சரசாங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சரசாங்கி என்பது கருநாடக இசையில் 27வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண மேள பத்ததியில் சௌரசேனா என்று பெயர்.[1]

இலக்கணம்[தொகு]

சரசாங்கி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி231 ப த1 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி31 ப ம13 ரி2
  • பாண என்றழைக்கப்படும் 5 வது சக்கரத்தின் 3 வது மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), காகலி நிஷாதம்(நி3) ஆகிய சுரங்கள் வருகிறன.

சிறப்பு அம்சங்கள்[தொகு]

  • பிரத்தியாகத கமகம் இந்த இராகத்தின் களையை நன்றாகக் காட்டும்.
  • கருணைச்சுவை நிரம்பியது. எப்பொழுதும் பாடலாம்.
  • சர்வஸ்வர கமக வரிக இராகம்.
  • இதற்கு நேர் பிரதி மத்திம இராகம் லதாங்கி (63).
  • இது ஒரு மூர்ச்சனாகாரக மேளம். இதன் மத்திம, பஞ்சம முறையே கிரக பேதத்தின் வழியாக தர்மவதி, சக்ரவாகம் ஆகிய மேளங்களைக் கொடுக்கும்.

உருப்படிகள்[தொகு]

ஜன்ய இராகங்கள்[தொகு]

சரசாங்கியின் ஜன்ய இராகங்கள் இவை.

திரையிசைப் பாடல்கள்[தொகு]

சரசாங்கி இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்:

  • தானம்தன கும்மிகொட்டி :- அதிசயப் பிறவி

மேற்கோள்கள்[தொகு]

  1. Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரசாங்கி&oldid=3893835" இலிருந்து மீள்விக்கப்பட்டது