இளம்புல்லூர்க் காவிதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இளம்புல்லூர்க் காவிதி சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடலாக ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை பாடல் எண் 89 ஆக வருகிறது.

புலவர் பெயர் விளக்கம்[தொகு]

புல்லாற்றூர் எயிற்றியனார் என்னும் சங்ககாலப் புலவர் ஒருவர் உள்ளார். அவரது ஊர் புல்லாற்றூர். இவரது ஊர் இளம்புல்லூர். (இப்போதுள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இது போன்ற ஊரின் பெயரை ஒத்திட்டுப் பார்த்துக்கொள்வது நல்லது. காவிதி என்பது உழவரில் சிறந்தவருக்குச் சங்ககால மன்னர்கள் வழங்கிய விருது.

பாடல் சொல்லும் செய்தி[தொகு]

இந்தப் பாடல் முல்லைத் திணை மேலது. பொருள் தேடச் சென்றவனின் பணி முடிந்தது. அவனுக்கு மேலும் பொருள் தேடும் ஆசை. திரும்பி வர மறுக்கிறான். இச்செய்தியைக் கேள்வியுற்ற தலைவி நெஞ்சழிந்து சொல்வதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.

மழைக்காலம் கழிந்துவிட்டது. இது பனிக்காலம். மயிர்க்காலிட்டுக் காய்த்திருக்கும் உழுத்தஞ் செடியில் பனியால் சறுகாகி உதிர்கின்றன. மாலைக்காலமும் வந்துவிட்டது. இன்னும் அவர் வரவில்ல என்று

"https://ta.wikipedia.org/w/index.php?title=இளம்புல்லூர்க்_காவிதி&oldid=3612199" இலிருந்து மீள்விக்கப்பட்டது