இடைக்கட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இடைக்கட்டு, தமிழ்நாட்டில், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர்.

இவ்வூருக்குச் செல்லும் வழி[தொகு]

இந்த ஊரைச் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் கோகுல், விநாயகா என்னும் சிற்றுந்தில் ஏறி அடையலாம். அல்லது திருச்சிராப்பள்ளி-சிதம்பரம் நெடுஞ்சாலையில் உள்ள குருகாவலப்பர்கோயில் என்னும் ஊரின் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இரண்டு கல் தொலைவு நடந்து அடையலாம். கங்கைகொண்ட சோழபுரத்திற்குத் தென்மேற்கில் இந்த ஊர் உள்ளது.

மக்கள் தொகையும் வாழ்க்கையும்[தொகு]

நூறு குடும்பங்கள் இந்த ஊரில் இருக்கும்.தொடக்கப்பள்ளி,பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம் உண்டு.தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியும் உண்டு.காளியம்மன்கோயில்,திரௌபதை அம்மன் கோயில், ஐயனார்கோயில், பிடாரியம்மன் கோயில்,வீரனார்கோயில் உள்ளன. வன்னியர்,பிள்ளைமார்,தாழ்த்தப்பட்ட இன மக்கள் வாழ்கின்றனர்.பொன்னேரியால் வேளாண்மை நடைபெறுகிறது.இந்த ஊரில் பிறந்தவர்கள் பலர் நல்ல கல்வியறிவு பெற்று அரசுப் பணிகளில் உள்ளனர். பலர் வெளிநாடு சென்று பணியில் உள்ளனர். அமைதியான ஊர் என்பதால் வெளியூர் மக்கள் பலர் வந்து தங்கி இந்த ஊரின் அமைப்பை மாற்றியுள்ளனர்.

இந்த ஊரில் உள்ள திரௌபதை அம்மன் கோயிலில் பாரதக்கதை சிறப்பாக பாடப்படுவது உண்டு.தீமிதி,நாடகம் என மக்களின் பொழுதுபோக்கு இருந்தது. காமன் கோயில் திருவிழாவும் நடைபெறும்.

புகழ்பெற்றவர்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடைக்கட்டு&oldid=3639151" இலிருந்து மீள்விக்கப்பட்டது