சந்தாதாரர் அடையாளத் தொகுதிக்கூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


நோகியா 6233 இல் அதனுடைய மின்சார தொடர்புகளுக்குப் பக்கத்தில் ஒரு மினி சிம் அட்டை

ஒரு சந்தாதாரர் அடையாளத் தொகுதிக்கூறு தமிழ்:செறிவட்டை அல்லது நீக்கக்கூடிய சிம் அட்டை (SIM), மொபைல் தொலைபேசி சாதனங்களில் (கைபேசி மற்றும் கணினி போன்றவை) சந்தாதாரரை அடையாளங்காணப் பயன்படுத்தக்கூடிய சந்தாதாரர் சேவை குறியீட்டைப் (IMSI) பாதுகாப்பாக சேமிக்கிறது. ஒரு கைபேசியிலிருந்து சிம் அட்டையை உருவிவிட்டு மற்றொரு கைபேசி அல்லது பிராட்பாண்ட் தொலைபேசி சாதனத்தில் உள்செருகுவதன் மூலம், பயனர்கள் தொலைபேசிகளை மாற்றுவதற்கு சிம் அட்டைகள் அனுமதிக்கின்றன.

ஒரு சிம் அட்டை, அதற்குரிய தனித்தன்மையிலான வரிசை எண், மொபைல் பயனரின் சர்வதேச ரீதியிலான தனித்தன்மைவாய்ந்த எண் (IMSI), பாதுகாப்புடன் செல்லத்தக்கதாக்கல் மற்றும் மறைகுறியீட்டுத் தகவல், உள்ளூர் நெட்வர்க்குக்குத் தொடர்புடைய தற்காலிகத் தகவல், பயனர் அணுக்கம் செய்யக்கூடிய சேவைகளின் பட்டியல் மற்றும் இரு கடவுச்சொற்கள் (வழக்கமான உபயோகத்திற்கு PIN மற்றும் அன்லாக்கிங் செய்வதற்கு PUK) ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது.

சிம் அட்டைகள் நிர்ணயிக்கப்பட்ட மூன்று அளவுகளில் கிடைக்கப்பெறுகின்றன. முதலாவது ஒரு கடன் அட்டை (85.60மிமீ × 53.98மிமீ x 0.76மிமீ) அளவில் இருக்கிறது. புதிதான, மிகவும் பிரபலமான மினியேச்சர் பதிப்பு அதே தடிப்புத்தன்மையைக் கொண்டிருக்கிறது, ஆனால் நீளத்தில் 25மிமீ மற்றும் அகலத்தில் 15மிமீ கொண்டிருக்கிறது, மேலும் தவறான உள்செருகலைத் தவிர்ப்பதற்கு அதன் ஒரு முனை வெட்டப்பட்டிருக்கும் (சாய்வளைவாக). மிகப் புதிய உருவமான 3FF அல்லது மைக்ரோ சிம் என்றழைக்கப்படுவது, 15மிமீ × 12மிமீ அளவினைக் கொண்டிருக்கிறது. இரு சிறு அளவுடைய பெரும்பாலான அட்டைகளும் ஒரு முழு-அளவிலான அட்டையாகவே வழங்கப்படுகிறது, இதில் சிறிய அட்டைகள் பிளாஸ்டிக் இணைப்புகளால் பிடிப்பில் வைக்கப்பட்டிருக்கின்றன; சிறிய சிம்களைப் பயன்படுத்தும் சாதனங்களில் பயன்படுத்துவதற்காக இவை எளிதில் உடைக்கப்படலாம்.

முதல் சிம் அட்டை 1991 ஆம் ஆண்டில் செய்யப்பட்டது, இதில் முனிச் ஸ்மார்ட் அட்டை தயாரிப்பாளர் கீய்செக்கெ & டெவ்ரியண்ட், முதல் 300 சிம் அட்டைகளை, ஃபின்லாந்து கம்பியற்ற நெட்வர்க் வழங்குநர் ரேடியோலின்ஜாவுக்கு விற்றது.

ஸ்மார்ட் கார்ட் தொழில்நுட்பம்[தொகு]

சிம் சிப் கட்டமைப்பு மற்றும் பாக்கேஜிங்கின் விளக்க வரைபடம்

சிம் கார்டுகளுக்கு மூன்று நிர்ணயங்கள் இருக்கின்றன: ISO/IEC 7816 பிரிவு A, B மற்றும் C (5V, 3V மற்றும் 1.8V). 1998 ஆம் ஆண்டுக்கு முன்னர் தொடங்கப்பட்ட பெரும்பாலான சிம் அட்டைகளின் இயங்கும் வோல்டேஜ் 5V ஆக இருந்தது. அதற்குப்பின்னர் தயாரிக்கப்பட்ட சிம் கார்டுகள் 3V மற்றும் 5V அல்லது 1.8V மற்றும் 3V உடன் ஒத்தியலக்கூடியவையாக இருக்கின்றன.

ஒவ்வொரு சிம் அட்டையும் தனித்தன்மையிலான சர்வதேச மொபைல் சந்தாதாரர் அடையாளத்தை (IMSI), பின்வரும் எண் வடிவில் சேமிக்கிறது:

  • முதல் 3 இலக்கங்கள் மொபைல் நாட்டின் குறியீட்டைக் (MCC) குறிக்கிறது.
  • அடுத்த 2 இலக்கங்கள் மொபைல் நெட்வர்க் குறியீட்டைக் (MNC) குறிக்கிறது.
  • அடுத்த 10 இலக்கங்கள் மொபைல் நிலைய அடையாள எண்ணைக் குறிக்கிறது.

சிம் அட்டை ஒரு ஸ்மார்ட் கார்டாக இருப்பதால், அது சர்வதேச நிர்ணயமான ISO/IEC 7812 வை அடிப்படையாகக் கொண்டு ICC-ID எண்ணையும் கூட கொண்டிருக்கிறது. காணக்கூடிய அட்டை எண்ணின் அதிகபட்ச நீளம் 20 எழுத்துகள்; 19 இலக்கங்கள் விரும்பத்தக்கதாக இருக்கிறது, ஆனால் தொலைதொடர்பு நெட்வர்க் வழங்குநர்கள் ஏற்கெனவே நிலை 1 இல் வழங்கும் 20 இலக்க நீள அடையாள எண்ணுடன் கூடிய சிம் அட்டைகளை வழங்கி இந்த நீளத்தைத் தக்கவைத்துக் கொள்ளலாம். அந்த எண் பின்வரும் துணைபாகங்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது:

வழங்குநர் அடையாள எண் (அதிக. 7 இலக்கங்கள்)[தொகு]

  • மேஜர் இண்டஸ்ட்ரி ஐடென்டிஃபையர் (MII), 2 இலக்கங்கள், 89 தொலைதொடர்பு நோக்கங்களுக்கு.
  • நாடு குறியீடு 1-3 இலக்கங்கள், ITU-T ஆல் வரையறுக்கப்பட்டது போல், பரிந்துரை E.164.
  • வழங்குநர் அடையாளங்காட்டி, மாறக்கூடியது.

தனிநபர் கணக்கு அடையாளம் காணுதல்[தொகு]

  • தனிநபர் கணக்கு அடையாளம் காணும் எண்.
  • ஒப்புமை பரிசோதனை இலக்கம்.

W-சிம் என்னும் சிம் அட்டை, உள்ளீடு செல்லுலார் தொழில்நுட்பத்தை அட்டையின் உள்ளேயே ஒருங்கிணைக்கச் செய்யக்கூடிய ஒன்றாகும்.

விர்சுவல் சிம் என்பது, மொபைல் நெட்வர்க் ஆபரேட்டரால் வழங்கப்படும் ஒரு மொபைல் தொலைபேசி எண், இதற்குப் பயனரின் மொபைல் போனில் வரும் தொலைபேசி அழைப்புகளை நிறுத்துவதற்காக ஒரு சிம் கார்ட் தேவைப்படுவதில்லை.

அட்டை அளவுகள்[தொகு]

மினி சிம் அட்டைகள் மற்றும் மாக்ரோ சிம் அட்டைகள் வழக்கமாக எவ்வாறு ஒரு முழு அளவு கேர்ரீயரில் அளிக்கபடுகிறது என்பதைக் காட்டும் ஒரு விளக்கப்படம்

சிம் அட்டைகள் முதலில் கடன் அட்டை அளவைப் (85.60மிமீ × 53.98 மிமீ × 0.76 மிமீ) போன்றே செய்யப்பட்டது. சிறிய வடிவிலான மொபைல் சாதனங்களின் உருவாக்கம் சிறு வடிவிலான சிம் அட்டையான, மினி சிம் அட்டை, உருவாக்கத்திற்கு வழிசெய்தது. மினி சிம் அட்டைகள், முழு அளவு அட்டைகளின் அதே தடித்த தன்மையைக் கொண்டிருக்கின்றன, ஆனால் அவற்றின் நீளம் மற்றும் அகலம் 25மிமீ × 15மிமீ அளவுக்கு குறைக்கப்பட்டிருக்கிறது.

முழு அளவு அட்டை போன்றே அதே தொடர்பு ஒழுங்குமுறையை மினி சிம் அட்டை கொண்டிருக்கிறது, மேலும் அவை வழக்கமாக ஒரு முழு அளவு அட்டைக்குள்ளாகவே, பல இணைப்புத் துண்டுகளால் இணைக்கப்பட்டிருக்கும. ஒரு முழு-அளவு அட்டை தேவைப்படும் சாதனங்களில் பயன்படுத்த, அத்தகைய அட்டைகள் அவ்வாறு வழங்கப்படுவதற்கு இந்த ஏற்பாடு அனுமதிக்கிறது அல்லது மினி சிம் அட்டை தேவைப்படும் சாதனத்தில் பயன்படுத்துவதற்கு மினி சிம் அட்டையைச் சுத்தமாக கைகளால் ஒடித்து எடுப்பதற்கு ஏற்ப அதன் விளிம்புகளில் பொருத்தமான கீற்றுடன் தயாரிக்கப்படுகிறது.

இன்னும் சிறிய சாதனங்களின் அளவுகள் கூட, இன்னும் சிறிய அட்டை அளவான, 3FF அல்லது மைக்ரோ சிம் உருவாக்கத்திற்கு வழிசெய்திருக்கிறது. மைக்ரோ சிம் கார்டுகள் மீண்டும் அதே அளவு தடிப்புத்தன்மை மற்றும் தொடர்பு ஏற்பாடுகளைக் கொண்டிருக்கிறது ஆனால் நீளமும் அகலமும் 15மிமீ × 12 மிமீ அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது. அட்டை அளவை மாற்றியமைப்பதற்கும் மேலாக, 3FF அல்லது மைக்ரோ சிம்மிற்கான திட்ட விவரங்களில் கூடுதல் செயல்பாட்டுத்தன்மையும் உள்ளடங்கியிருக்கிறது.

சிம் அட்டை அளவுகள்

மொபைல் தொலைபேசி நிர்ணயங்களில் பயன்படுத்தும் முறை[தொகு]

File:Thuraya sim.jpeg|thumb|right|துரயா சாட்டிலைட் தொலைபேசிக்கான சிம் அட்டை ஜிஎஸ்எம் சாதனங்களில் சிம் கார்ட்டுகளைப் பயன்படுத்துவது கட்டாயமாகிறது. UMTS இல் சிம்மிற்கு இணையான இது யூனிவெர்சல் இன்டிகிரேடெட் சர்க்யுட் கார்ட் (UICC) என்றழைக்கப்படுகிறது, இது ஒரு USIM பயன்பாட்டை இயக்குகிறது, அதே நேரத்தில் நீக்கப்படும் பயனர் அடையாளத் தொகுப்பு (R-UIM), CDMA-ஆதார சாதனங்களில் மிகப் பிரபலமாக இருக்கிறது, எ.கா: CDMA2000. UICC அட்டை இன்னமும் பேச்சு வழக்கில் ஒரு சிம் அட்டையாகவே அழைக்கப்படுகிறது. பல CDMA-ஆதார நிர்ணயங்கள் எந்தவித நீக்கக்கூடிய அட்டைகளையும் உட்கொண்டிருப்பதில்லை, மேலும் அந்தச் சேவை கைபேசிக்குள்ளாகவே இருக்கும் தனித்தன்மையிலான அடையாளப்படுத்தியுடன் வரம்பிடப்பட்டிருக்கிறது.

சாட்டிலைட் தொலைபேசி நெட்வர்க்குகளான இரிடியம், துரையா மற்றும் இன்மார்சாட்டின் BGAN கூட சிம் அட்டைகளைப் பயன்படுத்துகின்றன. சிலநேரங்களில் இந்தச் சிம் அட்டைகள் வழக்கமான ஜிஎஸ்எம் தொலைபேசிகளில் வேலை செய்யும், மேலும் ஜிஎஸ்எம் வாடிக்கையாளர்களை ஒரு சாட்டிலைட் தொலைபேசியில் தங்களுடையதேயான சிம் அட்டையைப் பயன்படுத்தி சாட்டிலைட் நெட்வர்க்குகளில் ரோம் செய்யவும் அனுமதிக்கிறது.

மொபைல் விர்சுவல் நெட்வர்க் ஆபரேட்டர் (MVNO) களின் மொபைல் டெலிகாம் ஆபரேட்டர்கள்/கேர்ரீர் வர்த்தகங்களுக்கு, சிம் அட்டை புதிய மற்றும் குறிப்பிடத்தக்க வர்த்தக வாய்ப்புகளை அறிமுகப்படுத்தியது, இவை ஒரு செல்லுலார் டெலிகாம்ஸ் நெட்வர்க்குகளை உடைமைகொண்டிருப்பதுமில்லை அல்லது இயக்குவதுமில்லை, ஆனால் ஒரு நெட்வர்க் ஆபரேட்டரிடமிருந்து கொள்ளளவைக் குத்தகை பெற்று, தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிம் அட்டையை மட்டுமே வழங்குகிறது. MVNO க்கள் முதலில் டென்மார்க், ஹாங்காங், ஃபின்லாந்து மற்றும் யுகே வில் தோன்றியது, இன்று 50க்கும் மேலான நாடுகளில் தன் இருப்பைக் கொண்டிருக்கிறது, இதில் உலகம் முழுவதிலுமுள்ள எல்லா மொபைல் தொலைபேசி சந்தாதாரர்களில் தோராயமாக 10% த்தினர், பெரும்பாலான ஐரோப்பா, யுஎஸ்ஏ, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஆசியாவின் பல பகுதிகளுக்குள் அடங்குவர்.

Globalize|date=அக்டோபர் 2009 சில நெட்வர்க்குகளில், மொபைல் தொலைபேசி அதன் கொண்டுசெல்லும் சிம் அட்டையுடன் பூட்டப்படும், எ.கா: யுஎஸ்ஏ மற்றும் யுகேவில் உள்ள ஜிஎஸ்எம் நெட்வர்க்குகள். மொபைல் தொலைபேசிகள் மிகுதியாக பணஉதவி பெறும் நாடுகளில் மட்டுமே இவ்வாறு நிகழ்வதற்கு முயற்சி செய்கிறது, இருந்தபோதிலும் எல்லா நாடுகளும் மற்றும் எல்லா ஆபரேட்டர்களும் அவ்வாறு இல்லை. யுஎஸ்ஸில் தொலைபேசிகள் கேர்ரீயருடன் பூட்டப்படுகிறது, அதன் பொருள், குறிப்பிட்ட கேர்ரீயர்களின் சிம் அட்டைகள் மட்டுமே வேலை செய்யும். யுகேவில், ஒரே மாதிரியாக பணஉதவியுடன் பெறப்பட்ட பெரும்பாலான தொலைபேசிகள் சிம் பூட்டுகளாக இருக்கின்றன.

ஒப்பந்தத்துடன் விற்கப்பட்ட தொலைபேசிகள் பெரும்பாலும் தொலைபேசியை வழங்கிய நெட்வர்க்குடன் பூட்டப்பட்டிருக்கும் (சிம்-பூட்டுதல்), ஏனெனில் குறைந்தபட்ச காலநேரத்திற்கு (வழக்கமாக 12 அல்லது 24 மாதங்கள்) வழங்குநரைப் பயன்படுத்தியதற்குப் பதிலாக அந்தத் தொலைபேசிகள் அவ்வப்போது மான்யப்படுத்தப்படுகிறது. உதாரணத்திற்கு யுகேவில், எந்த ஒப்பந்தமும் இல்லாத £250 மதிப்புள்ள தொலைபேசி எந்தக் கட்டணமும் இல்லாமல் வழங்கப்படும், ஆனால் மாதத்திற்கு £30 என 18 மாத ஒப்பந்த மேற்கொள்ளல் (ஒட்டுமொத்தமாக £540 மேற்கொள்ளல்) மூலம் வழங்கப்படும்.

மிகுதியான ஆன்லைன் மற்றும் ஹை-ஸ்ட்ரீட் (மூன்றாம்-தரப்பு) வர்த்தகங்கள் இப்போது ஒரு தொலைபேசியிலிருந்து சிம்-லாக்கை நீக்கும் திறன்களை வழங்குகின்றன, இதன் மூலம் வேறு சிம் அட்டையை உள்செருகுவதன் மூலம் எந்த நெட்வர்க்கிலும் தொலைபேசியைப் பயன்படுத்துவதற்கு பயனுடைய வகையில் இயலச் செய்கிறது. வேறொரு நாட்டிற்கு வரும் பயணிகள், ரோமிங் கட்டணங்களைக் குறைப்பதற்காகத் தங்கள் தொலைபேசிக்குள் ஒரு உள்ளூர் சிம் அட்டை போட்டுக்கொள்ள நினைப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள ஆதாயம். பல நாடுகளில் இப்போது எளிதாக ஒரு கடைக்குச் சென்று ப்ரீ-பே சிம் அட்டையை வாங்குவது சாத்தியமாக இருக்கிறது, மேலும் இந்த சிம்-மட்டுமே வாணிகம், பயணம் மேற்கொள்ளும்போது தொடர்ந்து தொடர்பில் இருப்பதற்கான குறைந்த செலவுடைய வழியாக இருக்கிறது.

ப்ரீ-பே வாக விற்கப்படும் தொலைபேசிகள் பெரும்பாலும் இயக்குபவர் மான்யத்துடன் கிடைக்கப்பெறும், குறிப்பாக யுகே போன்ற போட்டி மொபைல் சந்தைகளில் இது நிலவுகிறது. இந்தத் தொலைபேசிகள் மொபைல் தொலைபேசி அங்காடிகளில் மட்டுமே விற்கப்படுவதில்லை, சூப்பர் மார்க்கெட்கள், கேடலாக்குகள், ஸ்டேஷனரி கடைகள் மற்றும் ஆன்லைன் மூலமாகவும் கிடைக்கப்பெறுகிறது; இவ்வாறாக மொபைல் நிறுவனங்கள் தொடர்ந்து குறைந்த விலையை நோக்கிச் செல்கின்றன. ப்ரீ-பே தொலைபேசிகள் இணைக்கப்பட்ட சிம்முடன் வருகிறது, இது தொலைபேசி வாங்க நேர்ந்தால் பயனரால் செயல்படுத்தப்படலாம். கைபேசிகள் பெரும்பாலும் சிம்-லாக் செய்யப்பட்டவையாக வரும், இது பயனர் வேறொரு ஆபரேட்டரைப் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதிபடுத்துவதற்கானது, மேலும் அசல் ஆபரேட்டர் இறுதியில் அதன் மான்யத்தை ஈடுசெய்வதற்கு அனுமதிக்கிறது. எனினும், இந்த யூனிட்கள் ஒரு சிறு கட்டணத்தின் மூலம் அன்லாக் செய்ய முடியுமாதலால் (ஆபரேட்டர்கள் தாங்களே கூட இந்தச் சேவைகளை வழங்குகிறார்கள்), இவற்றைக் குறைந்த விலையில் வாங்கலாம், அசல் சிம் அட்டையிலிருந்து பிரிக்கப்பட்டு, ஒருவேளை இதர சந்தைகளில், ஒப்பந்த தொலைபேசிகளில் இலாபத்துடன் விற்கப்படலாம். தொழில்துறையில் இது பாக்ஸ் பிரேக்கிங் என்று அறியப்படுகிறது, மேலும் இது பெரும்பாலும் ஆபரேட்டரின் இலாபத்தைப் பாதிக்கிறது, அதேநேரத்தில் குற்றத்தில் உடந்தையாக இருக்கும் விற்பனை ஊழியர்கள் மற்றும் பாக்ஸ் பிரேக்கர்கள் அதன் இலாபத்தை அறுவடை செய்ய அனுமதிக்கிறது. ப்ரீபெய்ட் கைபேசி உடைந்துவிட்டால், சிம் அட்டை (ப்ரீபெய்ட் கணக்கு மதிப்பு, அத்துடன் பயனரின் முகவரிப் புத்தகம், வரலாறு, முதலானவற்றை பிரதிநிதிக்கக்கூடியது) மற்றொரு ப்ரீபெய்ட் கைபேசிக்கு, அந்தத் தொலைபேசி-நெட்வர்க் ஒன்றாகவே இருந்தால் மாற்றப்படலாம். அதாவது, ப்ரீபெய்ட் தொலைபேசிகளில் கணக்கு, எடுத்துச்செல்லக்கூடிய சிம் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளதே தவிர கைபேசியில் அல்ல. இது பயனுள்ளதாக இருக்கிறது, ஏனெனில் 2010 ஆம் ஆண்டுக்குள், பயனர் ஒரு கணக்கில் சேமித்து வைத்துள்ள மதிப்பைக் காட்டிலும் ப்ரீபெய்ட் கைபேசிகள் குறைந்த விலையைக் கொண்டிருக்கும்.

பெரும்பாலும், ஜிஎஸ்எம் மற்றும் 3ஜி மொபைல் கைபேசிகள் எளிதாக சிம்-அன்லாக் செய்யப்பட்டு பொருத்தமான எந்த நெட்வர்க்குடனும் எந்த சிம் அட்டையுடனும் பயன்படுத்தமுடியும். இதில் கவனிக்கத்தக்க விலக்காக இருப்பது ஆப்பிள் ஐபோன், இதில் பெரும்பாலான சந்தைகளில் ஆப்பிள் தங்களுடைய தொலைபேசிகளைப் பூட்டி-வைக்கும் அளவுக்குச் சென்றுள்ளது; இவ்வாறு அவை அதன் கூட்டாளியின் நெட்வர்க்கில் மட்டுமே பயன்படுத்தமுடியும். இது ஜெயில் பிரேக் என்றழைக்கப்படும் பிரபல ஹாக் உருவாக்கத்திற்குக் காரணமாயிற்று, இது ஆப்பீளால் அங்கீகரிக்கப்படாத கஸ்டம் மென்பொருளைத் தொலைபேசியில் இயங்க அனுமதிக்கிறது. தொலைபேசியை அன்லாக் செய்வதற்கு அந்த மென்பொருள் இயக்கப்படலாம், அது ஐபோனைக் கூட்டாளி நெட்வர்க்கிலிருந்து விடுவிக்கிறது; இவ்வாறு எந்த சிம் அட்டையும் உள்செருகப்படலாம். (ஜெயில்பிரேக்கிங் அதுவாகவே தொலைபேசியை அன்லாக் செய்யாது, மேலும் அதற்கு வேறு பயன்களும் கூட இருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.) ஆப்பிள் மற்றும் ஹாக்கர்கள் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியிருக்கின்றனர், இதில் ஆப்பிள் தொடர்ச்சியாக தங்கள் இயங்குதள அமைப்பில் உள்ள குறைபாடுகளை அடைக்க முயன்று வருகிறது, ஒவ்வொரு பதிப்பும் கிடைக்கப்பெறச்செய்தவுடன் ஹாக்கர்களும் அதை உடைத்து வெளிவர புதிய வழிகளைக் கண்டுவருகின்றனர்.

தொலைபேசிகள் மான்யமாக்கப்படாத நாடுகளில், எ.கா: இத்தாலி மற்றும் பெல்ஜியம், எல்லா தொலைபேசிகளும் அன்லாக்கில் உள்ளன. தொலைபேசிகள் அதனுடைய சிம் அட்டையுடன் லாக் செய்யப்படாத இடங்களில், பயனர்கள் நெட்வர்க்குகளுக்கிடையில் எளிதாக மாறிக்கொள்ளலாம், அவர்கள் ஒரே தொலைபேசியைப் பயன்படுத்திக்கொண்டு ஒரு நெட்வர்க்கின் சிம் அட்டையை மற்றொரு நெட்வர்க் சிம் அட்டையுடன் மாற்றியிடுவதன் மூலம் அவ்வாறு செய்யலாம். உதாரணத்திற்கு, வெவ்வேறு நெட்வர்க்குகளில் வெவ்வேறு நண்பர்களிடம் வெவ்வேறு கட்டணங்களால் தங்கள் தொலைதொடர்பு போக்குவரத்தை மிகவும் அனுகூலமானதாக்க விரும்பும் பயனர்கள் இடையில் இது ஒரு வகைமாதிரியாக இருக்கிறது.

இரட்டை சிம் தொலைபேசிகள் இப்போது சில தொலைபேசி தயாரிப்பாளர்களால் செய்யப்படுகிறது, இது ஒவ்வொரு எண்ணுக்கும் தனி தொலைபேசியைப் பயனர்கள் கொண்டுசெல்வதிலிருந்து காக்கிறது. இரு வகைகள் இருக்கின்றன, முதலாவது, இரு சிம்களுக்கிடையில் சுவிட்ச் செய்துகொள்ள அனுமதிக்கிறது, இரண்டாவது, இரு சிம்களும் ஒரே நேரத்தில் செயல்பாட்டுத் தன்மையுடன் இருக்கச் செய்கிறது.

இயக்க முறைமைகள்[தொகு]

சிம் இயக்க முறைமைகள் இரு முக்கிய வகைகளில் வருகின்றன: உள்ளார்ந்த மற்றும் ஜாவா அட்டை.உள்ளார்ந்த சிம்கள் உரிமையாளருக்குரிய, விற்பனையாளர் வரையறுத்த மென்பொருளை ஆதாரமாகக் கொண்டது, அதே வேளையில் ஜாவா அட்டை சிம்கள் நிர்ணயங்களை அடிப்படையாகக் கொண்டவை, குறிப்பாக ஜாவா புரோகிராமிங் மொழியின் உள்தொகுப்பான ஜாவா அட்டை பதிக்கப்பெற்ற சாதனங்களைக் குறிப்பாக குறிவைத்துள்ளது. வன்பொருள் தற்சார்புடைய மற்றும் மாற்றிக்கொண்டு தகவலைப் பயன்படுத்தக்கூடியவையாக இருக்கக்கூடிய புரோகிராம்களை சிம்கள் கொண்டிருக்க ஜாவா அட்டை அனுமதிக்கிறது.

தகவல்தரவு[தொகு]

சிம் அட்டைகள், நெட்வர்க்கில் சந்தாதாரர்களை அடையாளங் காண்பதற்கும் உறுதிப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் நெட்வர்க் வரையறுத்த தகவலைச் சேமிக்கிறது. இவற்றுள் மிகவும் முக்கியமானவை ICC-ID, IMSI, உறுதிப்படுத்தும் குறியீடு (Ki), லோக்கல் ஏரியா ஐடென்டிடி (LAI) மற்றும் ஆபரேட்டர்-வரையறுத்த அவசரநிலை எண். SMSC (ஷார்ட் மெசேஜ் சர்வீஸ் சென்டர்) எண், சேவை வழங்குநர் பெயர் (SPN), சர்வீஸ் டையலிங் எண்கள் (SDN), அட்வைஸ்-ஆஃப்-சார்ஜ் பாராமீட்டர்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட சேவை (VAS) பயன்பாடுகள் போன்ற இதர கேர்ரீர் வரையறுத்த தரவுத்தகவலைகளையும் சேமிக்கிறது. (ஜிஎஸ்எம் 11.11 பார்க்கவும்)

இன்டிகிரேடெட் சர்க்யூட் கார்ட் ஐடி (Icc Id)[தொகு]

ஒவ்வொரு சிம்மும் அதனதனுடைய ICC-ID களால் பன்னாட்டளவில் அடையாளங்காணப்படுகிறது. ICC-IDக்கள் சிம் அட்டைகளில் சேமிக்கப்படுகின்றன மேலும் இவை தனிப்பட்டதாக்குதல் என்னும் செயல்முறையின் போது சிம் அட்டையின் மீது அச்சிடப்படுகிறது அல்லது செதுக்கப்படுகிறது. ICC-ID, ITU-T பரிந்துரை E.118 யால் வரையறுக்கப்படுகிறது.[1]. E.118 இன் கூற்றுப்படி, எண் 19 இலக்கம் வரை நீளம் கொண்டது, இதில் லுஹ்ன் அல்கோரிதம் பயன்படுத்தி கணக்கிடப்பட்ட ஒரு ஒற்றை பரிசோதனை இலக்கமும் உள்ளடங்கியிருக்கிறது. எனினும், ஜிஎஸ்எம் கட்டம் 1[2] ICC-ID நீளத்தை ஆபரேட்டர்-குறிப்பிட்ட கட்டமைப்புடன் 10 எட்டுத்தொகுதியாக வரையறுத்துள்ளது.

சர்வதேச மொபைல் சந்தாதாரர் அடையாளம் (ImSi)[தொகு]

சிம் அட்டைகள் தங்களுடைய தனிப்பட்ட ஆபரேட்டர் நெட்வர்க்குகளில் ஒரு தனித்தன்மையிலான IMSI மூலம் அடையாளங் காணப்படுகிறது. மொபைல் ஆபரேட்டர்கள், மொபைல் தொலைபேசி அழைப்புகளை இணைக்கின்றனர் மேலும் தங்களுடைய சந்தை சிம் கார்டுகளுடன் அவற்றின் IMSI-ஐப் பயன்படுத்தி தகவல்தொடர்பு மேற்கொள்கின்றன.

செல்லத்தக்கதாக்கும் குறியீடு (Ki)[தொகு]

Ki என்பது மொபைல் நெட்வர்க்கில் சிம்களைச் செல்லத்தக்கதாக செய்வதற்குப் பயன்படுத்தக்கூடிய ஒரு 128-பிட் மதிப்பாகும். ஒவ்வொரு சிம்மும், தனிப்பட்டதாகச் செய்யும் செயல்முறையின்போது ஆபரேட்டரால் அதற்கு ஒதுக்கப்படும் ஒரு தனித்தன்மையிலான Kiஐக் கொண்டிருக்கிறது. Ki, கேர்ரீரின் நெட்வர்க்கின் தரவுத்தளத்திலும் (செல்லத்தக்கதாக்குதல் மையம் அல்லது AuC என்று அறியப்படுகிறது) கூட சேமிக்கப்படுகிறது.

ஸ்மார்ட் கார் இடைமுகத்தைப் பயன்படுத்தி Kiஐப் பெறுவதை அனுமதிக்காத வகையில் சிம் கார்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, சிம் அட்டை ஒரு செயல்பாட்டை, ரன் ஜிஎஸ்எம் அல்கோரிதம் வழங்குகிறது, இது தொலைபேசியை சிம் அட்டைக்கு Ki உடன் குறியிடப்படவேண்டிய தரவுகளை அனுப்ப அனுமதிக்கிறது. இது, வேண்டுமென்றே Ki சிம் அட்டையிலிருந்து பெறப்படும் வரையில் அல்லது கேர்ரீர் Ki-ஐ வெளிப்படுத்த விருப்பம் தெரிவிக்கும் வரையில், சிம் அட்டை பயன்படுத்தப்படுவது கட்டாயமாக்குகிறது. நடைமுறையில், Ki-யிலிருந்து SRES_2 ஐக் (கீழே வழிமுறை நான்கைப் பார்க்கவும்) கணக்கிடுவதற்கு ஜிஎஸ்எம் க்ரிப்டோகிராபிக் அல்கோரிதம் குறிப்பிட்ட சில பலவீனங்களைக் கொண்டிருக்கிறது, இது ஒரு சிம் அட்டையிலிருந்து Ki-ஐப் பெறுவதற்கும் ஒரு போலி சிம் அட்டையைச் செய்வதற்கும் அனுமதி அளிக்கலாம்.

செல்லத்தக்கதாக்கும் செயல்முறை[தொகு]

  1. மொபைல் கருவி தொடங்கியவுடன், அது சிம் அட்டையிலிருந்து சர்வதேச மொபைல் சந்தாதாரர் அடையாளத்தைப் (IMSI) பெறுகிறது, பின்னர் இதை மொபைல் ஆபரேட்டருக்கு அனுப்பி அணுக்கத்திற்கும் உறுதிப்படுத்தலுக்கும் கோருகிறது. சிம் அட்டை இந்தத் தகவலை வெளிப்படுத்துவதற்கு முன்னர், மொபைல் கருவி சிம் அட்டையிடம் ஒரு PIN ஐக் கடக்க வேண்டியிருக்கும்.
  2. ஆபரேட்டர் நெட்வர்க், உள்வரும் IMSI மற்றும் அதன் தொடர்புடைய Ki வுக்காக தன்னுடைய தரவுத்தளத்தைத் தேடுகிறது.
  3. அதன் பின்னர் ஆபரேட்டர் நெட்வர்க் ஒரு தொடர்பற்ற எண்ணை (RAND, இது தற்போதையதற்கானது மட்டும்) உருவாக்கி IMSI க்குத் தொடர்புடைய Ki உடன் அதைக் குறியிட்டு, (சிம் அட்டையில் சேமிக்கப்படுகிறது), சைன்ட் ரெஸ்பான்ஸ் 1 (SRES_1) என்று அறியப்பட்ட மற்றொரு எண்ணைக் கணக்கிடுகிறது.
  4. அதன் பின்னர் ஆபரேட்டர் நெட்வர்க் RAND-ஐ மொபைல் கருவிக்கு அனுப்புகிறது, இதை அது சிம் அட்டைக்கு அனுப்பிவைக்கிறது. சிம் அட்டை அதை அதனுடைய Ki உடன் குறியிட்டு, SRES_2 ஐ உருவாக்குகிறது, அதை மொபைல் கருவிக்கு என்க்ரிப்ஷன் குறியீடு Kc உடன் அனுப்புகிறது. மொபைல் கருவி SRES_2 ஐ ஆபரேட்டர் நெட்வர்க்கிற்கு அனுப்பிவிடுகிறது.
  5. அதன் பின்னர் ஆபரேட்டர் நெட்வர்க் அதன் கணிக்கப்பட்ட SRES_1 ஐ மொபைல் கருவி திருப்பி அனுப்பிய கணிக்கப்பட்ட SRES_2 உடன் ஒப்பீடு செய்கிறது. அந்த இரு எண்களும் பொருந்தி வந்தால் சிம் செல்லத்தக்கதாக ஆகிறது, மேலும் மொபைல் கருவி ஆபரேட்டரின் நெட்வர்க்குடன் அணுக்கத்திற்கு அனுமதி அளிக்கிறது. மொபைல் கருவி மற்றும் நெட்வர்க்குக்கு இடையில் மேற்கொண்டு நடக்கும் எல்லா தகவல்தொடர்புகளையும் என்க்ரிப்ட் செய்வதற்கு Kc பயன்படுத்தப்படுகிறது.

இருப்பிடப் பகுதியை அடையாளம் காணுதல்[தொகு]

லொகேஷன் ஏரியா ஐடென்டி (LAI) யிலிருந்து பெறப்பட்ட நெட்வர்க் நிலை தகவலை, சிம் சேமிக்கிறது. ஆபரேட்டர் நெட்வர்க்குகள் இருப்பிடப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொன்றும் ஒரு தனித்தன்மையிலான LAI எண்ணைக் கொண்டிருக்கிறது. சாதனம் இருப்பிடங்களை மாற்றும்போது, அது புதிய LAI-ஐ சிம்மில் சேமித்து வைத்து அதை அதனுடைய புதிய இருப்பிடத்துடன் ஆபரேட்டர் நெட்வர்க்குக்குத் திருப்பி அனுப்புகிறது. சாதனம் ஆற்றல் சுழற்சிசெய்யப்பட்டிருந்தால், அது சிம்மிலிருந்து தகவல்தரவை எடுத்துவிட்டு முந்தைய LAI வுக்காகத் தேடும். இது, தொலைபேசி வழக்கமாக செய்யும் ஒட்டு மொத்த அலைவரிசைகளின் பட்டியலையும் தேடவேண்டியிருப்பதைத் தவிர்ப்பதன் மூலம் நேரத்தை மிச்சப்படுத்துகிறது.

எஸ்எம்எஸ் செய்திகள் மற்றும் தொடர்புகள்[தொகு]

பெரும்பாலான சிம் அட்டைகள் எஸ்எம்எஸ் செய்திகளையும் தொலைபேசி புத்தகத் தொடர்புகளையும் எண்தொகுப்பாக சேமிக்கும். தொடர்புகள் எளிமையான 'பெயர் மற்றும் எண்' இணைகளாக சேமிக்கப்படுகின்றன - பன்மடங்கு தொலைபேசி எண்கள் மற்றும் கூடுதல் தொலைபேசி எண்களைக் கொண்டிருக்கும் உள்ளீடுகள் வழக்கமாக சிம் அட்டையில் சேமிக்கப்படமாட்டாது. ஒரு பயனர் அத்தகைய உள்ளீடுகளைச் சிம்மில் நகல் செய்ய முயலும்போது கைபேசியின் மென்பொருள் அவற்றைப் பன்மடங்கு உள்ளீடுகளாகப் பிரித்து, தொலைபேசி எண்ணாக இல்லாத எந்தத் தகவலையும் நீக்கிவிடும். சேமிக்கப்படும் தகவல்கள் மற்றும் தொடர்புகளின் எண்ணிக்கை சிம்மைப் பொறுத்திருக்கிறது; ஆரம்பகால மாடல்கள் குறைந்த அளவேயான 5 செய்திகள் மற்றும் 20 தொடர்புகள் வரை மட்டுமே சேமிக்கும், ஆனால் தற்கால சிம் அட்டைகள் வழக்கமாக 250 க்கும் மேற்பட்ட தொடர்புகளைச் சேமிக்கும்.[சான்று தேவை]

யூனிவெர்சல் சந்தாதாரர் அடையாளத் தொகுதிக்கூறு USIM[தொகு]

File:USIM bluefish technologies.jpg|thumb|right|ஒரு 64K UICC அட்டை, அது தன்னுடைய பெரிய அட்டையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது யூனிவெர்சல் சந்தாதாரர் அடையாளத் தொகுதிக்கூறு என்பது ஒரு UICC ஸ்மார்ட் அட்டையில் இயங்கும் UMTS மொபைல் தொலைபேசிக்கான ஒரு பயன்பாடு, இது ஒரு 3ஜி மொபைல் தொலைபேசியில் உள்செருகப்படுகிறது. UICC அட்டையையே ஒரு USIM என அழைக்கும் ஒரு தவறான கருத்து பொதுவாக இருந்து வருகிறது, ஆனால் USIM பிசிகல் அட்டையில் இருக்கும் வெறும் ஒரு நியாயமான உளபொருள்.

அது பயனரின் சந்தாதாரர் தகவல், உறுதிப்படுத்துதல் தகவல் ஆகியவற்றைச் சேமிக்கிறது மேலும் உரை செய்திகள் மற்றும் தொலைபேசி புத்தகத் தொடர்புகளுக்கு சேமிப்பு இடங்களை வழங்குகிறது. UICC இருக்கும் தொலைபேசி புத்தகம் வெகுவாக மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

செல்லத்தக்கதாக்கும் நோக்கங்களுக்காக USIM ஒரு நீண்ட கால முன்னரே-பகிர்ந்த இரகசிய குறியீடு K வை சேமித்துவைக்கிறது, இது நெட்வர்க்கில் செல்லத்தக்கதாக்கும் மையத்துடன் (AuC) பகிர்ந்துகொள்ளப்படுகிறது. ரீப்ளே தாக்குதல்களைத் தவிர்ப்பதற்காக ஒரு விண்டோ அமைப்பைப் பயன்படுத்தி, ஒரே பரப்பெல்லையில் இருக்கவேண்டிய தொடர்வரிசை எண்ணையும் கூட USIM சரிபார்க்கிறது, மேலும் UMTS இல் உள்ள KASUMI பிளாக் சிப்பரின் இரகசியத்தன்மை மற்றும் ஒருங்கிணைக்கும் அல்கோரிதமுக்குப் பயன்படுத்தக்கூடிய CK மற்றும் IK வின் அமர்வு குறியீடுகளை உருவாக்குவதற்கும் பொறுப்பாளியாக இருக்கிறது.

ஜிஎஸ்எம் நெட்வர்க்குகளில் USIM க்கு சம மதிப்பாக இருப்பது சிம், மேலும் சிடிஎம்ஏ நெட்வர்க்குகளில் அது CSIM ஆக இருக்கும்.

ஜப்பான்[தொகு]

ஜப்பான் PDC அமைப்பும் கூட ஒரு சிம்மைக் குறிப்பிடுகிறது, ஆனால் இது எப்போதும் வர்த்தக ரீதியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. மொபைல் கருவி மற்றும் சிம் இரண்டுக்குமிடையிலான இடைமுகத்தின் பொருள் விவரங்கள் RCR STD-27 பின்னிணைப்பு நான்கில் கொடுக்கப்பட்டுள்ளது. சந்தாதாரர் அடையாளத் தொகுதிக்கூறு நிபுணர் குழு என்பது ஐரோப்பிய தொலைதொடர்புகள் நிர்ணய நிறுவனம் (ETSI) ஆல் ஒன்று சேர்க்கப்பட்ட வல்லுநர்களின் குழு, இது ஸ்மார்ட் அட்டை மற்றும் மொபைல் தொலைபேசிகளுக்கிடையில் இடைமுகம் செய்வதற்காக பொருள் விவரங்களை (GSM 11.11) உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது. 1994 ஆம் ஆண்டில், SIMEG என்ற பெயர், SMG9 என மாற்றப்பட்டது.

ஃபின்லாந்து[தொகு]

சிம் அட்டையில் உள்ளடக்கப்பட்ட அரசு-உத்திரவாதமளித்த மின்னணு அடையாளமான குடிமகன் சான்றிதழ் ஒன்றை 2005 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஃபின்லாந்தில் உள்ள ஒவ்வொரு தனிப்பட்ட குடியிருப்பு வாசிக்கும் கிடைக்கப்பெறச் செய்யப்படும் என ஃபின்லாந்து அரசு, 2005 ஆம் ஆண்டு ஜூலையில் அறிவித்தது, இது மொபைல் தொலைபேசி பயனர்களுக்கு, சென்று கொண்டிருக்கும்போதே மின்-சேவைகளை அணுக்கம் செய்ய அனுமதிக்கும். குடிமகன் சான்றிதழ் "அடிப்படையில் ஒரு மி-அடையாள அட்டையான இது மொபைல் தொலைபேசிகள், பிடிஏக்கள், பர்சனல் கணினிகள், டிஜிடல் தொலைக்காட்சி தொகுப்புகள் மற்றும் பொது வலை கையோசிக்குகள் போன்ற பல்வேறு வன்பொருள் சாதனங்களுடன் ஒத்தியலக்கூடியதாக இருக்கும்" என்று விவரிக்கப்பட்டிருந்தது. இது திறந்த நிர்ணயங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட பப்ளிக் கீ இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (PKI) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

இந்தத் திட்டம் திரும்பப்பெறப்பட்டுள்ளது.

மேலும் காண்க[தொகு]

  • சர்வதேச மொபைல் சாதனம் அடையாளம்
  • சிம் லாக்
  • சிம் நகலியாக்கம்
  • இரட்டை சிம்
  • UICC
  • ISIM
  • CSIM
  • R-UIM நீக்கக்கூடிய பயனர் அடையாளத் தொகுதிக்கூறு (சிடிஎம்ஏ நெட்வர்க் சிம் சம மதிப்புக்குரியது)
  • W-சிம்
  • மைக்ரோ-சிம்
  • ஸ்மார்ட் அட்டை
  • MEID

  • வாலிமோ மொபைல் ஆதென்டிகேஷன் கிளையண்ட் (VMAC)
  • மொபைல் சிக்னேச்சர்
  • SyncML
  • சிங்கிள் வயர் ப்ரோடோகால்
  • சிம் பயன்பாடு கருவிப்பெட்டி
  • ஸ்மார்ட்போன்
  • மொபைல் தொலைபேசி
  • பே ஆஸ் யூ கோ (தொலைபேசி)
  • மொபைல் பிராட்பாண்ட்
  • வரம்பிடுதல்
  • பிடிஏ
  • யூஎஸ்பி மோடம்

குறிப்புதவிகள்[தொகு]

  1. ITU-T, ITU-T பரிந்துரைகள் E.118, தி இன்டர்நேஷனல் டெலிகம்யூனிகேஷன் சார்ஜ் கார்ட் திருத்தும் வரலாறு, திருத்தம் "05/2006"
  2. ETSI ETSI பரிந்துரை GSM 11.11, SIM-ME இன் இடைமுகப் பொருள் விவரங்கள், பதிப்பு 3.16.0

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

  • GSM 11.11 - சந்தாதாரர் அடையாளத் தொகுப்புக்கூறு பொருள் விவரங்கள் - மொபைல் சாதனம் (SIM - ME) இடைமுகம்.
  • GSM 11.14 - சந்தாதாரர் அடையாள தொகுப்புக்கூறுக்கான சிம் பயன்பாட்டு கருவிப்பெட்டி பொருள் விவரம் - மொபைல் சாதனம் (SIM - ME) இடைமுகம்
  • ITU-T E.118 - தி இன்டர்நேஷனல் டெலிகம்யூனிகேஷன் சார்ஜ் கார்ட். 2006 ITU-T.

மொபைல் தொலைபேசிகள்

Category:மொபைல் தொலைபேசி நிர்ணயங்கள் Category:செல்லத்தக்கதாக்கும் வழிமுறைகள் Category:க்ரிப்டோகிராபிக் மென்பொருள் Category:ஸ்மார்ட் கார்டுகள் க