மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மண்டைதீவு படைத்தளத் தாக்குதல் என்பது 1995 ஜூன் 28 அன்று அதிகாலையில் விடுதலைப் புலிகளால் மண்டைதீவு இராணுவ முகாம் தாக்கி அழிக்கப்பட்ட நிகழ்வைக் குறிக்கும்.

சந்திரிகா அரசாங்கத்துடன் பேச்சுக்கள் முறிந்து மூன்றாம்கட்ட ஈழப்போர் தொடங்கி இருமாதங்களே ஆகியிருந்தன. யாழ் குடாநாடு மீது மிகப்பெரும் படையெடுப்பொன்றை நிகழ்த்த இலங்கை அரசு திட்டமிட்டிருந்தது. இந்நிலையில்தான் மண்டைதீவுக் கூட்டுப்படைத்தளம் மீது தாக்குதல் நடத்த புலிகள் தீர்மானித்தனர்.

அதிகாலை நடத்தப்பட்ட இத்தாக்குதலில் இராணுவத்தினர் நிலைகுலைந்தனர். கூட்டுப்படைத்தளத்தை முற்றாகக் கட்டுப்பாட்டுள் கொண்டுவந்த புலிகள், கைப்பற்றிய ஆயுத தளபாடங்களுடன் அதிகாலையில் தளத்தைவிட்டுப் பின்வாங்கினர்.

இவ்வதிரடித்தாக்குதலில் பெருந்தொகையான ஆயுத தளபாடங்கள் கைப்பற்றப்பட்டன. குடாநாடு மீதான ஆக்கிரமிப்புக்காக வைக்கப்பட்டிருந்த நடுத்தர ஆயுதக் களஞ்சியமொன்று புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தது.

இத்தாக்குதலில் 125 இற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டிருந்தனர். அதேநேரம் புலிகள் தரப்பில் லெப். கேணல் சூட்டி உட்பட பத்துப் போராளிகள் மரணமடைந்தனர்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]