பேச்சு:மு. கருணாநிதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Do we really have to write the appellation Kalaignar in the Wiki article. Agreed that he is called Kalaignar popularly, but to write in an Wiki article, is it not better to mention him as Muthuvel Karunanidhi ? - Santhoshguru 12:50, 17 மே 2005 (UTC)[பதிலளி]

we need to have a policy guideline regarding which titles we should include in front of a name. I have seen use of official titles like Sir, Bharath rathna etc., in articles in english wiki but I am not sure about popular titles like periyaar or kalaignar--ரவி (பேச்சு) 14:17, 17 மே 2005 (UTC)[பதிலளி]
ஆங்கில விக்கியில் பெயரின் முன் (ஒரு சில) பட்டங்கள் உதாரணமாக பேராயர் போன்ற பட்டங்கள் தவிர்க்கப்படுகிறது. இங்கு பட்டங்களை தவிர்க்க நான் பரிந்துரைக்கிறேன். மாண்புமிகு போன்ற சொற்களையும் தவிர்க்க வேண்டும். ஒருவர் கருணாநிதிக்கு சேர்க்க வேறு ஒருவர் புரட்சி தலைவி என்று கட்டுரை ஆரம்பிக்க....சூப்பர் ஸ்டார், புரட்சி தளபதி.....வேண்டாம் ரவி..:)--கார்த்திக் 19:30, 20 ஜூன் 2009 (UTC)

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 02:02, 14 மே 2007 (UTC)[பதிலளி]
வாழ்க்கைதுணைவியர் பட்டியலில் பத்மாவதி,தயாளு,இராசாத்தி என இருப்பது காலக்கிரமமானது என நினைக்கிறேன்.
Rsmn 17:08, 20 ஜூன் 2009 (UTC)
தொடர்ந்து இக்கட்டுரையில் அடையாளம் தெரியாத விசமிகள் எழுதுவது கண்டிக்கத்தக்கது அந்த IPமுகவரியை முடக்க வேண்டும்--Hibayathullah 12:41, 3 ஜனவரி 2010 (UTC)

இயற்பெயர் பற்றிய ஐயம்[தொகு]

‎மு.கருணாநிதி அவர்களின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி என்று குறிப்பிடப்பட்டுள்ளது ஐயத்திற்று உரியதாகும். இது குறித்து Balurbala அவர்கள் மு.கருணாநிதி அவர்கள் பற்றிய கட்டுரையில் மேற்கோள் சேர்த்துள்ளார். ஆனால் திமுக-வின் அதிகாரபூர்வ இணையதளங்களிளும்,கருணாநிதியின் தன் வரலாற்று நூலான நெஞ்சுக்கு நீதி நூலிலோ இதுகுறித்த தகவல் இல்லை. தட்சிணாமூர்த்தி என்னும் பெயர் கருணாநிதியின் இளமைக்கால நண்பரான தென்னன் என்பவரது இயற்பெயராகும். கருணாநிதியின் இயற்பெயராக தவறக மக்கள் மத்தியில் தகவல் நிலவுகிறது என்று படித்திருக்கிறேன். இந்த தகவலை இந்த இணையதளங்கள் குறிப்பிட்டிருக்கலாம். ஆங்கிலவிக்கியிலும் இவ்வாறு இல்லை Arulghsr (பேச்சு) 06:50, 5 பெப்ரவரி 2015 (UTC)

arulghsr, கருணாநிதியின் இயற்பெயர் தொடர்பான பகுதிக்கு சான்று தேவை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது அதனால் தொடர்புடைய சான்றை இணைத்தேன். தமிழ்ப் பெயர் வைக்கும் பொருட்டு திராவிடத் தலைவர்கள் அனைவரும் தங்களது பெயரை மாற்றினார்கள் எனப் படித்திருக்கிறேன். மேலும் கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி என பல ஊடகங்களில் பலமுறை வந்துள்ளது. ஆங்கில விக்கியில் இடம்பெறும் தகவல்கள் மட்டும்தான் தமிழ் விக்கியில் இடம்பெற வேண்டும் என்பதில்லை. தட்சணாமூர்த்தி இயற்பெயர் அல்ல எனக் கூறும் தகவல் இருந்தால் அதையும் இணையுங்கள்.--இரா.பாலா (பேச்சு) 08:02, 5 பெப்ரவரி 2015 (UTC)

அன்புள்ள [[Balurbala|இரா.பாலா] தமிழ்ப் பெயர் வைக்கும் பொருட்டு திராவிடத் தலைவர்கள் அனைவரும் தங்களது பெயரை மாற்றினார்கள் என்பது சரி ஆனால் கருணாநிதி என்பது தமிழ்ப் பெயர் அல்ல அருளரசன் (பேச்சு) 09:15, 5 பெப்ரவரி 2015 (UTC)

அருளரசன், கருணாநிதி என்பது தமிழ்ப் பெயர் அல்ல எனும் விசயத்தில் நம் எதுவும் செய்யமுடியாதல்லவா? தமிழ் விக்கிப்பீடியாவில் நாம் முடிந்த அளவு தரவுகளோடு தகவல்களை எழுதுகிறோம் அவ்வளவே. அவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி, பின்னர் அவர் மாற்றிக்கொண்ட பெயர் கருணாநிதி அதற்குரிய மாற்றுத் தரவுகள் இருந்தால் அதையும் தாராளமாய் கட்டுரையில் இணைக்கலாம்.--இரா.பாலா (பேச்சு) 03:25, 6 பெப்ரவரி 2015 (UTC)
@Balurbala and Arulghsr: கருணாநிதி என்பது தான் இயற்பெயர். அவரே சொல்கிறார். இங்கு பார்க்கவும். --இரவி (பேச்சு) 15:06, 3 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மு._கருணாநிதி&oldid=2560817" இலிருந்து மீள்விக்கப்பட்டது