மினி வாசுதேவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மினி வாசுதேவன்
2019 இல்
பிறப்புசுமார் 1965
தேசியம்இந்தியர்
கல்விபொறியாளர்
அறியப்படுவதுவிலங்கு உரிமை ஆர்வலர் கோயம்புத்தூர்
வாழ்க்கைத்
துணை
மது கணேஷ்

மினி வாசுதேவன் (Mini Vasudevan) (பிறப்பு c. 1965 ) தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ள ஒரு இந்திய விலங்கு உரிமை ஆர்வலர் ஆவார். இவருக்கு 2019 இல் நாரி சக்தி விருது வழங்கப்பட்டது.

வாழ்க்கை[தொகு]

வாசுதேவன் 1965 இல் பிறந்தார். இவர் செல்லப் பிராணிகள் இல்லாமல் வளர்க்கப்பட்டார், ஆனால், தனது பதினொராவது வயதில் உண்பதற்காக கோழி கொல்லப்படுவதைக் கண்டு, தீவீர சைவ உணவு உண்பவராக முடிவு செய்து தன்னை மாற்றிக் கொண்டவர் என்று சொல்லப்படுகிறது. இவர், பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்றார். [1] இவர் ஒரு பொறியாளர் [2] ஆவார். இவரும் இவரது கணவரும் அமெரிக்காவில் பதின்மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தனர். [1]

ஸ்ரீமதி. மினி வாசுதேவன் கஜகூட்டம் சைனிக் பள்ளியில் 1982ல் படித்த முன்னாள் மாணவர் என்று அறியப்படுகிறார். [3]

பணிகள்[தொகு]

2004 ஆம் ஆண்டில், மினி வாசுதேவன் மற்றும் இவரது கணவர் மது கணேஷ் அமெரிக்காவில் இருந்து கோயம்புத்தூரில் வசிக்கத் திரும்பினார்கள். காயப்பட்ட மற்றும் நோய்வாய்ப்பட்ட தெரு நாய்கள் ஊருக்குள் அலைவதைக் கண்டு திகைத்து, ஏதாவது செய்ய முடியும் மற்றும் செய்ய வேண்டும் என்று உறுதியாக உணர்ந்தார். காயம்பட்ட மற்றும் சில சமயங்களில் கர்ப்பமாக இருக்கும் சில விலங்குகளுக்கு உதவுவதற்காக இவர் கால்நடை மருத்துவர்களுக்கு பணம் கொடுப்பார், ஆனால் சில கால்நடை மருத்துவர்கள் தெரு நாய்களுக்கு சிகிச்சை அளிக்க முன்வர மாட்டார்கள். அவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டாலும் விலங்குகள் குணமடைந்ததாக இல்லை. இதற்கு பதிலளிக்கும் விதமாக, இவரும் இவரது கணவரும் 2006 இல் மனிதநேய விலங்கு சங்கத்தை தொடங்கினர். தெரு நாய்களுக்கு சிகிச்சை அளிப்பது பற்றி மேனகா காந்தியுடன் இவர் கடிதப் பரிமாற்றம் செய்திருந்தார், மேலும், மேனகா காந்தி ஆரம்பத்தில் இவரை நிராகரித்தார், ஆனால், மினி வாசுதேவன் கோயம்புத்தூரில் இருப்பதை உணர்ந்த மேனகா காந்தி, காயம்பட்ட விலங்குகளுக்கு தீர்வை உருவாக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். [1]

பின்னர், மினி வாசுதேவன், கோயம்புத்தூரில் இருக்கும் தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை செய்யும் பணியில் ஈடுபட்டார். [4] 2019 ஆம் ஆண்டில் இவர் தனது சொந்தமாக மூன்று நாய்களை வைத்திருந்தார். மேலும் இவர் அமைத்த மனிதநேய விலங்கு சங்கம் பதினேழு பேரை வேலைக்கு அமர்த்தியது. [1]

விருது[தொகு]

2019 ஆம் ஆண்டில், பெண்களுக்கான இந்தியாவின் மிக உயர்ந்த விருதான நாரி சக்தி விருது [4] பெற பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1].

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "For all creatures great and small". The Hindu. 2019-03-08. https://www.thehindu.com/news/cities/Coimbatore/mini-vasudevan-co-founder-of-coimbatores-humane-animal-society-received-the-nari-shakti-award-2019/article26470818.ece. பார்த்த நாள்: 2020-04-10. 
  2. admin. "HAS - Management Team" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-10.
  3. "Sainik School Old Boys Association". sskzmoba.org. பார்க்கப்பட்ட நாள் 2020-05-12.
  4. 4.0 4.1 . 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மினி_வாசுதேவன்&oldid=3673240" இலிருந்து மீள்விக்கப்பட்டது