மின்னிதழ்
மின்னிதழ் அல்லது இணைய இதழ் (ஆங்கில மொழி: online magazine) என்பது இணையத்தில் வெளிவரும் இதழ்களைக் குறிக்கிறது.[1][2] மின் + இதழ் என்பது மின்னிதழ் எனப் பெயர் பெற்றது. இது இணையப்பக்கமாகவோ இணையக் கோப்பாகவோ புரட்டும் புத்தகமாகவோ பொதுவாக வெளிவருகிறது. 2000களில் அச்சில் வந்த இதழ்கள் இணையத்தில் வெளிவரத் தொடங்கின.[3] இணையத்தில் மட்டுமே இயக்கும் இதழ்களும் 2010கள் வாக்கில் உருவாகின. பலரது படைப்புகளை ஒருங்கே இணைத்து குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து இற்றை செய்யப்படுவது மின்னிதழ்களின் அடிப்படை பண்பாகும்.
வகைகள்[தொகு]
அச்சு இதழ்களைப் போல வெளியீட்டு இடைவெளியின் அடிப்படையில் வார மின்னிதழ், மாத மின்னிதழ், காலாண்டு மின்னிதழ் என்று வகைப்படுத்தலாம். வெளியீடுகள் அடிப்படையில் அச்சு வடிவில் வந்தவற்றை இணையத்தில் வெளியிடும் இதழ்கள், இணையத்தில் மட்டும் வெளிவரும் இதழ்கள் என்று இருவகையாகப் பிரிக்கலாம்.[4] ஆய்விதழ்கள், கலை இலக்கிய இதழ்கள் மற்றும் பல்சுவை மின்னிதழ்கள் என்று உள்ளடக்கத்தின் அடைப்படையில் பிரிக்கலாம்.[5]
தமிழில் உள்ள சில மின்னிதழ்கள்[தொகு]
- உலகத்தமிழ்
- சொல்வயல்
- திண்ணை
- அரண்
- முத்துக்கமலம்
- ஆறாம்திணை
- சிறகு
- வல்லமை
- இனம்
- புலம்
இவற்றையும் பார்க்கலாம்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ ஆண்டோபீட்டர், மா. தமிழும் கணிப்பொறியும் (2002 ). கற்பகம் புத்தகாலயம்.
- ↑ தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள் (முதல் ). முனவைர் துரை மணிகண்டன்.
- ↑ Carr, David (2005-02-10). "The Founder of Salon Is Passing the Mouse" (in en-US). The New York Times இம் மூலத்தில் இருந்து 2021-01-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210126121221/https://www.nytimes.com/2005/02/10/books/the-founder-of-salon-is-passing-the-mouse.html.
- ↑ இல, சுந்தரம். கணினித் தமிழ் (முதல் ). விகடன். பக். 257.
- ↑ "5வது சுரண்டை மின்னிதழ் எழுதுங்கள்!". வலைத்தமிழ். பார்க்கப்பட்ட நாள் 30 December 2023.