கரீபியக் கடற்கொள்ளையர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரீபியக் கடற்கொள்ளையர்கள்
இயக்கம்கோர் வெர்பின்ஷ்கி (1-3)
ராப் மார்ஷல் (4)
தயாரிப்புஜெர்ரி பருகெமியர்
கதைடெர்ரி ரோசியோ
டெட் எல்லியோட்
ஸ்டுஅர்ட் பியட்டி (1)
ஜே வோல்பர்ட் (1)
ஆக்கச்செலவுமொத்தம் (3 படம்):
865,000,000
மொத்த வருவாய்மொத்தம் (3 படம்):
$2,681,440,232

கரீபியக் கடற்கொள்ளையர்கள் (Pirates of the Caribbean பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன்) என்ற பெயர் வால்ட் டிஸ்னிக்கு சொந்தமான திரைப்படங்கள், வீடியோ விளையாட்டுகள் மற்றும் தீம் பார்க்கு ஆகிய மூன்றையும் குறிக்கும். முதலில் ”தீம் பார்க்” எனப்படும் கேளிக்கை நிகழ்ச்சியாக தொடங்கிய கரிபியன் கடற்கொள்ளையர்கள், பின் ஜானி டெப்பு நடிப்பில் திரைப்படங்களாக எடுக்கப் பட்டன. இது வரை நான்கு கரிபியன் கடற்கொள்ளையர்கள் படங்கள் வெளி வந்துள்ளன. ஐந்தாவது படம் 2017 இல் பைரட்ஸ் ஒப் கரிபியன்:டேட் மன் நோ டேல்ஸ்[pirates of caribbean:dead man tell no tales]என வெளியிடப்பட்டு மாபெரும் சாதனைகளை புரிந்தது. இப்படங்களின் வெற்றிக்குப் பின்னர், அவற்றின் கதாபாத்திரங்களைக் கொண்ட நிகழ்பட விளையாட்டுகளும் வெளியாகின.

திரைப்படத் தொடர்கள்[தொகு]

பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் - த கர்ஸ் ஆப் பிளாக் பேர்ள் (2003)[தொகு]

பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் - த கர்ஸ் ஆப் ப்ளாக் பியல் (தமிழில் கரீபியக் கடற்கொள்ளையர்கள் 1 -பிளாக் பியலின் சாபம்), 2003 ஆம் ஆண்டு வெளியான இந்த சாகச-கற்பனை திரைப்படம் கரீபியக் கடற்கொள்ளையர்கள் திரைப்பட வரிசையில் வெளியான முதல் திரைப்படம் ஆகும்.இது கோர் வெர்பின்ஷ்கியால் இயக்கப்பட்டு மற்றும் ஜெர்ரி பருகெமியரால் தயாரிக்கப்பட்டது.

இந்த கதையில் வில்டர்னர் (ஆர்லாந்தோ புளூம்) மற்றும் கடற்கொள்ளையன் கேப்டன் ஜாக் ஸ்பேரோ (ஜானி டெப்) ஆகியோர் இணைந்து கடத்தப்பட்ட எலிசபெத் ஸ்வான் (கீரா நைட்லி) இங்கிலாந்து கவர்னர் மகளை பிளாக் பெர்ல் கப்பலின் கேப்டன் ஹெக்டர் பர்போசா (ஜியோஃப்ரே ரஷ்) விடம் இருந்து மீட்பதை காட்டுகின்றது. அதன் வெளியீட்டிற்கு முன்பு, பல கடற்கொள்ளை வடிவத்தின் படங்கள் பல ஆண்டுகளுக்கு வெற்றிபெறவில்லை, எனவே இந்த படம் தோல்வியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது.

பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் - டெட் மேன்ஸ் செஸ்ட் (2006)[தொகு]

கிழக்கு இந்திய கம்பனியின் தளபதியான கட்லேர் பெக்கெட் பிரபு கடற்கொள்ளையன் கேப்டன் ஜாக் ஸ்பெரோவுக்கு உதவியதற்காக வில்டர்னர் (ஆர்லாந்தோ புளூம்) மற்றும் அவனது காதலி எலிசபெத் ஸ்வான்(கீரா நைட்லி) ஆகியோரை கைது செய்கிறான் . எலிசபெத்தை விடுதலை செய்ய கேப்டன் ஜாக் ஸ்பெரோவிடம் உள்ள திசைமானியை கைப்பற்றி வருமாறு தளபதியான பெக்கெட் பிரபு , வில்டர்னெர் ஸ்மித்திடம் ஒப்பந்தம் செய்கிறான் . அந்த திசைமானியின் உதவியோடு டேவி ஜோன்ஸ் இதயம் இருக்கும் பெட்டகத்தின் இருப்பிடத்தை கைப்பற்றி அதை கொண்டு கடலை தன் கட்டுபாட்டில் கொண்டுவருவது பெக்கெட் பிரபுவின் திட்டம் .

கடலுக்கு அடியில் பெக்கெட் பிரபுவால் மூல்கடிக்கப்பட்ட ப்ளாக் பெர்ல் கப்பலை டேவி ஜோன்ஸ் மீட்டு தந்தற்காக ஜாக், ஜோன்சின் ப்லயிங் டச்மேன் கப்பலில் 100 வருடம் அடிமையாக இருக்கவேண்டும். இந்த கடனில் இருந்து தப்பிக்க ஜாக் ஜோன்சின் இதயத்தை தேடுகிறான். இதயத்தை கண்டுபிடிப்பது , வில் தன் தந்தையை ப்லயிங் டச்மேனில் அடிமையாக சந்திப்பது, கிராகன் என்ற கடல் மிருகத்தை எதிர் கொள்வது, இறுதியில் ஜாக் கிராகனால் டேவி ஜோன்சின் பெட்டகத்துக்குள் ஆடை அடைபடுவது என பல திருப்புமுனைகளை கொண்ட படமாக இது அமைந்தது. $225 மில்லியன் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் $1,066,179,725 வசூலை வாரிக்குவித்தது.

பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் - அட் வோல்ட்ஸ் எண்ட் (2007)[தொகு]

பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் - ஆன் ஸ்டென்ஜர் டைட்ஸ் (2011)[தொகு]

பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் - டெட் மேன் டெல் நோ டேல்ஸ் (2016)[தொகு]

முக்கிய நடிகர்கள்[தொகு]

  • கேப்டன் ஜாக் ஸ்பெரோ( ஜானி டெப்ப் )
  • வில்டர்னெர் (ஒர்லாண்டோ ப்லூம்)
  • எலிசபெத் ஸ்வான் (கீரா நைட்லி)
  • ஜேம்ஸ் நாரிங்க்டன் (ஜாக் டேவன்போர்ட்)
  • பூட்ஸ்ட்ராப் வில்டர்னெர் (ஸ்டேலன்)
  • டேவி ஜோன்ஸ் (பில் நிக்ஹி)
  • ஜோஷம்மீ கிப்ஸ்( கெவின் ஆர். மேக்நாலி)
  • கவர்னர் சுவான்(ஜோனாதன் பிரசி)
  • கேப்டன் ஹெச்டோர் பர்போசா (ஜோப்ரே ரஷ்)
  • அஞ்சலிக்கா (பென்லொப் கிருஷ்)