காஞ்சா அய்லைய்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காஞ்சா அய்லைய்யா (Kancha Ilaiah, அக்டோபர் 5, 1952) உஸ்மானிய பல்கலைக்கழகத்தின் அரசியல்துறை முதன்மைப் பேராசிரியர். இவர் ஒரு சமூகச் செயற்பாட்டாளர், எழுத்தாளர், இந்தியாவின் முக்கிய சிந்தனையாளர்களில் ஒருவர். இந்திய சாதியத்துக்கு எதிரான முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவர். இவரது பார்வைகள் இந்து சமய எதிர்ப்புக் கொண்டவை என்று இந்து சமய அமைப்புகள் கூறுகின்றன. இவர் பல ஆங்கில நூல்களை வெளியிட்டுள்ளார்.

இளமைப் பருவம்[தொகு]

தெலுங்கானாவின் (அப்போதைய ஆந்திரப் பிரதேசத்தில்) வாரங்கல் மாவட்டத்தில் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிற்றூரில் பிறந்தார்.[1] ஆடுகளை வளர்த்து மேய்க்கும் இடையர் குலத்தைச் சேர்ந்தவர். காஞ்சா அய்லைய்யா இளம் அகவையிலேயே ஆடுகள் வளர்த்தல், நிலத்தை உழுது வேளாண்மை செய்தல், கயிறுகள் தயார் செய்தல் ஆகியவற்றைச் செய்தார்.இவருடைய தாய் கொடுஞ்செயல்கள் புரிந்த காட்டு அதிகாரிகளை எதிர்த்துப் போராடி உயிரை இழந்தார்.[2] இவர் தம் தாயைப் பற்றி தெலுங்கில் ஒரு கட்டுரை எழுதினார். இவர் மாணவப் பருவத்தில் மார்க்சியக் கொள்கையருடன் நட்பும் தொடர்பும் கொண்டு மார்க்சிய நூல்களைப் படித்தார். மாணவர்கள் நடத்திய போராட்டங்களிலும் கலந்து கொண்டார்.

எழுதிய ஆங்கில நூல்கள்[தொகு]

  • வொய் ஐ யம் நாட் எ இந்து - இந்துத்வா கொள்கை, பண்பாடு, அரசியல் பொருளியல் குறித்த சூத்திரரின் விமரிசனம்
  • காட் அஸ் எ பொலிடிகல் பிலாசபர்
  • பஃபலோ நேசனலிசம்: எ கிரிட்டிக் ஆப் இசுபிரிட்டுவல் பாசிசம் - எருமை தேசியம்: ஆன்மிக பாசிசத்தின் விமரிசனம்
  • புத்தாஸ் சாலஞ்ச் டு பிராமணிசம் - பிராமணியத்திற்கு புத்தரின் சவால்
  • போஸ்ட்-இந்து இந்தியா - தலித்-பகுசன் சமூக ஆன்மீக அறிவியல் புரட்சி குறித்த விரிவுரை
  • அன்டச்சபிள் காட் - தீண்டத்தகாத கடவுள்

குறிப்புகள்[தொகு]

மேற்சான்றுகள்
  1. "The attempt to censor my writings is part of a larger game plan". Rediff. 24 May 2000. http://www.rediff.com/news/2000/may/24ap.htm. பார்த்த நாள்: 16 December 2014. 
  2. "Kancha Ilaiah". Ambedkar.org. 16 November 2000. பார்க்கப்பட்ட நாள் 2013-12-04.
உசாத்துணைகள்

காஞ்சா அய்லைய்யாவுடனான நேர்காணல் பரணிடப்பட்டது 2014-09-11 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காஞ்சா_அய்லைய்யா&oldid=3239150" இலிருந்து மீள்விக்கப்பட்டது