உயிரிகளால் பொழிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உயிரிகளால் பொழிவு (Bioprecipitation) என்பது மழையை உண்டுச்செய்யும் பாக்டீரியாக்களைப் பற்றியதாகும். இக்கொள்கையை மாண்டானா மாநிலப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த தாவீது சாண்டு என்னும் அறிவியலாளரே முதலில் அறிவித்தவராவார். வானிலையியலில் பொழிவு என்பது வளிமண்டல நீராவி குளிர்ந்துப் நிலத்தை அடையும் நிகழ்வேயாகும். இவ்வாறு விண்ணில் உண்டாகும் மேகங்கள் மழை மற்றும் பனிப் பொழிவிற்குத் தேவையாகும். இதற்குத் தூசுகள் மற்றும் இதர வளிமங்கள் உருவாக உதவுகின்றன. ஆயினும் இவையல்லா ஒரு உயிரிப்பொருள் பனிக்கரு உருவாக காரணமாக அமையும் நிகழ்வையே உயிரிகளால் பொழிவு என அறியப்படுகிறது[1].

தனிமங்களும் உப்புகளும் கார்மேகங்களில் நிறைந்துக் காணப்படுகினறன. இவையும் பனிக்கரு உருவாதலில் பெரிதும் துணைப் புரிகின்றன. ஆயினும் வளிமண்டலத்தில் காணப்படும் பாக்டீரியா, பூஞ்சைகள் மற்றும் சிறுப்பாசிகளே மேகம் உருவாதலில் கருவாகச் செயல்படுகின்றன. ஏனெனில் அவை உயர் வெப்பநிலையிலும் பணிபுரிந்து அதை நிறைவேற்ற ஏதுவாகச் செயல்படுகின்றன. இவ்வாறு தட்ப வெப்ப சூழல் சமநிலையில் வளியில் உலாவும் நுண்ணுயிர்களின் பங்கு குறிப்பிடத்தகுந்தது [2].

குறிப்பு[தொகு]

ஆய்வறைகளில் மேற்கொள்ளப்பட்டச் சோதனையில் ”சூடோமோனாசு சிரஞ்சியே” என்னும் பாக்டீரியா நீர்ப்படிகம்/பனிக்கருவில் பொதிந்துள்ளது அறியப்பட்டுள்ளது. இதுக் குறித்து வந்த ஒரு ஆய்வேட்டில் நுண்ணுயிரிகளே உலகத்தில் வாழச் சிறந்த உயிர்கள் என வாதிடுகிறது [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. LSU scientist finds evidence of 'rain-making' bacteria http://www.eurekalert.org/pub_releases/2008-02/lsu-lsf022808.php
  2. http://e360.yale.edu/feature/the_long_strange_journey_of_earths_traveling_microbes/2436/
  3. Smith, D. J., D. W. Griffin, and D. A. Jaffe (2011), The high life: Transport of microbes in the atmosphere, Eos Trans. AGU, 92(30), doi:10.1029/2011EO300001
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிரிகளால்_பொழிவு&oldid=2221044" இலிருந்து மீள்விக்கப்பட்டது