முஸ்லிம் நேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முஸ்லிம் நேசன் 1893

"முஸ்லிம் நேசன்" இலங்கையில் வெளிவந்த இஸ்லாமியர்களின் ஒரு முக்கியத்துவம் மிக்க இதழாகக் கொள்ளப்படுகின்றது. இதன் முதல் இதழ் 1883ல் வெளிவந்துள்ளது.

ஆசிரியர்[தொகு]

மு. கா. சித்திலெப்பை

தமிழ் மொழியில் வெளிவந்த இதழ்[தொகு]

"முஸ்லிம் நேசன்" முழுமையாக தமிழ்மொழியில் வெளிவந்தமை அவதானிக்கத்தக்கது. இலங்கை இஸ்லாமியர்களின் தமிழ்மொழி இதழியல் வரலாற்றை நோக்குமிடத்து தமிழில் வெளிவந்த முதல் இதழாக இதனைக் கொள்ளலாம்.

போக்கு[தொகு]

19ம் நூற்றாண்டின் தமிழ் இதழியல் போக்கினை நோக்குமிடத்து இது முஸ்லிம்களின் செய்திகளுக்கும், முஸ்லிம்களின் விழிப்புணர்வுக்கும் வழிகாட்டக்கூடிய வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக மரபு ரீதியான இலங்கை முஸ்லிம்களின் சிந்தனைகளுக்கு சவால்விடுக்குமுகமாக இவ்விதழின் போக்கு அமைந்திருந்தது. குறிப்பாக இலங்கை முஸ்லிம்கள் மார்க்கக் கல்வி மாத்திரமன்றி பொதுக்கல்வியிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தி வந்துள்ளது. இது மாத்திரமன்றி முஸ்லிம் சமூகத்தின் சீர்த்திருத்தத்தைக் கருத்திற்கொண்டு இவ்விதழ் குரல்கொடுத்து வந்தமை அவதானிக்கத்தக்கது.

ஆதாரம்[தொகு]

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
  • 19ம் நூற்றாண்டின் இதழியல் - புன்னியாமீன் (அல்ஹிலால் இதழ் 6, 1982)
"https://ta.wikipedia.org/w/index.php?title=முஸ்லிம்_நேசன்&oldid=3770511" இலிருந்து மீள்விக்கப்பட்டது