உலக சுகாதார நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலக வரைபடம் நீரிழிவு நோயளிகள் (1,000 பேருக்கு) — உலக அளவில் சராசரி 2.8%.

  தகவல் இல்லை
  ≤ 7.5
  7.5–15
  15–22.5
  22.5–30
  30–37.5
  37.5–45

  45–52.5
  52.5–60
  60–67.5
  67.5–75
  75–82.5
  ≥ 82.5

உலக நலவாழ்வு நாள் (World Health Day) என்பது உலக சுகாதார அமைப்பின் அனுசரணையுடன் ஒவ்வோர் ஆண்டும் 7 ஏப்ரல் கொண்டாடப்படுகின்றது. 1948 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலக நலவாழ்வு மன்றத்தின் கூட்டம் ஒன்றில் ஒவ்வோர் ஆண்டும் 1950 இல் இருந்து உலக நலவாழ்வு நாளாகக் கொண்டாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அன்றில் இருந்து உலக நலவாழ்வு நிறுவனத்தால் முக்கியமான நலவாழ்வு தொடர்பான கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகின்றது.

உலக நலவாழ்வு நாள் 2007: வளமான எதிர்காலத்திற்காக நலவாழ்வில் அக்கறை செலுத்துங்கள்[தொகு]

  1. நலவாழ்வுக் கேடுகள் எல்லை கடந்தவை.
  2. வளமான எதிர்காலத்திற்காக நலவாழ்வில் அக்கறை செலுத்துங்கள்.
  3. நலவாழ்வே பாதுகாப்பை உறுதிப்படுத்தும். பாதுகாப்பின்மை உடல்நலக்கேட்டை உண்டுபண்ணும்.
  4. பன்னாட்டளவிலான நலவாழ்வு அச்சுறுத்தல்களுக்கு விரைந்து முகம் கொடுக்க வேண்டும்.
  5. உலக நலவாழ்வு நிறுவனம் உலகின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றது.

முன்னைய உலக நலவாழ்வு நாளின் கருப்பொருட்கள்[தொகு]

  1. 2007 - அனைத்துலக நலவாழ்வுப் பாதுகாப்பு.
  2. 2006 - ஒன்றுபட்டு நலவாழ்விற்காக உழைப்போம்.
  3. 2005 - ஒவ்வொரு தாயும் சேயும் தேவை என்பதை உணர்த்து
  4. 2004 - சாலை வீதிப் பாதுகாப்பு
  5. 2003 - குழந்தைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க சுற்றுச் சூழ்லை நலம்பேணுவோம்.
  6. 2002 - நலவாழ்வை நோக்கி நகர்வோம்.
  7. 2001 - மனவளம்: விலக்கி வைப்பதை விலக்குவோம். அக்கறையுடன் கவனிப்போம்.
  8. 2000 - பாதுகாப்பான குருதி என்னுடம் ஆரம்பிக்கட்டும்.
  9. 1999 - சுறுசுறுப்பான முதுமை இயங்கல் வேறுபாடானதே.
  10. 1998 - பாதுகாப்பான தாய்மை
  11. 1997 - முகிழ்த்துவரும் தொற்றுநோய்கள் தவிர்ப்போம்
  12. 1996 - தரமான வாழ்விற்கு நலமான நகரம்.
  13. 1995 - இளம் பிள்ளை வாதத்தை உலகின்றே விரட்டுவோம்.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_சுகாதார_நாள்&oldid=2965281" இலிருந்து மீள்விக்கப்பட்டது