லால் சந்த் யம்லா ஜாட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லால் சந்த் யம்லா ஜாட்
பின்னணித் தகவல்கள்
பிற பெயர்கள்யம்லா ஜாட்
பிறப்பு(1910-03-28)28 மார்ச்சு 1910
சக் எண். 384, பஞ்சாப் மாகாணம், பிரித்தானியாவின் இந்தியா
(தற்போது பஞ்சாப், பாக்கிஸ்தான்)
இறப்பு20 திசம்பர் 1991(1991-12-20) (அகவை 81)
லூதியானா, பஞ்சாப், இந்தியா
இசை வடிவங்கள்நாட்டுப்புற இசை
தொழில்(கள்)
  • பாடகர்
  • இசையமைப்பாளர்
  • இசைத்தொகுப்பாளர்
இசைக்கருவி(கள்)தும்பி
இசைத்துறையில்1952–1991
வெளியீட்டு நிறுவனங்கள்சரிகம

லால் சந்த் யம்லா ஜாட் (28 மார்ச் 1910 - 20 டிசம்பர் 1991) பஞ்சாபி மொழியில் பிரபலமான இந்திய நாட்டுப்புற பாடகர் ஆவார். தும்பியின் மூலம் இசைக்கப்படும் மென்மையான வாசிப்பும் பாரம்பரியமாக "துர்லா" என்று அழைக்கப்படும் அவரது தலைப்பாகை கட்டும் பாணியுமே அவரது முத்திரையாக கருதப்படுகிறது. பலர் அவரை பஞ்சாபி இசையின் உச்சம் என்றும், இந்தியாவில் சமகால பஞ்சாபி இசைக்கு அடித்தளமிட்ட ஒரு கலைஞராகவும் கருதுகின்றனர்.[1] உண்மையான பஞ்சாபி கருவியான தும்பியைப் பயன்படுத்தியதற்காகப் புகழ் பெற்றவர்.மேலும்  தும்பியின் ஒலியை தனது இசையின் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

அவரது பெற்றோர் கேரா ராம் மற்றும் ஹர்னம் கவுர் ஆகியோர் ஆவர். சக் எண். 384,இந்தியாவின் பிரிவினைக்கு முன்பாக லயால்பூர் மாவட்டம், தற்போதைய பாக்கிஸ்தானின் பஞ்சாப்பில் உள்ள பைசலாபாத் மாவட்டத்தில் பிறந்தவர்.மேலும் 1947 இல் இந்தியாவின் பிரிவினைக்குப் பிறகு, அவர் குடும்பமாக இந்தியாவின் லூதியானாவில் உள்ள ஜவஹர் நகர் பகுதிக்கு இடம்பெயர்ந்தார். அவர் பஞ்சாபி பட்வால் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் தனது இளைய சகோதரர் ஜாஸ் பல்லகனுடன் இணைந்தே தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார். அவர்கள் ஒன்றாக டோட்டா சகோதரர்கள் என்று அழைக்கப்பட்டனர். பஞ்சாப் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தங்கள் இசைப்பயணத்தை தொடர்ந்தனர். அவர் பண்டிட் டியால் மற்றும் சவுத்ரி மஜித் ஆகியோரிடம் குரலிசை பயிற்சி பெற்றுள்ளார். அவரது பாடல் எழுதும் திறனை சுந்தர் தாஸ் ஆசி மெருகேற்றியுள்ளார். 1930 ம் ஆண்டு ராம் ராக்கியை மணந்தார், தம்பதியருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஐந்து மகன்கள் இருந்தனர். அவரது மூத்த மகன் கர்தார் சந்த் மற்றும் இளையவர் ஜஸ்தேவ் சந்த் ஆகியோர்.

தொழில்[தொகு]

அவரது மிகவும் பிரபலமான பாடல்கள் "தாஸ் மைன் கி பியார் விச்சோன் கத்யா" மற்றும் "சத்குர் நானக் தேரி லீலா நயாரி ஏ" மற்றும் "விஸ்கி டி போட்டல் வர்கி" போன்றவையே. ஜலந்தரில் உள்ள அனைத்திந்திய வானொலியில் (AIR) பதிவு கலைஞராக இருந்த மொஹிந்தர்ஜித் கவுர் செகோனுடன் இணைந்து சில பாடல்களைப் பாடியுள்ளார். அவரது பாடல்களை மட்டுமல்லாமல் துல்லா பாட்டி, ஷாஹ்னி கவுலன் மற்றும் பூரன் பகத் ஆகியோரின் பாடல்களையும் பிரபலப்படுத்தினார். அவரது முதல் பதிவும் 1952 இல் ஹெச் எம் வி இல் இருந்தது, கடைசி வரை அவர் ஹெச் எம் வி இல் தான் இருந்தார். மேலும் அவர் உலகம் முழுவதும் நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். பல முறை நல்ல நண்பர்களாக இருந்த ஆலம் லோஹருடன் இணைந்து நடித்தார். வட இந்திய பாரம்பரிய கருவியான தும்பியையும் பிரபலப்படுத்தினார். பஞ்சாபி MC ஆல் அவரது சிறந்த விற்பனையான பாங்க்ரா ஆல்பம் சட்டப்பூர்வமாக்கப்பட்டது .[2] 2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், 'கௌரி' என்ற மேடைப் பெயருடன் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு இசைத் தயாரிப்பாளர், தனது புகழ்பெற்ற "தாஸ் மைன் கி ப்யார் விச்சோன் கத்யா"வை நவீன தொடுதிறனுடன் மீண்டும் உருவாக்கினார், இது வீடியோ பகிர்வு சமூக வலைப்பின்னல் சேவையான TikTok மூலம் வைரலானது, இது பாலிவுட் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் குறுகிய வீடியோவை உருவாக்கியது.[3]

தும்பி

தும்பி இசைக்கலைஞரான வேத் பிரகாஷ்,  லால் சந்த் யம்லா ஜாட்டிடம் கற்றுள்ளார். மேலும் அவரை தனது இசை குருவாகக் கருதினார். வேத் பிரகாஷ் இன்று வரை யம்லா ஜாட்டின் புகைப்படத்தை தனது பணப்பையில் வைத்திருக்கிறார்.

விருதுகள்[தொகு]

1956 இல் அவருக்கு இந்தியப் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு மூலம் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. 1989 ஆம் ஆண்டு இந்தியாவின் டெல்லியில் உள்ள தேசிய நடனம், நாடகம் மற்றும் இசை அகாடமியால் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.[1]

இசைத்தொகுப்புகளின் பட்டியல்[தொகு]

  • கெடான் தே தின் சார்
  • ஜவானி மேரி ரங்லி
  • தாஸ் மைன் கி பியார் விச்சோன் காத்யா- 1963 இல் வெளியிடப்பட்டது [4][5]
  • மித்திரன் டி மா மர்ரி
  • தாரா பாவே பொலியன்
  • விஸ்கி டி போட்டல் வார்கி
  • சயான் டா கோதா
  • சர்க்கி ரங்லி தேரி
  • சத்குரு நானக் தேரி லீலா நேயாரி [6]
  • மெய்ன் தேரி து மேரா [7]

மேலும் பார்க்கவும்[தொகு]

  • ஆலம் லோஹர்
  • பஞ்சாபி பாடகர்களின் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Profile of Lal Chand Yamla Jatt. Retrieved 18 August 2016
  2. Profile of Lal Chand Yamla Jatt; bhangra.org website. Retrieved 18 August 2016
  3. Meet the producer behind viral tiktok hit;
  4. Lal Chand Yamla Jatt's song on YouTube. Retrieved 18 August 2016
  5. Lal Chand Yamla Jatt songs; BBC Music website. Retrieved 18 August 2016
  6. Lal Chand Yamla Jatt's song; sikhnet.com website. Retrieved 18 August 2016
  7. Song of Lal Chand Yamla Jatt; last.fm/music website. Retrieved 18 August 2016
"https://ta.wikipedia.org/w/index.php?title=லால்_சந்த்_யம்லா_ஜாட்&oldid=3845159" இலிருந்து மீள்விக்கப்பட்டது