விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2010

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டிசம்பர் 26, 2010 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

இயேசுப் பல்லி (Jesus Christ Lizard) என்னும் பல்லி இனம், நடு அமெரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும் இருக்கிறது. அங்குள்ள மழைக்காடுகளின் ஆறுகள், ஓடைகள் ஆகிய நீர்நிலைகளின் அருகில் காணப்படுகிறது. இந்த உயிரினம் நீரில் நடக்கும் திறனுடையதால், இயேசுப் பல்லி எனப் பலரால் அழைக்கப்படுகிறது. கிரேக்கத் தொன்மவியலின் படி, இவ்விலங்கு சேவல், பாம்பு, சிங்கம் ஆகிய விலங்குகளின் உடற்பகுதிகளால் ஒன்றிணைந்து உருவானதாகவும், இது பாம்புகளின் அரசன் என்றும் உற்றுநோக்கும் போது, மனிதன் கல்லாகி விடுவான் என்று கூறப்படுகிறது. படத்தில் உள்ளது கொஸ்டா ரிக்காவில் காணப்படும் ஒரு பெண் பல்லி.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



டிசம்பர் 19, 2010 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

கிறித்துமசு அல்லது நத்தார் ஆண்டு தோறும் நாசரேத்து இயேசுவின் பிறப்பைக் குறிக்கும் முகமாக கொண்டாடப்படுகிறது. கிறிஸ்து பிறப்புவிழா கொண்டாட்டங்களில் ஆலய வழிபாடு, இயேசுவின் பிறப்பை சித்தரிக்கும் சிறிய பொம்மைகளால் செய்யப்பட்ட மாட்டுத்தொழுவ காட்சிகள், சண்ட குலோஸ், வாழ்த்து அட்டை மற்றும் பரிசுப் பரிமாறல், கிறித்துமசு மரத்தை அழகூட்டல், கிறித்துவ களிப்பாடல், சிறப்பு விருந்து என்பன பொதுவாக அடங்கும். படத்தில் மடோன்னாவும் குழந்தையும் (1459), பிலிப்போ லிப்பி என்ற இத்தாலிய ஓவியர் வரைந்தது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



டிசம்பர் 12, 2010 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

பளிங்கு அரண்மனை லண்டனில் 1851 இல் இடம்பெற்ற மாபெரும் பன்னாட்டுக் கண்காட்சிக்காகக் கட்டப்பட்ட ஒரு மாளிகை. இது தூய இரும்பினால் ஆக்கப்பட்ட கண்ணாடி அரண்மனை. உலகெங்கும் இருந்து 14,000 க்கு மேற்பட்டோர் இம்மாளிகையின் 990,000 சதுர மீட்டர் கண்காட்சிக்கூடத்தில் தமது காட்சிப் பொருட்களை வைத்திருந்தனர். 564 மீ நீளமும் 34 மீ உயரமும், 124 மீ உள்ளுயரமும் கொண்டது. பளிங்கு அரண்மனையின் கட்டுமானப் பணிக்கென ஏறத்தாழ 5,000 தொழிலாளர்கள் (ஒரே நேரத்தில் 2,000 பேர்) பங்கு பெற்றிருந்தனர். 900,000 சதுர அடி கண்ணாடி பயன்படுத்தப்பட்டது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



டிசம்பர் 5, 2010 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

தாமரைக் கோயில் இந்தியாவில் தில்லியில் உள்ள பஹாய் வழிபாட்டுத்தலம் ஆகும். அதன் தாமரை மலர் போன்ற வடிவத்தின் காரணமாக தாமரைக் கோயில் என அறியப்படுகிறது. பஹாய் வழிபாட்டுத்தலம் தில்லியின் வசீகரமான இடமாக உள்ளது. 1986 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இது இந்தியத் துணைக்கண்டத்தின் தாய்க் கோயிலாகக் கருதப்படுகிறது. இது எண்ணற்ற கட்டிடக்கலை விருதுகளை வென்றுள்ளது. ஏனைய பிற பஹாய் வழிபாட்டுத்தலங்களைப் போன்றே தாமரைக் கோயிலானது மதத்தைப் பொருட்படுத்தாத அல்லது பஹாய் புனித நூல்களில் வலியுறுத்தப்பட்டிருக்கும் மற்ற தனித்துவங்கள் கொண்ட அனைவருக்குமான கோயிலாக இருக்கிறது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



நவம்பர் 28, 2010 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

ரூத்து என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறும் நூல்களில் ஒன்றாகும். இந்நூலின் நடை ஒரு புனைவுரை போல் அமைந்துள்ளது. இரண்டு கைம்பெண்கள். ஒருவர் வயதான நகோமி; மற்றவர் இளம் பருவத்தினரான ரூத்து. இருள், சாவு, அழிவு அனைத்தும் சேர்ந்து இவர்களது வாழ்க்கையில் புகுந்து கடவுளின் திட்டத்தையே சீர்குலைக்க முயல்கின்றன. ஆனால் இறைவன் இத்தீமைகளையெல்லாம் முறியடித்துத் தம் திட்டத்தை நிறைவேற்றுவதை "ரூத்து" என்னும் இத்திருநூல் அழகுற எடுத்துக் காட்டுகிறது. 1530/40 களில் வரையப்பட்ட ”போவாசின் வயலில் நகோமியும் ரூத்தும்” என்ற இப்படிமம் வியென்னா கலைக்கூடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



நவம்பர் 21, 2010 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

சிறிய நீர்க்காகம் கரண்டம், அர்க்கம் எனவும் அழைக்கப்படுகிறது. இப்பறவை தெற்காசியாவில் இனப்பெருக்கம் செய்கின்றது; தெற்கு பாகித்தானில் தொடங்கி இந்தியா, இலங்கை வழியே கிழக்கு இந்தோனேசியா வரை இதன் இனப்பெருக்க வாழ்விடங்கள் அமைந்துள்ளன. செவ்வக வடிவத்தலை, பழுப்பு நிற சிறிய அலகு கொண்ட இவை ஏறக்குறைய 53 செ.மீ நீளமுடையது. உடல் முழுவதும் கருப்பாக, ஒருவித பச்சை நிற மினுமினுப்புடன் காணப்படும். தொண்டைப்பை பகுதியைச் சுற்றி வெண்ணிறத் திட்டு இருக்கும். இனப்பெருக்க காலத்தில் இவ்வெண்ணிறத் திட்டு மறைந்து விடும். கருவிழித்திரை பச்சை கலந்த பழுப்பு நிறத்திலிருக்கும். அலகின் கீழே தொண்டைப் பை இருக்கும்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



நவம்பர் 14, 2010 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

அல் அக்சா பள்ளிவாசல் யெருசலேமிலுள்ள மிகப்பெரிய பள்ளிவாசலாகும். முசுலிம்களின் மரபுப்படி முகமது நபி மலை 621 இலிருந்து சுவர்க்கம் சென்றதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, இந்த பள்ளிவாசல் முஸ்லிம்களின் மூன்றாவது புனிதமான பள்ளிவாசலாகக் கருதப்படுகிறது. கிபி 710 இல் மரத்தாலான முதலாவது அல் அக்சா பள்ளிவாசல் கட்டப்பட்டது. இது குறைந்தது 5 தடவையாவது மீளக்கட்டப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால் முற்றாக அழிந்துள்ளது. கடைசியாக, பெரிய மீளமைப்பு 1035 இல் நடைபெற்றது. இம் பள்ளிவாசலின் சுற்றுமதிலின் ஒருபகுதியான மேற்குச் சுவர் யூதர்களின் வணக்கத்துக்குரியதாக இருப்பதால், யெருசலத்தின் ஒரு சிறிய பகுதியான இது முசுலிம்கள், யூதர்களுக்கிடையேயான முறுகல் நிலைக்குக் காரணமாகக் கூடியது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



நவம்பர் 7, 2010 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

டூக்கான் அல்லது பேரலகுப் பறவை (ramphastidae) என்பது வெப்ப மண்டல அமெரிக்காவில் வசிக்கும் பறவைகளைக் கொண்ட ஒரு குடும்பமாகும். இப்பறவைக் குடும்பத்தின் பறவைகள் கண்ணைக் கவரும் அழகிய நிறங்களைக் கொண்ட மிகப்பெரிய அலகுடன் இருக்கும். இக்குடும்பம் 5 பேரினங்களும் 40 இனங்களும் கொண்டது. இதன் கால்கள் குட்டையாகவும் வலிமை உடையதாகவும் இருக்கும். இப்பறவையின் நாக்கு குறுகிய அகலம் உடையதாகவும் நீளமாகவும் இருக்கும். ஆண்பறவையும் பெண் பறவையும் ஒரே நிறம் கொண்டதாக இருக்கும். மரக்கிளைகளிலும், மரப்பொந்துகளிலும் கூடுகட்டி வாழ்கின்றன.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



அக்டோபர் 31, 2010 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

மலேசியா, கோலாலம்பூரிலுள்ள பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்கள் உலகின் அதி உயரமான இரட்டைக் கோபுரங்கள் ஆகும். அத்துடன் 20 ஆம் நூற்றாண்டின் அதியுயர்ந்த கட்டிடமாகப் பதிவு பெற்றிருப்பதும் இதுவேயாகும். இது சீசர் பெல்லி என்னும் கட்டடக்கலைஞரால் 1998ல் வடிவமைக்கப்பட்டது. பெரும்பாலும் துருப்பிடியா உருக்கையும், கண்ணாடியையும் உபயோகித்துக் கட்டப்பட்ட 88 மாடிகளைக்கொண்ட இக்கட்டிடம், மலேசியாவின் பெரும்பான்மை முஸ்லிம் மக்களின் பண்பாட்டைப் பிரதிபலிக்கக் கூடியதாக, இசுலாமியக் கலையில் காணப்படும் வடிவங்களுடன் ஒத்திருக்கும் வகையில் அமைந்துள்ளது. பெட்ரோனாஸ் கோபுரம், 1242 அடி உயரத்தில் அமைந்துள்ள அமைப்புரீதியான உச்சியைக் கொண்டிருப்பதுடன், உச்சியிலமைந்துள்ள கூரிய அமைப்புக்கள் 1483 அடியைத் தொடுகின்றன.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



அக்டோபர் 24, 2010 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

மலைச் சொற்பொழிவு மத்தேயு நற்செய்தி 5-7 இன் படி நாசரேத்தூர் இயேசுவினால் (கிபி 30 இல்) இன்றைய வடக்குஇசுரேலின் மலைப்பாங்கான பகுதியில் தமது சீடருக்கும் அங்கிருந்த பொதுமக்களுக்கும் கொடுக்கப்பட்ட ஒரு பிரசங்கமாகும். இப்பிரசங்கத்தின் ஆரம்பம் ஆசீர்வாதங்களைக் கொண்டுள்ளது, மேலும் இது கிறிஸ்து கற்பித்த செபத்தையும்,அகிம்சை, "அடுத்த கன்னத்தையும் காட்டு" போன்ற இயேசுவின் முக்கிய படிப்பினைகளையும் கொண்டுள்ளது. பல கிறித்தவர்கள் மலைப்பிரசங்கத்தைப் பத்துக்கட்டளைகளிற்கான இயேசுவின் விளக்கமெனக் கருதுகின்றனர். படத்தில் உள்ளது மலைச்சொற்பொழிவை விளக்கி 1890 இல் கால் என்ரிக் புலொக் வரைந்த ஓவியம்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



அக்டோபர் 17, 2010 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

படத்தில் உள்ளது சாரசு கொக்கு (Grus antigone), இவை இந்தியாவின் நடுப்பகுதியிலும், கங்கையாற்றுப் படுகையிலும் வட பாக்கித்தான், நேபாளம், தென்கிழக்கு ஆசியா, ஆத்திரேலியா ஆகிய பகுதிகளிலும் காணப்படுகின்றன. இவை 6 அடி உயரம் வரை வளரும். நன்கு வளர்ந்த சாரசு கொக்குகள், சிவப்பு நிறத்தலையையும் வெளுத்த உச்சந்தலையையும் கொண்டு இருக்கும். அலகுகள் கறுத்தவை. இறக்கையின் நுனிப்பகுதி கருப்பாகவும் உடல் வெண்சாம்பல் நிறத்திலும் இருக்கும். ஏனைய கொக்குகளைப் போல் இவை நெடுந்தொலைவு வலசை போவதில்லை. இரண்டு முதல் ஐந்து கொக்குகள் வரை கொண்ட சிறிய குழுக்களாக வாழ்கின்றன. சாரசுகள் பூச்சிகள், நீர்த்தாவரங்கள் முதலானவற்றை உணவாகக் கொள்கின்றன. தரையிலேயே கூடு கட்டும். ஆண், பெண் இருபறவைகளுமே முட்டைகளை அடைகாக்கும். இப்பறவைகள் வாழ்நாள் முழுவதும் ஒரே இணையுடனே வாழ்கின்றன.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



அக்டோபர் 10, 2010 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

படத்தில் உள்ளது சிவிங்கிப்புலிக் குட்டி ஒன்றின் நெருங்கிய தோற்றம். சிவிங்கிப்புலி இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் உடல் முழுவதும் வட்டவடிவ கருப்புப் புள்ளிகள் காணப்படும். அதன் கீழ்வயிற்றுப்பகுதியில் புள்ளிகள் எதுவும் காணப்படாமல் வெள்ளை நிறத்தில் இருக்கும். சிவிங்கிப்புலி குட்டிகள் பிறக்கும் போது வெறும் 150 முதல் 300 கிராம் எடையுள்ளனவாகவே உள்ளன. குட்டிகள் கழுகுகள், ஓநாய்கள் மற்றும் சிங்கங்களால் உயிரிழப்புக்கு உள்ளாகின்றன. சிவிங்கிப்புலிகள் ஆப்பிரிக்காவில் தோன்றி இந்தியாவில் பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது. சிவிங்கிப்புலி இப்போது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் அற்றுப்போய்விட்டது. மேலும் ஆப்பிரிக்க கண்டத்தில் அழிந்துவரும் உயிரினமாக வகைப்படுத்தப்பட்டு வேட்டையாடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



அக்டோபர் 3, 2010 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
[[Image:|385px|{{{texttitle}}}]]

இரண்டாம் நிக்கலாசு (1868 - 1918) இரசியப் பேரரசின் கடைசி மன்னன். இவன் 1894 முதல் 1917 இல் பதவியில் இருந்து அகற்றப்படும் வரையில் இரசியாவின் மன்னனாக இருந்தான். முதலாம் உலகப் போரில் இரசிய இராணுவத்தைக் கொண்டு நடத்தியவன். ஆனாலும் நாட்டில் இடம்பெற்ற அரசியல் மாற்றங்களால் அவனுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இவனது ஆட்சி இரசியப் புரட்சியை அடுத்து முடிவுக்கு வந்தது. இவனும் இவனது குடும்பமும் கைது செய்யப்பட்டனர். 1918 சூலை 16-17களில் நிக்கலாசு, மனைவி, மற்றும் ஐந்து பிள்ளைகள், ஒல்கா (பி. 1895), தத்தியானா (பி. 1897), மரீயா (பி. 1899), அனஸ்தாசியா (பி. 1901), அலெக்சி (பி. 1904) உட்பட முழுக் குடும்பமும் போல்செவிக்குகளால் கொல்லப்பட்டனர். இரண்டாம் நிக்கலாசின் எச்சங்கள் 1991 இல் கண்டுபிடிக்கப்பட்டு, அரச மரியாதைகளுடன் 1998 இல் சென் பீட்டர்சுபேர்க்கில் அடக்கம் செய்யப்பட்டது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



செப்டம்பர் 26, 2010 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

டார்வினின் தவளை அர்ஜென்டினா மற்றும் சிலி காடுகளின் நீரோடைகளைத் தாயகமாகக் கொண்ட ஒரு சிறிய வகைத் தவளை. சார்ல்ஸ் டார்வின் இத்தவளையைக் கண்டறிந்தார். பெண் தவளை இடும் முட்டைகளை ஆண் தவளை பாதுகாப்பாகக் கவனித்துக் கொள்ளும். தலைப்பிரட்டைகள் பொரிந்து வந்ததும் அவற்றைத் தன் நாக்கினால் எடுத்து தன் குரல் பையில் போட்டுக் கொள்ளும். தலைப்பிரட்டைகளின் உருமாற்ற வளர்ச்சி தந்தையின் குரல்பையில் தொடர்ந்து நடைபெறும். அவை சுமார் 1 செ.மீ அளவு பெரிதாக வளர்ந்ததும் தந்தையின் குரல் பையை விட்டு வெளியேறும்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



செப்டம்பர் 19, 2010 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

அருச்சுனன் தபசு எனப் பொதுவாக அழைக்கப்படும் பெரிய புடைப்புச் சிற்பத் தொகுதி மாமல்லபுரத்தில் தலசயனப் பெருமாள் கோயிலுக்கு பின்புறத்தில் அமைந்துள்ள பெரிய பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. முப்பது மீட்டர் வரை உயரம் கொண்ட இப் பாறை இயற்கையிலேயே நடுவில் பிளவு பட்டிருப்பது போன்ற தோற்றத்துடன் காணப்படுகின்றது. இதை ஒரு குறைபாடாக எடுத்துக்கொள்ளாது, இப்பிளவையும் சிற்பத் தொகுதியின் கருத்துருவுக்கு அமையத் திறமையாகச் சிற்பி பயன்படுத்திக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



செப்டம்பர் 12, 2010 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

சங்கிலித்தோப்பு இலங்கையின் வடபகுதியில் அமைந்திருந்த யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னனான சங்கிலியனின் மாளிகை அமைந்திருந்த இடம். யாழ்ப்பாண நகரில் இருந்து இரண்டு மைல் தொலைவில் நல்லூரில் அமைந்துள்ளது. தற்காலத்தில் பல்வேறு பயன்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுவிட்ட இந் நிலப் பகுதியின் வரலாற்று முக்கியத்துவத்துக்கான குறியீடுகளாக இருப்பவை, சங்கிலித்தோப்பு வளைவு எனக் குறிப்பிடப்படுகின்ற கட்டிடமொன்றின் வாயில் வளைவும், யமுனா ஏரி எனப்படும் பகர வடிவக் கேணியொன்றும் ஆகும்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



செப்டம்பர் 5, 2010 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

குளிர்கால அரண்மனை இரசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் 1755 - 1762 காலப்பகுதியில் இரசிய மன்னர்கள் குளிர்காலங்களில் தங்குவதற்காகக் கட்டப்பட்டது. 1837, டிசம்பர் 1 இல் இடம்பெற்ற பெரும் தீ விபத்தில் இவ்வரண்மனையின் பெரும் பகுதி சேதமடைந்தது. பின்னர் முதலாம் நிக்கலாசு மன்னனால் மீள அமைக்கப்பட்டது. 1917 இல் இடம்பெற்ற பெப்ரவரிப் புரட்சியை அடுத்து இங்கு இடைக்கால அரசாங்கம் இயங்கி வந்தது. அக்டோபர் புரட்சியின் போது கம்யூனிஸ்ட்களால் கைப்பற்றப்பட்டு, எர்மித்தாஷ் அருங்காட்சியகத்துடன் இணைக்கப்பட்டு, அதன் 1,057 அறைகளும் பொது மக்களின் பார்வைக்கெனத் திறந்து விடப்பட்டது. ..


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஆகத்து 29, 2010 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

இரோசிமா சமாதான நினைவகத்தின் அகல் பரப்புத் தொடர் காட்சி. இது சப்பானின் இரோசிமா நகரில் உள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது 1945, ஆகத்து 6 இல் ஐக்கிய அமெரிக்கா இந்த நகரத்தின் மீது சின்னப் பையன் எனப் பெயரிடப்பட்ட முதலாவது அணுகுண்டைப் போட்டது. 70,000 பேர் இதன் போது கொல்லப்பட்டனர். இதன் அவலங்களை நினைவுகூரும்வகையில் கட்டப்பட்டதே இந்த நினைவகம். இது 1996 ல் நிறுவப்பட்டது..


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஆகத்து 22, 2010 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

ரிப்பன் கட்டிடம் சென்னை மாநகராட்சியின் தலைமை இடம் ஆகும். இந்த கட்டிடம் 1913 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இது கோதிக், அயனிய, மற்றும் கொறிந்திய ஆகிய மூன்று முக்கிய கட்டிடக் கலை ஒழுங்கு முறைகளில் கட்டப்பட்ட கட்டிடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இக்கட்டிடத்தைத் தொன்மை மாறாமல் கலையம்சத்தை பேணும் வகையில் முழுமையாக புதுப்பிக்கும் பணி ரூபாய் 7 கோடியே 70 லட்சம் செலவில் நடைபெறுகிறது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஆகத்து 15, 2010 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

கிசாவின் பெரிய பிரமிட், ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாகும். இதுவே உலகின் மிகப் பிரபலமான பிரமிட்டுமாகும். இது 4ஆவது வம்ச எகிப்திய பாரோ கூபுவின் சமாதியாகும். இது கட்டிமுடிக்கப்பட்டது, கிமு 2570 என்று கணக்கிடப்பட்டுள்ளது. நவீன எகிப்தின் தலைநகரமான கெய்ரோவின் புறநகர்ப் பகுதியிலுள்ள, பண்டைய கிசா நெக்ரோபோலிசில் அமைந்துள்ள மூன்று பெரும் பிரமிட்டுகளில் பெரியதும், காலத்தால் முந்தியதும் இதுவே.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஆகத்து 8, 2010 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

சிட்னி துறைமுகப் பாலம் சிட்னி துறைமுகத்தின் குறுக்கே அமைந்துள்ள உருக்கினாலான வளைவுப் பாலம் ஆகும். இது தொடருந்து, தானுந்து, நடைபாதை மற்றும் ஈருருளி வழிகள் மூலம் சிட்னி மத்திய வர்த்தகப் பகுதியையும், வடக்கு சிட்னியையும் இணைக்கும் போக்குவரத்துப் பாலமாக விளங்குகின்றது. 1967 ஆம் ஆண்டு வரை இதுவே சிட்னியின் மிகப்பெரும் கட்டமைப்பாக இருந்தது. கின்னஸ் உலக சாதனைகளின் படி இப்பாலமே உலகின் மிக அகலமான பாலமாகும்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சூலை 25, 2010 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

கோவாலா (Koala) அவுஸ்திரேலியாவில் மட்டுமே காணக்கூடிய பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு மிருகம் ஆகும். இது அவுஸ்திரேலிய நாட்டின் ஒரு முக்கியமான அடையாளச் சின்னமாகக் கருதப்படுகிறது. இதன் முரடான பாதங்களும் கால்களில் உள்ள கூரிய நகங்களும் மரங்களைப் பிடித்து ஏறுவதற்கு உதவுகின்றன. கோவாலாவின் பிரதான உணவு யூக்கலிப்டஸ் இலைகளாகும். இந்த மரங்களிலேயே அவை வசிக்கின்றன. இந்த இலைகளால் கிடைக்கும் குறைந்த சக்தியை 19 மணித்தியாலம் நித்திரை கொள்வதன்மூலம் பயன்படுத்துகின்றன. இப்படத்தில் காணப்படுவது சிட்னியில் உள்ள கோவாலா பூங்காவில் நித்திரை கொள்ளும் ஒரு கோவாலா.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சூலை 11, 2010 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

சிறீ மகாபோதி என்பது இலங்கையின் முதல் தலைநகரமான அனுராதபுரத்தில் உள்ள புனித வெள்ளரசு மரம் ஆகும். புத்தர் இருந்து ஞானம் பெற்ற வெள்ளரசு மரத்தின் கிளையில் இருந்து வளர்க்கப்பட்டதே இது என்று கூறப்படுகிறது. இது கிமு 288 ஆம் ஆண்டில் நடப்பட்டதாக இலங்கை வரலாற்று நூல்கள் கூறுகின்றன. மனிதனால் நடப்பட்டதும், அவ்வாறு நடப்பட்ட காலம் அறியப்பட்டதுமான, மரங்களில், உலகிலேயே மிகப் பழமையான மரம் இதுவே எனச் சொல்லப்படுகிறது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு




சூன் 14, 2010 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

பூநாரை - வளைந்த அலகும் இளஞ்சிவப்பு நிற உடலும் கொண்ட கரைப்பறவைகள் (shore birds or waders) வகையைச் சேர்ந்த பறவை இது. உப்புத்தன்மை அதிகமுள்ள ஏரிகளில் கடும் வெப்பத்தையும் தாங்கிப் பிழைக்கும் பூநாரை, தமிழகத்திலுள்ள கோடியக்கரை வனஉயிரின உய்விடம் புகலிடத்திற்கு வரும் எண்ணற்ற பறவைகளில் மிகவும் அழகான ஒன்று.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு




மே 17, 2010 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

பறை ஒரு தமிழிசைக் கருவியாகும். இது தோலால் ஆன மேளமாகும். பேசுவதை இசைக்கவல்ல தாளக் கருவி 'பறை' எனப்பட்டது. பன்னெடுங்கால வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள பறை, தமிழினத்தின் தொன்மையான அடையாளம். கற்காலத்தின் முதல் தகவல் தொடர்பு சாதனம். பறையடித்து தகவல் சொல்லுதல் பழங்காலத்தில் ஒரு முக்கிய தகவல் பரப்பு முறையாகவும், பறையரின் தொழிலாகவும் அமைந்தது. இந்த இசைக்கருவியை இசைக்கும் இளங்கலைஞர்களின் ஒளிப்படம் இது. பறையின் ஒரு பக்கம் மட்டுமே இசையை எழுப்ப இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மே 03, 2010 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ற்றோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) (ஜூன் 14, 1928 - ஒக்டோபர் 9, 1967) அர்ச்சென்டினாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.பொலிவியாவில் அவர் இறந்த இடத்தில் எழுப்பப்பட்டுள்ள சிலையின் அண்மித்த ஒளிப்படம் இன்றைய சிறப்புப் படமாக அமைந்துள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஏப்ரல் 26, 2010 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

சென்னை புறநகர் பேருந்து நிலையம் சென்னை மாநகரின் கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள ஒரு மிகப்பெரிய பேருந்து நிலையம். 37 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பேருந்து நிலையம் ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும். ஐ.எஸ்.ஓ 9001:2000 தரச் சான்றிதழும் இப்பேருந்து நிலையம் பெற்றுள்ளது. இப்பேருந்து நிலையம் 103 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. 2002 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் தேதியன்று அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 270 பேருந்துகளையும், நாளொன்றுக்கு 2000 பேருந்துகளையும் 2 லட்சம் பயணிகளையும் கையாளும் திறன் கொண்டது இப்பேருந்து நிலையம்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஏப்ரல் 19, 2010 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

2010, மார்ச் 27 அன்று நோர்வேயில், பேர்கன் நகரில் உள்ள அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தில் ஆசிரியர்கள்/பெற்றோர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம் செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட ஒளிப்படம். 25 பேர் இந்த அறிமுகக் கூட்டத்தில் ஆர்வத்துடன் வந்து பங்கெடுத்தனர். அனைவருக்கும் தமிழ் விக்கிப்பீடியா குறித்த அறிமுகமும் எவ்வாறு அதனை பயன்படுத்தவும் பங்களிக்கவும் கூடுமெனவும் விவரிக்கப்பட்டது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஏப்ரல் 12, 2010 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

தீக்சாபூமி அக்டோபர் 14, 1956 அன்று பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுடன் பாபாசாகேப் அம்பேத்கர் பௌத்த சமயத்தைத் தழுவிய இடத்தில் எழுப்பப்பட்டுள்ள ஓர் வழிபாட்டுத்தலம். இங்குள்ள தூபி மற்றும் நுழைவாயில்கள் மத்தியப்பிரதேசத்தில் உள்ள சாஞ்சி ஸ்தூபத்தை ஒட்டி வடிவமைக்கப்பட்டுள்ளன. தீக்சாபூமி மகாராடிர மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ளது. இந்தியாவிலுள்ள பௌத்த சமயத்தினருக்கு ஓர் முக்கிய வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது. அசோக விசயதசமி அன்றும் அக்டோபர் 14 அன்றும் பெரும்திரளான வழிபாட்டாளர்கள் இங்கு வருகின்றனர்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஏப்ரல் 05, 2010 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

புதுச்சேரி எனவும் பாண்டிச்சேரி, புதுவை எனவும் அழைக்கப்படும் இந்நகரம், சென்னை மாநகரில் இருந்து 170 கி.மீ. தொலைவில், வங்கக் கடலோரத்தில் அமைந்த இந்திய ஒன்றியப் பகுதி. ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பிரெஞ்சுக்காரர்களின் காலனியாக இருந்ததால் பிரெஞ்சுச் சொற்களை வெகு லாகவமாக அடித்தட்டு மக்களும் பயன்படுத்தும் இடமாகவும் இருக்கிறது. ஆந்திர மாநிலத்தின் காக்கிநாடாவுக்கு அருகாமையிலுள்ள ஏனாம் நகரும், தமிழகத்தின் நாகப்பட்டினத்தின் அருகாமையிலுள்ள காரைக்கால் நகரும், கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டுக்கு அருகிலுள்ள மாஹே நகரும் இந்த ஆட்சிப் பகுதியின் அங்கமாகையால், ஆங்கிலம், பிரெஞ்சு, தமிழ் மொழிகளுடன், தெலுங்கு, மலையாளம் மொழி பேசும் மக்களும் சிறுபான்மையாக இருக்கிறார்கள். படத்தில் புதுச்சேரிக் கடற்கரையிலுள்ள காந்தி சிலை காணப்படுகிறது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு




மார்ச் 29, 2010 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

இயற்கையில் பெரிதாக வளரக்கூடிய மரங்களைக் குறிப்பிட்ட முறைப்படியான கத்தரிப்பு மூலமும், அவற்றின் தண்டுகளில் கம்பிகளைச் சுற்றிக் கட்டுப்படுத்துவதன் மூலமும், உரிய அளவுக்கு வளரவிடாது, முதிர்ந்த மரங்களின் தோற்றத்தில் குள்ளமாகவும், மாறுபட்ட தோற்றத்துடனும் இருக்கும்படி சட்டிகளில் வளர்க்கும் முறை பொன்சாய் எனப்படும். நிப்பானிய மொழியில் இது "தட்டத் தோட்டம்" (盆栽) எனப் பொருள்படும். சீனக் கலையான "பென்ஜிங்" என்பதும் இது போன்றதே. இதிலிருந்தே பொன்சாய்க் கலை வளர்ந்ததாகக் கூறப்படுகின்றது.எந்த வகையான தாவரத்தையும் இவ்வாறு வளர்க்க முடியுமெனினும், குள்ளமாக வளர்ந்து முதிர்ந்த மரங்களின் தோற்றத்தைக் கொடுப்பதற்குச் சிறிய இலைகளைக் கொண்ட தாவரங்களே பொருத்தமானவை.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மார்ச் 22, 2010 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

அகாக்கஸ் மலைகளின் பின்னணியில் மேற்கு லிபியாவில் சகாரா பாலைவனத்தின் ஓர் காட்சி. அகாக்கஸ் மலைகளை வண்ணமய மணல் குன்றுகள், இயற்கை வளைவுகள்,பெரும் பள்ளங்கள், தனியே நிற்கும் பாறைகள் என பலவகையான இயற்கைத் தோற்றங்களில் காணலாம். இது கத் நகரத்துக்கு அருகில் உள்ளதுடன், அல்ஜீரிய நாட்டின் எல்லைக்கும் அண்மையிலேயே இருக்கின்றது.இப் பகுதியில் அதிக அளவில் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன.இப்பகுதி 1985 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இப் பாறை ஓவிங்கள் கிமு 12,000 தொடங்கி கிபி 100 வரையான காலப்பகுதியைச் சேர்ந்தவை என்பதுடன், பண்பாடு மற்றும் இயற்கை மாற்றங்களை வெளிப்படுத்துவனவாகவும் உள்ளன. இவ்வோவியங்களில், ஒட்டகச் சிவிங்கிகள், யானைகள், தீக்கோழிகள், ஒட்டகங்கள், குதிரைகள் போன்ற விலங்குகளுடன் மனிதர்களின் உருவங்களும் காணப்படுகின்றன. இசை, நடனம் முதலிய அன்றாட நிகழ்வுகள் தொடர்பில் மனிதர்கள் ஓவியங்களில் தீட்டப்பட்டுள்ளனர்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மார்ச் 15, 2010 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

யமேக்காவில் பிறந்த தட கள ஆட்டக்காரர் உசேன் போல்ட் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் 9.69 நொ நேரத்தில் 100 மீட்டர் விரைவோட்டத்தை ஓடி உலகச் சாதனை படைத்த சில நொடிகளில் எடுத்தப் படம். அவரது பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் படத்தில் காணலாம். இந்த ஒலிம்பிக்கில் 200 மீ ஓட்டம் (19.30 வினாடி) போட்டியிலும் ஒலிம்பிக் மற்றும் உலக சாதனைகளைப் புரிந்தார்; தன் நாட்டு சக வீரர்களுடன் இணைந்து 4 x 100 மீ தொடரோட்டத்தில் 37.10 வினாடிகளில் ஓடி சாதனை புரிந்தார். இவை அனைத்தையும் போல்ட்டு 2008 பெய்ஜிங் கோடை ஒலிம்பிக்கில் நிகழ்த்தினார்.1984ஆம் ஆண்டு கால் லூயிசிற்குப் பிறகு ஒரே ஒலிம்பிக் விளையாட்டில் மூன்று தங்கப்பதக்கங்களைப் பெற்ற தடகள ஆட்டக்காரர் என்ற பெருமை இவருக்கு உண்டு. முன்னதாக 2003இல் 200 மீட்டர் விரைவோட்டத்திலும் உலக இளையோர் சாதனை படைத்தார்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மார்ச் 08, 2010 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

சுடரைத் தாங்கும் தாமரை பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில், தென்னிந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டத்தில் சாமிதோப்பு பகுதியில் தோன்றிய அய்யாவழி குழுவினரின் சமயச் சின்னமாகும். இதில் தாமரை, 1008 இதழ்களை உடைய சஹஸ்ரார தள (லாடம்) பகுதியையும், சுடர் ஆன்மாவையும் குறிக்கும். அய்யாவழி பலவிதங்களில் இந்துசமயத்துடன் நெருங்கிய தொடர்புகொண்டுள்ள போதிலும் அய்யாவழி சமயத்தினரால் அது தனி சமயமாகக் கருதப்படுகிறது. 80 லட்சத்துக்கு மேல் இருப்பதாக கூறப்பட்டாலும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போது இந்துக்களாக கருதப்படுவதால் இவர்களின் எண்ணிக்கை பற்றிய சரியான புள்ளிவிவரம் இல்லை.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மார்ச் 01, 2010 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

தேரை அனுரா வரிசையின் பலவகை நிலநீர் வாழிகளின் இனங்களைக் குறிக்கும். வறண்ட சூழலிலும் வாழக்கூடிய வகையிலான தேரைகளின் உருவைக் கொண்டு இவை தவளைகளிலிருந்து வேறுபடுத்தப்படுகின்றன. கல்லினுள் தேரைக்கும் உணவு வழங்கும் இறைவனைக் குறித்த பாடல் இவை வாழும் சூழலை எடுத்துச் சொல்வதாக உள்ளது. இவற்றின் தோல் நீரைத் தேக்கிக் கொள்ளும் விதமாகத் தடித்துக் காணப்படுகிறது. மேலும் வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து காப்பாற்றிக்கொள்ளப் பழுப்பு நிறத்தைக் கொண்டுள்ளது. அவற்றின் தோலில் பருக்கள் போன்ற வெளியுடல் சுரப்பிகள் உள்ளன. மேலும் தாவுகின்ற தவளைகள் போலன்றி இவை கால்களைக் கொண்டு நடக்கின்றன. குளிர்காலங்களில் தங்கள் தோலைப் பாதுகாக்க வளைகளில் பதுங்குகின்றன.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு




பெப்ரவரி 22, 2010 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
[[Image:|350px|{{{texttitle}}}]]

கோலாட்டம் என்பது பல்வேறு நிறங்கள் தீட்டப்பட்ட கழிகளைக் கொண்டு தாளத்துக்கும், இசைக்கும் ஏற்ப ஒன்றுடன் ஒன்று தட்டிக்கொண்டே ஆடும் ஒரு நாட்டார் கலை. தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு ஆடப்படுகிறது. சிற்சில வேறுபாடுகளுடன் இந்தியாவின் வட மாநிலங்களில் "தாண்டியா" என்ற பெயரில் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. தமிழகத்தில் தென் மற்றும் வடகிழக்கு மாவட்டங்களில் ஆண்களும், பெண்களும் இணைந்து கோலாட்டம் நிகழ்த்துகிறார்கள். தொடக்கத்தில் மெதுவாக தொடங்கும் இசையும் ஆட்டமும் உச்சத்தில் முடிவுறும்.ஒற்றைக் கம்பால் அடித்து ஆடுவது, இரட்டை கம்பால் அடித்து ஆடுவது என கோலாட்டத்தில் இரண்டு வகைக் கலையாடல்கள் உள்ளன. கோலாட்டம், பின்னல் கோலாட்டம், கோலாட்டக்கும்மி என மூன்று வகையான கலையாடல்கள் தமிழகத்தில் நிகழ்த்தப்படுகின்றன.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



பெப்ரவரி 15, 2010 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

சிட்னி ஒப்பேரா மாளிகை , சிட்னி துறைமுகப் பாலத்துக்கு அண்மையில், சிட்னித் துறைமுகத்தில் உள்ள பென்னெலோங் முனையில் அமைக்கப்பட்டுள்ளது. இக் கட்டிடமும் அதன் சூழலும் ஆஸ்திரேலியாவின் மிகவும் அறியப்பட்ட அடையாளச் சின்னம் ஆகும்.இதன் வடிவமைப்பு டென்மார்க்கைச் சேர்ந்த கட்டிடக்கலைஞரான ஜோர்ன் அட்சன் என்பவரால் செய்யப்பட்டது.இது ஒரு யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாகும்


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



பெப்ரவரி 08, 2010 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

செஞ்சிக் கோட்டை இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் எஞ்சியிருக்கும் மிகச் சில கோட்டைகளுள் ஒன்றாகும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில், மாநிலத் தலைநகரமான சென்னையில் இருந்து 160 கிமீ (100 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ள இது யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரிக்கு அண்மையில் உள்ளது. மராட்டிய மன்னரான சிவாஜி, "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. பிரித்தானியர் இதனைக் "கிழக்கின் ரோய்" என்றனர்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



பெப்ரவரி 01, 2010 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

பட்டாம்பூச்சி அல்லது வண்ணத்துப் பூச்சி என்பது கண்ணைக் கவரும் மிக அழகான நிறங்களில் இறக்கைகள் உள்ள பூச்சியாகும். இங்குள்ளது இந்தியத் துணைக்கண்டத்தில் காணப்படும் பட்டாம்பூச்சியாகும்.இப்பூச்சி முட்டையிலிருந்து, குடம்பிநிலையில் புழுவாக அல்லது மயிர்க்கொட்டியாக உருமாறி, பின்னர் கூட்டுப்புழு எனப்படும் உறங்கு நிலைக்குப் போய், பின்னர் அழகான பட்டாம்பூச்சியாய் உருமாற்றம் பெறுவதும் மிகவும் வியப்பூட்டுவதாகும். பட்டாம்பூச்சியின் இறக்கைகளில் காணப்படும் நிறங்கள் மிகப்பலவாகும். அதில் காணப்படும் நிறவடிவங்களும் கோலங்களும் அழகு வாய்ந்தவை. பட்டாம்பூச்சிகள் உலகில் பெரும்பாலான இடங்களில் வாழ்கின்றன. மிகப்பலவும் வெப்ப மண்டலக் காடுகளில் வாழ்ந்தாலும், சில குளிர்மிகுந்த உயர் மலைப்பகுதிகளிலும் (இமய மலையிலும்), கனடாவின் வட பகுதியிலும், வெப்பம் நிறைந்த பாலைநிலங்களிலும் கூட வாழ்கின்றன. சில பட்டாம்பூச்சிகள் வியப்பூட்டும் விதமாக வெகுதொலைவு (3,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவு) வலசையாகப் பறந்து செல்கின்றன.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு




சனவரி 25, 2010 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

மூணார் (அல்லது மூணாறு) தமிழகத்தின் அருகிலுள்ள கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஓர் அழகிய நகரம். தேயிலை தயாரித்தலே இங்கு முக்கியமான தொழில். முத்தரப்புழா, நல்லதண்ணி, குண்டலா ஆகிய 3 ஆறுகள் சங்கமிக்கும் இடமாததால் மூன்றாறு என்பது இதன் பெயர். இது பேச்சுத் தமிழில் மருவி இப்பொழுது மூணாறு என்று ஆகியுள்ளது. இங்குள்ள தேயிலைத் தோட்டங்களும் இயற்கை எழில் கொஞ்சும் முகில்கள் விளையாடும் மலைமுகடுகளும், வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளும் கண் கொள்ளாக் காட்சிகளாகும்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சனவரி 18, 2010 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

சாந்தோம் பசிலிகா இந்தியாவின் சென்னையில் சாந்தோம் பகுதியில் அமைந்துள்ள ஓர் சிறு பசிலிகா வகையைச்சேர்ந்த ரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும்.இது 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசிய பயணிகளால் கட்டப்பட்டு பின்னர் 1893ஆம் ஆண்டு பிரித்தானியரால் கதீட்ரல் வகைக்கேற்ப மீளவும் கட்டப்பட்டது. கோதிக் கட்டிட வடிவமைப்பில் கட்டப்பட்ட அந்தக் கட்டிடமே தற்போது உள்ளது. இதனை 19ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய கட்டிட பொறியிலாளர்கள் பயன்படுத்திய புது கோதிக் வகையாக பகுக்கப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சனவரி 11, 2010 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

கங்கணகிரகணம் எனப்படுவது புவியிலிருந்து நிலவு பெருமத்தொலைவில் உள்ள போது ஏற்படும் சூரிய மறைப்பு ஆகும். ஜனவரி 15, 2010 அன்று சாரோசு சுழற்சி 141 -ன் இருபத்திமூன்றாவது மறைப்பு ஏற்பட்டது; இது பொங்கல் கிரகணம் எனப்படுகிறது. இது ஒரு கங்கணகிரகணம் என்பதே இதன் சிறப்பு. தமிழ்நாட்டின் தெற்கே கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி- லிருந்து திருச்செந்தூர், தூத்துக்குடி, இராமேசுவரம், அம்பாசமுத்திரம், தென்காசி, இராசபாளையம், மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மன்னார்குடி, கும்பகோணம் வடக்கே சீர்காழி வரை உள்ள பகுதிகள் கங்கண கிரகணத்தின் பாதையில் இருந்தன.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சனவரி 3, 2010 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

ஆமை ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இவை நீரிலும் நிலத்திலும் வாழவல்ல இரு வாழ்விகள் ஆகும். இதன் உடல் ஓட்டினால் மூடப்பட்டதாக இருக்கும். உலகில் ஏறத்தாழ 300 வகையான ஆமையினங்கள் உள்ளன. இவற்றில் சில இனங்கள் அழிவாபத்தை எதிர்கொள்கின்றன. கடலாமைகள் ஒப்பீட்டளவில் பெரியவை.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு