வாழிடத் துண்டாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

.

மத்திய ஆபிரிக்காவில், மனிதக் குரங்குகளின் (Great Ape) வாழிடங்கள் துண்டாடப்பட்டு அழிக்கப்படுகின்றன. GLOBIO பரணிடப்பட்டது 2005-10-30 at the வந்தவழி இயந்திரம் மற்றும் GRASP திட்டங்களில் இருந்து.

வாழிடத் துண்டாக்கம் (habitat fragmentation) என்பது, சூழலியல் மாற்றம் உருவாகின்ற ஒரு வழிமுறை ஆகும். இதன் பெயர் குறிப்பிட்டுக் காட்டுவது போலவே, இது, ஒரு உயிரினத்தின் விருப்பமான சூழலில் தொடர்ச்சியின்மை ஏற்படுவதைக் குறிக்கிறது. வாழிடத் துண்டாக்கம், நிலவியல் வழிமுறைகளினால் அல்லது மனிதச் செயற்பாடுகளினால் ஏற்படக் கூடும். நிலவியல் வழிமுறைகளினால் ஏற்படுகின்ற மாற்றம் மிகவும் வேகம் குறைந்தது. மெதுவாகவே இயற்பியற் சூழலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆனால் மனிதச் செயற்பாடுகளினால் ஏற்படும் நிலப் பயன்பாட்டு மாற்றங்கள் போன்றவை மிக வேகமாகச் சூழலில் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. முதல் முறையிலான மாற்றங்களே பல்வேறு உயிரினப் பிரிவுகள் தோன்றுவதற்குக் காரணமாக இருந்ததாக நம்பப்படுகிறது. ஆனால், இரண்டாவதான மனித செயற்பாடுகள், இன்று பல இனங்கள் அழிவதற்குக் காரணமாக இருக்கிறது.

வாழிடத் துண்டாக்கம், பெரும்பாலும், மனிதர்களால் ஏற்படுகின்றன. இது, வேளாண்மை, ஊரக வளர்ச்சி, நகராக்கம் போன்றவற்றுக்காக தாவர வகைகளை அழிக்கும்போது நடைபெறுகிறது. ஒரு காலத்தில் தொடர்ச்சியாக இருந்த வாழிடங்கள் (Habitats) துண்டுதுண்டாகப் பிரிவடைகின்றன. பெரும் எடுப்பிலான அழிப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னர், துண்டுதுண்டான வாழிடங்கள் மேலும் சிறுத்து ஒன்றுக்கொன்று தொடர்பற்ற தீவுகள் ஆகிவிடுகின்றன. இவை பயிர் நிலங்களாலும், புல்வெளிகளாலும், செயற்கைத் தளங்களாலும் சில வேளைகளில் தரிசு நிலங்களாலும் பிரிக்கப்படுகின்றன. தரிசு நிலங்கள், பொதுவாக, காட்டை அழித்து எரித்துப் பயிர் செய்யும் முறையின் விளைவாக உருவாகின்றன.

ஆஸ்திரேலியாவின், நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் மத்திய-மேற்குப் பகுதியில் 90% காடுகள் அழிக்கப்பட்டுவிட்டன. இது மோசமான வாழிடத் துண்டாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாழிடத்_துண்டாக்கம்&oldid=3371543" இலிருந்து மீள்விக்கப்பட்டது