பேச்சு:குமாரதுங்க முனிதாச

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாஹிம் மாத்தறை நூலகமும் சிங்களத்தில் நூலகம் என்றா அழைக்கப்படுகிறது. அதனையும் சிங்களத்திலேயே எழுதி விடுங்கள். விக்கியை நாம் சிங்கள மயப்படுத்தி அழகு பார்ப்போம்:(.--Kanags \உரையாடுக 09:24, 15 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

கனகு, உங்களுக்கு ஏன் சிங்கள மொழியுடன் அவ்வளவு கோபம்? வேற்று மொழிப் பெயர்களுக்கு அலுவல் முறையான பெயர் வழங்கப்படாதிருப்பின் அப்பெயர்களை ஒலிபெயர்ப்பதே தவிர மொழிபெயர்ப்பது இங்கு நிகழவில்லையே.--பாஹிம் 09:40, 15 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

'அழகுபடுத்துவதாய் நினைத்து தமிழைக் கொச்சைப்படுத்தாதீர்கள்![தொகு]

தமிழ் செம்மொழி - எமது தாய்மொழி. தமிழை அழகுபடுத்துவதாய் நினைத்து கொச்சைப்படுத்தாதீர்கள். “பழையன கழிதலும் புதியன புகுதலும் கால வழுவல“ எனும் நன்னூல் சூத்திரத்தை எடுகோளாய் வைத்து தமிழுக்கே உரித்தாய பாணியை மாற்ற முற்படுபவர்கள் யாராயினும் தனிப்பட்ட ரீதியில் கண்டிக்கிறேன். நாம் உலகளாவிய ரீதியில் பயன்பாட்டுக்கு வரவிருக்கும் தமிழ் விக்கிப்பீடியாவில், எம்மை விட்டால் பண்டிதர்கள் யார் என்ற ரீதியில் கைவரிசை காட்ட நினைத்திடின் தமிழ் கனகா சொல்வதுபோல பிறமொழியாகவே இருந்துவிடும். தமிழுக்குரிய இலக்கண விதிகள் கொச்சைப்படுத்தப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஒவ்வொருவருக்குள்ளும் ஆற்றல்களை நான் என்றும் மெச்சுபவன். ஆயினும், தயைகூர்ந்து தமிழ்க்குரித்தான வழிவருகின்ற அமைப்பினையெல்லாம் மாற்ற முற்படாதீர்கள். இது விக்கிப்பீடியாவில் வலம்வரும் பயனர்கள் அனைவருக்குமான அடியேனின் பணிவான வேண்டுகோள். இலங்கையில் இவ்வழக்கு, அங்குதான் இவ்வழக்கு என வாதிடின் செம்மொழியாம் தமிழ்மொழி பட்டென்று வீழுமன்றோ. “இதனை இதனான் இவன்செய்வானென் ராய்ந்து அதனை அவன்கண்விடல் உத்தமம்“ --கலைமகன் பைரூஸ் 09:38, 15 நவம்பர் 2011 (UTC)

மேற்படி பாடசாலையின் பெயரை ஆங்கிலத்திலும் Kumaratungu Munidas Maha Viduhala என்றே எழுதப்படுகிறது. அவர்கள் ஏனைய பாடசாலைகளைப் போல மகா வித்தியாலயம் என்று வரும் வகையில் Maha Vidyalaya என்று எழுதுவதுமில்லை, அப்படி எழுதுவதை விரும்புவதில்லை. கேட்டால், அதன் பதிவு Maha Viduhala என்றுதான் உள்ளதென்று கூறுகின்றனர். இது கொச்சைப்படுத்தல் அல்ல ஃபைரூஸ். சரிப்படுத்தல். நீங்கள் தவறான விளக்கம் அளிக்க வேண்டாம்.--பாஹிம் 09:46, 15 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
எனக்கு சிங்களத்தின் மீதோ அல்லது மொழி மீதோ கோபம் எதுவும் இல்லை. சிங்களவர்கள் பற்றிய பல முழுமையான கட்டுரைகளை இங்கு எழுதியிருக்கிறேன். அதற்காக எமது மொழியை நாம் விட்டுக் கொடுக்க முடியாது. பாடசாலை போன்ற சொற்களைத் தமிழில் எழுதாமல் ஏன் வேற்று மொழியில் எழுத வேண்டும்? ஏன் திக்குவெல்லையை தமிழில் எழுதுகிறீர்கள்? ஏன் மாத்தறையை மாத்தற என எழுதவில்லை? ஏன் நூலகம் என எழுதியிருக்கிறீர்கள். அதற்கு நீங்கள் பதில் கூறவில்லை. எமது விக்கியை நீங்கள் இவ்வாறு சிறுகச் சிறுக சிங்கள மயப்படுத்தும் முயற்சியை மிகக் கடுமையாக எதிர்க்கிறேன். நீங்கள் செய்துள்ள மாற்றங்களை நீங்களாக மாற்றது போனால் நான் விரைவில் மாற்றுவேன். நன்றி.--Kanags \உரையாடுக 09:50, 15 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
நீங்கள் சிறுகச் சிறுக வேற்று மொழிகளை எதிர்ப்பதனையும் நான் வன்மையாக எதிர்க்கிறேன். அரபுச் சொல்லொன்றின் பிழையைத் திருத்தினால் அதற்குத் தமிழில் வேறுமாதிரிதான் வர வேண்டும் என்கிறீர்கள். அரபு மொழியில் தூனிசியா என்றுள்ளதை நான் எடுத்துக் கூறியும் நீங்கள் வேண்டுமென்றே துனீசியா என்றுதான் இருக்க வேண்டும் என்று மாற்றியது பெருந் தவறு. எந்த மொழியிலிருந்து நீங்கள் துனீசியா என்ற சொல்லைப் பெற்றீர்கள்? முன்னர் அரபு மொழியை எதிர்த்தீர்கள். அது போலவே, இங்கு சிங்களத்தை எதிர்க்கிறீர்கள். வேறெந்த மொழியை எதிர்ப்பதாக எண்ணம்?--பாஹிம் 09:56, 15 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
மாத்தறை என்பது இலங்கை அரசு வழங்கும் அலுவல் முறைப் பெயர். நூலகத்தின் பெயரும் அலுவல் முறையாகவே உள்ளது.--பாஹிம் 09:58, 15 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
சிறுகச் சிறுகச் சிங்கள மயப்படுத்த வேண்டிய தேவை எனக்கு எள்ளளவும் இல்லை. அப்படியானால் நான் ஏன் தமிழில் கட்டுரை எழுத வேண்டும்? சிங்களப் பெயர்களைச் சேர்ப்பதன் நோக்கம் தென்னிலங்கையில் உள்ள தமிழ்ப் படித்த பலர் சிங்களப் பெயர்களைத் தான் தெரிந்து வைத்துள்ளனர். அதன் காரணமாகவே, சிங்களத்திலும் பெயர்களை வழங்குவது நலம் எனக் கருதிச் சேர்க்கிறேன்.--பாஹிம் 10:06, 15 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

பைரூஸ், சிங்களப் பெயரில் விதுகல என்றுள்ளதை வித்தியாலயம் என்று தமிழ்ப்படுத்த வேண்டும் என்று தமிழுக்கேயுரித்தான(?) இலக்கணம் எங்குள்ளதெனக் கூற முடியுமா?--பாஹிம் 10:13, 15 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

பைரூஸ், செம்மொழியாம் தமிழ்மொழி பட்டென்று வீழுமன்றோ என்று கவலைப்படும் நீங்கள் மேலே பயன்படுத்தியுள்ள கொச்சை, ரீதி, பண்டிதர், வாது, தயை போன்ற வடமொழிச் சொற்களுக்குப் பகரமாக நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் இங்கு விக்கியில் பரிந்துரைக்கப்படுகிறது. அவ்வாறு வேற்று மொழிச் சொற்களைப் பயன்படுத்துவது குறித்துத்தான் இங்கு பேச்சு. ஒரேயொரு சிங்களப் பெயரை அப்பெயர் இருந்தவாறே நான் ஒலிபெயர்த்ததனாற் தமிழ் வீழுமெனின், மேற்படி வடமொழிச் சொற்களை ஏராளமாகக் கையாளுவதாற் தமிழ் வாழுமா?--பாஹிம் 11:10, 15 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

பிற மொழிப் பெயர்களுக்கு நாம் பின்வருமாறு பின்பற்றலாம்
1) அப்பகுதியில் தமிழர்கள் உள்ளனரா. அவற்றை எவ்வாறு அழைக்கின்றனர் - அதற்கு முதன்மையிடம்
2) தமிழர்கள் அழைப்பதற்கும் அச்சொலின் மூல மொழி பெயருக்கும் வெறுபாடெனில் - இரண்டுக்கும் சம இடம். இரண்டும் தெளிவு படுத்தப்பட வேண்டும். பெயர்ச் சொல் அல்லாது மொழி பெயர்க்கக்கூடிய “நிறுவனம்”, “பள்ளி”, “பாடசாலை”, “அமைப்பு”, “முகமை” போன்றவை தமிழ்ப்படுத்தப்படவேண்டும்.
3) அப்பெயருக்கு தமிழர் அழைக்கும் வழக்கே இல்லை, அப்பெயரைத் தமிழர்கள் ஆங்கில வழியில் தான் அறிவோமெனில் மூல மொழியின் வழக்கு (ஆங்கில வழக்கு அடைப்பினுள்)
இங்கு குறிப்பாக ”குமரதுங்கு முனிதஸ் மக விதுகல ” என்ற சிங்கள பெயரினை எப்படி வழங்குவது என்பது வாதப் பொருள் எனத் தெரிகிறது. இதன் அதிகாரப் பூர்வ பெயர் சிங்களமெனினும், அதனை அங்குள்ள தமிழர்கள் எவ்வாறு அழைக்கிறார்கள்? “குமரதுங்கு முனிதஸ் மகா வித்தியாலயம்” எனும் பயன்பாடு உள்ளதெனில் அதனை முதன்மைப் படுத்தி அடைப்புக்குள் ”குமரதுங்கு முனிதஸ் மக விதுகல” என்னும் பெயரினைத் தரலாம்.

இவரது பெயரிலேயே திக்குவல்லையில் உள்ள குமரதுங்கு முனிதஸ் மகா வித்தியாலயம் ( குமரதுங்கு முனிதஸ் மக விதுகல) என்னும் சிங்களப் பாடசாலை

இதுவே பொருத்தமானதாக இருக்கும். இயன்றவரை தமிழில்/தமிழ்ப்படுத்தி எழுதி, அதன் மூலத்தினை தருவது சிறந்தது. ஆங்கில விக்கி முதலான பெரிய விக்கிகளில் இது போன்ற வழக்கமே பின்பற்றப்படுகிறது.--சோடாபாட்டில்உரையாடுக 10:32, 15 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

விளக்கத்துக்கு நன்றி, சோடாபாட்டில். எனினும், இன்னுமொரு கேள்வி. வேற்று மொழிப் பெயர் மட்டுமே இருப்பின் அம்மொழிப் பெயரை அப்படியே அடைப்புக்குள் தருவது சரியா பிழையா? ஏனெனில், மேற்படி பாடசாலைக்கு எந்த விதத் தமிழ்ப் பெயரும் இல்லை. 2002 ஆம் ஆண்டு நான் அந்தச் சிங்களப் பாடசாலையிற் தமிழாசிரியனாகப் பணியாற்றியுள்ளேன்.--பாஹிம் 10:38, 15 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

நாம் எமது தாய்நாட்டைப் பற்றித் தான் உரையாடுகிறோம். அரபு நாடுகளிலோ அல்லது கூபாவிலோ தமிழும் அரசு மொழியாக இருந்திருந்தால் அது பற்றி விவாதிப்பதில் நியாயமுண்டு. இலங்கையில் நாம் எமது அற்ப சொற்ப உரிமைகளுக்காகவே போராடி வருகிறோம். இவ்வாறு சிறு சிறு உரிமைகளையும் நாம் விட்டுக் கொடுத்து வந்தால் எங்கே போகும் பாருங்கள். இதனை நீங்கள் உணர வேண்டும். 20 ஆண்டுகளின் முன்னர் இலங்கைத் தமிழ் ஊடகங்களின் எழுத்துக்களுக்கும் இப்போதுள்ள ஊடகங்களின் எழுதுக்களுக்கும் பெரும் வேறுபாடு காணப்படுவதை உணருகிறேன். குமரதுங்கு முனிதஸ் மகா வித்தியாலயம் என்னும் சிங்களப் பாடசாலை என்றிருந்தால் மட்டுமே போதும். அடைப்புக்குறிக்குள் அதற்கான வியாக்கியானம் எதுவும் தேவையில்லை.--Kanags \உரையாடுக 10:41, 15 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

கனகு, இதைத்தானே முன்னர் நான் உங்களிடம் கேட்டேன். பேச்சு:மதீனா தேசிய பாடசாலை, சியம்பலாகஸ்கொட்டுவை பக்கத்தில், தேசிய, மகா, மத்திய மகா போன்று காலத்துக்குக் காலம் மாறுபடக்கூடிய சொற்கள் குறித்துக் கலந்துரையாடி முடிவெடுப்போம் என்று கூறினேன். பள்ளிக்கூடங்களுக்குப் பயன்படுத்தப்படும் வித்தியாலயம் போன்ற வடமொழி வழி வந்த அல்லது கொன்வென்ற் போன்ற ஆங்கிலச் சொற்களுக்குப் பதிலாக நல்ல தமிழ்ச் சொற்களைக் கையாள வேண்டுமென்பது என் விருப்பம். எனினும், நான் அதற்கு எந்தப் பதிலையும் பெறவில்லை. இனியாவது செய்வோமே.--பாஹிம் 10:55, 15 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]


கனக்ஸ், நான் இலங்கையின் நிலையினை முழுமையாக அறியேன். இதில் என் புரிதல் அரைகுறையானதெ. பிழையிருப்பின் பொறுத்தருளுங்கள். இலங்கை சூழலைப் பாராமல் வேறெந்தப் மொழியிலும் உள்ள பெயரை எப்படி அணுகுவோம் அதே போல இதையும் அணுக வேண்டுகிறேன். அதிகாரப்பூர்வம் என்பதை நாம் கணக்கில் கொண்டால் அங்குள்ள அரசு சொல்வதைத் தான் நாம் பின்பற்ற வேண்டும். அந்த அரசு நியாயமாகச் செயல்படுகிறதா, வலுக்கட்டாயமாக மாற்றுகிறதா என்றே பார்க்கக் கூடாது. எனவே தான் விக்கியில் “அதிகாரப்பூர்வ பெயர்” களுக்கு குறைவான மதிப்பு அளிக்கப்படுகிறது. தமிழ்ப் பெயருள்ள இடங்களுக்கு நான் சொல்வது பொருந்தாது. ஆனால் சிங்களப்பெயருள்ள ஒரு சிங்கள்ப் பாடசாலைக்கு அடைப்பினில் அதிகாரப்பூர்வ பெயர் தருவது பொருத்தமானதே என்பது என் கருத்து.
இலங்கையின்றி தமிழ்நாட்டில் இது போன்ற நிலையிருந்தால் இதே நிலை தான் எடுத்துரைப்பென். எ.கா ”அம்ரீதா வித்யாலயா” என்றொரு பள்ளி என் வீட்டருகே உள்ளது. இதன் அதிகாரப்பூர்வ பெயர் தமிழன்று. தமிழில் பெயரும் கிடையாது. “அம்ரீதா வித்யாலயா” என்ற எழுத்துப்பெயர்ப்பே பயன்படுத்தப்படுகிறது. “அம்ரீதா பள்ளி” என்ற இதனைப்பற்றி ஒரு கட்டுரையில் நான் எழுதினேன் என்றால் அம்ரீதா உயர்நிலைப்பள்ளி (அம்ரீதா வித்யாலயா) என்று எழுதவே விரும்புவேன். இதைத் தான் சிங்கள மொழிப்பெயருக்கும் எடுத்துரைக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 11:03, 15 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
சோடாபாட்டில், நீங்கள் கூறுவதை நாம் இங்கு ஒரு கொள்கையாக எடுக்க முடியாது. இவ்வாறு நாம் ஒரு முடிவெடுத்தால் இதையே தேவ வாக்காக எடுத்துக் கொண்டு பாஹிம் இப்போது இலங்கை குறித்த கட்டுரைகளில் உள்ள சிங்களப் பெயர்கள் அனைத்துக்குக்கும் அவற்றுக்குரிய சிங்களப் பெயர்களை சேர்க்கத் தொடங்கி விடுவார். அல்லது பின்னால் வருபவர்கள் யாரும் எழுதத் தொடங்கி விட்டால் அதனை நாம் நிறுத்த முடியாது. நீங்கள் வகுத்த கொள்கையை நாம் இலங்கை, (மலேசியா, சிங்கப்பூரையும் இலங்கையுடன் சேர்த்துக் கொள்ளலாம்) பொறுத்தவரையில் ஏற்றுக் கொள்ள முடியாது.--Kanags \உரையாடுக 11:14, 15 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
கனகு, நீங்கள் சொல்வதைப் பார்த்தால் வடமொழிச் சொற்களைத் தவிர்த்து நல்ல தமிழில் எழுதுவதிற் பொருளில்லையென்றே படுகிறது. ஏனெனில், வித்தியாலயம் போன்ற வடமொழி வழி வந்த சொற்களை அப்படியே பயன்படுத்த வேண்டுமென்று வற்புறுத்துகிறீர்கள்.--பாஹிம் 11:22, 15 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

Kumaratungu Munidas Maha Viduhala என்பதில் "Kumaratunga Munidas" (குமாரதுங்க முனிதாச) என்பது ஒரு நபரின் பெயர் அதனை மாற்றமுடியாது. ஆனால் "Maha Viduhala" என்பது சிங்களச் சொற்கள் அல்ல. அவை சமசுகிரத மூலத்தின் (மஹா வித்யாலயா) என்பதற்கான சிங்கள வழக்கே "மஹா விதுஹல" என்பது. அதேபோன்றே சமசுகிரத மூலத்திற்கான தமிழ் வழக்கு என்று ஒன்றும் உள்ளது, அதன்படி தான் தமிழில் எழுதப்பட வேண்டும்.

சிங்கள வழக்கு = மஹா விதுஹல/ மஹா வித்யாலய தமிழ் வழக்கு = மகா வித்தியாலயம்


இணக்க முடிவு ஏற்படவில்லை, பயனர் எதிர்ப்புள்ளதென்பதால், அடைப்புகளில் நான் தந்திருந்த சிங்களப் பெயரை எடுத்து விட்டேன். உரையாடல் தொடர்ந்து நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு முடிவு ஏற்படவில்லையெனில், பெரும்பாலானோர் எதிர்க்காத ஒரு முறையினைப் பின்பற்றுவோம்.--சோடாபாட்டில்உரையாடுக 11:51, 15 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

புறப்பெயர், எக்ஃசோனிம், exonym[தொகு]

நான் முழுமையாக இந்த உரையாடலின் பின் புலத்தை அறியேன். ஆனால் இரண்டு கருத்துகள் பொதுவானவை (இங்கு குறிப்பிடத் தக்கவை): 1) பிறமொழிச் சொற்களுக்குத் தன் மொழியில் வேறாக வழங்கும் உரிமை உள்ளது. இடாய்ச்சு மொழியை அவர்கள் Deutsch என்னும் பொழுது, ஆங்கிலேயரும், பிரான்சியரும் வெவ்வேறாக வழங்குகின்றனர். வேற்று மொழிப் பெயர்களை தன் மொழியில் தக்கவாறு வழங்கும் இயல்புக்கு exonym (எக்ஃசோனிம்) என்கின்றனர். இதில் பல்வேறு வகை பின்னொட்டுகளும் அடங்கும். 2) அடுத்ததாக நாம் தமிழில் ”பள்ளி” என்று எழுதி இருந்தாலும், ஆங்கிலத்தில் palli என்று எழுத மாட்டார்கள், school என்றே மாற்றி எழுதுவர். இதே போலவே புவியியல் பெயர்களும் பிறவும் அடங்கும். விரிவு வேண்டின் பின்னர் எழுதுகின்றேன். “அதிகாரபூர்வம்” என்று ஏதும் கிடையாது. வழ்ங்கும் மொழியின் உரிமையைப் பறிக்க யாருக்கும் உரிமை இல்லை. ஒரு மொழியில் உள்ள எழுத்துக்களில் எழுதவும், அம்மொழி மரபுப்படி சொல்லின் பின்னொட்டுகள் இருப்பதும், அம்மொழியின் தேவைப்படி வேறு விதமாகக் குறிக்கப்பெறுவதும், ஒரு மொழியின் தன்னுரிமை. இதனைப் பலரும் சரிவர புரிந்து கொள்வதில்லை. ”அதிகாரப் பெயர்” என்பது மூலமொழிக்கே, பிறமொழிகளுக்கு அன்று. பெங்களூரு என்று எழுதவேண்டும் என்பதும் தவறான கொள்கை. பெங்களூர் (தமிழில் ஊர் என்று முடிவது மொழி இயல்பு. இது போல் London என்பதை உரோமன் எழுத்தால் எழுதும் பிறமொழிகள் Londre, Londonir என்று தங்கள் மொழி வழக்கின் படி பின்னொட்டு அல்லது முடிவுநிலை எழுத்துகளுடன் வழங்குவதைக் காணலாம்). -செல்வா