சத் பூசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்
கதிரவனுக்கு விடிகாலையில் செய்யும் பூசை.
பிற பெயர்(கள்)சத்தி
தாலா சத்
சூரிய சஷ்டி
கடைபிடிப்போர்இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் சமணர்கள்
வகைபண்பாடு, வரலாற்று மதிப்பு, சமய சார்பு
முக்கியத்துவம்உடல்நலம் பேணும் மேலும் விருப்பங்களை நிறைவேற்றும் கதிரவனுக்கு நன்றி தெரிவித்தல்
அனுசரிப்புகள்பூசைகள்,பிரசாதம்,கங்கையில் குளித்தல் மற்றும் உண்ணாநோன்பு உள்ளடங்கிய வழிபாடுகள் மற்றும் சமயச்சடங்குகள்
தொடக்கம்கார்த்திக் சட்டிக்கு இரண்டு நாட்கள் முன்பிலிருந்து
முடிவுகார்த்திக் சட்டிக்கு அடுத்த நாள்வரை
நாள்வட இந்திய கார்த்திகை (ஐப்பசி மாதம்) வளர்பிறை ஆறாம்நாள்

சத் (Chhath)(இந்தி:छठ}}, அல்லது தாலா சத் அல்லது சூரிய சட்டி எனப்படும் ஓர் இந்து விழாவாகும். உயிர்கள் வாழக் காரணமாக விளங்கும் கதிரவனுக்கு நன்றி தெரிவிக்குமுகமாக இவ்விழா கொண்டாடப்படுகிறது.[1] தாங்கள் நேர்ந்துகொண்ட விருப்பங்களை நிறைவேற்றியமைக்காகவும் நன்றி தெரிவிக்க இவ்விழா கடைபிடிக்கப்படுகிறது. கடுமையான வழிபாடு விதிகளைக் கொண்ட இவ்விழா நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. நீர்நிலைகளில் (கங்கை எனக் கருதி) குளித்து நீர்கூட அருந்தாது உண்ணாநோன்பிருத்தல்,நீரில் நெடுநேரம் நிற்றல் மற்றும் கதிர் எழும்,விழும் காலங்களில் அருக்கியம் (படையல்)விடுதல் என்ற கூறுகளை உள்ளடக்கியது.

இப்பண்டிகை பீகார், சார்க்கண்ட் மற்றும் நேபாளத்தின் டேரைப் பகுதியில் பரவலாக கொண்டாடப்பட்டாலும் தற்காலத்தில் இம்மக்கள் இடம் பெயர்ந்துள்ள நாட்டின் பிற பகுதிகளிலும் நகரங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.மும்பை[2] மற்றும் மொரீசியஸ்போன்ற இடங்களிலும் பெருந்திரளான மக்கள் ஆற்றோரங்களில் கூடி கொண்டாடுகின்றனர்.[3]

பீகாரின் முசாப்பூர் அருகே கிராமமொன்றில் ஆற்றுத்துறை

சத் பூசையும் மகாராட்டிர நிர்மாண சேனாவின் எதிர்ப்பும்[தொகு]

மிகப் பெருமளவில் மும்பையில் புதிதாகக் குடிபெயர்ந்த வட மாநிலத்தவர் சத் பூசையைக் கொண்டாடுவது "அரசியல் நோக்குடன்" வளர்க்கப்படுவதாகவும் "எண்ணிக்கை பலத்தை எடுத்துக் காட்டும் நாடகம்" என்றும் புதியதாக மகாராட்டிர நிர்மாண சேனா என்ற கட்சியை நிறுவிய ராஜ் தாக்ரே குற்றம் சாட்டினார்.ஆற்றோரங்களில் கொண்டாடப்பட்ட பண்டிகை கடலோரத்தில் கொண்டாடப்படுவதின் நோக்கத்தை கேள்வி எழுப்பினார்.[4] இவரது பேச்சுக்களுக்கு எதிராக பட்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.[5] மேலும் இவர் உள்ளூர் பண்பாட்டைச் சிதைப்பதாகவும் குற்றம் சாட்டினார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.aryabhatt.com/fast_fair_festival/Festivals/Chhath%20Festival.htm
  2. "Juhu Beach decks up for worshiping the sun god". DNA India. October 24, 2009. http://www.dnaindia.com/mumbai/report_juhu-beach-decks-up-for-worshipping-the-sun-god_1302371. பார்த்த நாள்: 2009-12-14. 
  3. "Festive fervour reaches Fiji, Mauritius". The Telegraph - Calcutta(Kolkata). October 24, 2009 இம் மூலத்தில் இருந்து 2012-10-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121023212257/http://www.telegraphindia.com/1091024/jsp/jharkhand/story_11652080.jsp. பார்த்த நாள்: 2009-12-14. 
  4. "Jaya takes on Raj; MNS, SP activists clash in Mumbai". த இந்து. 2008-02-03. http://www.rediff.com/news/2008/feb/03mns.htm. பார்த்த நாள்: 2008-04-04. 
  5. "Petition against Raj Thackeray in Patna court". Zee News. http://www.zeenews.com/articles.asp?aid=421796&sid=REG. பார்த்த நாள்: 2008-04-04. 
  6. "'Respect Marathi manoos or leave Mumbai'". ரெடிப்.காம். 2008-02-09. http://www.rediff.com/news/2008/feb/09mumbai.htm. பார்த்த நாள்: 2008-04-04. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்_பூசை&oldid=3265924" இலிருந்து மீள்விக்கப்பட்டது