சிக்கிம் மாநிலங்களவை உறுப்பினர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய நாடாளுமன்றத்தின் 245 உறுப்பினர்கள் கொண்ட மேலவையான மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா என அழைக்கப்படுகின்ற அவையில் சிக்கிம் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர் ஒருவர். இவரது பதவிக்காலம் ஆறு ஆண்டுகள்.

மாநிலங்களவை இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை ஆகும். 1976 ஆம் ஆண்டு முதல் சிக்கிம் 1 உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கிறது, சிக்கிம் மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது.

உறுப்பினர்கள் பட்டியல்[தொகு]

ஆதாரம்:[1]

பெயர் கட்சி நியமனம் தேதி ஓய்வு பெறும் தேதி காலம் குறிப்புகள்
லேயனார்ட் ஸோலோமன் சரிங் இந்திய தேசிய காங்கிரசு 20/10/1975 19/10/1981 1
20/10/1981 19/10/1987 2
கம்சும் நம்க்யால் புல்கர் சிக்கிம் சங்ராம் பரிஷத் 20/10/1987 19/10/1993 1 01/03/1988 பதவி விலகல்
கர்மா டாப்டென் இந்திய தேசிய காங்கிரசு 30/03/1988 19/10/1993 1 1988 இடைத்தேர்தல்
24/02/1994 23/02/2000 2
கே.ஜி. பூட்டியா சிக்கிம் சனநாயக முன்னணி 24/02/2000 23/02/2006 1 12/08/2000 இறப்பு
பால்டன் செரிங் கியாம்ட்சோ 22/09/2000 23/02/2006 1 2000 இடைத்தேர்தல்
ஓங்டன் செரிங் லெப்சா 24/02/2006 23/02/2012 1
கிசே இலாச்சுங்பா 24/02/2012 23/02/2018 1
24/02/2018 23/02/2024 2 தற்போதைய உறுப்பினர்
  • மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருப்பவர்கள் இடையில் பதவியை விலக்கிக் கொண்டாலோ அல்லது இறப்பால் அந்த இடம் காலியாகும் நிலையில் முன்பிருந்த உறுப்பினரின் பதவிக் காலத்தின் மீதமுள்ள காலத்திற்கு மட்டுமே புதிய உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் பதவி வகிக்க முடியும்.

இதையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". rajyasabha.nic.in. Rajya Sabha Secretariat.

வெளி இணைப்புகள்[தொகு]