சுல்தான் இசுகந்தர் கட்டிடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுல்தான் இசுகந்தர் கட்டிடம்
Sultan Iskandar Building
Map
பொதுவான தகவல்கள்
வகைசுங்கம், குடிவரவு மற்றும் தனிமைப்படுத்தல் (CIQ) வளாகம்
இடம்புக்கிட் சாகார், ஜொகூர் பாரு, ஜொகூர், மலேசியா
உரிமையாளர்முதன்மை இயக்குநர்கள்
1. மலேசிய அரசு
2. மலேசிய பொதுப்பணித் துறை (JKR)

இரண்டாம்நிலை இயக்குநர்கள்
1. மலேசியக் குடியேற்றத் துறை
2. மலேசியச் சுங்கத் துறை
3. மலேசியச் சாலைப் போக்குவரத்துத் துறை
4. PLUS Malaysia Berhad
(Projek Lebuhraya Usahasama Berhad)
5. அரச மலேசியக் காவல்துறை
6. மலேசியக் கால்நடை சேவைத் துறை
7. மலேசிய உள்துறைப் பாதுகாப்பு அமைச்சகம்
8. மலேசிய மரத் தொழில்துறை வாரியம்
9. மலேசிய மீன்வள மேம்பாட்டு ஆணையம்
10. மலேசிய வேளாண்மை சந்தைப்படுத்தல் ஆணையம்
11. ஜொகூர் மாநில நிலம் மற்றும் சுரங்க அலுவலகம்
12. Perhilitan
13. ஜொகூர் மாநில விவசாயத் துறை
14. Majlis Bandaraya Johor Bahru (MBJB)
15. சுற்றுலா மலேசியா
வடிவமைப்பும் கட்டுமானமும்
மேம்பாட்டாளர்1. மலேசிய அரசு
2. மலேசியப் பொதுப்பணித் துறை (JKR)
3. Gerbang Perdana Sdn Bhd

சுல்தான் இசுகந்தர் கட்டிடம் (ஆங்கிலம்: Sultan Iskandar Building; மலாய் மொழி: Bangunan Sultan Iskandar அல்லது (BSI); சீனம்: 苏丹依斯干达大厦) என்பது மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில், ஜொகூர் பாரு மாநகரில் உள்ள சுங்கம், குடியேற்றம் மற்றும் தனிமைப் படுத்துதல் (Customs, Immigration and Quarantine (CIQ) Complex) வளாகமாகும்.[1]

மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலத்தின் வடக்கு முனையில் இந்த வளாகம் அமைக்கப்பட்டு உள்ளது. மலேசியா-சிங்கப்பூர் எல்லை வழியாக மலேசியாவிற்குள் நுழைவதற்கான இரண்டு தரைவழி இடங்களில் இதுவும் ஒன்றாகும்.

பொது[தொகு]

ஜொகூர் சுல்தான் இசுகந்தரின் (Sultan Iskandar of Johor) நினைவாக இந்தக் கட்டிடத்திற்குப் பெயரிடப்பட்டது. தெற்கு ஒருங்கிணைந்த நுழைவாயில் திட்டத்தின் (Southern Integrated Gateway Project) ஒரு பகுதியாக, கம்போங் புக்கிட் சாகார் (Kampung Bukit Chagar), லும்பா கூடா அடுக்குமாடி குடியிருப்புகளின் (Lumba Kuda Flats) முன்னாள் தளத்தில் கட்டப்பட்டது.

இந்தக் கட்டிடம் 232,237 சதுர மீட்டர் (2,499,780 சதுர அடி) பரப்பளவைக் கொண்டது. மலேசியாவின் மிகப்பெரிய சுங்கம், குடியேற்றம் மற்றும் தனிமைப்படுத்துதல் (CIQ) வளாகமாகும்.

ஜொகூர் பாரு கிழக்கு இணைப்பு விரைவு சாலை[தொகு]

இந்தக் கட்டிடம் முன்னாள் ஜொகூர் பாரு சுங்கம், குடியேற்றம் மற்றும் தனிமைப்படுத்துதல் வளாகமாக இருந்தது. அதுவே 2008-ஆம் ஆண்டில் புதுக்கட்டிடமாகச் செயல்படத் தொடங்கியது.[2]

மலேசியாவில் இருந்து, இந்தக் கட்டிடத்திற்குச் செல்லும் முக்கிய விரைவு சாலை, ஜொகூர் பாரு கிழக்கு இணைப்பு விரைவு சாலை (Johor Bahru Eastern Dispersal Link Expressway) ஆகும்.

எல்லைப் பரிசோதனைக்குப் பிறகு, மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலம் வழியாக, சிங்கப்பூர் உட்லேண்ட்ஸில் உள்ள உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடிக்கு (Woodlands Checkpoint) வாகனங்கள் செல்கின்றன.

கூறுகள்[தொகு]

குடிவரவு சோதனைச் சாவடி[தொகு]

ஜொகூர் பாருவில் இருந்து வெளியேறுவதற்கான குடிவரவு சோதனைச் சாவடி
சுல்தான் இஸ்கந்தர் கட்டிடத்தின் ஒரு பகுதி

குடிவரவு சோதனைச் சாவடியில் பேருந்துப் பயணிகள், பேருந்து ஓட்டுநர்கள், லாரிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களுக்கு வெவ்வேறு சோதனைச் சாவடிகள் உள்ளன.

மலேசியாவுக்குள் நுழையும் வாகனங்களுக்கு 38 துணை முகப்புகளும் (Counters); மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்குச் செல்லும் வாகனங்களுக்கு 39 துணை முகப்புகளும் கொண்ட சோதனைச் சாவடிகள் உள்ளன.

ஒவ்வொரு திசையிலும் 50 துணை முகப்புகள்[தொகு]

மலேசியாவிற்குள் நுழையும் விசையுந்துகளுக்கும் (Motorcycles); மற்றும் மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்குச் செல்லும் விசையுந்துகளுக்கும்; ஒவ்வொரு திசையிலும் 50 துணை முகப்புகள் உள்ளன.

விசையுந்து ஓட்டுபவர்களுக்கான பாதுகாப்புத் தானியங்கி அனுமதி அமைப்பு முறைமை (Secured Automated Clearance System for Malaysian Citizen Motorcyclists (M-BIKE); அனைத்து மலேசிய மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கும் (Motorcyclists) வழங்கப்படுகிறது. வெளிநாட்டு விசையுந்து ஓட்டுபவர்களுக்கு, அவர்களுக்கு எனத் தனியாகத் துணை முகப்புகள் உள்ளன.[3]

சுங்கச் சோதனைச் சாவடி[தொகு]

சுங்கச் சோதனைச் சாவடியில், வாகனங்களுக்காக 36 முகப்புகள் (Counters) உள்ளன. அவற்றில் மலேசியாவுக்குள் வருபவர்களுக்கு 20 முகப்புகள்; மற்றும் மலேசியாவை விட்டு வெளியேறுபவர்களுக்கு 16 முகப்புகள் உள்ளன.

தவிர விசையுந்துகளுக்கு 25 முகப்புகள் (Counters) உள்ளன. மலேசியாவுக்குள் வருபவர்களுக்கு 17 முகப்புகள்; மற்றும் மலேசியாவை விட்டு வெளியேறுபவர்களுக்கு 8 முகப்புகள் உள்ளன.

கடவுச் சீட்டு சாவடிகள்[தொகு]

சுங்கம், குடிவரவு, தனிமைப்படுத்தல் (CIQ) வளாகத்தில் உள்ள அனைத்துக் கட்டணப் பரிவர்த்தனைகளும்; ’தொடு செல்’ (Touch 'n Go) எனும் கடவுச் சீட்டு மின்னணு முறையில் நடத்தப் படுகின்றன.

சிங்கப்பூர் உட்லேண்ட்ஸ் சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் (Woodlands Checkpoint) இருந்து புறப்படும் அனைத்து வெளிநாட்டுப் பதிவு வாகனங்களும்; ஜொகூரை நெருங்குவதற்கு முன் தரைப்பாலத்தின் இடதுபுறத்தில் உள்ள பழையக் கட்டிடத்தில் தொடு செல் (Touch 'n Go) சீட்டை வாங்கலாம்.

கட்டணங்கள்[தொகு]

(ஆகத்து 1, 2014 முதல்)

வகுப்பு வாகனங்களின் வகை உள்ளே செல்லும் போக்குவரத்து
(மலேசிய ரிங்கிட் (RM))
வெளியே செல்லும் போக்குவரத்து
(மலேசிய ரிங்கிட் (RM))
0 விசையுந்துகள் (மோட்டார் சைக்கிள்)
(இரண்டு அச்சுகள் மற்றும் இரண்டு சக்கரங்கள் கொண்ட வாகனங்கள்)
இல்லை இல்லை
1 தனியார் கார்கள்
(இரண்டு அச்சுகள் மற்றும் மூன்று அல்லது நான்கு சக்கரங்கள் கொண்ட வாகனங்கள் (வாடகைக் கார்கள் மற்றும் பேருந்துகள் தவிர))
RM 2.90 இல்லை
2 மூடிய ஊர்திகள் மற்றும் பிற சிறிய சரக்கு வாகனங்கள்
(இரண்டு அச்சுகள் மற்றும் ஆறு சக்கரங்கள் கொண்ட வாகனங்கள் (பேருந்துகள்))
RM 4.50 இல்லை
3 பெரிய பார வண்டிகள்
(மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அச்சுகள் கொண்ட வாகனங்கள் (பேருந்துகள் தவிர))
RM 6.10 இல்லை
4 வாடகை வாகனங்கள்
(மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு நியமிக்கப்பட்ட வழிகள்)
RM 1.40 இல்லை
5 பேருந்துகள்
(பொது போக்குவரத்து பேருந்துகள் தவிர)
RM 2.30 இல்லை

குறிப்பு: தொட்டு செல் (Touch 'n Go - டச் என் கோ) அட்டை அல்லது மின் பணப் பை (eWallet) வழியாக மட்டுமே பயணக் கட்டணங்களைச் செலுத்த முடியும். ரொக்கப் பணப் பரிமாற்றம் ஏற்றுக் கொள்ளப் படுவது இல்லை

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Sultan Iskandar Complex Custom consists of an immigration checkpoint and a custom checkpoint. The Sultan Iskandar Complex Custom has a distinct look of Malaysian with a modern structure building". johor.attractionsinmalaysia.com. பார்க்கப்பட்ட நாள் 18 April 2022.
  2. VIJAYAN, MEERA. "New CIQ complex opens". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 18 April 2022.
  3. "The Home Ministry will improve facilities at the Custom, Immigration and Quarantine Complex at the Sultan Iskandar Building (BSI) after taking over the management of the building beginning Jan 1". பார்க்கப்பட்ட நாள் 18 April 2022.