டாட்டா ஸ்டீல் ஐரோப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாட்டா ஸ்டீல் ஐரோப்பா
வகைதுணை நிறுவனம்
நிறுவுகைகோனிங்கிளிஜ்கி ஹூகோவன்ஸ் என்.வி. (1918 இல்)
பிரித்தானிய ஸ்டீல் கார்ப்பரேசன் (1967)
கோரஸ் (1999)
தலைமையகம்லண்டன், ஐக்கிய இராச்சியம்
தொழில்துறைஸ்டீல்
உற்பத்திகள்இரும்பு
வருமானம்GB£10,142 மில்லியன் (2005)
இயக்க வருமானம்GB£680 மில்லியன் (2005)
நிகர வருமானம்GB£451 மில்லியன் (2005)
பணியாளர்50,000
தாய் நிறுவனம்டாட்டா ஸ்டீல், மற்றும் டாட்டா குழுமத்தின் உறுப்பினர்
இணையத்தளம்http://tatasteeleurope.com

டாட்டா ஸ்டீல் ஐரோப்பா (Tata Steel Europe, முன்னர் கோரஸ் குழு, Chorus Group) இலண்டனைத் தலைமையிடமாக கொண்ட ஒரு இரும்பு தயாரிக்கும் நிறுவனம். இது ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய இரும்பு-தயாரிப்பு நிறுவனம் ஆகும். மேலும் இதன் துணை நிறுவனம் இந்தியாவின் டாட்டா ஸ்டீல் உலகின் பத்து மிகப்பெரிய இரும்பு உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று.

கோரஸ் குழு 1999, அக்டோபர் 6 ஆம் நாள், பிரிட்டிஷ் ஸ்டீல் மற்றும் கொனிங்கிள்ஜ்கி ஊகோவன்சு (Koninklijke Hoogovens) ஆகிய நிறுவனங்களின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. 2007-இல் டாடா நிறுவனம் கோரஸ் நிறுவனத்தை வாங்கியது. 2010, செப்டம்பர் 27 இல் கோரஸ் நிறுவனம் டாட்டா ஸ்டீல் ஐரோப்பா எனப் பெயரை மாற்றியது. மேலும் டாட்டா நிறுவன அடையாளத்தை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது.

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டாட்டா_ஸ்டீல்_ஐரோப்பா&oldid=1362274" இலிருந்து மீள்விக்கப்பட்டது