பரதுர்க்கமர்த்தனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரதுர்க்கமர்த்தனன் (பொ.பி. 615-645) என்பவன் கொடும்பாளூர் நகரை பாண்டிய பல்லவர் காலத்தில் அரசாண்ட இருக்குவேள் அரசர்கள் வம்சத்துள் ஒருவன். இந்த இருக்குவேள் அரசர்கள் பற்றிய மூவர் கோவில் சாசனம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் இவனது பெயர் ஏழாவதாக உள்ளது.[1] இவனுக்கு வாதாபிஜித் என்ற பெயர் உள்ளதால் இவன் முதலாம் நரசிம்ம பல்லவன் காலத்தில் வாதாபி நகரை வெல்ல உதவினான் என்று தெரிகிறது. இவன்து சிறப்புப் பெயரையும், முதலாம் நரசிம்ம பல்லவன் காலத்தையும், களப்பிரர் காலத்தையும், மூவர் கோவில் சாசனத்தையும் கொண்டே ஆரோக்கியசாமி என்பவர் இருக்குவேள் அரசர்கள் பட்டியலை[2] வெளியிட்டார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Annual Report Epigraphy, Madras, 1907-1908
  2. M. Arokiaswamy, The Early History of the Vellar Basin, 1954, p.61
  3. களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்), நாம் தமிழர் பதிப்பகம், மயிலை சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரதுர்க்கமர்த்தனன்&oldid=2488165" இலிருந்து மீள்விக்கப்பட்டது