மிட் டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Mid Day
வகைநாளிதழ்
வடிவம்கையடக்கமானது
உரிமையாளர்(கள்)மிட் டே இன்ஃபோமீடியா (வரை.)
ஆசிரியர்சச்சின் கல்பாக்
விளையாட்டு ஆசிரியர்கிளைட்டன் முர்செல்லோ
நிறுவியதுசெப்டம்பர் 26, 1979
மொழிஆங்கிலம், குஜராத்தி, உருது
தலைமையகம்மும்பை, இந்தியா
இணையத்தளம்www.mid-day.com

மிட் டே (Mid Day) என்பது இந்தியாவில் வெளிவரும் ஒரு கையடக்கமான நாளிதழ். இதன் பதிப்புகள் பல்வேறு மொழிகளில் மும்பை, பெங்களூரு, தில்லி, புனே ஆகிய இடங்களில் இருந்து வெளியிடப்படுகின்றன.

மும்பையில் இருந்து வெளிவரும் ஆங்கில இதழ் 26-09-1979 முதல் வாரத்திற்கொரு முறையாக வெளிவரத் துவங்கியது. பின்னர், 26-07-2007 முதல் தினசரி மதியம் வரத் துவங்கியது. The Inquilab உருது மொழியில் முதன் முதலில் வந்த பத்திரிகையாகும். அதன் பின்னர் வருகின்ற பத்திரிகைகளில் “ ட் டே“ ஒன்றுதான் உருது, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. ஜெகன் பிரகாஷன் லிமிடெட் மற்றும் மிட் டே இன்ஃபர்மேஷன் லிமிடெட் கம்பெனிகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தை மற்றும் மும்பை ஸ்டாக் எக்சேஞ் ஆப் இந்தியா குறித்த செய்திகளும் இவற்றில் வருகின்றன. தேசிய மற்றும் அனைத்துலகச் செய்திகள், உணவு மற்றும் உடல் நலம், சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை, பாலியல் மற்றும் சுவையூட்டக்கூடிய பல்வேறு அம்சங்களுடன் கூடிய தகவல்களுடன் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்தியா முழுவ்தும் காலையிலும், மாலையிலும் வரக் கூடிய பத்திரிகைகள்தான் உள்ளன. ஆனால் மதியம் மட்டும் வரக்கூடிய பத்திரிகை இது ஒன்றுதான். அண்மையில் இதன் மூத்த பத்திரிக்கையாளர் மர்மமான முறையில் சுட்டுக் கொன்றபின்னர் இந்தப் பத்திரிக்கையின் முக்கியத்துவம் இந்தியா முழுவதும் அதிகரித்தது.

ஜோதிர்மைய் டே மூத்த பத்திரிக்கையாளர். மிட் டே பத்திரிகையின் மூலம் நிழல் உலக தாதாக்களின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியவர். 2011 சூன் மாதம் 11 ஆம் நாள் தீவிரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். பயங்கரவாதிகள் குறித்து எழுதி வந்தது தான் அவர் கொலை செய்யப்பட்டதன் பின்னணியாக இருக்கலாம் என்பது போலீசார் கருத்தாக இருந்தது. வன விலங்குள் வசிக்கும் காடுகளில் நடந்த குற்றங்களை ஆஃப்டர் நூன் டெஸ்பாட்ச் மற்றும் கொரியர் பத்திரிகைகள் வாயிலாக வெளிக்கொண்டு வந்த சுதந்திர பத்திரிக்கையாளராக (ஃப்ரீலேன்சர் ) தனது பத்திரிகை வாழ்வைத் தொடங்கியவர். டே ரீலேன்ஸில் ப்ச்த்திரிகையாளராகச் சேர்ந்த சிறிது காலங்களுக்குப் பிரகு 1996- இல் இந்தியன் எக்ஸ்பிரஸ்சில் சேர்ந்தார். மும்பை நிழல் உலகக் குற்றங்களைக் குறித்து எழுதலானார். பின்னர் இந்துஸ்தான் டைம்ஸ்க்கு வந்து அங்கிருந்து மீண்டும் மிட் டே வுக்கே திரும்பினார். அங்கே குற்றப் புலனாய்வுப் பிரிவின் ஆசிரியராகப் பணியாற்றினார்.

ஸீரோ டயல்,. உளவாளிகளின் பயங்கர உலகம் என்ற தலைப்புகளில் நிழல் உலக தாதாக்களைப் பற்றி இரண்டு புத்தகங்களை எழுதினார். அவை பிரபல தாதாக்களான தாவூத் இப்ராஹிம், சோட்டா ராஜன் ஆகியோரைப்பற்றியவை. பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களைக் கடத்தி அதிலிருந்து ஒரு பகுதியைத் திருடி மீதமுள்ளதைக் கலப்படம் செய்து விற்பனைக்கு அனுப்புவது. இதனை இவர்கள் பகிரங்கமாகச் செய்து வருகின்றனர். தடுக்க முயலும் அதிகாரிகள் தாதாக்களால் மிரட்டப் படுவதுவதும், அல்லது கொல்லப்படுவதும் அவ்வபொழுது நடந்துவரும் செயலாகும். ஜனவரி 21, 2011-ல், மலேகான் மாவட்டத்தில், கூடுதல் கலெக்டராக இருந்த யஷ்வந்த் சோணாவனே என்பவர் நாசிக்கில் எண்ணெய்த் திருட்டு கும்பலால் எரித்துக் கொல்லப்பட்டார். டே இச்சம்பவங்களைப் பற்றி தன் இதழில் செயதி வெளியிட்டார்.

தாவூத் இப்ராகீமின் தம்பியைக் கொல்ல நடந்த சதியின் பின்னணியில் மூளையாகச் செயல்பட்டவன் சோட்டா ராஜன் என்பதைக் கண்டு பிடித்துச் சொன்னவர் டே. டே கொல்லப்பட்டு 16 தினங்களுக்குப்பின் மும்பை ஷோலாப்பூர் , தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் ஆகிய இடங்களிலிருந்து 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் கோட்டாராஜனின் கூட்டாளிகள் என்பதும், இவர்களில் சதீஷ் காலியா என்பவந்தான் டேயைக் என்பதும் தெரிய வந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிட்_டே&oldid=2993783" இலிருந்து மீள்விக்கப்பட்டது