தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைஎல்லாருக்கும் எப்போதும் கல்வி
வகைபொதுத்துறை பல்கலைக்கழகம்
உருவாக்கம்2002
வேந்தர்ஆர். என். ரவி[1]
துணை வேந்தர்எசு. ஆறுமுகம்
அமைவிடம்
வளாகம்நகர்ப்புறம்
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு (UGC)
இணையதளம்http://www.tnou.ac.in

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Open University அல்லது TNOU)இந்தியாவில் தமிழ்நாடு மாநில அரசினால் நிறுவப்பட்டுள்ள ஒரு பல்கலைக்கழகமாகும். தமிழகச் சட்டப்பேரவை இயற்றிய (2002ஆம் ஆண்டின் எண் 27) சட்டத்தின் கீழ் உயர்கல்வித் தொடரவியலா ஆதரவற்றோருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ள ஆண்/பெண்களுக்காகவும் இன்னும் பிற காரணங்களுக்காக பள்ளிக்கல்வியை தொடராதவர்களுக்கும் பயன்தருமாறு இப்பல்கலைகழகம் நிறுவப்பட்டுள்ளது. பல பாடத்திட்டங்களில் பட்டய, சான்றிதழ், பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பாடதிட்டங்களை வழங்குகிறது. இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்பல்கலைக்கழகத்தில் சேருவது எளிதாக ஆக்கப்பட்டிருக்கிறது. தேர்வுகளும் வேண்டியவாறு எடுத்துக்கொள்ளுமாறு அமைக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனத்தில் வழங்கப்படும் பணிசார் பாடங்கள் (vocational courses) செய்தொழிலில் அறிவுப்பெறவும் புதிய வேலை வாய்ப்புகளை வளர்க்கவும் பயனுள்ளதாக உள்ளன.

2011ஆம் ஆண்டு தமிழக முதல்வர் மு. கருணாநிதி இப்பல்கலைக்கழகத்தின் புதிய நிர்வாக கட்டிடத்தை சைதாப்பேட்டையிலுள்ள ஆசிரியர் கல்வி வளாகத்தில் திறந்து வைத்தார்.[2]

இப்பல்கலைகழகத்தில் 2013-2014ம் கல்வியாண்டு முதல் அனைத்துத் துறைகளிலும் நிறைஞர் (M.Phil). மற்றும் முனைவர் (Ph.D.) ஆகிய ஆராய்ச்சிப் பட்டப்படிப்புகள் பகுதி (Part-time) மற்றும் முழுநேர (Full-time) முறையில் வழங்கப்பட்டு வருகின்றன.

இப்பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தராக 18.01.2013 முதல் முனைவர் திருமதி சந்திரகாந்தா ஜெயபாலன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வழங்கப்படும் பாட திட்டங்கள்[தொகு]

இளநிலை பட்டப்படிப்புகள்:[தொகு]

  • பி. பி. ஏ., வணிக மேலாண்மை
  • பி. ஏ., ஆங்கிலம்
  • பி. ஏ., தமிழ்
  • பி. ஏ., வரலாறு
  • பி. ஏ., பொருளியல்
  • பி. ஏ., பொது நிர்வாகம்
  • பி. காம்.,
  • பி. எஸ். டபிள்யூ. (சமூகப்பணி)
  • பி. டி. எஸ்., (சுற்றுலாக் கல்வி)
  • பி. சி. ஏ., (கணினி பயன்பாடு)
  • பி. எஸ்சி., கணிதம்
  • பி. லிட்
  • பி. எஸ்சி., ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் உணவக நிர்வாகம்
  • பி. எஸ்சி., ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் பார் டிப்ளமோ ஸ்டடீஸ்
  • பி. எஸ்சி., ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் பார் எக்ஸ் டிப்ளமோ ஹோல்டர்ஸ்
  • பி. பி. ஏ.,

முதுநிலை பட்டப்படிப்புகள்:[தொகு]

  • எம். பி. ஏ.,
  • எம். பி. ஏ., ஷிப்பிங் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட்
  • எம். ஏ., ஆங்கிலம்
  • எம். ஏ., தமிழ்
  • எம். ஏ., வரலாறு
  • எம். ஏ., பொது நிர்வாகம்
  • எம். ஏ., அரசியல் அறிவியல்
  • எம். ஏ., சமூகவியல்
  • எம். ஏ., பொருளியல்
  • எம். ஏ., உளவியல்
  • எம். காம்.,
  • எம். சி. ஏ.,
  • எம். எஸ்சி., கணிதம்

பட்டயப் படிப்புகள்:[தொகு]

  • நிர்வாகம்
  • உணவு தயாரிப்பு
  • பேக்கரி
  • டி.டீ.பி., ஆப்ரேட்டர்
  • ரிப்ரெஜ்ரேஷன் மற்றும் ஏ.சி.,
  • ஹவுஸ் எலக்ட்டீரிசியன்
  • பிளம்பிங் டெக்னீசியன்
  • கேட்டரிங் அசிஸ்டன்ட்
  • போர் வீலர் மெக்கானிசம்
  • பேஷன் டிசைன் மற்றும் கார்மென்ட் மேக்கிங்
  • ஹெல்த் அசிஸ்டன்ட்
  • பிரீ-பிரைமரி ஆசிரியர் பயிற்சி
  • பியூட்டிசியன்

முதுநிலை பட்டயப் படிப்புகள்:[தொகு]

  • கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்
  • ஸ்போக்கன் இங்கிலீஷ்

சான்றிதழ் படிப்புகள்:[தொகு]

  • சூழலியல்
  • உணவு மற்றும் ஊட்டச்சத்து
  • கணினி பயன்பாடு
  • கிராமப்புற மேம்பாடு
  • டீச்சிங் இங்கிலீஷ்
  • டீச்சிங் ஆப் பிரைமரி ஸ்கூல் மேத்மெடிக்ஸ்
  • எம்பவரிங் வுமன் த்ரூ எஸ்.எச்.ஜி.,

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "படித்தவர் பாமரர் ஆகலாமா ?". Archived from the original on 2011-03-01. பார்க்கப்பட்ட நாள் 2011-03-01.

வெளியிணைப்புகள்[தொகு]