தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989

← 1984 சனவரி 21, 1989 1991 →

தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 234 இடங்கள்
  First party Second party
 
தலைவர் மு. கருணாநிதி ஜெ. ஜெயலலிதா
கட்சி திமுக அதிமுக (ஜெ)
கூட்டணி தேசிய முன்னணி அதிமுக
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
துறைமுகம் போடிநாயக்கனூர்
வென்ற
தொகுதிகள்
150 27
மாற்றம் 125 7
மொத்த வாக்குகள் 8,001,222 5,098,687
விழுக்காடு 29.34% 21.15%
மாற்றம் 7.66 -

  Third party Fourth party
 
தலைவர் ஜி. கே. மூப்பனார் வி. என். ஜானகி இராமச்சந்திரன்
கட்சி காங்கிரசு அதிமுக (ஜா)
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
பாபநாசம் ஆண்டிப்பட்டி (தோல்வி)
வென்ற
தொகுதிகள்
26 2
மாற்றம் 35 95
மொத்த வாக்குகள் 4,780,714 2,214,965
விழுக்காடு 19.83% 9.19%
மாற்றம் 3.55 -

முந்தைய தமிழ்நாட்டு முதல்வர்

குடியரசுத் தலைவர் ஆட்சி

தமிழ்நாட்டு முதல்வர்

மு. கருணாநிதி
திமுக

தமிழ்நாட்டின் ஒன்பதாவது சட்டமன்றத் தேர்தல் 1989 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடை பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று, மு. கருணாநிதி மூன்றாம் முறையாக தமிழகத்தின் முதல்வரானார்.[1] ஆனால் அப்போது ஈழத்தமிழ்ற்கள் தமிழகத்தில் திமுக அரசு ஆதரித்ததால். அது தவறான இறையாண்மை கொள்கை என்று கூறி இரண்டே வருடங்களில் முதலமைச்சர் மு. கருணாநிதியின் திமுக ஆட்சியை அன்றைய மத்திய அரசுக்கு ஆதரவளித்த காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் அழுத்தத்தால் பிரதமர் சந்திரசேகரால் (அதர்வைஸ்) சட்டத்தை பயன்படுத்தி தமிழகத்தில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.

தொகுதிகள்[தொகு]

1989 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 189 பொதுத் தொகுதிகளில் இருந்தும் 45 தனித் தொகுதிகளில் இருந்தும் (தாழ்த்தப்பட்டவருக்கும், பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டவை) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[2]

அரசியல் நிலவரம்[தொகு]

  • கடந்த எம்ஜிஆரின் ஆட்சி காலத்தில் 1984 நாடாளுமன்ற/சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அமைத்த அதிமுககாங்கிரஸ் ஆட்சி காலத்தில் முதல்வர் எம். ஜி. ஆர் தனது 1984 முதல் 1987 வரை உடல் நலக்குறைவால் ஆட்சி செய்தார்.
  • அந்த ஆட்சி காலத்தில் தனது நல்ல திட்டங்களான சத்துணவு திட்டத்தை பெரிதாக விரிவுபடுத்தினார்.
  • ஈழத்தமிழ்ற்கள் மற்றும் விடுதலை புலிகள் தலைவர் வே. பிரபாகரன் ஆகியோருக்கு பல நிதி உதவி செய்தும் ஈழதமிழ் மக்கள் தமிழகத்தில் ஆதரவு அளித்தார். எம். ஜி. ஆர் அவர்கள்
  • கடந்த ஆட்சியில் அதிமுகவில் எம். ஜி. ஆர் வெகுநாட்களாக நடத்தாத ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலை நடத்தினார்.
  • ஆனால் அத்தேர்தலில் திமுகவின் கையே ஓங்கி இருந்தது.
  • தமிழக சட்டமன்றத்தில் செயல்பட்டு வந்த சட்டமன்ற மேலவை (எம்எல்சி)யை எம். ஜி. ஆர் கலைத்தார். இது இன்று வரை அவர் மீது பெரும் குற்றமாக சாற்றபட்டு வருகிறது.
  • அதே போல் மத்திய கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியில் பிரதமர் ராஜீவ் காந்தி பல சிறப்புடைய திட்டங்களை கொண்டு வந்தபோதிலும். தமிழகத்திற்கும் பல பயனுள்ள வகையில் இருந்தது.
  • அதில் குறிப்பாக நவோதயா எனப்படும். இந்தி வழி கல்வியை தமிழகத்தில் தனியாக நிர்வகிக்கபட்டது.
  • கடந்த ஆட்சி காலத்தில் தமிழக முதல்வராக இருந்த எம். ஜி. ராமச்சந்திரன் (எம்ஜிஆர்) டிசம்பர் 24, 1987 அன்று மரணமடைந்தார்.
  • பின்பு அவரது மறைவுக்குப் பின் யார் முதல்வராவது என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் (அதிமுக) சர்ச்சை எழுந்தது.
  • இதற்கிடையில் அதிமுகவினரின் ஒரு மனதாக முதல்வர் எம். ஜி. ஆர்க்கு பிறகு கட்சியில் மூத்த தலைவரான நாவலர் நெடுஞ்செழியன் அவர்களே இடைக்கால முதல்வராக பொறுப்பேற்று கொண்டார்.
  • ஆனால் இதை ஏற்க இயலாத கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆர். எம். வீரப்பன் அவர்கள் முதல்வர் எம்ஜியாரின் மனைவி வி. என். ஜானகியை முதல்வராக்கினார்.
  • ஆனால் அதை கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான ஜெ. ஜெயலலிதா ஏற்கவில்லை.
  • பின்பு 132 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட அதிமுகவில் 33 பேர் ஜெயலலிதாவை ஆதரித்தனர்.
  • மீதமுள்ள 99 சட்டமன்ற உறுப்பினர்கள் வி. என். ஜானகியை ஆதரித்தனர். எட்டாவது சட்டமன்றத்தின் பேரவைத் தலைவர் பி. எச். பாண்டியனும் ஜானகியை ஆதரித்தார். ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களை அவையிலிருந்து நீக்கினார்.
  • இரு ஆண்டுகளுக்கு முன்னர் 1986 இல் திமுகவின் பத்து உறுப்பினர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அரசியலமைப்பு சட்ட நகலை எரித்தற்காக இதே போன்று அவையிலிருந்து நீக்கப்பட்டிருந்தனர். எனவே சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 234 இல் இருந்து 191 ஆகக் குறைந்ததிருந்தது. புதிய அரசின் மீது ஜனவரி 26, 1988 இல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
  • இதில் எதிர்கட்சியான திமுக அதிமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களுக்கும் ஜானகி ஆதரவு உறுப்பினர்களுக்கும் இடையே சட்டமன்றத்தில் சச்சரவு ஏற்பட்டது.
  • அவைத் தலைவர் ஜெயலலிதா தரப்பு உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றி, வெறும் 111 உறுப்பினர்களுடன் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார். வி. என். ஜானகி இராமச்சந்திரன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற போதிலும்.[3][4][5]
  • ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் 117க்கும் குறைவான சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதை காரணம் காட்டியும், சட்டமன்ற அவையில் நடைபெற்ற குழப்பங்கள் மற்றும் அராஜக அடிதடி செயலை காரணம் காட்டி அன்றைய தமிழக ஆளுநர் சுந்தர் லால் குரோனா கொடுத்த அறிக்கையை வைத்து இந்தியப் பிரதமர், ராஜீவ் காந்தியின் மத்திய அரசு ஜானகியின் அரசைக் கலைத்து தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்தியது.
  • பின்பு அதிமுக இரண்டாகப் பிளவு பட்டது. தேர்தல் ஆணையம் இரு கட்சிகளையும் அதிகாரப்பூர்வமான அதிமுகவாக ஏற்க மறுத்து, அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தை முடக்கியது. அதிமுக (ஜா) அணிக்கு இரட்டைப் புறா சின்னமும், அதிமுக (ஜே) அணிக்கு சேவல் சின்னமும் வழங்கப்பட்டன. எந்த அதிமுக அணிக்கு ஆதரவளிப்பது என்ற பிரச்சனை மற்ற கட்சி தலைவர்களுக்கும், வாக்காள மக்களுக்கும் ஏற்பட்டது.
  • இதனால் அதிமுக கூட்டணியில் இருந்து ஆதரவளிக்காமல் விலகிய காங்கிரஸ் கட்சியின் பிரதமர் ராஜீவ் காந்தி செயல்பாட்டை எதிர்த்து கருத்து வேறுபாட்டால் ஜி. கே. மூப்பனார் தலைமையில் செயல்பட்ட தமிழக காங்கிரசிலிருந்து நடிகர் சிவாஜி கணேசன் வெளியேறி தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதுக் கட்சி தொடங்கினார்.
  • அதில் அதிமுக (ஜா) அணியான எம்ஜிஆரின் மனைவி வி. என். ஜானகிக்கு ஆதரவாக தேர்தல் களத்தில் சிவாஜி கணேசன் செயல்பட்டார்.[6][7][8][9][10][11][11][12]

கூட்டணிகள்[தொகு]

1989 தேர்தலில் நான்கு முனைப் போட்டி காணப்பட்டது. திமுக - ஜனதா தளம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அதிமுக (ஜெ) - இந்திய கம்யூனிஸ்ட், அதிமுக (ஜா) - தமிழக முன்னேற்ற முன்னணி, காங்கிரஸ் தனித்தே போட்டியிட்டது. மேலும் இத்தேர்தலில் களத்திலிருந்த முக்கிய கூட்டணி கட்சிகள் ஆகும்.[11][12][13]

தேர்தல் முடிவுகள்[தொகு]

ஜனவரி 21, 1989 இல் 232 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 69.69 % வாக்குகள் பதிவாகின. மருங்காபுரி மற்றும் மதுரை கிழக்கு ஆகிய இரு தொகுதிகளுக்கு நிர்வாக காரணங்களால் தேர்தல் நடைபெறவில்லை; இருமாதங்கள் கழித்து மார்ச் 11 ஆம் நாள் நடைபெற்றது. இதற்குள் அதிமுக கட்சி ஒன்றிணைந்து விட்டதால், மீண்டும் அதற்கு “இரட்டை இலை” சின்னம் ஒதுக்கப்பட்டது. ஜெயலலிதா தலைமையிலான அக்கட்சியே இரு தொகுதிகளிலும் வென்றது. கீழிலுள்ள பட்டியலில் இந்த இரு தொகுதிகளின் முடிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.[14][15][16]

திமுக இடங்கள் அதிமுக (ஜெ) இடங்கள் மற்றவர்கள் இடங்கள்
திமுக 150 அதிமுக (ஜெ) 27 அதிமுக (ஜா) 2
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 15 இந்திய கம்யூனிஸ்ட் 3 காங்கிரசு 26
ஜனதா தளம் 4 தமிழக முன்னேற்ற முன்னணி 2
சுயேட்சைகள் 5
மொத்தம் (1989) 169 மொத்தம் (1989) 30 மொத்தம் (1989) 35
மொத்தம் (1984) 24 மொத்தம் (1984) -- மொத்தம் (1984) 17

அதிமுகவின் ஒற்றுமையின்மையால் அக்கட்சியின் வழக்கமான ஆதரவு சிதறிவிட்டது. தனது வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்ட திமுக குறைவான வாக்குகளைப் பெற்றாலும், பெருவாரியான இடங்களில் வென்றது.[9]

ஆட்சி அமைப்பு[தொகு]

திமுக தனிப்பெரும்பான்மை பெற்று அக்கட்சியின் தலைவர் மு. கருணாநிதி அவர்கள் சுமார் 13 வருடங்கள் கழித்து மூன்றாவது முறையாக முதல்வரானார்.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. திமுக-வுக்கு திருப்பு முனையாக அமைந்த 1989 சட்டமன்றத் தேர்தல்
  2. "The State Legislature - Origin and Evolution". Tamil Nadu Government. Archived from the original on 13 ஏப்ரல் 2010. பார்க்கப்பட்ட நாள் 27 November 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Kaliyaperumal, M (1992). The office of the speaker in Tamilnadu : A study. Madras University. பக். 100 இம் மூலத்தில் இருந்து 2011-07-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110721181440/http://dspace.vidyanidhi.org.in:8080/dspace/bitstream/2009/4880/5/MAU-1992-055-4.pdf. பார்த்த நாள்: 2010-08-28. 
  4. "The Tamil Nadu Legislative Assembly, XVII Assembly Third Session (12 November - 22 December, 1986)" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 2011-01-05. பார்க்கப்பட்ட நாள் 2010-01-05.
  5. "The Tamil Nadu Legislative Assembly, VIII Assembly Sixth Session (27-28 January, 1986)" (PDF). Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2010-01-05.
  6. The politics of governor's office, The Business Line - 03 November 2003
  7. "A political agenda, Frontline - 15 November 1997". Archived from the original on 7 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 28 ஆகஸ்ட் 2010. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  8. All For You, Amma Outlook Magazine 13 March 1996
  9. 9.0 9.1 Raising The Dead Outlook Magazine 24 January 1996
  10. Thakurta, Paranjoy Guha; Shankar Raghuraman (2004). A Time of Coalitions. SAGE. பக். 235–236. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0761932372. http://books.google.co.uk/books?id=pjzyK_gEBcwC. 
  11. 11.0 11.1 11.2 Subramaniamn, TS (2004-07-30). "Celluloid connections". Frontline இம் மூலத்தில் இருந்து 2007-11-14 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20071114203713/http://www.hinduonnet.com/fline/fl2115/stories/20040730003803600.htm. பார்த்த நாள்: 2009-01-21. 
  12. 12.0 12.1 Kantha, Sachi Sri (2008-11-09). "Book Review: Autobiography of Actor-Politician Sivaji Ganesan". Sangam. http://www.sangam.org/2008/11/Sivaji_Ganesan.php?uid=3155&print=true. பார்த்த நாள்: 2009-01-21. 
  13. South India Election Will Test Political Strength of Gandhi, The New york Times 21 January 1989
  14. Ganesan, P. C. (1996). Daughter of the South: biography of Jayalalitha. Sterling Publishers. பக். 57. ISBN 8120718798, ISBN 9788120718791. http://books.google.com/books?client=firefox-a&cd=3&id=UsNuAAAAMAAJ&dq=1989+marungapuri+madurai+east&q=marungapuri+#search_anchor. 
  15. The Journal of parliamentary information, Volume 35. Lok Sabha Secretariat. 1996. பக். 228. http://books.google.com/books?id=59ONAAAAMAAJ&q=1989+marungapuri&dq=1989+marungapuri&client=firefox-a&cd=2. 
  16. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India accessed April 19, 2009

வெளி இணைப்புகள்[தொகு]

1989 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்