளேன். விக்கிப்பீடியக் கிளைஞர்களே நீங்கள் அனைவரும் அவற்றையும் படித்துவிட்டு உங்கள் மேலான கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும்! கவலைப்படாதீர்கள்! இந்த முறை பழையது எதையும் கிளறாமல் புதிய, ஆரோக்கியமான விவாதங்களையே தொடக்கி வைக்க முயல்கிறேன். சரிதானே?

உங்கள் அனைவருக்கும் நன்றி! வணக்கம்!

கிளைஞன்--இ.பு.ஞானப்பிரகாசன் 10:58, 2 ஆகஸ்ட் 2010 (UTC)

வெளியிடுங்கள் . உங்கள் கருத்தை அறிய ஆவல். விக்கியில் எந்த துறையில் கட்டுரைகள் எழுத ஆர்வமாக இருக்குறீர்கள் என்பதனையும் அறிய ஆவல். நீங்கள் எந்த துறையில் பணி புரிந்துவருகிரீர்கள். --இராஜ்குமார் 12:22, 2 ஆகஸ்ட் 2010 (UTC)

பதிற்றுப் பத்து- விளக்கம் தேவை[தொகு]

பதிகம் எனும் பகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளில் 2ஆம் பத்துவில் ஒரு பாடலுக்கு விளக்கம், 3ஆம் பத்துவில் ஒரு பாடலுக்கு குறிப்பு, 4ஆம் பத்துவில் சில பாடலுக்கு விளக்கங்கள், 5ஆம் பத்துவில் 9 பாடலுக்கு விளக்கம், 6ஆம் பத்துவில் இரு பாடலுக்கு விளக்கம், 7ஆம் பத்துவில் ஒரு பாடல் குறிப்பு,8 ஆம் பத்துவில் ஒரு பாடல் குறிப்பு, 9ஆம் பத்துவில் ஒரு பாடல் குறிப்பு இடம் பெற்றுள்ளது. இவையெல்லாம் கலைக்களஞ்சியத்துக்குப் பொருத்தமானதா?

இரணடாம் பத்து கட்டுரையில், இரண்டாம் பத்து என்றால் என்ன? என்பதற்கான முன்னுரை, அது குறித்த முழு விளக்கம் போன்றவைகள் இருந்தால் சிறப்பாக இருக்கும். இதைத் தவிர்த்து பாடலுக்கு விளக்கமளிப்பது சரியானதாகத் தோன்றவில்லை. இது போன்ற செயல்பாடுகளை தமிழ் விக்கிப்பீடியா விரும்புகிறதா? எனக்கு நல்ல விளக்கம் தேவை...--தேனி.எம்.சுப்பிரமணி. 11:08, 2 ஆகஸ்ட் 2010 (UTC)

இது குறித்து பொதுவன் அடிகளாரின் பயனர் பேச்சுப் பக்கத்தில் இவற்றை விக்கிமூலத்தில் இடும்படி நற்கீரன் எடுத்துக்கூறியுள்ளார்.--Kanags \உரையாடுக 11:18, 2 ஆகஸ்ட் 2010 (UTC)
  • விக்கிப்பீடியாவிற்குப் பொருந்தாதது என்று தெரிந்தும் இவைகளை அனுமதித்து வருவது சரியா? இவை தொடர்ந்து அனுமதிக்கப்பட்டால் மேலும் பல பாடல்களுக்கான விளக்கங்கள் பதிவு செய்யப்படும் சூழ்நிலை உருவாகும். விரைவான மற்றும் சரியான நடவடிக்கை தேவை.--தேனி.எம்.சுப்பிரமணி. 02:45, 3 ஆகஸ்ட் 2010 (UTC)
சுப்பிரமணி, இது தொடர்பாக நானும் அவருடைய பேச்சுப் பக்கத்தில் பதிந்திருந்தேன். முன்னர் மேலும் விபரமாகப் பதிந்திருந்த பகுதிகளை நீக்கியும் இருக்கிறேன். ஆனால் அவர் தனது பேச்சுப் பக்கத்தில் இடப்படும் தகவல்களைப் பார்க்கிறாரா என்று தெரியவில்லை. செங்கை பொதுவன் நல்ல பட்டறிவு கொண்டவர் என்று தெரிகிறது. அவருக்கு விக்கிப்பீடியாபற்றி எடுத்துரைத்துப் புரிய வைத்தால் விக்கிப்பீடியாவுக்கும் பயனுடையதாக இருக்கும். யாராவது அவரை நேரடியாகவோ, தொலைபேசி மூலமோ தொடர்பு கொள்ள முடிந்தால் நல்லது. முன்னரும் யாரோ ஒரு பயனர் விடயத்தில் இவ்வாறு செய்ததாக ஞாபகம். -- மயூரநாதன் 18:43, 3 ஆகஸ்ட் 2010 (UTC)

மலையாளம், தமிழ், இந்தி விக்கிப்பீடியாக்களின் இன்றைய நிலை[தொகு]

மலையாளம், தமிழ், இந்தி விக்கிப்பீடியாக்களின் இன்றைய நிலை

--Natkeeran 18:26, 2 ஆகஸ்ட் 2010 (UTC)

நக்கீரன், மலையாளம் விக்கிப்பீடியாவினர் தரத்தைப் பேணுவதில் கடுமையாக உழைக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால், கட்டுரைகளின் "ஆழம்" தொடர்பான புள்ளிவிபரம் ஒரு நம்பத்தகுந்த தர அளவீடு அல்ல. இது பற்றிப் பின்னர் நான் விபரமாக எழுதுகிறேன். --மயூரநாதன் 18:34, 3 ஆகஸ்ட் 2010 (UTC)

Cross-border Protests Aim to Save Cantonese[தொகு]