ருடால்ப் கிறிஸ்டோப் ஆய்க்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ருடால்ப் கிறிஸ்டோப் ஆய்க்கன்
ருடால்ஃப் டர்கூப் எடுத்த ஒளிப்படம்
பிறப்பு(1846-01-05)5 சனவரி 1846
ஆரிச், ஹனோவர் இராச்சியம், ஜெர்மன்
இறப்பு15 செப்டம்பர் 1926(1926-09-15) (அகவை 80)
ஜெனா, துரிங்கியா, ஜெர்மனி
படித்த கல்வி நிறுவனங்கள்கோட்டிங்கன் பல்கலைக்கழகம்
பெர்லின் பல்கலைக்கழகம்
விருதுகள்இலக்கியத்திற்கான நோபல் பரிசு (1908)
காலம்19வது-/தற்கால மெய்யியல்
பகுதிமேற்குலக மெய்யியல்
பள்ளிContinental philosophy
டாய்ட்ச் கருத்தியம்
கல்விக்கழகங்கள்ஜெனா பல்கலைக்கழகம்
பேசெல் பல்கலைக்கழகம்
முக்கிய ஆர்வங்கள்
நன்னெறி
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
Aktivismus (ருடால்ப் கிறிஸ்டோப் ஆய்க்கன்)[1]
The Real
செல்வாக்குச் செலுத்தியோர்
செல்வாக்குக்கு உட்பட்டோர்
கையொப்பம்

ருடால்ப் கிறிஸ்டோப் ஆய்க்கன் (Rudolf Christoph Eucken, டாய்ச்சு ஒலிப்பு: [ˈʁuːdɔlf ˈʔɔʏkn̩]  ( கேட்க)  ; 5 சனவரி 1846 – 15 செப்டம்பர் 1926) என்பவர் ஒரு செர்மன் மெய்யியலாளர் ஆவார். இவருக்கு 1908 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசுவழங்கப்பட்டது. [3]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ஆய்க்கன் 1864 சனவரி ஐந்தாம் நாள் ஹனோவர் இராச்சியத்தின் ஆரிச்சில் பிறந்தார் (இப்போது லோயர் சாக்சனி ). இவரது தந்தையான அம்மோ பெக்கர் யூக்கன் (1792-1851) இவரது குழந்தைப் பருவத்திலே இறந்தார். பின்னர் இவரது தாயார் ஐடா மரியாவால் (1814-1872) வளர்க்கப்பட்டார். [4] இவர் ஆரிச்சில் கல்வி பயின்றார், அங்கு இவரது ஆசிரியர்களில் ஒருவராக தத்துவஞானி லுட்விக் வில்ஹெல்ம் மாக்சிமிலியன் ராய்ட்டர் (1803-1881) இருந்தார். இவர் கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் (1863-66) பயின்றார். அங்கு இவரின் ஆசிரியர்களில் ஒருவராக செர்மானிய மெய்யிலாளர் ஹெர்மன் லோட்சே இருந்தார். பின்னர் இவர் பெர்லின் பல்கலைக்கழகத்தில் [4] பயின்றபோது அங்கு மெய்யியலாளர் ஃபிரெட்ரிக் அடால்ஃப் ட்ரெண்டலென்பர்க் பேராசிரியராக இருந்தார். அவருடைய நன்னடத்தைப் போக்குகள் மற்றும் மெய்யியல் சிந்தனைகள் இவரை பெரிதும் ஈர்த்தன.

தொழில்[தொகு]

ஆய்க்கன் 1866 ஆம் ஆண்டு கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் டி அரிஸ்டோடெலிஸ் டிசென்டி ரேஷன் என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு பாரம்பரிய மொழியறிவியல் மற்றும் பண்டைய வரலாற்றில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார். [5] இருப்பினும், இவருடைய மனதின் நாட்டம் இறையியலின் மெய்யியல் நோக்கியே இருந்தது. 1871 இல், ஹுசும், பெர்லின் அண்ட் பிராங்பர்ட்டில் பள்ளி ஆசிரியராக ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்த நிலையில், இவர் சுவிட்சர்லாந்தின் பேசெல் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இவர் 1874 ஆம் ஆண்டு ஜெனா பல்கலைக்கழகத்தில் இதை ஒத்த பதவிக்கு சேரும் வரை வரை அங்கேயே பணிபுரிந்துவந்தார். இவர் 1920 இல் ஓய்வு பெறும் வரை ஜெனா பல்கலைக்கழகத்திலேயே பணிபுரிந்தார். 1912-13 இல், ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் பரிமாற்ற பேராசிரியராக அரை ஆண்டு இருந்தார். மேலும் இவர் 1913 இல் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் டீம் விரிவுரையாளராக பணியாற்றினார். [6] [7] முதலாம் உலகப் போரின் போது, ஆக்கென், கல்வித்துறையில் உள்ள தன் சக ஊழியர்களைப் போலவே, தனது நாட்டுக்கு ஆதரவான வலுவான நிலைப்பாட்டை எடுத்தார். [4]

ருடால்ஃப் ஆய்க்கனின் பிறந்த இடம் ஆரிச், ஆஸ்டர்ஸ்ட்ரேஸ் 27 (செப்டம்பர் 2015)

பிற்கால வாழ்க்கையும், இறப்பும்[தொகு]

ருடால்ஃப் ஆய்க்கென் ஐரீன் பாசோவை (1863-1941) 1882 இல் மணந்தார். இந்த இணையருக்கு ஒரு மகளும் இரண்டு மகன்களும் இருந்தனர். இவரது மகன் வால்டர் யூக்கன் பொருளாதாரத்தில் ஆர்டோலிபரல் சிந்தனையின் பிரபலமான நிறுவனர் ஆனார். இவரது இன்னொரு மகனான அர்னால்ட் யூக்கன் ஒரு வேதியியலாளர் மற்றும் இயற்பியலாளர் ஆவார். [4]

ருடால்ஃப் ஆய்க்கன் 15 செப்டம்பர் 1926 அன்று ஜெனாவில் தனது 80வது வயதில் இறந்தார். [4]

முக்கிய படைப்புகள்[தொகு]

இவர் ஒரு சிறந்த எழுத்தாளர்; இவரது சிறந்த படைப்புகள் கீழே:

மற்ற குறிப்பிடத்தக்க படைப்புகள்:

  • Die Methode der aristotelischen Forschung (1872) (The Aristotelian Method of Research)
  • Geschichte der philosophische Terminologie (1879) (History of Philosophical Terminology)
  • Prolegomena zu Forschungen über die Einheit des Geisteslebens (1885) (Prolegomena to Research on the Unity of the Spiritual Life)
  • Beiträge zur Geschichte der neueren Philosophie (1886, 1905) (Contributions to the History of the Newer Philosophies)
  • Die Einheit des Geisteslebens (1888) (The Unity of the Spiritual Life)
  • Thomas von Aquino und Kant (1901) (Thomas Aquinas and Kant)
  • Gesammelte Aufsätze zu Philosophische und Lebensanschauung (1903) (Collected Essays on Views of Philosophy and Life)
  • Philosophie der Geschichte (1907) (Philosophy of History)
  • Einführung in die Philosophie der Geisteslebens (1908; Eng. trans., The Life of the Spirit, F. L. Pogson, 1909, Crown Theological Library) (Introduction to the Philosophy of the Life of the Spirit)
  • Hauptprobleme der Religionsphilosophie der Gegenwart (1907) (Main Problems of the Current Philosophy of Religion)

இவரது படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் பின்வருமாறு:

இவர் 1911 இல் இங்கிலாந்தில் விரிவுரைகளை ஆற்றினார். மேலும் 1912-1913 இல் ஆர்வர்டு பல்கலைக்கழகத்திலும் அமெரிக்காவின் பிற இடங்களிலும் ஆறு மாதங்கள் விரிவுரை ஆற்றினார்.

குறிப்புகள்[தொகு]

  1. W. R. Boyce Gibson, Rudolf Eucken's Philosophy of Life[தொடர்பிழந்த இணைப்பு], Kessinger Publishing, 2004, p. 170.
  2. Kierkegaard Research: Sources, Reception and Resources, Volume 8, Tome III, Ashgate Publishing, Ltd., 2009, p. 177.
  3. nobelprize.org
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 "Biografie Rudolf Christoph Eucken (German)". Bayerische Nationalbibliothek. பார்க்கப்பட்ட நாள் 5 August 2015.
  5. The dissertation is available online at Internet Archive.
  6. Harvard University Catalogue. https://books.google.com/books?id=L3Q7AQAAMAAJ&q=rudolf+eucken+harvard+university&pg=PA28. 
  7. "Rudolf Eucken - Biographical". www.nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2018-03-14.