ஸ்கைட்ரெக்ஸ் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்கைட்ரெக்ஸ் (Skytrax) ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ஒரு நிறுவனமாகும். இது உலகின் விமான நிலையங்கள் வழங்கும் சிறந்த சேவைகளின் தர நிர்ணய நிறுவனமாகும்.[1][2] இந்நிறுவனம் வர்த்தகப் போக்குவரத்து விமான நிலையங்கள் வழங்கும் விமானப் போக்குவரத்து வசதிகள், விமானப் பணியாளர்களின் நிறைவான அணுகுமுறை, பயணத்தின் போது பொழுதுபோக்கு போன்ற பல்வேறு விடயங்களை ஆராய்ந்து பெறப்படும் பயணிகளின் மனநிறைவுத்தன்மை அடிப்படையில், பயணிகளிடம் இருந்து பெறப்படும் தரவுகள் ஊடாகவே கணிப்பிடுகின்றது.[3][4] இவ்வாறு கணிப்பீடுகளூடாக பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் உலகின் சிறந்த விமானச் சேவையை வழங்கும் விமான நிலையத்தின் ஆய்வு அறிக்கையையும் வெளியிட்டு வருகின்றது. அத்துடன் தேர்ந்தெடுக்கும் சிறந்த விமான நிலையத்திற்கு; உலகின் சிறந்த விமான நிலையத்திற்கான விருதாக ஸ்கைட்ரெக்ஸ் விமான நிலைய விருது வழங்கப்பட்டு வருகின்றது.[5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Whois Record for Airlinequality.com (Airline Quality)
  2. "Select Committee on Science and Technology Fifth Report". United Kingdom Parliament. 2000-11-15. பார்க்கப்பட்ட நாள் 2007-11-25. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. Mario Kossmann (2006). Delivering Excellent Service Quality in Aviation. Ashgate Publishing. பக். 67–71. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0754647250. 
  4. "Skytrax rates the world's best". Archived from the original on 2007-02-19. பார்க்கப்பட்ட நாள் 2009-11-19.
  5. World Airline Awards
  6. World Airport Awards

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்கைட்ரெக்ஸ்_விருது&oldid=3531650" இலிருந்து மீள்விக்கப்பட்டது