கவ்வாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவ்வாலி கலைஞர் பயிசு அலி பயிசு சிக்காகோவின் மில்லினியம் பூங்காவில்

கவ்வாலி (Qawwali, உருது/பெர்சியா/பாஷ்டோ/சிந்தி: قوٌالی; பஞ்சாபி: ਕ਼ੱਵਾਲੀ, قوٌالی; இந்தி: क़व्वाली; வங்காளம்: কাওয়ালী) தெற்கு ஆசியாவின் இசுலாம் தாக்கமுள்ள பகுதிகளில், பாக்கித்தானின் பஞ்சாப் , சிந்து மாநிலங்கள், இந்தியாவின் வடக்கு மாநிலங்களில், பரவலாக அறியப்படும் சுஃபி இசை வகையிலைமைந்த பக்திப் பாடல் இசையாகும். இவ்வகை இசை வடக்கு மற்றும் மேற்கு பாக்கித்தானிலும் வங்காள தேசம் மற்றும் காசுமீரிலும் குறைந்தளவிலேயே பரவி உள்ளது. இதன் வரலாறு 700 ஆண்டுகளுக்கும் முற்பட்டது.

துவக்கத்தில் தெற்கு ஆசியா முழுமையிலும் சுஃபி பள்ளிவாயில்களிலும் தர்காக்களிலும் மட்டுமே நிகழ்த்தப்பட்ட இந்த இசைவடிவம் பரப்பிசையாக பரிணாமம் அடைந்துள்ளது. பாக்கித்தானின் நுசுரத் பதே அலி கான் தனது இசைத் தொகுப்புகளினாலும் இசைவிழாக்களில் நேரடியாகப் பாடியும் பன்னாட்டளவில் இதனை அறிமுகப்படுத்தியுள்ளார். பாக்கித்தானின் சபரி சகோதரர்கள், அசீசு மியான் ஆகியோரும் இவ்வகையில் தேர்ந்த இசைக்கலைஞர்கள் ஆவர்.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கவ்வாலி&oldid=3355723" இலிருந்து மீள்விக்கப்பட்டது