தங்க அரிசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வலப்பக்கத்தில் தங்க அரிசியும் இடப்பக்கத்தில் சாதாரண அரிசியும்

தங்க அரிசி (Golden rice) என்பது மரபணுப் பொறிமுறையின் மூலம் உயிர்ச்சத்து ஏ யின் முன்னோடித் தாதுவான பீட்டா கரோற்றினை இணைத்து உருவாக்கப்பட்ட புதிய நெல்லினமாகும்.[1] கடந்த 2000 ஆம் ஆண்டு பன்னாட்டு அரிசி ஆய்வு மையமும் (IRRI) ராக்கேபெல்லெர் அமைப்பும் (The rockefeller foundation) இணைந்து மரபணு மாற்ற உயிரினத்தின் ஐந்தாவது வருகையான இத்தங்க அரிசி உருவாக்கப்பட்டது.இது பற்றிய அறிவியல் தகவல்கள் 2000 ஆம் ஆண்டு Science சஞ்சிகையில் வெளியிடப்பட்டது.[1]

உலகில் சுமார் 400 மில்லியன் மக்கள் உயிர்ச்சத்து ஏ குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தங்க அரிசி உயிர்ச்சத்து ஏ குறைபாட்டை எதிர்கொள்ளும் நாடுகளில் அதை நிவர்த்திக்கக்கூடிய உணவாக உருவாக்கப்பட்டது.[2]

2005 இல் தங்க அரிசி-2 எனும் மற்றொரு இனம் அறிவிக்கப்பட்டது. இது முன்னர் உருவான தங்க அரிசியைப் போல 23 மடங்கு பீட்டா கரோற்றினைக் கொண்டதாயுள்ளது.[3]

உருவாக்கம்[தொகு]

தங்க அரிசி சுவிஸ் தொழில் நுட்ப நிறுவனத்தின் உறுப்பு நிறுவனமான தாவர அறிவியல் நிறுவனத்தில் இன்கோ பொற்றிகஸ் (Ingo Potrykus) மற்றும் புறுவேக் பல்கலைக் கழக பேராசிரியர் பீற்றர் பேயர்(Peter Beyer) ஆகியோர்களால் உருவாக்கப்பட்டது. இச்செயற்றிட்டம் 1992 இல் ஆரம்பமானது.ஒரு முழுமையான உயிரியல் தொகுப்பிப்பாக அமைந்ததால் இக்கட்டுரை வெளியிடப்பட்ட 2000 ஆம் ஆண்டு தங்க அரிசி உயிரித் தொழில்நுட்பத்தின் முக்கிய அடைவாகக் கருதப்பட்டது.

ஆதாரம்[தொகு]

  1. 1.0 1.1 Ye, X; Al-Babili, S; Klöti, A; Zhang, J; Lucca, P; Beyer, P; Potrykus, I (2000). "Engineering the provitamin A (beta-carotene) biosynthetic pathway into (carotenoid-free) rice endosperm". Science 287 (5451): 303–5. doi:10.1126/science.287.5451.303. பப்மெட்:10634784. 
  2. One existing crop, genetically engineered "golden rice" that produces vitamin A, already holds enormous promise for reducing blindness and dwarfism that result from a vitamin-A deficient diet. - Bill Frist, physician and politician, in a Washington Times commentary - November 21, 2006 [1]
  3. Paine, Jacqueline A; Shipton, Catherine A; Chaggar, Sunandha; Howells, Rhian M; Kennedy, Mike J; Vernon, Gareth; Wright, Susan Y; Hinchliffe, Edward et al. (2005). "Improving the nutritional value of Golden Rice through increased pro-vitamin A content". Nature Biotechnology 23 (4): 482–7. doi:10.1038/nbt1082. பப்மெட்:15793573. http://www.nature.com/nbt/journal/v23/n4/full/nbt1082.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்க_அரிசி&oldid=3622040" இலிருந்து மீள்விக்கப்பட்டது