அருள் யாத்திரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள் யாத்திரை
Pilgrimage of Grace
Part of ஐரோப்பிய சமயப் போர்கள்
அருள் யாத்திரையில் எடுத்துச் செல்லப்பட்ட இயேசு கிறிஸ்துவின் புனித காயங்கள் தாங்கிய பதாகை.
தேதிஅக்டோபர் 1536 – பெப்ரவரி 1537
அமைவிடம்
யார்சயர், இங்கிலாந்து
காரணம்இங்கிலாந்து சீர்திருத்தங்கள், மடாலையங்கள் கலைக்கபடுதல், உணவு விலை உயர்வு
இலக்குகள்கத்தோலிக்க திருச்சபைக்கான அதிகாரத்தை நீக்கும் சட்டத்தில் மாற்றம், மேரி டூடரை வாரீசு வரிசையில் மீளக்கொண்டுவருதல், தாமஸ் குரோம்வெல்லை பதவியிலிருந்து நீக்குதல்
முடிவுஎழுச்சிகளை அடக்குதல், முன்னணி நபர்களுக்கு மரணதண்டனை
தரப்புகள்

பாரம்பரியவாதிகள்

விவசாயிகள்
ஸ்தாபன சீர்திருத்தவாதிகள்
வழிநடத்தியோர்
எண்ணிக்கை
~50,000[1]

அருள் யாத்திரை (Pilgrimage of Grace) என்பது வடக்கு இங்கிலாத்தின் யார்சயரில் 1536 அக்டோபரில் தொடங்கிய ஒரு பிரபலமான கிளர்ச்சியாகும். ராபர்ட் அஸ்கேயின் தலைமையில் உருவான இக்கிளர்ச்சி கம்பர்லேண்ட், நார்தம்பர்லேண்ட், வடக்கு லங்கோசயர் உட்பட வடக்கு இங்கிலாந்தின் பிற பகுதிகளுக்கு பரவுவியது. " டியூடர் காலத்திய அனைத்து கிளர்ச்சிகளிலும் இது மிகவும் தீவிரமானது". இது இங்கிலாந்தின் எட்டாம் என்றி கத்தோலிக்க திருச்சபையுடனான உறவை முறித்துக் கொண்டதற்கும், சிறிய மடாலயங்கள் கலைக்கப்பட்டதற்கும், மன்னரின் முதலமைச்சர் தாமஸ் குரோம்வெல்லின் கொள்கைகளுக்கும், பிற சீர்திருத்த கொள்கைகள், அரசியல், சமூக மற்றும் பொருளாதார குறைகள் ஆகியவற்றுக்கு எதிராக எழுந்த போராட்டமாகும்.. [2]

பிற இடங்கில் இக்கிளர்ச்சி சில நாட்களில் அடக்கபட்டது. 1537 மார்ச்சில் இக்கிளர்ச்சிக்குக் காரணமாயிருந்த தலைவர்களுக்கு மரண தண்டனை விதிக்கபட்டது. ராபர்ட் ஆஸ்க்கால் யார்சயரில் தொடங்கிய கிளர்ச்சி சிறிது அதிக வலுப்பெற்றிருந்தது. இதைப் 'பொது நன்மை அருள் யாத்திரை' என்று அவர்கள் கூறினர். இக்கிளர்ச்சியும் விரைவில் அடக்கப்பட்டுத் தலைவர்கள் மரணதண்டனைக்கு உட்படுத்தபட்டனர்.[3]

1536 இல் எழுந்த குறுகிய கால லிங்கன்ஷயர் எழுச்சியை அடக்கப்பட்டது. பாரம்பரிய வரலாற்றுப் பார்வையில் புனித யாத்திரையை "மன்னர் எட்டாம் என்றியால் தூண்டப்பட்ட சமய எழுச்சிகளால் கோபமடைந்த இங்கிலாந்தின் வடக்கில் உள்ள பழமைவாத ஆதரவாளர்களால் தன்னிச்சையான வெகுஜன எதிர்ப்பு இயக்கம்" என்று சித்தரிக்கபடுகிது. இதில் பொருளாதாரக் காரணிகளும் பங்களித்தன என்பதை வரலாற்றாசிரியர்கள் அவதானித்துள்ளனர். [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Crowther, David. "The Pilgrimage of Grace II". The History of England Podcast. பார்க்கப்பட்ட நாள் 5 August 2021.
  2. Cross 2009.
  3. கலைக்களஞ்சியம் தொகுதி 1
  4. Loades, David, தொகுப்பாசிரியர் (2003). Reader's guide to British history. New York: Fitzroy Dearborn. பக். 1039–41. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781579582425. https://archive.org/details/readersguidetobr0002unse. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருள்_யாத்திரை&oldid=3679850" இலிருந்து மீள்விக்கப்பட்டது