இசிசாராஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசிசாராஸ்

இசிசாராஸ் (Isisaurus) என்பது கிரீத்தேசியக் காலத்தில் வாழ்ந்த சாரோபோடு வகையைச் சேர்ந்த தொன்மா ஆகும். இதுவரை கிடைத்த தொல்லுயிர் எச்சங்களை கொண்டு இந்த இசிசராஸ் தொன்மா தற்போதைய இந்தியா அமைந்துள்ள நிலப்பரப்பில் வாழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. டைட்டனோசாரஸ் வகையை சேர்ந்த ஒரு தாவர உண்ணி என விளக்கப்பட்டுள்ளது. இந்த தொன்மாவிற்கு குட்டையான நெடுக்கு வாக்கில் உயர்ந்த கழுத்தும் மற்ற தொன்மாக்களுடன் ஒப்பிடும் பொழுது சற்றே நீளமான முன்னங்கால்களும் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இந்த வேறுபாடே மற்றைய சாரோபோடுகளிடம் இருந்து இந்த இசிசாரசை வேறுபடுத்திக் காட்டுகிறது. கண்டுபிடிக்கப்பட்ட தொல்லுயிர் எச்சத்தின் படி இது 18 மீட்டர்கள் (60 அடி) வரை நீளமிருக்கலாம் எனவும், இதன் எடை 14000 கிலோகிராம் இருக்கலாம் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.[1][2][3]


உயிரியல் தொடர்பான இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Jain, Sohan L.; Bandyopadhyay, Saswati (1997). "New Titanosaurid (Dinosauria: Sauropoda) from the Late Cretaceous of Central India". Journal of Vertebrate Paleontology (Norman, Okla.: University of Oklahoma) 17 (1): 114. doi:10.1080/02724634.1997.10010958. 
  2. "Isisaurus colberti". Paleobiology Database. பார்க்கப்பட்ட நாள் December 31, 2012.
  3. Jeffrey A. Wilson; Upchurch, P. (2003). "A revision of Titanosaurus Lydekker (Dinosauria – Sauropoda), the first dinosaur genus with a 'Gondwanan' distribution". Journal of Systematic Palaeontology (Cambridge, U.K.: Cambridge University Press) 1 (3): 125–160. doi:10.1017/s1477201903001044. http://www-personal.umich.edu/~wilsonja/JAW/Publications_files/Wilson%26Upchurch2003.pdf. பார்த்த நாள்: December 31, 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசிசாராஸ்&oldid=3768853" இலிருந்து மீள்விக்கப்பட்டது