அலெட்டா ஜேக்கப்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலெட்டா ஜேக்கப்ஸ்
1895-1905 வாக்கில்
பிறப்புஅலெட்டா ஹென்றிட் ஜேக்கப்ஸ்'
9 பிப்ரவரி 1854
சாப்பெமீர், நெதர்லாந்து
இறப்பு10 ஆகத்து 1929(1929-08-10) (அகவை 75)
பார்ன்,[1] நெதர்லாந்து
தேசியம்டச்சு
துறைமருத்துவம்
கல்வி கற்ற இடங்கள்குரோனிங்கெம் பலகலைக்கழகம்
அறியப்படுவதுபல்கலைக்கழக பட்டம் முடித்த முதல் டச்சு பெண் மருத்துவர
பின்பற்றுவோர்பெண்ணியம் மற்றும் பிறப்பு கட்டுப்பாடு
துணைவர்காரெல் விக்டர் ஜெரிஸ்டன்
பிள்ளைகள்1

அலெட்டா ஹென்றிட் ஜேக்கப்ஸ் ( Aletta Henriëtte Jacobs ) 9 பிப்ரவரி 1854 - 10 ஆகஸ்ட் 1929) நெதர்லாந்தைச் சேர்ந்த மருத்துவரும் பெண்கள் வாக்குரிமை ஆர்வலரும் ஆவார். அதிகாரப்பூர்வமாக ஒரு டச்சு பல்கலைக்கழகத்தில் சேரும் முதல் பெண் என்ற முறையில், நெதர்லாந்தின் முதல் பெண் மருத்துவர்களில் ஒருவரானார். 1882 ஆம் ஆண்டில், இவர் உலகின் முதல் பிறப்பு கட்டுப்பாட்டு மௌத்துவமனையை நிறுவினார். மேலும் டச்சு மற்றும் சர்வதேச பெண்கள் இயக்கங்களில் ஒரு தலைவராகவும் இருந்தார். பாலியல் தொழிலை ஒழுங்குபடுத்துதல், பெண்களின் பணி நிலைமைகளை மேம்படுத்துதல், அமைதியை மேம்படுத்துதல் மற்றும் பெண்களின் வாக்களிக்கும் உரிமைக்கு அழைப்பு விடுக்கும் நோக்கத்தில் பிரச்சாரங்களை இவர் வழிநடத்தினார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் பிறந்த அலெட்டா ஜேக்கப்ஸ், தன் தந்தையைப் போல் மருத்துவராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதற்கான தடைகள் இருந்தபோதிலும், இவர் உயர் கல்வியில் நுழைவதற்கு போராடினார். ஆனாலும் 1879 இல் நெதர்லாந்தின் வரலாற்றில் மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதிலும், உழைக்கும் பெண்களின் ஆரோக்கியம் குறித்தும் அக்கறை காட்டினார், சட்டங்கள் பெண்களின் ஆரோக்கியத்திற்கு போதுமான பாதுகாப்பை வழங்காததால், அவர்களின் பொருளாதார நிலைத்தன்மை சமரசம் செய்யப்படுவதை உணர்ந்தார். ஏழைப் பெண்களுக்கு சுகாதாரம் மற்றும் குழந்தை பராமரிப்பு குறித்து கல்வி கற்பதற்காக இலவச மருத்துவ மனையைத் திறந்தார்.[2] [3] மேலும் 1882 ஆம் ஆண்டில் கருத்தடை தகவல் மற்றும் சாதனங்களை விநியோகிக்க தனது சேவைகளை விரிவுபடுத்தினார்.[4] 1903 ஆம் ஆண்டு வரை மருத்துவப் பயிற்சியைத் தொடர்ந்தாலும், பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் தனது கவனத்தை செயல்பாட்டின் மீது அதிகளவில் திருப்பினார்.[5][6][7]

1883 முதல், முதன்முதலில் பெண்களின் வாக்குரிமை குறித்து அதிகாரிகளுக்கு சவால் விடுத்தபோது, சமத்துவத்திற்கான பெண்களின் அணுகலைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை மாற்றுவதற்கு தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார். சில்லறை வணிகத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பில் கட்டாய முறிவுச் சட்டங்களை நிறுவுவதற்கும், 1919 இல் டச்சுப் பெண்களுக்கான வாக்குகளைப் பெறுவதற்கும் தனது பிரச்சாரத்தில் வெற்றி பெற்றார். சர்வதேச பெண்கள் இயக்கத்தில் ஈடுபட்ட இவர், உலகம் முழுவதும் பயணம் செய்து பெண்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசினார். மேலும், பெண்களின் சமூக-பொருளாதார மற்றும் அரசியல் நிலையை ஆவணப்படுத்தினார். அமைதி மற்றும் சுதந்திரத்திற்கான மகளிர் சர்வதேச சங்கத்தை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தார். மேலும் அமைதி இயக்கத்திலும் தீவிரமாக பங்கேற்றார். பெண்களின் உரிமைகள் மற்றும் அந்தஸ்துக்கான தனது பங்களிப்புகளுக்காக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டார்.

அலெட்டா ஜேக்கப்ஸ், சுமார் 1880

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

நூல் பட்டியல்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. Feinberg 2009.
  2. Rappaport 2001, ப. 329.
  3. Haire 1928, ப. 175.
  4. Haire 1928, ப. 174.
  5. Bosch 2008, ப. 637.
  6. Bosch 2018.
  7. Jacobs 1996, ப. 54.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெட்டா_ஜேக்கப்ஸ்&oldid=3682379" இலிருந்து மீள்விக்கப்பட்டது