அசோக் லேலண்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசோக் லேலண்ட் லிமிடெட்
வகைபொதுப் பங்கு நிறுவனம்
நிறுவுகை7 செப்டம்பர் 1948; 75 ஆண்டுகள் முன்னர் (1948-09-07)
தலைமையகம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
சேவை வழங்கும் பகுதிஉலகம் முழுவதும்
தொழில்துறைதானுந்துத் தொழிற்றுறை
உற்பத்திகள்
சேவைகள்வாகன கடன் வசதி
வருமானம் 41,783 கோடி (US$5.2 பில்லியன்) (2023)[1]
இயக்க வருமானம் 2,268 கோடி (US$280 மில்லியன்) (2023)[1]
நிகர வருமானம் 1,361 கோடி (US$170 மில்லியன்) (2023)[1]
மொத்தச் சொத்துகள் 54,728 கோடி (US$6.9 பில்லியன்) (2023)[1]
மொத்த பங்குத்தொகை 10,798 கோடி (US$1.4 பில்லியன்) (2023)[1]
பணியாளர்11,463 (2020)[1]
தாய் நிறுவனம்இந்துஜா குழுமம் 51.54%
துணை நிறுவனங்கள்
  • அல்போநார்
  • குளோபல் டிவிஎஸ் பஸ் பாடி பில்டர்ஸ் லிமிடெட்
  • இந்துஜா லேலண்ட் பைனான்ஸ்
  • இந்துஜா டெக்
  • இலங்கா அசோக் லேலண்ட்[2]
    ஸ்விட்ச் மொபிலிட்டி

அசோக் லேலண்ட் (Ashok Leyland) என்பது சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய பன்னாட்டு வாகன உற்பத்தி நிறுவனமாகும். இது இப்போது இந்துஜா குழுமத்திற்குச் சொந்தமாக உள்ளது.[3] 1948 இல் பிரிட்டிஷ் லேலண்ட்[4] என நிறுவப்பட்ட இந்நிறுவனம், சுமையுந்து மற்றும் பேருந்துகள் , நோயாளர் ஊர்தி மற்றும் ராணுவ வாகனங்களைத் தயாரிப்பதில் இந்தியாவின் முன்னோடி நிறுவனமாகத் திகழ்கின்றது. ஆறு தொழிற்பகுதிகளைக் கொண்ட அசோக் லேலண்ட், தொழிற்சாலைகளுக்கு தேவையான இயந்திரங்கள் தயாரிப்பதுடன் கப்பல் போக்குவரத்துக்கான இயந்திரங்களையும் தயாரிக்கின்றது. இந்த நிறுவனம் ஒரு வருடத்திற்கு 60,000 வாகனங்கள் மற்றும் 7000 இயந்திரங்களையும் விற்பனை செய்கின்றது. விற்பனை சந்தையில் 28% (2007-08) விற்பனை விகிதத்தை அடைந்த, இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் தயாரிப்பில் இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனமாகும்.[5] பயணிகள் போக்குவரத்தில் 19 முதல் 80 வரையிலான பயணிகள் வரை பயணம் செய்யக்கூடிய பேருந்துகளை தயாரிப்பதில் அசோக் லேலண்ட் முன்னணி நிறுவனமாக திகழ்கின்றது. இந்தியா முழுவதும் இந்நிறுவனம் தயாரித்த பேருந்துகள் நாளொன்றிற்கு 6 கோடி மக்களை சுமந்து செல்கிறது. இது மொத்த இந்திய ரயில்வே கட்டமைப்பில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையைவிட அதிகமாகும். அசோக் லேலண்ட் நிறுவனம் சரக்கு போக்குவரத்து துறையில், ஆரம்பத்தில் 16 டன் எடை முதல் 25 டன் வரை கொண்டுசெல்லும் சுமையுந்து வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது.[6] [7]

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் இயக்கும் அசோக் லேலண்ட் பேருந்துகள்.
ஈராக் ராணுவத்தில் அசோக் லேலண்ட் வாகனங்கள்
இந்தியாவின் தீயணைப்புத்துறையில் அசோக் லேலண்ட் தயாரித்த வண்டி

சென்னையைத் தலைமையகமாகக் கொண்ட இதன் உற்பத்தி வசதிகள் எண்ணூர், பண்டாரா, ஓசூர் (இரண்டு ), அல்வார் மற்றும் பந்த்நகர் ஆகிய இடங்களிலும் உள்ளன.[8][9] அசோக் லேலண்ட், இங்கிலாந்தின் லீட்சு , மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் கீழ் உள்ள ரஃஸ் அல்-கைமா நகரத்தில் ஒரு பேருந்து உற்பத்தி வசதியுடன் வெளிநாட்டு உற்பத்தி அலகுகளையும் கொண்டுள்ளது. மேலும் வாகன மற்றும் தொலைத்தொடர்பு துறைகளுக்கான உயர் அழுத்த அதிக அழுத்த அச்சு அலுமினிய பாகங்களை உற்பத்தி செய்வதற்காக ஆல்டியம்ஸ் குழுமத்துடன் கூட்டு முயற்சி மேற்கொண்டுள்ளது. ஒன்பது ஆலைகளை இயக்கும் அசோக் லேலண்ட், தொழில்துறை மற்றும் கடல் பயன்பாடுகளுக்கான உதிரி பாகங்கள் மற்றும் இயந்திரங்களையும் தயாரிக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Ashok Leyland Ltd. Financial Statements" (PDF). bseindia.com.
  2. "Lanka Ashok Leyland". Lanka Ashok Leyland.
  3. "Who are the Hinduja brothers". The Mirror. 7 May 2017. https://www.mirror.co.uk/news/world-news/who-sri-gopi-hinduja-brothers-10372393. 
  4. "Ashok Leyland > Company History > Auto - LCVs & HCVs > Company History of Ashok Leyland - BSE: 500477, NSE: Ashokley". www.moneycontrol.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-14.
  5. "How Ashok Leyland became world's third largest bus manufacturer". The Financial Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-02-04. பார்க்கப்பட்ட நாள் 2020-10-15.
  6. http://www.thehindubusinessline.com/companies/article3480448.ece
  7. "How Ashok Leyland became world's third largest bus manufacturer". The Financial Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-02-04. பார்க்கப்பட்ட நாள் 2020-10-15.
  8. "Ashok Leyland Ltd India, Map of Ashok Leyland Motor Plants". business.mapsofindia.com. பார்க்கப்பட்ட நாள் 2020-10-15.
  9. "Ashok Leyland Pantnagar | Perkins". perkins.com. பார்க்கப்பட்ட நாள் 2020-10-15.


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோக்_லேலண்ட்&oldid=3936481" இலிருந்து மீள்விக்கப்பட்டது